கவிஞனின் எண்ணங்கள் பூக்கும்
கவிதைகள் வண்ணமாய் காய்க்கும்
மனம் சிறகுகள் இன்றியே பறக்கும்
கனவுகள் உறக்கமின்றியே பிறக்கும்
கவிதைகள் வண்ணமாய் காய்க்கும்
மனம் சிறகுகள் இன்றியே பறக்கும்
கனவுகள் உறக்கமின்றியே பிறக்கும்
பிளைட் டிக்கட் கைக்கு வந்ததும் என்னை
என் கணவரும் சந்தோஷமாக அனுப்பி வைத்தார். உள்ளுக்குள் நல்ல புளுகு
போலும் என்று நினைத்துக் கொண்டேன். எனக்கும் சந்தோஷம் தாங்க முடியலை கொஞ்ச
நாளைக்கு தொல்லை இல்லை இல்ல.ம்..ம்..ம்
விமானத்தினுள் வேறு யாரும் இல்லை நான் மட்டும் தான் .அப்பனே! முருகா!
ஞானபண்டிதா! கேட்குதாப்பா என்னை திரும்ப பத்திரமா கொணர்ந்து
சேர்த்திடுப்பா. சேட்டை ரொம்ப கூடிப்போச்சுப்பா பூமீல ...மயில் மேல சுத்துற
உனக்கு இதெல்லாம் எங்க புரியப்போகுது. என்னமோ அப்பா நான் சொல்லிட்டேன்
பார்த்துக்க .. நான் மெல்ல பாட்டு கேட்டுக் கொண்டு சாய்ந்து இருக்கிறேன்
சத்தம்....... கடபுடா..... கடபுடா.... என்று கேட்கிறது என்னன்னு பார்த்தால் பழுது அடைந்திருந்த விமானத்தை சரி
பார்த்து விட்டு ட்றயல் பாக்கிறான்களாம் இல்ல. இப்ப தானே புரியுது ஏன் யாரும் இல்லேன்னு, ஏதோ சதி போல தான் இருக்கிறது. அதை அப்புறம் பார்க்கலாம் . அம்மாடியோவ் உயிரை கையில புடிச்சுக்கொண்டு போய் சேர்ந்திட்டேன்ங்க ஒரு மாதிரி அப்பாடா .!
அப்புறம் மெல்ல சுத்து முத்தும் பார்த்தா ரூபன் நேம்போர்டு ஓட நிக்கிறாரு. அவரை தான் எல்லோருக்கும் தெரியுமே. ஆனால் என்ன அவருக்கு தெரியாதில்ல. ஓடி ஓடி பார்க்கிறாரு திரு திருன்னு வேற முழிக்கிறாரு நான் பக்கம் போய் நின்று பார்க்கிறேன் என்ன செய்றாரு என்று கையில
பெரிய புக்கே வேற. நான் மெல்ல ரூபன் என்றேன் திடுக்கிட்டு அம்மா என்று ஏங்கிவிட்டார். நான் எதிர்பார்த்ததை போல் இல்லை போலும் என்று
நான் உள்ளுக்குள் நினைத்தேன். மெல்ல சமாளித்துக்கொண்டு அந்த புக்கேயை எனக்கு தர வந்தார் நான் வேண்டலையே நான் சொன்னேன் இதெல்லாம் எனக்கெதற்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லையா என்ன ரூபன் இது என்று எனக்கு கோபம் வந்து விட்டது. பின்னர் அடக்கிக் கொண்டு இது உண்மையாக யாருக்கு கொடுக்க வேண்டும் தெரியுமா? என்றேன் யாருக்கும்மா என்றார், இப்ப எங்க வலைதளத்தில டாப் நியூஸ் என்ன தெரியுமா என்றேன். என்னம்மா தெரியாதே என்றார். என்ன தெரியாதா என்ன அண்ணாவும் தம்பியுமா வலை முழுக்க சுத்துவீங்க இது தெரியாதா யார் அண்ணா... அவர் தாங்க நம்ம சகோதரர் திண்டுக்கல்தனபாலன்
வலைச்சித்தர் தான். யாரு என்று கேள்வி வேற, இப்போ இது தெரிஞ்சுது
குறளாலேயே அடி செமத்தையாய் விழும் தம்பிக்கு ஜாக்கிரதை. என்னம்மா நீங்களே
அடி வாங்கித் தந்திடுவீங்க போல இருக்கே.
