வலைச்சர வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு.
நானே அறிமுக நிலையில் இருப்பதால் நான் அறிமுகம் செய்ய வேண்டிய பதிவர்கள் நிறைய பேர் இனி தான் பதிவுகள் எழுத ஆரம்பிக்க வேண்டும். அதனால் நான் படித்து, ரசித்த வியந்த பதிவர்கள் சிலரைப் பற்றி இன்றிலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் வலைப்பதிவிற்கு வந்த புதிதில் ஒவ்வொரு வலைப்பூவாக சென்று மணிகணக்கில் சிலருடைய தளங்களில் ஆழ்ந்து விடுவது வழக்கம்.
பூஜைகளும், திருவிழாக்களும் நிறைந்தது தானே நம் கலாசாரம். அதைப்பற்றி ஏதாவது தளங்கள் கிடைக்காதா என்று தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அதில் பலரை நான் தொடரவும், தவறாது படிக்கவும் செய்கிறேன். அவர்களில் சிலரைப் பற்றி இன்று பேசுவோம்.
திருக்கயிலாய பேரானந்த காட்சி கிடைக்காதா என்று தவமிருப்பவர்கள் நம்மில் பலர். அப்பர் பெருமான் கண்ட திருக்கயிலாய காட்சி நமக்காக இங்கே காத்திருக்கிறது.தற்போது குவைத்தில் இருக்கும் துரை செலவராஜ் அவர்களின் தஞ்சையம்பதி " தளத்திற்குள் நுழையும் போதே பக்தி மணம் கமழ்கிறது.
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்று ஆடிக்கிருத்திகை பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்
தஞ்சையம்பதிக்கு சென்றால் தேவி தரிசனம் பெறலாம்.அது மட்டுமா? மாங்கனித்திருவிழாவிற்கு சென்றால் காரைக்காலம்மையார் பற்றிய கதையை மீண்டும் படித்து இன்புறலாம்.
கோவிலுக்கு சென்றால் பிரசாதம் இல்லாமல் திரும்பலாமா?
ராமா என்னும் பாயசத்தை ருசித்துப் பாருங்கள் என்கிறார் திருமதி ராஜராஜேஸ்வரி " மணிராஜ் "என்கிற தன் வலைத் தளத்தில்.
இவர் தளத்திற்கு சென்றால்,உங்களையே மறந்து நீங்கள் சுலோகம் சொல்ல ஆரம்பித்து விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குரு பார்க்க கோடி நன்மை.குருவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று தவிக்கும் நமக்கு குரு தரிசனம் கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமதி ராஜராஜேஸ்வரி ஒவ்வொரு நாளைக்கும் ஏற்றார் போல் ஆன்மீகப் பதிவுகள் இடுவதில் கெட்டிக்காரர்.ஆடி மாதத்திற்காகவே ராஜ மாதங்கி பற்றி எழுதியிருக்கிறார். அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் வேண்டுமா வாருங்கள் இங்கே
வரம் பெற்று செல்லலாம்.
திருவாடிப்பூரம் ஆண்டாளைத் தரிசனம் செய்ய வாருங்கள்.ஆண்டாளின் அழகை கண் குளிரக்கண்டு ஆனந்திக்கலாம்.
வலைப்பதிவர் திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுடைய வலைதளத்திற்குப் போன எனக்குப் பிரமிப்பு நீங்க நேரமானது. ஆன்மிகம், சமையல் என்று பல தளங்கள் வைத்திருக்கிறார். " கண்ணனுக்காக "வே ஒரு தளம்.திரௌபதி ஐந்து பேரை ஏன் மணக்கிறாள் என்கிற காரணத்தை இங்கே சொல்கிறார்..இன்னொரு தளமான "ஆன்மீகப் பயணம் " என்னும் தளத்தில் காமதேனுவின் சரித்திரம் படிக்கத் தவறாதீர்கள். அதே தளத்தில் துலுக்க நாச்சியார் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இங்கே மதுரையை தேடிக் கொண்டிருக்கிறார் .முடிந்தால் கண்டுபிடிக்க உதவுங்களேன்.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்ற பழமொழியை நினைவிற்கு கொண்டு வருகிறது திரு விஸ்வநாத் அவர்களின் பதிவு. இவர் திருவாசகத்திற்குப் பொருள் சொல்வது சற்றே வித்தியாசமாய், அதே சமயம் ஆர்வத்துடன் படிக்க வைக்கிறது.
