Thursday, August 21, 2014

வலைச்சரத்தில் நான்காம் நாள்

மூன்றாம் நாள் வலைச்சரத்திற்கு வந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இன்றும் அறுசுவைதான்.

சாப்பாடு பற்றி ஒரு கதை.  இது நான் ‘படித்ததில் ரசித்தது’.

ஒரு ஊரில் இரண்டு புகழ்பெற்ற ஆட்கள் வாழ்ந்தனர். அவர்களுடைய பெயர்கள் போஜனவிலாசின் (சாப்பாட்டு மன்னன்), சய்யவிலாசின் (படுக்கை மன்னன்). இருவரும் அவரவர் துறையில் அதிசயக்கத் தக்க அளவில் சிரந்து விளங்கியதால்தான் புகழ் ஓங்கியது இவர்களுடைய புகழ் ராஜாவின் காதுகளையும் எட்டவே, அவன் அவர்களைச் சோதித்து பரிசு கொடுக்க விரும்பினான்.

ராஜா அழைத்தவுடன் இருவரும் வந்தனர். இருவரில் யார் அதிகம் சிறந்தவரோ அவருக்குப் பரிசு என்று அறிவித்தான். இருவரும் எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டனர். ஒருநாள் மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகியது. அரண்மனை இதுவரை காணாத அளவுக்கு அதிகமான அறுசுவை பதார்த்தங்கள் தயாராயின. நாட்டிலேயே தலை சிறந்த சமையல்காரர்கள், மிகச் சிறந்த சாமான்களைக் கொண்டு சமைத்தனர். சாப்பாடு தயாரானவுடன் மன்னரும் அவனும் (சாப்பாட்டு மன்னன்) ஒரே வரிசையில் உட்கார்ந்தனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பண்டங்களைப் பார்த்தவுடன் அவன் மயக்கம் போட்டுவிடுவான் என்று அரசன் எண்ணியிருந்தான். ஆனால் அவனோ இலையில் போட்ட எதையும் தொடக்கூட இல்லை!

மன்னனுக்கு ஒரு பக்கம் எரிச்சல், மறுபக்கம் வியப்பு. உபவாசம் இருப்பவனையும் தின்னத் தூண்டும் சுவைமிகு, மணம் மிகு உணவு. அப்படியும் தொடவில்லை. ஆனால் அவனைக் காரணம் கேட்டபோது இந்த அரிசிச்சோற்றில் சுடுகாட்டு அரிசி வாடை அடிக்கிறது என்றான். அரசனுக்கு அதிபயங்கர கோபம். இருந்தபோதிலும் ஒருவனைத் தண்டிக்கும் முன்னர், தீர விசாரிப்பதே முறை என்று எண்ணி அத்தனை சமையல்காரர்கள், கணக்குப்பிள்ளைகள் எல்லோரையும் அழைத்து விசாரித்தான்.

சமையல்காரன் எந்தக் கடையில் அரிசி வாங்கினானோ அவனை விசாரித்ததில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் சாகுபடி செய்வோனிடம் வாங்கிய நெல்லைத் தான் விற்றதாகச் சொன்னான். அரசனுக்கு ஒரேவியப்பு. எவ்வளவு மணப் பொருட்களை சேர்த்தபோதும் சாப்பாட்டு மன்னன் ஒரு குறையைக் கண்டுபிடித்துவிட்டான் என்று பாராட்டி அவனுக்குப் பரிசுகள் தந்தார் ராஜா.

அடுத்ததாக படுக்கை மன்னன் தனது திறமையைக் காட்ட முன்வந்தான். தலை சிறந்த படுக்கை கட்டில் நிபுணர்கள் வந்து உலகிலேயே தலை சிறந்த படுக்கையை தயார் செய்து அலங்கரித்தனர். அதில் அவனைப் படுக்கும்படி ராஜா கூறினார். அவனோ படுத்த மாத்திரத்தில் படுக்கையில் இருந்து குதித்து எழுந்து விட்டான். ஏதோ உறுத்துகிறது என்று முறையிட்டான்  ராஜாவுடனே சிரித்துவிட்டுச் சோதித்துப் பார்ப்போமே என்றார். படுக்கையில் ஏழு போர்வைகள் ஏழு மெத்தைகளுக்கு கீழே ஒரு ‘முடி’ இருந்தது.. ராஜா அதைப் பார்த்தவுடன் மேலும் அதிசயித்து முன்னைவிட ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனுப்பினான்.
எப்பூடி நம்ப ஊர் ஆளுங்க.

கோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை
http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html


இனி வலைப்பூக்களுக்கு வருவோமா…

இமா

முகம் காட்ட மறுக்கும் ஒரு அன்புத் தங்கச்சி.  இமாவோட கேக் அலங்காரத்தில் அவளுக்கு நிகர் அவளே. 


அதிரா
அதிராவுக்கு நன்றி.  அதைவிட அதிராவோட பூசார்களுக்கு ரொம்ப, ரொம்ப நன்றி.  ஆமாம்.  இந்த பூசார்களைப் பார்த்துக்கிட்டே எங்க லயாக்குட்டி சமத்தா பால் குடிக்கறா, சாதம் சாப்பிடறா.  அதான் பூசாருக்கு ஸ்பெஷல் நன்றி.


பிரியசகி
பெயருக்கு ஏற்ற மாதிரி ரொம்ப பிரியமான பொண்ணு.  தோழிகளை கௌரவிக்க தோழிகளின் சமையல் குறிப்புக்களைத் தயார் செய்து தன் ப்ளாகில் போட்டு அசத்துகிறார்.









விஜிஸ் வெஜ் கிச்சன்
அப்பாடா, ATLAST ஒரு வெஜ் கிச்சனை கண்டு பிடிச்சேம்பா.



மகிஸ் கிச்சன்

இந்தப் பொண்ணும் என் செட் தான்னு நினைக்கிறேன். .  அதாங்க சைவம். 



ஷஷிகா

ஷஷிகா உஷாரய்யா உஷார்.  புகைப்படத்தை சுட்டு இங்க போட முடியல.


இன்னும் நிறைய பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன்.  தத்தம் வலைப்பூக்களில் பல சமையல் குறிப்புகளைக் கொடுத்துக் கொண்டு.

எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ன? திரு அன்பின் சீனா அவர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள், இல்லை மாதங்கள், வருடங்கள் கழித்து வாய்ப்பு கொடுக்கும் பொழுது இன்னும் சிறப்பாக வலம் வருவேன்.  இன்னும் அதிக தோழிகளை அறிமுகப் படுத்துவேன்.  இன்னும் நிறைய பின்னூட்டங்களைப் பெறுவேன்.

மிக்க மகிழ்ச்சி என்னன்னா, நம்ப குட்டித் தங்கச்சிங்க எல்லாம் அருமையா சமையல் குறிப்பு கொடுக்கறாங்க.  எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

இப்ப என் குறிப்பை குடுக்காட்டா எப்படி? இது அறுசுவையில் என் குறிப்பு


நன்றி. மீண்டும் நாளை வருகிறேன்.

41 comments:

  1. இன்றும் அறுசுவைத் தளங்களின் அணிவகுப்பு!..
    அத்தனையும் நயம்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. திரு துரை செல்வராஜூ
      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  2. அன்புள்ள ஜெயந்தி, வணக்கம்மா.

    இன்று அடியேன் அடியிலிருந்து நோக்கிப் பார்த்தேன். தங்களின்
    இட்லி மாவு தேன் குழல் அருமை. சுமார் 5-1/2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அது ஊசிப்போகவே இல்லை.

    இன்பமாக ருசித்தேன். ஸ்பெஷல் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    வழங்கியவர் : T S JAYANTHI
    தேதி : வெள்ளி, 13/02/2009 - 16:35

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி ஊசிப் போகும். தோழிகளுக்காக கொஞ்சம் அன்பையும் சேர்த்துப் போட்டு பிசைந்து செய்ததாக்கும்.

      ஸ்பெஷல் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  3. //எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ன? திரு அன்பின் சீனாஅவர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள், இல்லை மாதங்கள், வருடங்கள் கழித்து வாய்ப்பு கொடுக்கும் பொழுது இன்னும் சிறப்பாக வலம் வருவேன். //

    நிச்சயமாக ’ஜெ’க்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தருவார் நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள். அதற்கு நான் கியாரண்டி .... கவலையே பட வேண்டாம் ’ஜெ’

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்ன கவலை. நீங்கள் எல்லாம் இருக்கும் போது.

      மிக்க நன்றி அண்ணா

      Delete
  4. //இன்னும் அதிக தோழிகளை அறிமுகப் படுத்துவேன். இன்னும் நிறைய பின்னூட்டங்களைப் பெறுவேன்.//

    இப்போதே நிறைய பின்னூட்டங்களைப்பெற வழியுள்ளது ‘ஜெ’.