ஓ ஓகே..... சரியம்மா விசயத்தை சொல்லுங்களேன். ம்....ம்...ம்... அது தான்பா நம்ம சீராளன்
சௌமிய தேசத்து இளவரசர். அவர் அழகான நந்தவனம் அமைத்து கறைபடியாத காலத்தால்
அழியாத காதல் கோட்டையல்லவா கட்டி யிருக்கிறார். தாஜ்மகால் என்ன
தாஜ்மகால்ங்க.இதை போய் பாருங்க. நான் ஒன்னும் பொய் சொல்லலீங்க வேணுமிண்னா
நீங்களே போய் பாருங்க. அவருக்கு கவிஞர் பட்டம் அல்லவா கொடுத்திருகிறார்கள். தெரியாதா அவருக்கு பட்டத்தை அளித்தவரே நம்ம கவிஞா் கி. பாரதிதாசன் ஐயா தான் ஆகையால் இருவருக்கும் தான் கொடுத்து கௌரவிக்க வேண்டும். அதுசரி ரூபன் "பாரதிதாசன்"எனும்
பெயர் அவருக்கு பொருத்தமா அல்லது அந்த பெயருக்கு அவர் பொருத்தமா எனக்கு
புரியவே இல்லப்பா. பிறக்கும் போதே பெற்றோருக்கு புரிந்து விட்டதா பெரிய...
கவிஞராக வருவார் இவர் என்று ஒரே குழப்பமாவும் ஆச்சரியமாகவும் இருக்கே
யாராவது புரிஞ்சா சொல்றீங்களா? ப்ளீஸ்!
ரூபன் நாம போகும் போது வழியில சீராளன் பார்த்துவிட்டு போகலாமா? அம்மா.... சும்மா கடுப்பு ஏத்தாதீங்க என்கிறார். இது என்ன பஸ் சா....... நினைச்ச இடத்தில பெல் அடித்து இறங்கிறதுக்கு. சரி சரி கோவிச்சுக்காதப்பா .. அப்ப சரி நாம் இவற்றை அவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றேன் . ரூபன் அப்படியா அம்மா நீங்க சொல்வது சரிதான் . அப்பிடின்னா அனுப்பிடுவோம் என்கிறாரு. சும்மா சொல்லக்கூடாது நல்ல புள்ளதாங்க ரூபனும் இல்ல . சரிம்மா இப்ப என்ன பிளான் நல்லா தூங்கினீங்க இல்ல சரி சப்பிட்டுவிட்டு நான் உங்களுக்கு கொஞ்சம் இடம் காட்டலாம் என்று நினைக்கிறன் டைம் போதாது அம்மா என்ன சொல்கிறீர்கள். 5 மணித்தியாலத்தில் விமானநிலையம் செல்லவேண்டும் நாளைக்கு இந்தியாவில நிற்போம் அம்மா. இருவரும் தேனீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது கடையில ஒரு பையன் விளம்பர பத்திரிகை கொடுத்து வந்தான் என்னடா என்று பார்த்தால் கவிஞர்கள் ஒன்றுகூடலாம் நல்லதாப் போச்சு வாங்க அம்மா நாமும் சென்று கலந்துகொள்வோம்..
