என்னை வலைச்சர ஆசிரியராக தேர்வு செய்த திரு.சீனா ஐயாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரப் பதிவர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வீட்டுப் பொறுப்பு மற்றும் அலுவலக வேலை சிறிது காலம், வீட்டுப் பொறுப்பு மட்டும் சிறிது காலம் என்று மாற்றி மாற்றி வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டப் பெண் நான். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். என் முதல் குழந்தைக்கு இரண்டு வயதான பொழுது விளையாட்டுகள் மூலம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவள் பெயரில் தளத்தை ஆரம்பித்து அவ்விளையாட்டுகளை, அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அதுவே பூந்தளிர். கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நானூறு இடுகைகள் எழுதியிருக்கிறேன்.
எனக்குப் பிடித்த இடுகைகள் சில உங்கள் பார்வைக்கு:
அறிவியல் கற்றுக் கொள்ள நாங்கள் செய்த சோதனைகள்
2D இல் ஒரு 3D
சூரிய ஒளியில் பிரெட் டோஸ்ட் (Solar oven)
வீட்டில் எரிமலை செய்வது எப்படி?
இலையில் தண்ணீர் செல்லுமா?
மழை எப்படி பெய்கிறது?
எங்களின் கணித விளையாட்டுகள்:
விரல்களிலேயே அபாக்கஸ்
பயணத்திற்கு ஏற்ற கணித விளையாட்டுக்கள்
சோழியை எடு, வெற்றியை அள்ளு
நூறின் மதிப்பு
பெரிய சிறிய எண் கண்டுபிடித்தல்
மாண்டிசோரி விளையாட்டுகள்
பருப்பை வைத்து ஒரு விளையாட்டு
எங்கள் சமையல் அறையிலிருந்து
இரண்டு வயது குழந்தைகளுக்கான விளையாட்டுகள்
ஆங்கிலம் கற்றுக் கொள்ள விளையாண்ட விளையாட்டுகள்
வார்த்தை விளையாட்டு
நான் எழுதிய புத்தகம்
வாசிக்கப் பழக்க
கடந்த ஆறு மாதங்களாக ஆங்கிலத்திலும் எழுதுகிறேன். அந்தத் தளத்தின் முகவரி. 98 பதிவுகள் எழுதியுள்ளேன்.
எனக்கு மிகவும் பிடித்த சில இடுகைகள் : எந்த ஒரு பொருளும் இல்லாமல் குழந்தையுடன் விளையாட, பெரிய்ய்ய பென்சில் மற்றும் சுற்று சூழலுக்குக் கேடில்லாத ஒரு வானவேடிக்கை.
என் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்பு தியானா, வாழ்த்துக்கள் உங்களுக்கு.
ReplyDeleteவலைச்சரபொறுப்பை அழகாய் செய்வீர்கள்.
நீங்கள் பகிர்ந்து கொண்ட உங்கள் பதிவுகளில் படிக்காத சில் பதிவுகள் இருக்கிறது படிக்கிறேன்.
நன்றி கோமதி அரசு அம்மா
Deleteதங்களைஅறிமுகப்படுத்திய திரு சீனா அவர்களுக்கும், ஆசிரியர் பொறுப்பேற்ற தங்களுக்கும் வாழ்த்துக்கள். தங்களது பதிவுகளை, ஆங்கிலப் பதிவு உட்பட, கண்டேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து தாங்கள் அறிமுகப்படுத்துபவர்களை வாசிக்கத் தயாராகவுள்ளேன்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
நன்றி Dr B Jambulingam
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநல்ல விளக்கவுரைடன் தங்களின் பதிவுகளை அறிமுகம்செய்துள்ளீர்கள் சென்று பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteவலைச்சர ஆசிரியர் பணியில் சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteநன்றி காயத்ரி
Deleteகுழந்தைகளுக்குத்தானே என யோசித்தேன் ஏனெனில் எனக்கு வளர்ந்த குழந்தை... ஆனால் சாம்பிளுக்கு பார்த்த இரு பதிவுகள் அருமை. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ezhil
Deleteசிறிய தெளிவான அறிமுகம்..
ReplyDeleteவாழ்த்துக்கள் தியானா!
நன்றி கிரேஸ்
Deleteஇனிய தொடக்கம்.. அறிமுகம் அருமை.
ReplyDeleteவலைச்சரத்தில் - இந்த வாரம் சிறப்புடன் பணியாற்ற நல்வாழ்த்துகள்.
நன்றி துரை செல்வராஜு
Deleteகணக்கை பற்றி நிறைய எழுதி உள்ளீர்கள். கூட்டி கழித்து பார்த்தல்... மொத்தம் நூத்துக்கு நூறு தான் போல இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகணக்கு சரியாக செய்திருக்கிறேனா? நன்றி விசு
Deleteபயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு
ReplyDeleteபாராட்டுக்கள்.!
நன்றி இராஜராஜேஸ்வரி!
Deleteஅறிமுகம் சிறப்பு நானும் தொடர்கிறேன்.
ReplyDeleteநன்றி Killergee
Deleteஎங்க ஊரு & எங்க நாட்டை(அமெரிக்கா) சேர்ந்தவர் என்பதால் எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும் இவரின் வலைத்ளத்திற்கு வந்து செல்வதுண்டு. இவரது பதிவுகளை பார்க்கும் போது இவரை அம்மாவாக பெற்ற இவரது குழந்தைகள் மிக பாக்கியம் செய்தவர்கள் என்பதுதான் என் மனதில் வந்து உதிக்கும்.
ReplyDeleteஅவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.... தியானா உங்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்
மதுரைத் தமிழன், மிக்க நன்றி. என் குழந்தைகள் பாக்கியம் செய்தவர்களா அல்லது நான் அவர்களைப் படுத்துகிறேனா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். :-)
Deleteதியானா சகோதரியின் வலைத்தளத்தில் வாசித்திருக்கின்றோம். எல்லாமே குழந்தைகளுக்காக...அருமையாக சொல்லி இருப்பார். நாங்கள் சில பதிவுகளுக்குப் பின்னூட்டமு இட்டுள்ளோம். சிறிது காலம் காணவில்லையே என்று நினைத்தோம்.
ReplyDeleteவலைச்சரப் பணி இனிதே தொடர எங்கள் வாழ்த்துக்கள்!
நன்றி துளசிதரன்! இரண்டு தளங்களில் எழுதுவதால், தொடர்ந்து எழுதுவதற்கு சிரமமாக இருக்கிறது. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
Deleteஇன்றைய தொடக்கம்
ReplyDeleteஇனிய அறிமுகம்
வாழ்த்துகள்
நன்றி ஐயா!
Deletehidden gemஆ நீங்கள்?
ReplyDeleteவாழ்த்துக்கள். ஆங்கிலத் தளமும் அருமையாக இருக்கிறது.
நன்றி அப்பாதுரை ஐயா!
Deleteவாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் தளத்தின் பதிவுகளை வாசித்து இருக்கிறேன்! அருமையான தளம்! அறிமுகம் சிறப்பு! தொடருங்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Deleteஎளிய அறிமுகம்!
ReplyDeleteபணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!!
நன்றி Mohamed
Deleteசுய அறிமுகம் அருமை பணி தொடர வாழ்த்துக்கள் தியானா!
ReplyDeleteநன்றி தனிமரம்!
Deleteவலைச்சர பணி சிறக்க அன்பு வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteநன்றி முகில்
Deleteவலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் தளத்தை இன்று தான் சென்று பார்த்தேன். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.மதுரை தமிழன் சொன்னது போல், உங்கள் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
வாழ்த்துக்கள்.
Thanks Chokkan
Delete