    குறிப்பாக தாங்கள் அறிமுகம் செய்யும் வலைப்பதிவர்களுக்கு தாங்கள் உடனுக்குடன் தகவல் தர வேண்டும்.

    இந்த வலைச்சர பதிவின் இணைப்பினை அவர்களுக்கு மெயில் மூலமாகவோ அல்லது அவர்களின் லேடஸ்ட் பதிவின் பின்னூட்டப்பெட்டி மூலமாகவோ அறிவிக்க வேண்டும்.

    அது மிகவும் முக்கியமாகும்.

    இல்லாவிட்டால் தாங்கள் வலைச்சரத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் என அவர்களுக்கு எப்படித் தெரியும்?

    யோசித்துப்பாருங்கோ ... ஜெ.

    இதில் நானே கூட ‘ஜெ’ க்கு உதவிகள் செய்திருப்பேன். ஆனால் எனக்கு இந்தவாரம் எதற்குமே நேரம் இல்லாமல் போய்விட்டது. TIGHT SCHEDULE - NO TIME AT ALL. - VERY SORRY 'J'

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. //இல்லாவிட்டால் தாங்கள் வலைச்சரத்தில் அவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் என அவர்களுக்கு எப்படித் தெரியும்? //


      ஆமாம் இல்ல. நான் அறிமுகப் படுத்தப்பட்ட போது திரு திண்டுக்கல் தனபாலன் என் வலைப்பூவில் சொல்லி இருந்தார். ஆமாம், அவரை எங்கே காணவே இல்லை.

      //இதில் நானே கூட ‘ஜெ’ க்கு உதவிகள் செய்திருப்பேன். ஆனால் எனக்கு இந்தவாரம் எதற்குமே நேரம் இல்லாமல் போய்விட்டது. TIGHT SCHEDULE - NO TIME AT ALL. - VERY SORRY 'J'//

      அதனால என்ன பரவாயில்லை. உங்க சகாயத்தாலதான் நான் இந்த அளவு வளர்ந்திருக்கேன்.

      Delete
  5. //கோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை
    http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
    http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html//

    எனது பதிவினில் ஒன்றான எனக்கு மிகவும் பிடித்த ’பஜ்ஜி’யை இன்று அடையாளம் காட்டியுள்ளதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

    சூடான சுவையான பஜ்ஜி சாப்பிட்டது போன்ற திருப்தியாக உள்ளது.

    மிகவும் சந்தோஷம் ‘ஜெ’

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பஜ்ஜின்னா ரொம்ப பிடிக்கும். சுடச்சுட வெங்காய பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, சௌ சௌ பஜ்ஜி (சௌ சௌ பஜ்ஜி என் குறிப்பைப் பார்த்து இமா செய்து அவர் ப்ளாகில் போட்டிருக்கிறார்)

      Delete
  6. சாப்பாட்டு மன்னன் + படுக்கை மன்னன் கதை சுவாரஸ்யமாக உள்ளது.

    என்னைப்பற்றித்தான் ஏதேதோ கிண்டலும் கேலியும் செய்து கதை விட்டுள்ளீர்களோ என பயந்தே பூட்டேனாக்கும். ..... இரண்டு கதாபாத்திரங்களும் என்னைப்போலவே இருக்கிறார்களே என நினைத்து ஆர்வமாகப் படிக்கத்துவங்கினேன்.

    இருவரும் அனுபவம் வாய்ந்த சுக வாசிகளாகத்தான் உள்ளனர். மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  7. ’எங்காளு’ ஏனோ இன்று இன்னும் இங்கு வரவே இல்லை.

    ‘எங்காளு’ எனச்சொன்னதால் ஒருவேளை கோபமோ என்னவோ !

    இனி இதில் நான் மேலும் கவனமாக இருக்க வேண்டும் போலிருக்குது.

    ஜெயந்தி போல வெளிப்படையாகப் பேசிவிட்டால் நல்லது.

    எல்லோரும் ஜெயந்தி போல ஆக முடியுமா என்ன?