ரூபன் நாம போகும் போது வழியில சீராளன் பார்த்துவிட்டு போகலாமா? அம்மா.... சும்மா கடுப்பு ஏத்தாதீங்க என்கிறார். இது என்ன பஸ் சா....... நினைச்ச இடத்தில பெல் அடித்து இறங்கிறதுக்கு. சரி சரி கோவிச்சுக்காதப்பா .. அப்ப சரி நாம் இவற்றை அவர்களுக்கு அனுப்பி விடுவோம் என்றேன் . ரூபன் அப்படியா அம்மா நீங்க சொல்வது சரிதான் . அப்பிடின்னா அனுப்பிடுவோம் என்கிறாரு. சும்மா சொல்லக்கூடாது நல்ல புள்ளதாங்க ரூபனும் இல்ல . சரிம்மா இப்ப என்ன பிளான் நல்லா தூங்கினீங்க இல்ல சரி சப்பிட்டுவிட்டு நான் உங்களுக்கு கொஞ்சம் இடம் காட்டலாம் என்று நினைக்கிறன் டைம் போதாது அம்மா என்ன சொல்கிறீர்கள். 5 மணித்தியாலத்தில் விமானநிலையம் செல்லவேண்டும் நாளைக்கு இந்தியாவில நிற்போம் அம்மா. இருவரும் தேனீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது கடையில ஒரு பையன் விளம்பர பத்திரிகை கொடுத்து வந்தான் என்னடா என்று பார்த்தால் கவிஞர்கள் ஒன்றுகூடலாம் நல்லதாப் போச்சு வாங்க அம்மா நாமும் சென்று கலந்துகொள்வோம்..
.
கதை தொடரும்.....
கதை தொடரும்.....
எம்முடன் நீங்களும் வரலாமே.
1. காக்கைச்சிறகினிலே என்ற வலைப்பூவில் கவிதை எழுதிவரும் அகல் அவர்கள் மிக அற்புதமாக எழுதியதை ரசிக்க இதோ இங்கே குறுங்கவிதை பாகம்-2 kakkaisirakinile.
2. சில்லறைக்கவிதைகள் என்ற தலைப்பில் கவிதை எழுதிவரும் இலங்கையை பிறப்பிடமாக கொண்ட திரு. நிரோஷ் அவர்களின் குறுங்கவிதை மிக அழகிய
படங்களுடன் சில்லறை வரிகள் ஒளிர்கிறது என் யன்னல் நிலவே
3. வசந்தமண்டபம் என்னும் வலைப்பூவில் கவிதையுடன் பன்முகப்பட்ட படைப்புக்களை எழுதிவரும் ஒருபடைப்பாளி அவர்தான் திரு.மகேந்தின் அவருடைய நிழல்ப்படக்கவிதை
களை ரசிக்க இங்கே சொடுக்கவும். ilavenirkaalam. blogspot.com
4. அடுத்து யார் என்றால் வலைச்சரத்தில் சில மாதங்கள் கடமை புரிந்த அன்புச்சகோதரன் திரு. சிவனேசன் (தனிமரம் எனும் பெயரில் )எழுதிவருகிறார் இவருடைய வலைப்பூவைப்பற்றி நான் சொல்வதை விட நீங்கள்
சென்று பாருங்கள் ஒருதடவை. எப்படி எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என இதோ அவர் எழுதிய கவிதை தங்களின் பார்வைக்கு. சினேஹா போல சிந்திய கவிதை! .http://www.thanimaram.org/ 2014/02/blog-post.html
5. பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன் சிவகுமாரன் காதல் பாக்களை என்னமா வடித்து கலக்குகிறார் நீங்கள் நிச்சயம் பர்க்கவேண்டியவையே இதோ சென்று பாருங்கள் காதல் வெண்பாக்கள் 40
6. நீரோடை மகேஷ்
கவிதைகள் என்ற வலைப்பூவில் மிக அருமையாக கவிதை எழுதியுள்ளார் நம்பிக்கைசாரல் என்ற தலைப்பில் www.neerodai.com இந்த கவிதையை இரசித்து அவருக்கு தங்களின் உச்சாகத்தை ஊட்டுங்கள்.
