Sunday, July 6, 2014

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

என்னடா இது? ரெண்டு நாளா நம்ம சிகரம்பாரதிய காணோமேன்னு நீங்க எல்லோரும் யோசிச்சிருப்பீங்க. முதலில் இரண்டு நாட்களாக இடுகை இடாமல் இறுதி இடுகைக்கு மட்டும் வந்திருப்பதற்கு மனதார மன்னிப்பைக் கோருகிறேன். பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்த சூழ்நிலையில் என்னால் பதிவிட முடியவில்லை. சோதனைகளிடம் தோற்றுவிட்டேன். வென்றிருந்தால் வலைச்சரம் வந்திருப்பேன்.  வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....


இன்று எனக்குப் பிடித்த, நான் வாசிக்கும் வலைப்பதிவுகள் வலைச்சரத்தில் அணிவகுக்கப்போகின்றன. வாருங்கள்... ..போகலாம்....

முதலாவது - திண்டுக்கல் தனபாலன். தனது பெயரிலேயே தனது தளத்தையும் அமைத்திருக்கின்ற இவரை முதலில் அறிமுகம் செய்யக் காரணம் இவரது குணம் தான். ஆம். தனது பதிவுகள் மூலமாக மட்டுமின்றி பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரைகளை இடுவதன் மூலமும் நம் அனைவரையும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் இவரது செயலைப் போல பிற பதிவர் எவரையும் கண்டதில்லை. வலைப்பதிவுகளை அடைவதில் சிக்கலா? உடனே பின்னூட்டம் மூலம் தகவல் தருவார். வலைச்சர அறிமுகமா? தகவல் சொல்வது தனபாலன் தான். உதவி என்று சொன்னால் தன்பணி போல் செய்து முடிப்பார். வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் பல. என்னைக் கவர்ந்த இவரது பதிவுகள் சில:




அடுத்தது - இரவின் புன்னகை. வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி தொலைபேசி நட்புவரை தொடர்ந்த ஒரே வெளிநாட்டு நண்பர். என்னோடு சம வயதுகளில் இருப்பவர். மிகச்சிறந்த தேடல் உள்ளவர். இப்போது "வானவல்லி" என்னும் சரித்திர நாவலை எழுதி வருகிறார். சக பதிவர்கள் அனைவரையும் சி.வெற்றிவேல் படைக்கும் இந்நாவல் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

மூன்றாவது புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்களின் புலவர் குரல். சமூக அநீதிகளை தன் கவி வரிகள் மூலம் சிறப்பாக எடுத்துரைப்பவர். குப்பையை அகற்ற வேண்டாமா , திருக்குறள்  மற்றும் ஓயாத அலை போல முயற்சி வேண்டும் போன்ற பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

********

இதுவரை எனது பதிவுகள் அனைத்தையும் படித்து ஆதரவும் ஊக்கமும் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். எனது பதிவுகளுக்கு வலைச்சரத்தில் கருத்திட்டவர்களுக்கு பதிலளிக்க நேரமில்லாது போய்விட்டது. அவர்கள் அனைவர்க்கும் பதிலளிக்கப்படும் என்பதுடன் முக்கியமான கருத்துரைகளுக்கு எனது வலைத்தளத்தில் தனிப்பதிவின் மூலம் பதிலளிக்கப்படும்.



இலங்கைப் பதிவர்களை அறிமுகப்படுத்த கடுமையான தேடலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அதிக பதிவுகளை இட முடியாமல் போனதும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாது போனதும். 

வாய்ப்பளித்த "வலைச்சரம்" குழுவினருக்கு நன்றிகள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்யக் காத்திருக்கிறேன்.

இதோ மீண்டும் எனது வலைப்பதிவுகளின் பட்டியல்.




எனது நண்பியின் வலைத்தளம் 


அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி 


அன்புடன் 

சிகரம்பாரதி.

3 comments:

  1. அன்புக்குரிய சிகரம் பாரதி..
    சூழநிலை தடுமாறுவது எவர்க்கும் இயற்கை..
    இருப்பினும் - தங்களது பணியை செவ்வனே செய்தீர்கள்..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. சிறந்த தளங்களின் அறிமுகங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நன்றி... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete