Sunday, August 31, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -2



சென்ற பதிவின் தொடர்சி இது . சென்ற பதிவில் பார்த்ததுபோலவே இந்த பதிவிலும் பல வித தளங்களில் தங்கள் பதிவுகளை எழுதி பெயர் ஏற்ற அருமையான சில பதிவர்களை பார்க்க போகிறோம் .  இவர்கள் அனைவரையும் உங்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வாருங்கள் பதிவிற்கு .செல்லலாம்

கவிதை வானம் :

நண்பர் பருத்தி முத்துராசன் அவர்களின் வலைபூ இது . பல அருமையான கவிதைகள் , கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது . இதில் நான் ரசித்தது உங்களுக்காக ...

 

 மீண்டும் இந்தி திணிப்பு  அவசியமா ?

தேவயாணி கைதில் நடந்தது என்ன ?

 

 

 நிலவை தேடி :

பல ஆன்மிக பதிவுகள் மற்றும் சமுக பதிவுகள் கொண்ட வலைத்தளம் இது . படிக்க படிக்க ஆவலை தூண்டும் எழுத்துநடை இவரின் சிறப்பு .

 

பிரபஞ்ச வெளியில் :

ஜெயகாந்தன் பழனி என்ற பதிவர் நடத்தும் வலைபூ இது . பக்கி சம்பந்தபட்ட பல பதிவுகள் இங்கு உள்ளது . இதுவரை நாம் அறியாத பல தகவல்கள் இங்கு கொட்டிகிடகிறது .

தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 17

 

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..! 

 

 

 கிறுக்கல்கள் :

ஜாலியான அதே சமயம் அருமையான பதிவுகள் கொண்ட தளம் இது . பாம்பு வீட்டுக்கு வந்தா நாம ஓடுவோம் . இவர் பதிவு தேத்துவார் . என்ன நடந்தது என படித்து பாருங்கள் .

 

விசுAwesomeமின் துணிக்கைகள்

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்ற பதத்துடன் தனது பக்கத்தை நகைசுவையால் நிரம்ப வைத்துள்ள வலைபூ இது .

 

"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும் 

"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை



கார்த்திக்கின் கிறுக்கல்கள் :


கார்த்திகேயன் லோகநாதன்என்ற நண்பரின் வலைபூ இது கவிதை கட்டுரை என எழுதி தள்ளியுள்ளார் . அனைத்தும் கருத்துபோதிந்த பதிவுகள் ஆகும் . படித்து உங்கள் ஆதரவை சொல்லுங்கள் .


இறுதி வரை 

இந்த கொடுமை தொடரவேண்டுமா?? 

 

 வல்வயூரன் :

ராஜமுந்தன் வல்வயூரன் என்ற நண்பர் நடத்தும் வலை தளம் இது . இதுவும் பல்சுவை வலைத்தளம்தான் . அனைத்தை பற்றியும் எழுதும் அருமையான பதிவர் இவர்.

கனக்கின்ற இதயங்கள்

புலத்து வாழ்க்கை. 

 

 

தமிழ் இலக்கிய மின்வலை :

கவிஞ்சர் பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை  வலைபூ . இங்கு தமிழ் புகுந்துவிளையாடுகிறது . கவிதை , தமிழ் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தளம் இது .

 

  கல்வியே கண்

தொடுத்தலும் விடுத்தலும்


கவிப்பேரரசு வைரமுத்து

 

 

மழைச்சாரல்

 தோழி  பிரியா , எழுத்தை அதிகம் நேசிப்பவள் என தன்னை அறிமுகம் செய்யும் இவர் தனது தளத்தில் பல அருமையான கவிதைகள் எழுதியுள்ளார் .

 நான் இதுவே

நடந்தேறா முயற்சி

 

  ஒரு வாரமாக என் தொல்லையை தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி . அவசரபடாதீங்க அடுத்த வாரமும் நான்தான் ...(மாட்டிகிட்டிங்களா !!!!)

Saturday, August 30, 2014

பல்சுவை பதிவர்கள் பகுதி -1




 இன்று நாம் பார்க்க போகும் பதிவர்கள்  அனைவரும் அனைத்து தளங்களிலும் புகுந்து விளையாடும் ஆள்ரௌண்டேர்கள் . இவர்கள் எல்லாவிஷயங்களை பற்றியும் எழுதுவார்கள் . இவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்த முடியாது . அப்படி பட்ட சில பதிவர்களை பார்ப்போம் .

Thillaiakathu Chronicles :

Thulasidharan V Thillaiakathu  என்ற நண்பர் எழுதும் வலைத்தளம் இது . இவர் ஆங்கில ஆசிரியர் எனவே ஒரு ஆங்கில தளமும் வைத்துள்ளார் . இவர் பாலக்காட்டில் உள்ள ஒருபள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபிக்கு ஒரு பேபி

 

இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்...... 

 

 

ரூபனின் எழுத்துபடைப்பு :

திண்டுக்கல் தனபாலன் அய்யாவுக்கு அடுத்து அனைவரது பதிவிலும் பின்னுட்டம் இடும் அன்பு நண்பர் ரூபனின் வலைத்தளம் இது .

 

இதை படித்து பாருங்கள் :

 

சிறகடிக்கும் நினைவலைகள்-7

எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி 

 

என்னுயிரே :

இந்த தளத்தை எழுதிவருபவர் நண்பர் சீராளன் அவர்கள் . இவர் 'இயற்கையின் இலவசங்களுக்குள் எதிர்ப்பின்றி எடுத்துக்கொண்ட ஒரு சில தேவைகளோடு என் பயணம், எனைப்பற்றி கிறுக்க வேறேதுமில்லையே இருந்தும் என்னுயிரின் ஸ்பரிசங்கள் இங்கே எல்லோரையும் இதமாய் தழுவும் என நினைக்கிறேன் அதுவே போதுமானதாய் இருக்கட்டுமே.எனது பிறப்பிடம்,வாழ்விடம் கேட்க்காதீர்கள் ஏனெனில் எல்லோரையும் போல நானும் ஓர் நாடற்ற ஈழத்தமிழன்,காற்றில் மூச்சாய் ,கனவில் வாழ்விடமாய் நாட்களைக் கடத்தும் எனக்குள்ளும் நினைவுகளை விதைத்து கவிதைகளை அறுவடை செய்ய காரணமாய் போன என் காதல் தேவதைக்கான கவிதைகள் மட்டுமே இங்கே பூத்திருக்கின்றன.பிடித்திருந்தால் அவற்றை ரசித்துக் கொள்ளுங்கள் எனக்காகவும்,என் கடந்துபோன காலங்களுக்காகவும்." என தன்னை பற்றி விவரிக்கிறார் .

 

இதை படித்து பாருங்கள் :

 

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி

கனவுகள் எழுதிய கவிதை ..! 

 

  விமர்சன உலகம் :

சேலத்தை சேர்ந்த megneash k thirumurugan என்ற நண்பர் எழுதிவரும் வலைபூ இது . வன்முறை என்பது எதிலும் கூடாது நண்பர்களே!!(ஏன்னா நா எழுதப்போறேன்)என கிண்டலாக தன்னை பற்றிய அறிமுகத்தில் சொல்கிறார் .


இதை படித்து பாருங்கள் :


 

அக்னி குஞ்சு  

சென்னையில் வாழும் கிராபிக் டிசைனர் பதிவர் RDK அவர்களது தளம் இது .சூடான அரசியல் பதிவுகள் இவர் சிறப்பு . மற்றும் இன்றி அனைத்தை பற்றியும் எழுதுகிறார் .

இதை படித்து பாருங்கள் :

ஒரு சம்பவம் வரலாறாகிய வெள்ளிவிழா ஆண்டு!

 

கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். 

 

Friday, August 29, 2014

பக்தி பழங்கள் (விநாயகர் தின சிறப்பு பதிவு )


       
           அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் . என்ன கொழுக்கட்டை ரெடியா ? நல்லா சாப்பிடுங்க , நாடு நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க . அப்படியே நான் ரொம்ப நல்லா இருக்கணும்னு வேண்டிக்குங்க . 

              இன்று நாம் பார்க்க போவது பக்தி பழங்களை . ஆம் பக்தி மணம் கமழும் பதிவுகள்உள்ள தளங்களை பார்க்க போகிறோம் .வாருங்கள்பார்க்கலாம் .



மாதவி பந்தல் :

சிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா? இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா? மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்! மாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி! அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது! மாதவிப் பந்தல் மேல், எங்கோ இருந்து வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, கீதம் இசைக்கின்றன! இந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே!  என தன்னை பற்றி சொல்லும் இவரின் வலைப்பூவை பார்க்கலாம் வாங்க .



யார் தமிழ்க் கடவுள்?

 

முருகனின் கடைசி "வகுப்பு"!

 

மணிராஜ் :

 

திருமதி ராஜேஸ்வரி அவர்களின் வலைபூ இது . பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை . பக்கி பதிவுகள் எழுதுவதில் இவர் ஒரு மேதை . நீங்களும் படித்து பாருங்கள் .

 

புன்னை மாரியம்மன் கோவில் விழா 

 

ஸ்ரீ பகவத் விநாயகர்  

 

குரு பிளாக் 

 

நண்பர் குரு அவர்களின் வலைத்தளம் இது . பல பக்தி பதிவுகள் இவரின் தளத்தில் காணபடுகிறது . என்ன ஒரு குறை அடிக்கடி எழுதாமல் மிக குறைவாக எழுதுகிறார் . நாம் ஆதரவு அளித்தால் இன்னும் முனைப்போடு நிறைய எழுதுவார் .

 

பஞ்சாயதான பூஜை - மஹா பெரியவா 

 

தெய்வமும் மதமும் தர்மமும் 

 

முருகனருள் :

 

அடேங்கப்பா !! இங்கோ போய் பாருங்கள் , பக்திமாங்களுக்கெனவே உள்ள தளம் இது . இங்கு இல்லாத பக்தி பாடல்களே இல்லை . அனைத்து விதமான பாடல்கள் , கவிதைகள் , கடுரைகள் என குவிந்து கிடக்கிறது . இது ஒரு பொக்கிஷ புத்திகள் தளம் .

 

 

வேலனைப் பாடுவதே வேலை!

 

*கந்தன் திருநீறணிந்தால்
 

*கந்தா நீ ஒரு மலைவாசி

 

 

அம்மன் பாடல்கள் :

 

தினமும் அம்மன் பற்றிய (அம்மா பற்றிய அல்ல ) பாடல் கேட்க ஆசையா அல்லது அனைத்து கடவுள் பாடல்களையும் தரவிறக்க ஆசையா இவை எல்லாவற்றிக்கும் உதவுகிறது இந்த வலைபூ . இங்கு உள்ள பாடல்களை தரவிர்க்காலாம் அல்லது அப்படியே கேட்கலாம் . வாருங்கள் கேட்போம் .


அம்மன் பாடல்கள்

பாடல்கள் - முருகன் பாடல்கள் பகுதி 16

 



 


Thursday, August 28, 2014

கவிதை வித்தகர்கள்



  கவிதை பிடிக்காதவர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . கவிதை எழுதுவது ஒரு வரம் போல . எல்லாராலும் எல்லார்க்கும் பிடிக்கும் வண்ணம் எழுதமுடியாது . ஆனால் கவிதைகளால் தங்கள் வலைத்தளங்களை நிறைத்து பலரின் கவனத்தை கவர்ந்த சிலரின் அறிமுகங்கள் இதோ .


இரவின் புன்னகை :


             நண்பர் சாலகுருச்சி வெற்றிவேல் அவர்களின் வலைத்தளம் இது . கவிதைகள் இங்கு நிரம்பி வழிகிறது . கவிதைகள் மட்டும் இன்றி வனவள்ளி என்ற அருமையான தொடரையும் எழுதிவருகிறார் .பழக அருமையான நபர் இவர் . சென்ற வருட பதிவர் சந்திப்பில் இவருடன் இருந்தது மறக்க முடியாதது .

உதிரும் நான் - 34

 

பிறந்த நாள் கவிதை 

---------------------------------------------------------------------------------------------------



நீரோடை : மகேஷின் கவிதைகள்

           பல்வேறு தலைப்புகளில் பல அழகான கவிதைகளை தனது வலைபக்கத்தில் பதிந்து வைத்துள்ளார் நண்பர் மகேஷ் . நீங்களும் படித்து ரசியுங்கள் .





---------------------------------------------------------------------------------------------------


சுவாதியும் கவிதையும் :

         சுவாதியும் கவிதையும் என்னும் வலைப்பூவை எழுதிவரும் சகோ சுவாதி தனது அருமையான எழுத்துநடையால் படிப்பவரை கட்டிபோடுகிறார் . வார்த்தை ஜாலங்களில் கவிதை களைகட்டுகிறது .


 


---------------------------------------------------------------------------------------------------

பென்சில் நதி :

ராஜா சந்திரசேகர்
இவர் எழுதிய கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) *2003ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது (கவிப்பேரரசு வைரமுத்து வழங்கியது) *புதிய கவிதைத் தொகுதிகள் 'அனுபவ சித்தனின் குறிப்புகள்,நினைவுகளின் நகரம் வெளியாகியுள்ளது.



---------------------------------------------------------------------------------------------------

ஒன்னும்தெரியாதவன் :

இல்யாஸ் அபுபெக்கர் என்ற நண்பரின் வலைபூ இது . முகநூளில் கலக்கி வரும் இவர் பலகவிதைகள் எழுதியுள்ளார் . இவரது ஸ்பெஷல் "குட்டிம்மா " தான் . மதங்களை கடந்து மனிதனை , மனிதன் மனதை நேசிக்கும் மிக சில மனிதர்களில் முக்கியமானவர் இவர் . முடிந்த அளவு இவரை நண்பராக ஆக்கிகொள்ளுங்கள் . இவரது முகநூல் முகவரி :https://www.facebook.com/ilyas7032?fref=nf


---------------------------------------------------------------------------------------------------

 

தமிழா  தமிழா !!

  • Kanchana Radhakrishnan
  • T.V.ராதாகிருஷ்ணன்
தமிழின் அருமையான கருத்துகளை எடுத்து மற்றவர்களும் சொல்லும் அழகான கவிதைகளை இவர்கள் படைகின்றனர் . மரபுக்கவிதை முதல் புதுகவிதைவரை அனைத்தும் இவர்களிடம் உண்டு . படித்து பாருங்கள் .

 

---------------------------------------------------------------------------------------------------


ராஜாசந்திரசேகர் கவிதைகள் :

  பல அருமையான , சிந்திக்க வைக்கும் அதே சமயம் ரசிக்க வைக்கும் கவிதைகள் அடங்கியவலைபூ இது . இதில் நான் ரசித்த சில கவிதைகளை உங்களுக்கு அளித்துள்ளேன் .

Wednesday, August 27, 2014

பதிவர்களும் சமூகமும்

 


இன்று சமுக பிரச்சனைகளை ,  சமுகம் சார்ந்த செய்திகளை பதிவாக்கி தரும் சில பதிவர்களை பற்றி பார்ப்போம் . இவர்கள் நம்மில் பலர் எழுத துடிக்கும் ஆனால் தயங்கும்  பல சமுக க ருத்துகளை அழகான எழுத்து நடையில் பதிவாக்கி தருபவர்கள் . வாருங்கள் பார்ப்போம் .

 

அன்னம் ஸ்டோர் :

   இவர் ஒரு புதிய பதிவர் பெயர் C.T.சுப்பையா  . இப்போதுதான் எழுத துவங்கியுள்ளார் .  பட்டபடிப்பு முடித்து , இவர் சொந்தமாக கடை வைத்திருப்பதால் அதில் சேரும் குப்பைகளை எப்படி வீணாக்காமல் பணமாக மாற்றி சுற்று சூழலை காப்பது பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் . புதியவர் என்பதால் நாம் அவருக்கு ஆதரவு அளிக்கலாமே . நண்பர்கள் அவர் தளத்தில் இணையலாமே !

 

இவரின் சில பதிவுகள் ..

 =======================================================


என் . கணேசன்

இவர் ஒரு பதிவர் மற்றுமன்று மிக சிறந்த எழுத்தாளர் கூட . இவர் பல அருமையான நூல்களை எழுதியுள்ளார் .  பரமரகசியம், ஆழ்மனத்தின் அற்புதசக்தி , வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூலை எழுதியவர் .

இவரின் சில பதிவுகள் ..



======================================================================

இவள் :

         பல சமுக அக்கறை உள்ள பதிவுகள் இங்கே கானபடுகிறது .இன்றைய கல்வி முறை பற்றி இவர் எழுதிய ஒரு பதிவு மிக அருமையாக உள்ளது நீங்களும் படித்து பாருங்கள்.

இவரின் சில பதிவுகள் ..

உருப்படாத கல்வி முறையை மாத்துங்களேன் மம்மிஜி!

திரைஉலகில் பெண் இயக்குனர்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?

 

  ==========================================================

காற்றுவெளி :

 மதுமிதா  என்ற  பதிவரின்  வலை பூ இது .  இதுவரை  நாம் அறியாத பல தகவல்களுடன் இவர் பதிவுகள் இருப்பது ஒரு சிறப்பு ஆகும் .

இவரின் சில பதிவுகள் ..

 

===============================

 மின்சாரம் :


சென்னையை சேர்ந்த சிவா   என்ற நண்பரின் வலைபூ இது , அரசியல் பற்றிய இவரது பதிவுகள் மிகவும் சூடானவை . பல பதிவுகள் செம காமடியனவை . நீங்கள் படித்துபார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

இவரின் சில பதிவுகள் ..

 திமுக வளர்கின்றதா? தேய்கின்றதா? நடுவர் மஞ்சப்பை

 பதிவர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது??

*******************************************************************

  மாநகரன் :


  மாநகரன் என்ற வலைதளத்தை எழுதிவரும் நண்பர் பல அருமையான சமுக அக்கறையுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார் . புத்தக சந்தைகளை பற்றி இவர் எழுதிய ஒரு கட்டுரை பல திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைகிறது . நீங்களும் பாருங்கள் .

 இவரின் சில பதிவுகள் ..

தமிழ் புத்தக சந்தைகளைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி.

 

என்றும் மறவா அன்புடன் நாயகன் நெல்சன் மண்டேலா ! 

 

*******************************************************************

திரைஜாலம் :

 Ramarao என்ற நண்பரின் வலைத்தளம் இது . இவரது சிறப்பே பல தொடர்கள் எழுதுவதுதான் . அது ஐம்பதை தாண்டி செல்வது வியப்பாக உள்ளது .ஆனால் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது என்பதை படித்துபார்த்து உணருங்கள் .

இவரின் சில பதிவுகள் .. 

எழுத்துப் படிகள் - 78

சொல் வரிசை - 64 

 

*******************************************************************

 மனசாட்சி :

நண்பர் ராஜபிரியன் அவர்களின் தளம் இது . நடப்பு நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இவர் தளத்தில் அதிகம் உள்ளது . சமிபத்தில் நடந்த கட்டிட விபத்துகளை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் .

இவரின் சில பதிவுகள் .. 

கட்டிட விபத்தும் - பலப்பல கேள்விகளும். 

 

*******************************************************************

 கனவும் கமலாவும் :

கனவும் கமலாவும் என்னும் வித்தியாசமான பெயரில் வலைத்தளம் வைத்து பெயர் போலவே வித்தியாசமான பதிவுகளை தருகிறார் இவர் . இவரின் வலையில் கவிதைகள் , கட்டுரைகள் என அனைத்தும் நிறைந்து வழிகிறது .