கவிதைகள் என்ற வலைப்பூவில் மிக அருமையாக கவிதை எழுதியுள்ளார் நம்பிக்கைசாரல் என்ற தலைப்பில் www.neerodai.com இந்த கவிதையை இரசித்து அவருக்கு தங்களின் உச்சாகத்தை ஊட்டுங்கள்.
7. தூரிகைச்
சிதறல்கள் என்னும் தளத்தில் எழுதிவரும் திருமதி கவிக்காயத்திரி என்பவர்
தன்னுடைய தளத்தில் மிக அருமையாக கவிதை படைத்து வருகிறார் அந்த வகையில்
அவருடைய கவிதையாக எழுதப்படாத கவிதைகள் என்ற தலைப்பில் உள்ள கவிதையை பார்க்க இதோ thoorikaisitharal. blogspot.com
என்னும் கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். valvaiyooraan.blogspot. com
என்று வேற சொல்கிறார்.என்ன தான் சொல்ல வருகிறார்.இதோ சென்று பாருங்கள்.
10 கவிதாயினி என்னும் வலைப்பூவில் மிக அழகிய நிழற்படங்களுக்கு கவிதையால் வரிவடிவம் கொடுத்துள்ளார் அந்தக் கவிதை இதோ.நீரோடை பார்த்து இரசியுங்கள். kavithaini.blogspot. com
11 உதவாத ஒருகோடிப் பாடல்களை – இன்னும்
உருவாக்க எருவாக நான் வாழவோ?
கதவற்ற வெறும்வீட்டில் நான்மட்டுமே – நிற்கக்
காலற்றும் நடக்கின்றேன்
உனைநோக்கியே!
கரைக்கின்ற அமிலத்தில் கருதங்கவே – கெஞ்சக்
கதியற்றுக் கண்ணீரும்
கடன் வாங்கவோ?
அரைக்கின்ற காலத்தின் திரளாகநான் – கொஞ்சம்
அருகேவா என்நெஞ்ச
அழல்நீங்கவே! என்கிறார் Joseph Viju
அரைக்கின்ற காலத்தின் திரளாகநான் – கொஞ்சம்
தளத்தில் இலக்கண இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த எழுத்தாளர், முறைப்படி கவிதைகளை படைக்க வல்லவர் சுவை மிக்க சொல்லாடார் ஊமைக்கனவுகள் எனும் இத் தளத்தில் நான் போகிறேன் கண்டு களியுங்கள்
சரிங்க தூக்கம் கண்ணை சுழட்டுதுங்க இனி மீண்டும் நாளை சந்திப்போம். சாக்கு போக்கு சொல்லாமல் எலோரும் நாளை வந்து விடுங்கள் சரியா.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
ஒரு வித்தியாசமான தலைப்பில் சிறப்பான அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் மணத்தில் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.. சென்று வருகிறேன் வலைப்பூ பக்கம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன்! முதல் வருகை முதல் வாழ்த்து!
Deleteஆஹா சுற்றப் போகிறீர்களா வாழ்த்துக்கள் ரூபன்.
மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும். ரூபன்.
வணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாக்கிற்கும் மிக்க நன்றி ! ரூபன்
Deleteநன்றி... நன்றி...
ReplyDeleteJoseph Viju அவர்களின் அதிவேக வளர்ச்சி + அசாத்திய புலமையைக் கண்டு பலமுறை வியப்படைவேன்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
உண்மை தான் சகோ அவரோட பதிவுகளை பார்க்கவே புல்லரிக்கும். நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
எல்லாத்தளங்களும் அறிந்தவை... பகிர்வுக்கு நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடடா அறிந்த தளங்கள் தானா அறியவில்லை என்று சந்தோஷப் பட்டேனே அதற்கிடையில் போட்டுடைத்து விட்டீர்களே ரூபன்!
Deleteமீண்டும் ஒருமுறை நண்பர்கள் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல.. சில மாதங்களாக எழுதுவதில்லை.. உங்களது அறிமுகம் இப்போது எழுதத் தூண்டுகிறது.