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதை தான். அவங்கவளுக்கு முக்கியமான வேலை இருக்கும். கண்டிப்பாக வராம போக மாட்டாங்க. இத அவங்க கிட்ட நான் மட்டும் இல்ல, எல்லாரும் கத்துக்கணும். உங்க கிட்டயும் தான்

      Delete
    2. Jayanthi Jaya Thu Aug 21, 05:14:00 PM

      //காக்கா உக்கார பனம் பழம் விழுந்த கதை தான். அவங்கவளுக்கு முக்கியமான வேலை இருக்கும். கண்டிப்பாக வராம போக மாட்டாங்க. இத அவங்க கிட்ட நான் மட்டும் இல்ல, எல்லாரும் கத்துக்கணும். உங்க கிட்டயும் தான்//

      வந்துட்டாங்க ! வந்துட்டாங்க !! நான் மாத்திரை கொடுத்ததும் உடனே அலறிப்பிடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க !

      உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடணும் ..... ஜெ ;)

      அங்கு என் பதிவினிலும் தினமும் வந்து தங்களின் வலைச்சர அறிமுகம் பற்றி எனக்கு நினைவூட்டி பாராட்டி வாழ்த்தி தானும் மகிழ்ந்து என்னையும் மகிழ்விக்கிறாங்கோ ‘ஜெ’.

      சும்மா சொல்லக்கூடாது 'ஜெ' என்னைப்பொறுத்தவரை எப்போதுமே அவங்க எனக்கு ஒரு 'ஜெம்' ...... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க ‘ஜெ’. என்ன ஒன்று என்றால் ‘ஜெ’ மாதிரி கலகலப்பாக எதையும் மனம் விட்டு என்னிடம் சொல்ல மாட்டாங்கோ ...... ரொம்பத்தான் Distance Maintain செய்வாங்கோ ..... நம் இருவரையும் போல 'லொட-லொடா' டைப் கிடையாது. அழுத்தம். மஹா அழுத்தம். ஆனாலும் அழுந்தச் சமத்தூஊஊஊ.

      அதனால் என்ன? என்னுடைய உண்மையான நலம் விரும்பியாக இருக்கிறாங்கோ. அது போதுமே எனக்கு.

      நேரில் பார்த்ததோ போனில் பேசியதோ இதுவரை கிடையாது. தினமும் ஒருவர் பதிவில் மற்றொருவர் பின்னூட்டங்கள் நிறையவே இருக்கும். அதுபோல ஒரு விசித்திரமான அழகிய நட்பு ...... எங்களுடையது.

      ‘ஜெ’ போலவே ஜன்ம ஜன்மமாகத் தொடரும் ஏதோவொரு ஆத்மார்த்தமான உறவு என்று நினைக்கிறேன். இருக்கட்டும்.

      ஐந்துவிரல்களும் ஒன்றாகவா இருக்கும்? ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். அதுபோல இவர்களும் தனிவிதம். இருப்பினும் என் மனதுக்கு மிகவும் பிடித்த [No. 1] பதிவராக உள்ளார்கள்.

      நான் தங்களுக்கு பூஸ்ட் என்றால், இந்த பூஸ்டுக்கே பூஸ்ட் இவங்க தான் என்றும் சுருக்கமாகச் சொல்லலாம். ;)

      இதெல்லாம் ’ஜெ’க்கு சும்மா ஒரு தகவலுக்காக மட்டுமே.

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      Delete
  8. முதல் மூன்று அறிமுகங்கள் எனக்கு ஓரளவு பரிச்சயமானவர்களே.

    ஜெயந்திபோலவே என்னை அன்புடன் ‘அண்ணா’ என அழைத்தவர்கள் + அழைப்பவர்களே.

    அவர்களை இன்று பாராட்டி சிறப்பித்து அறிமுகம் செய்துள்ள ’ஜெ’க்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசில எங்காத்துக்கு யார் வந்தாலும் ‘ இது யாரு’ன்னு கேட்டா ‘அத்தை’ம்பா. ஒண்ணு விட்ட, ரெண்டு விட்ட அத்தைகள் ஏராளம். அந்த காலத்துல இதெல்லாம் சகஜம் தானே. இதுல ஒரு அத்தை ‘செங்கம்மா’ன்னு பேர். எங்களுக்கு எவ்வளவு அத்தைன்னு கேட்டா ‘பிரதட்சணத்துக்கு போட்டா ரெண்டு நைவேத்தியத்துக்கு மீறும்’ அப்படீன்னு சிரிச்சுண்டே சொல்லுவா.

      அதே கதை தான். உங்கள் தங்கைகளின் எண்ணிக்கையும்.

      Delete
    2. //‘பிரதட்சணத்துக்கு போட்டா ரெண்டு நைவேத்தியத்துக்கு மீறும்’//

      மிகவும் ரஸித்தேன். சிரித்தேன்.