இவரின் சில பதிவுகள் ..

புதியது கேட்கின்….

அன்னையருக்கு ஏது தினம்! 

 

*******************************************************************

இன்றைய வானம் :

பெயர் தெரியாத இந்த பதிவர் வேற்றுகிரக மனிதர்களை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் . சில அறிவியல் சம்பந்தமான பதிவுகள் இவர் தளத்தில் காணபடுகிறது . அறிவியல் மட்டுமின்றி சினிமா சம்பந்தபட்ட பதிவுகளும் இங்கு உள்ளது .

இவரின் சில பதிவுகள் ..

பாறை ஓவியங்களில் வேற்று கிரகமனிதர்கள்... 

இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு அழச்செய்த படம்


மீண்டும் நாளை சிந்திப்போம் சாரி சந்திப்போம்

Tuesday, August 26, 2014

தல .....




வணக்கம் நண்பர்களே ,

 இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பவர்கள் இந்த பதிவுலகில் நன்கு அறிமுகமான , பிரபலமான பெரிய தலைகள் .(அப்பாடி தலைப்பு ஓகே ஆகிட்டு )


சீனு - திடங்கொண்டு போராடு 

               கண்ணாடி மச்சான் என நண்பர்களால் அன்புடன்(!!) அழைக்கப்படும் சீனுவின் வலைத்தளம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது . சென்ற பதிவர் சந்திப்பில் இவரின் உபசரிப்பில் திக்குமுக்காடி போனேன் . விதவிதமான விஷயங்களை எழுதுவதில் கில்லாடி .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

பாலகணேஷ் -வாத்தியார்

             பதிவுலகில் வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் என்றும் இளைஞ்சர் , பதிவுல மார்கண்டேயன் பாலகணேஷ் அய்யா அவர்களின் வலைபூ மிகவும் பிரபலமானது .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சிவகாசிகாரன்


பெரிய விஷயங்களை மிக அசால்டாக எழுதுவதில் வல்லவர் இவர் . எனக்கு மிகவும் பிடித்தது இவரின் எழுத்து நடைதான் . சாதாரண பாமரனும் புரியும் வண்ணம் எழுதுவதில் வல்லவர் . ஊரின் புகழ் போல இவரின் எழுத்திலும் சரவெடி வெடிக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

===============================================

அரசன் - கரைசேரா அலைகள்

ராஜா என்ற நல்லபெயரை (!!!!) வைத்தால் என்னமோ நல்ல புள்ளையாக இருக்கும் நண்பர் அரசன் அவர்களின் வலைபூ இது . ஆளு பார்க்க ஹீரோ போல இருந்தாலும் பேச்சு குழந்தைபோல தான் இருக்கும் . அடுத்தவருடம் பிரமரசாரியத்தில் இருந்துவிடுதலை அடைவார் என நினைக்கிறன் .

வலைபூ செல்ல : CLICK HERE

=============================================


சதீஷ் - தம்பி

எங்களால் செல்லமாக தீவிரவாதி என அழைக்கபடுபவர் . சமுக அவலங்களை கண்டு பொங்கி எழுதுபவர் . ஆளுதான் கருப்பு , ஆனா மனசு தங்கம் . பதிவர் சந்திப்பில்  கலந்துகொண்டு இவர் செய்த உதவிகள் ஏராளம் . எல்லையில் சப்பாத்தி சுடுவதாக உளவுத்துறை சொல்கிறது ஆனால் இவர் எதிரியை சுடுவதாக சொல்கிறார். எது உண்மையென தெரியவில்லை .

வலைபூ செல்ல : CLICK HERE 

================================================

பிரபாகரன் 


பிலாசபி பிரபா என அறியப்படும் நண்பர் பிரபாகரின் வலைபூ இது . அவரிடம் அதிகம் பேசியதில்லை ஆனால் நல்ல நண்பர் . சொன்ன உடன் பல புத்தகங்களை வாங்கி அனுப்பிய நல்ல மனதுக்காரர் .