ReplyDeleteஅகல் ஏன் நிறுத்த வேண்டும் எழுதுங்கள். நீங்கள் எழுதுவதற்கு நான் தூண்டுகோலாக இருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரும் விடயம் தெரியுமா? மீக்க மகிழ்ச்சி தொடருங்கள் தொடர்கிறேன் ....மிக்க நன்றி அகல் ....! தங்கள் பதிவுகளை பார்க்க ஆவலாக உள்ளேன்.
Deleteகதை ரொம்ப சூப்பராக போகுது. நீங்க மட்டும் தான் ஃப்ளைட்லயா, ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்க வேற சகோ வைத்தெரிச்சலை கிளப்பிகிட்டு. சும்மா போன பிளைட் ல free யா அனுப்பிவிட்டார் போல காசு மிச்சம் இன்னு நானும் தெரியாம ஏறிட்டேன். பிழைச்சதே பெரும் புண்ணியம். நன்றி சகோ ! வாழ்த்துக்கும் வருகைக்கும்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteநான் எல்லாம் மனைவியிடம் பூரிக்கட்டையால் அடி வாங்கும் போது அம்மா அப்பா என்று அலறுவேன் அந்த இடத்தில் ரூபன் இருந்தால் என்ன நடக்கும் என்று யோச்சித்து பார்த்தேன் அவர் அடிவாங்கியதும் நன்றி--அன்புடன்--ரூபன்- என்று சொல்லிவிட்டு ஒடிவிடுவார் அல்லவா
ReplyDeleteமுதல்ல ஒரு பெண்ணை பார்த்து கட்டி வச்சிடலாம் சகோ, அப்ப தானே பார்க்கலாம் எப்படி ஓடுவார் என்று முதல்ல அதை செய்யுங்கோ. நீங்க என்ன அலர்றதோடு சரியா? நின்னே அடி வாங்குவீங்க போல ரொம்ப தைரியம் தான்.
Deleteஹாஹாஹாஹஹ்......
Deleteஆ! சூப்பர்! சூப்பர்!!
Deleteரூபனை எங்கு சென்றாலும் எளிதில் கண்டு பிடித்திடலாம் அவர்தான் இப்படி ஒரு போர்டை கையில் எப்போதுவைத்திருப்பாரே
ReplyDeleteநன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இல்லையே நான் ஒன்றும் அப்படி பார்க்கலையே. கையையும் கட்டிக் கொண்டு இப்படியா அட்டகாசம் பண்ணுவது. ரூபன் ரொம்பக் கோபக் காரர். பார்க்கலையா என்னோட கத்தினதை.
Deleteஅம்மா கடுப்பு ஏத்தாதீங்க... ...நான் பயந்தே போய்ட்டேன்ல. ஜாக்கிரதை ....
நல்லாத்தான் போகுது (ஃபிளைட்) வண்டிஎல்லோரையும் அறிமுப்படுத்துற மாதிரியே கலாய்க்கிறீங்க.. போகட்டும், போகட்டும், ரைட்.
ReplyDeleteஅப்பாடா தப்பிச்சன் ஒவ்வொரு தடவையும் போட்டுட்டு பயத்தோடு பார்த்துகொண்டு இருப்பேன். ஏக்கத்தோடு இப்ப தான் நிம்மதியா இருக்கு சகோ தங்கள் தரும் ஊக்கம் கடைசி வரை காக்கும். மிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்.
Deleteஅகல், நரேஷ், மகேஷ், வல்லையூரான் எல்லாம் நான் படித்திராத தளங்கள். ஓவியம், கவிதைன்னு அழகா இன்டெக்ஸ் பண்ணி இன்ட்ரட்யூஸ் பண்றது நல்லா இருக்கும்மா. (இங்கிலிபீசு சரியா எழுதிருக்கனான்னு உங்க அம்முக்குட்டி டீச்சர்ட்ட கேட்டுக்கங்க). நானைய அறிமுகங்கள் எப்படி இருக்கும்ங்கற எதிர்பார்ப்போட இன்றைய அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன்.