      பலநாட்களாக விடாமல் ஸோமவார பிரதக்ஷண அமாவாசைகளில் அரசபிரக்ஷணம் செய்து ஏதாவது 108 பொருட்களை [தின்பண்டங்களை] போட்டுக்கொண்டு வரும் என் பெரிய அக்காவிடம் இதை பகிர்ந்துகொள்வேன். ;)))))

      அவளும் என் எழுத்துக்களின் பரம ரஸிகை.

      //அதே கதை தான். உங்கள் தங்கைகளின் எண்ணிக்கையும்.//

      ஆமாமில்லே !!!!! ;))))))))))))))))))))))

      Delete
  9. அதற்குள் நான்கு நாட்கள் ஜே ஜேன்னு வேகமாக ஓடிவிட்டன பாருங்கோ ‘ஜெ’.

    நாளும் பொழுதும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை என்பது சரியாகவே உள்ளது.

    மீண்டும் நாளை சந்திப்போம்.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    -oOo-

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம். சும்மாவா சொன்னாங்க TIME AND TIDE WAIT FOR NONE அந்த காலத்துல பழமொழி எல்லாம் அனுபவிச்சு, அனுபவிச்சு சொல்லி இருக்கா பெரியவா எல்லாம்.

      Delete
  10. அறுசுவைப்பதிவுகள்
    அறிமுகங்களுக்கு
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. திருமதி இராஜராஜேஸ்வரி,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,
      வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  12. ஜெயந்தி அக்கா.... வலைச்சரம் என்று கவனிக்காமல், அவசரமா டாஷ் போர்ட்ல என் கேக் படத்தை மட்டும் பார்த்து... யாரோ சுட்டுட்டாங்களோ என்று பயந்துட்டே ஓடி வந்தேன். ;)))))

    உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் இமா.

      சுட்டும் விழிச் சுடர்கள் உலகம் முழுக்க இருக்காங்க.

      வருகைக்கு நன்றி இமா
      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  13. அறுசுவை அரசிகளின் சமையல் பதிவுகள் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. திரு ‘தளிர்’ சுரேஷ்

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  14. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு ரெம்ப நன்றிகள் ஜெ,மாமி.
    அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரிய சகி,
      அதென்ன என்னையும், அருமையான ப்ளாக் வைத்திருக்கிறீர்கள்.

      வாழ்த்துக்கள்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  15. இன்றைய சமையல் அனைத்தும் மணமாகவே இருந்தது.
    -கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  16. வலைச்சர ஆசிரியைக்கு முதலில் என் வாழ்த்துக்கள்....அறிமுகத்திற்க்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மாமி...அறிமுகபடுத்தபட்ட மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மேனகா

      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன்
      ஜே மாமி

      Delete
  17. அறிமுகங்களுக்கு இந்த அன்புவின் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பை தேடி அன்பு

      என்ன ஒரு வார்த்தை.

      உங்களுக்கு நீங்கள் தேடும் அன்பு என்றும் கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. இட்லி மாவையும் வறட்டு அரிசி மாவையும் கலந்து
      தேன்குழல் செய்யும் அபூர்வ சமையல் குறிப்பினை வழங்கியிருக்கும்
      பதிவு பார்த்தேன். உங்கள் வலையில்.

      அதை நாளை காலை முதல் வேலையாக செய்து பார்க்கவேண்டும்.

      கொஞ்சம் கடலை மாவு கலந்தால் இன்னும் நன்றா இருக்குமோ?

      சுப்பு தாத்தா.
      www.subbuthatha72.blogspot.com

      Delete
    3. சுப்பு தாத்தா, வணக்கம்.

      இதெல்லாம் நம்ப பாட்டிகள் செய்தது தானே.

      நீங்கள் கடலை மாவு சேர்த்து செய்து பார்த்து சொல்லுங்கள். இன்னும் ஒரு சமையல் குறிப்பாக போட்டு விடுகிறேன்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  18. இன்று பதிவுகள் அனைத்தும் அறுசுவையாயிருந்தன.

    ReplyDelete
    Replies
    1. திரு முகமது நிஜாமுதீன்.

      வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  19. மாமி இப்பதான் எனக்கு நேரம் கிடைச்சது்காரணம் அறிவீர்கள் அசத்தலான அறிமுகங்கள்்அதிலும் ஆரம்பத்தில் சொன்ன கதை ரொம்பஙே ரசித்தேன்

    ReplyDelete