வலைபூ செல்ல : CLICK HERE 

======================================================================

சிவகுமார் ஜில்மோர்


எப்பொழுதும் ஜில் என கூலாக இருப்பதால்தான் ஜில் மோர் என பேர் வைத்துள்ளார் போல . எல்லா படத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துமேய்கிறார். பழக அருமையான நண்பர் .

வலைபூ செல்ல : CLICK HERE

JILLMORE.TAMIL க்கு 

=======================================================================

நாஞ்சில் மனோ

இவரை தெரியாத பதிவுலக நண்பர்கள் குறைவு. இப்போது  அதிகம் எழுதவில்லை ஆனாலும் பலரின் பதிவுகளை படித்து கருத்து சொலுவார் . அயல்நாட்டில் இருந்தாலும் நண்பர்களுக்காக எதையும் செய்யும் நல்ல நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE

===========================================================================
விக்கியுலம் வெங்கட்  


இவர் பலா பழம் போல . ஆளு கொஞ்சம் கரடுமுராடக தெரிந்தாலும் அருமையான நண்பர். சென்ற பதிவர் சந்திப்பில் தான் நேரில் பார்த்த்தேன் . பல முறை பேசியுள்ளேன் . குழந்தை குரல் கொண்டவர் . முகநூலில் இவர்
அட்டகாசம் தொடர்கிறது .

வலைபூ செல்ல : CLICK HERE
==================================================


திண்டுக்கல் தனபாலன்


புதிய பதிவர்களுக்கு உற்ச்சாகம் ஊட்டுவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை . பல தளங்களில் இவரின் பின்னுட்டம் தான் முதல் பின்னுட்டமாக இருக்கும் . வலைசரத்தில் யாரை அறிமிகம் செய்தாலும் அவருக்கு பாராட்டுதெரிவித்து அவர்களிடம் தகவல் சொல்லும் நல்ல நண்பர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

சரவணன் - குடந்தையூரன்


சமிபத்தில் நேரில் சந்தித்த பதிவர் இவர்தான் . பழக இனிமையான நபர். அதுபோல இவரது வலைபூவும் எளிமையான , அழகான பதிவுகளை கொண்டிருக்கும் .

வலைபூ செல்ல : CLICK HERE

================================================

ஸ்கூல் பையன்


பல நூறு வயசானாலும் இன்னும் ஸ்கூல் பையன்னு சொல்லி ஊரை ஏமாற்றும் நல்ல நண்பர் இவர் . ஆளு பார்க்க , பழக செம அமைதியான ஆளு . ஆனால் பதிவுகள் பட்டையை கிளப்பும் . அதுபோலமுகநூலில் கலக்கிக்கொண்டு இருப்பவர் இவர் .

வலைபூ செல்ல : CLICK HERE

===================================================================
செங்கோவி

பெயரை பார்த்து எதோ வயசான ஆளுன்னு நினைத்தேன் . ஆனால் என்னை போல (!!!!) அவரும் அழகா ஹீரோ போல தான் இருக்கார் . இவரின் பதிவுகள் தனித்துவம் வாய்ந்தவை . திரைகதை பற்றி இவரின் தொடர் பதிவு அருமையாக இருக்கும் . பெரும்பாலும் இவரின் விமர்சனம் பார்த்தே படம் பார்க்கபோகிறேன் .

வலைபூ செல்ல : CLICK HERE
============================================

ஆவி

ஆவி எனபயத்துடன் அழைக்கப்படும் நண்பர் ஆனந்த் விஜயராகவன் அவர்களின் வலைபூ இது . என் தளத்தில் ஒருமுறை பின்னுட்டம் இட்டார் . அன்றே அவர் விபத்தில் கையில் அடிப்பட்டுகொண்டார் . பதிவர் சந்திப்பில் அறிமுகமான அருமையான பதிவர், நண்பர் இவர்.