ReplyDeleteவாங்க சகோ! அம்முவே வந்து நாளைக்கு உங்களுக்கு மார்க்ஸ் போடுவா சரியா இல்லையின்னா திருத்துவா. அவங்க இங்கிலீஷ் தளம் ஆரம்பிக்கப் போறாங்க இல்ல அதில நாம கத்துக்கலாம் மதுரை தமிழனுக்காக கீழே தமிழிலும் விளக்கம் அளிப்பார். மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்துக்கும் நாளையும் எப்படி.என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். பார்க்கலாம்.
Deleteஇனியாச் செல்லம் சொல்லீட்டா நாளைவரை எனக்கென வேலை?? இப்போவே சொல்றேன்.
Deleteஅண்ணா! உங்க இங்கிலீஷ் சூப்பர்!
இப்ப திருப்தி தானே சகோ. பார்த்தீங்களா என் அம்முவை.
Deleteநிறையத் தேடல்கள்
ReplyDeleteநிறைவான அறிமுகங்கள்
பாராட்டுகள்
மிக்க நன்றி!. சகோ வருகைக்கும் பாராட்டுக்கும்.
Deleteகவிஞர்கள் அனைவரையும் இங்கே ஒன்றாக
ReplyDeleteஅறிமுகம் செய்தமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!
உங்களின் அறிமுகப் பாணியும் அருமை!
அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் இனியா!
வாங்க தோழி! தங்கள் வருகையிலும் மகிழ்விலும் என் மனம் நெகிழ்ந்தது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழி! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.
Deleteபெருங் கவிக்குயில்க்கூட்டத்திற்கு இடையில் தனிமரம் காகத்துக்கும் வலைச்சரத்தில் பெருமை சேர்த்ததுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் இனியா!
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வருகைக்கு மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்....!
Deleteவாழ்த்துக்கு ந்ன்றி ஆனால் புலம்பெயர் தேச நேரச்சிக்கல் பொருளாதார தேடல் சிக்கல் நீங்கள் அறிவீர்கள்§ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நாடு இல்லா ஏதிலி!
Deleteஎன்னோடு இன்று உங்களால் அறிமுகம் செய்யப்பட்டோருக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ! சகோ
Deleteதகவல் தந்த ரூபனுக்கு நன்றிகள்
ReplyDeleteபணி தொடரட்டும் பயணிக்கின்றேன் பிளேனில்:))
ReplyDeleteநேற்று மலேசியாவில் இன்று இந்தியாவில் அல்லவா அங்கு வாருங்கள் சகோ! நிறைய சுவாரஸ்யம் காத்திருகிறது.
Deleteஆண்டுக்கு ஒரு முறை இந்தியா போகின்றேன் ஆன்மீகம் நோக்கி!ம்ம்
Deleteஎங்களையெல்லாம் விமானத்தில் பயணிக்கவைத்து அறிமுகப்படுத்தியிருக்கிறீர்...மகிழ்ச்சியும், நன்றியும். அறிமுகமாகியிருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள். தோழமை இனியாவின் எழுத்து மழை இனிதே தொடரட்டும். வாழ்க வளமுடன். :)
ReplyDeleteமிக்க நன்றி தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteதொடருங்கள் ....
இனியா எனும் காவியக்கவி வழங்கிய
ReplyDeleteஇனிய கவிக் குயில்களின் அறிமுகம்..
அருமை.. இனிமை!..
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteதொடருங்கள் ...
மிக அருமையான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி! அறியாத ஓரிரு தளங்கள் பக்கம் செல்கிறேன்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteதொடருங்கள் ...
சகோதரி மிக வித்தியாசாமாக அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்! ஜோசஃப் விஜு அவர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை! அறிவு ஜீவி! அவரது தளத்தைப் பல முறை வாசித்துப் படிப்போம்! நல்ல தமிழ் கற்கவேண்டி! பலவற்றைக் குறித்துக் கொள்வோம்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் பல தளங்கள் புதிது! சென்று வாசிக்க வேண்டும்! அறிமுகங்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
நன்றி!
நான் ஒவ்வொரு தடவையும் அசந்து தான் போவேன். என்னே ஆற்றல் அவருக்கு.
Deleteநன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும். தொடருங்கள் சகோ ...
தாங்கள் ரசித்த சில கவிஞர்களின் ஆக்கங்களை எங்களையும் ரசிக்கத் தூண்டும் வகையில் அழகான பரிந்துரைக் கட்டுரை. நீங்கள் ரசித்த ஆக்கங்களை கவிதை வடிவாக்கி தொடர்ந்து இனிமையாகப் பாடுங்கள்!
ReplyDeleteஅப்புறம்..
***ஓடி ஓடி பார்க்கிறாரு திரு திருன்னு வேற முழிக்கிறாரு நான் பக்கம் போய் நின்று பார்க்கிறேன் என்ன செய்றாரு என்று கையில பெரிய புக்கே வேற. நான் மெல்ல ரூபன் என்றேன் திடுக்கிட்டு அம்மா என்று ஏங்கிவிட்டார். நான் எதிர்பார்த்ததை போல் இல்லை போலும் என்று நான் உள்ளுக்குள் நினைத்தேன். மெல்ல சமாளித்துக்கொண்டு அந்த புக்கேயை எனக்கு தர வந்தார் நான் வேண்டலையே நான் சொன்னேன் இதெல்லாம் எனக்கெதற்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியவில்லையா என்ன ரூபன் இது என்று எனக்கு கோபம் வந்து விட்டது. பின்னர் அடக்கிக் கொண்டு இது உண்மையாக யாருக்கு கொடுக்க வேண்டும் தெரியுமா? என்றேன் யாருக்கும்மா என்றார், இப்ப எங்க வலைதளத்தில டாப் நியூஸ் என்ன தெரியுமா என்றேன். என்னம்மா தெரியாதே என்றார். என்ன தெரியாதா என்ன அண்ணாவும் தம்பியுமா வலை முழுக்க சுத்துவீங்க இது தெரியாதா யார் அண்ணா...என்னம்மா தெரியாதே என்றார். என்ன தெரியாதா என்ன அண்ணாவும் தம்பியுமா வலை முழுக்க சுத்துவீங்க இது தெரியாதா யார் அண்ணா... அவர் தாங்க நம்ம சகோதரர் திண்டுக்கல்தனபாலன் வலைச்சித்தர் தான். யாரு என்று கேள்வி வேற, இப்போ இது தெரிஞ்சுது குறளாலேயே அடி செமத்தையாய் விழும் தம்பிக்கு ஜாக்கிரதை. என்னம்மா நீங்களே அடி வாங்கித் தந்திடுவீங்க போல இருக்கே.
***
ஆக, உங்களுக்கு பூக்கொத்து வாங்கி வந்தவருக்கு, நல்லா வேணும்! "தனக்கென்று தன்னலமாகப் பெற்றுக் கொள்வதைவிட, தன்னைவிட தகுதி வாய்ந்தவர்கள் பெறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் உயர்ந்தவர் நீங்கள்" னு அவர் அறியாமல் இருந்தது அவர் தப்புத்தான்! :)
ஐயைய என்ன சீனா ஐயாவிடம் அடி வங்கித் தாற பிளானா. கழுத்தைபிடிச்சு தள்ளுறதுக்குள்ள ஓடிடணும்பா. ம்...ம்..ம்...
Deleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்.