வலைபூ செல்ல : CLICK HERE 
==============================================

காணாமல் போன கனவுகள் ராஜி


சமைக்கவே தெரியாட்டியும் பல சமையல் குறிப்புகளை புகைப்படத்துடன் போட்டு கலக்கும் அன்பு அக்கா ராஜி ஆர்களின் வலைபூ இது . என் மகன் பிறந்த பொழுது முதல் வாழ்த்து இவரிடம் இருந்துதான் வந்தது . நல்ல பாசமான பதிவர்.

வலைபூ செல்ல : CLICK HERE
==========================================
ஹாரி

 




எனது வலைதளத்தை அழகுபடுத்தி தந்த நல்ல நண்பர் இவர். ஆனால் முகத்தை காட்டமாடுறார் .(பயந்துடுவாங்கனு பார்கிராரோ ?). கிண்டலாக எழுதுவதில் வல்லவர் . எல்லா பதிவர்களும் இவருக்கு நண்பர்களே . எல்லாரையும் கலாய்க்கும் ஜாலி பதிவர் இவர். 

வலைபூ செல்ல : CLICK HERE

============================================

உணவு உலகம் : சங்கரலிங்கம் 


உணவு பொருள் பாதுகாப்பு துறையில் பணியாற்றும் இவரின் வலையில் நமக்கு பயனுள்ள பல பதிவுகள் கிடைகிறது. இவருக்கு பேரனே இருக்கார் ஆனால் என்னை போல உள்ள யூத்துடன் சேர்ந்து கொண்டு தானும் யூத் என மாறி ஜாலியாக பழகூடியவர் .


 
வலைபூ செல்ல : CLICK HERE

Monday, August 25, 2014

தம்பட்டம்



எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய உயர்திரு சீனா அய்யாவுக்கும் , அன்பு நண்பர் மதுரை மண்ணின் சூப்பர் ஸ்டார் கருப்பு தங்கம் எங்கள் தமிழ்வாசிக்கும் "ஆழ்ந்த " நன்றிகள் .






இந்த பதிவு முழுவதும் சுயதம்பட்டம் மட்டுமே . ஆனால் கிழே வரும் கருத்துகள் நான் சொன்னது அல்ல மற்றவர்கள் சொன்னதின் தொகுப்பே .

=======================================================================




"நான் முகநூலை உருவாக்கும் போது கூட இப்படி யோசித்ததில்லை , ஆனால் நண்பர் ராஜா அருமையாக யோசித்து இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார் . அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது"

                                                                               Mark Zuckerberg(FACEBOOK OWNER)

அவர் பாராட்டிய பதிவு :
 




=======================================================================


"நான் மென்பொருள் தயாரிப்பில் முதன்மையான நிறுவனம் வைத்திருக்கலாம் ஆனால் என்னை பற்றி என் மென்பொருளை பற்றி மக்களுக்கு எடுத்துசொல்வதில் ராஜபாட்டை முக்கியபங்கு ஆற்றுகிறது "

                                                                      பில்கேட்ஸ் ( MICROSOFT)

அவர் பாராட்டிய பதிவு :




==============================================


"நாங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பற்றி சொன்னதைவிட ராஜபாட்டை ராஜா சொன்னதுதான் அதிகம். எங்களுக்கே தெரியாத (!!) சில அப்ளிகேஷன் பற்றி இவர் அருமையாக எழுதியுள்ளார் ."

                                         GOOGLE CEO 

அவர் பாராட்டிய பதிவு :





=========================================


"இன்று எனக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க முக்கியகாரணம் ராஜபாட்டை தான் . என்னை பற்றி பல பதிவுகள் போட்டு கோடிகணக்கான (!!) மக்கள் மனதில் என்னை வேருன்ற செய்தவர் இவர் "

                        அல்டிமேட் ஸ்டார் அஜித் 


அவர் பாராட்டிய பதிவு :



 

 

 

 

  நாளை முதல் பதிவர்கள் அணிவகுப்பு தொடங்கும்