இனியாச்செல்லம் என்னை யாருமே கருத்துச்சொல்ல விடலைப்பா:(( எல்லாத்தையும் இப்படி அவங்களே சொன்னாலும் ஸ்பெஷலா சொல்ல எனக்கும் ஒரு விஷயம் இருக்கே:)
ReplyDeletetake care da chellam:))
இன்னைக்கும் வருணுக்கு அடுத்த கமெண்ட் நான்!!!!!! ஆச்சரியாம இருக்கு:)
மைதிலி: என்ன!!! எல்லாரும் நீங்க சொல்ல நினைத்ததை எல்லாம் உங்க மனதிலிருந்து திருடி உங்களுக்கு முன்னால போயி சொல்லீட்டாங்களாக்கும்? :)))
Deleteஒண்ணும் கவலைப் படாதீங்க, "உங்க இனியா" உங்களுக்கு அப்புறம்தான் எல்லாருக்கும் ஃப்ரெண்டு! :)))
---------------------------
I am sure English teacher must be familiar with this..
***Don't walk behind me; I may not lead.
Don't walk in front of me; I may not follow.
Just walk beside me and be MY FRIEND.
Albert Camus***
But the problem here is, it is not possible post responses side by side! :(
---
என்ன அம்மு குழந்தை பேசு முன்னரே
Deleteஅ..அ..உ....எஹ்ஹ என்றெல்லாம் சொல்வதை தாய் ரொம்பவே ரசிப்பாள். அது போல நானும் அம்மு சொல்வதை ரசிப்பேன் மிகவே.நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் !
@ varun
Deleteyou never take any side while criticizing:)
But if you want to post a comment by your friend's side( surprising, its me!!!!) I too have a quote to dedicate you
***side by side or far apart
best friends are close to the heart****
இன்று உங்களின் சரத்தில் நானும் ஒரு மலர்....!!!
ReplyDeleteஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி இனியா அம்மா.
மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அருமையான கவிஞர்களைக் கொண்டு சரம் தொடுத்தமைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
மிக்க நன்றி! தோழி மேலும் வளர என் வாழ்த்துக்கள்....!
Deleteமிக்க நன்றி !வரவுக்கும் வாழ்த்திற்கும்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
எந்தையும் ஓர்கவிஞர்! என்றன் கருவினிலே
சிந்தையில் செந்தமிழைச் செப்பியவர்! - சந்தமொளிர்
வண்ணங்கள் வந்தாடும் மன்றமே என்னெஞ்சம்!
எண்ணங்கள் யாவும் தமிழ்!
என்னை ஒருபொருட்டாய் இங்குரைத்தீர்! இன்றமிழ்
அன்னை அளித்த அருளென்பேன்! - பொன்நன்றி!
ஆட்சி மணக்கும் அருந்தமிழ்ப் பேச்சழகு!
மாட்சி இனியா மனம்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஆஹா அருமையான கவிதை மூலம் விபரம் அளித்தீர். ஆனந்தம் அடைந்தேன் மிக்க நன்றி! அது தானே மீன் குஞ்சுக்கு கத்துக் கொடுக்க வேண்டுமா என்ன, தங்கள் நட்பு என் பாக்கியம் தங்கள் பதிவுக்களில் இருந்து இயன்றவரை கற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றி. வருகைக்கும் கருத்துக்கும். தொடர்கிறேன் தங்களை.வாழ்த்துக்கள் ....!
Deleteவணக்கம் இனியா !
ReplyDeleteஎன்வீட்டுப் பூச்செண்டும் ஏற்றுமது நற்சரத்தில்
பொன்னாய் புனைந்தாய் புகழ்ந்து !
அசத்தலான அறிமுகங்கள் அடியேனும் இவ்விடமோ மிக நன்றி சகோ இனியா !
அத்தனை பதிவர்களும் அறிந்தவர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !
வாருங்கள் கவிஞரே ! பூக்களும் தரஇயலவில்லை பாக்களும் தரமுடியவில்லை புகழ்ந்து ! வெறும் வார்தையினாலேனும் வாழ்த்துரைக்க வேண்டாமா. மிக்க நன்றி சீராளா ! வாழ்த்துக்கும் வரவுக்கும்.
Deleteஅறிமுகங்களைக் கண்டேன். சில நண்பர்கள் முன்னரே அறிமுகமானவர்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வரவுக்கும் கருத்துக்கும்.
Delete