கடவுளின் பாதச் சுவடுகளைப் பார்த்து என்னவெல்லாம் கேட்கிறார் பாருங்கள். வில்வம் பற்றிய அரிய செய்திகள் இங்கே கிடைக்கும்.
மேலும் இக்காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்.
மகாபாரதம் படித்திருக்கிறீர்களா? " முழு மகாபாரத "த்தையும் திரு. அருள்செல்வன்பேரரசன் என்பவர் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துக் கொடுக்கிறார். உங்களுக்குப் படிக்க நேரமில்லையா? கவலை விடுங்கள். ஆடியோ கோப்பாகவும் அந்தப் பதிவை வெளியிட்டு விடுகிறார்.
வஞ்சகன் கண்ணனா? கர்ணனா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்களேன். இவருடைய ஒரு பதிவிற்குப் போனால் , அடுத்தடுத்த பதிவிற்கு நீங்களே சென்று விடுவீர்கள்.
திரு ஜெயராமன் அவர்கள் வைத்திருக்கும் தளங்களை நான் இங்கே பட்டியலிட்டால் இந்த ஒரு பதிவு போதாது.இவருடைய Santhipriya's Pages தளத்தில் ஐஸ் லிங்கம் பார்த்துப் பக்தி பரவசமாகலாம்.
மார்க்க சகாய இறைவனைக் காண நீங்கள் மாயவரம் செல்ல வேண்டிய அவசியமில்லை.. அங்கே போய் வந்த திருப்தி தருகிறது இந்தப் பதிவு.
வள்ளி மணாளனுக்காகவே "முருகனுக்காக " என்கிற தளத்தில் எழுதி வருகிறார்.திருப்பரங்குன்ற வரலாறு படங்களுடன் வெகு அழகு.வெவ்வேறு ஆன்மீக சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளும் , உபன்யாசங்களும் கூட இங்கே கேட்கக் கிடைக்கும்.
சித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலா?நம் தோழி "சித்தர்கள் இராச்சியம் " என்கிறத் தளத்தில் எழுதி வருகிறார். நூலையும் கண்ணாடியையும் வைத்துக் கொண்டு நம் சித்தர்கள் செய்து காட்டிய ஜாலம் என்னவென்று தான் பாருங்களேன். சித்தர் போகர் பற்றிய செய்திகள் இங்கே கிடைக்கும்.
பதிவு நீளம் அதிகமாகி விட்டதோ? சரி........சரி............
இன்றைய அரட்டை கச்சேரியை இதோடு நிறுத்திக் கொள்கிறேன் . நாளை மீண்டும் தொடர்கிறேன்..........
பட உதவி--google.
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி ரூபன் .
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteஅரட்டைக் கச்சேரி தொடரட்டும்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி வெங்கட்ஜி
Deleteவணக்கம்
ReplyDeleteஇரண்டு வலைப்பூக்ககள் அறியாதவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு புது தளங்கள் உங்களுக்கு அறிமுகமானதற்கு மசிழ்ச்சி ரூபன்.
Delete
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட பல தளங்களும் தெரிந்தவையே.பலருக்கும் தெரியாத என்னுடைய சில வலைத் தளங்களையும் ஆராய்ச்சி செய்து இதில் இணைத்திருக்கிறீர்கள். :) வலைச் சர ஆசிரியர் பொறுப்புக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும் நன்றி கீதா மேடம்.
Deleteஆன்மீக அரட்டையாக அல்லவோ இன்றைய அரட்டை அமைந்து விட்டது. ஆனால் அர்த்தமுன்ள அரட்டைதான். அறிமுகம் பெற்ற அனைத்துத் தளங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்கள் பாராட்டிற்கு நன்றி பாலகணேஷ் சார்.
Deleteஎமது தளத்தை சிறப்பாக இனிக்க இனிக்க அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteபக்தி மணம் கமழும் இனிய தளங்களின் தொகுப்பினோடு - தஞ்சையம்பதியையும் இணைத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்!..
பாராட்டிற்கு நன்றி துரை சார்.
Deleteஅருமையான தளங்கள். பெரும்பாலும் நான் சென்று படிக்கும் தளங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி
Deleteநண்பரே
ReplyDeleteமுழு மஹாபாரதம் குறித்து உங்கள் அன்பான ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
' முழு மகாபாரதம் ' பற்றி பலரும் அறிய வேண்டும் என்பது என் எண்ணம். அதை மனதில் கொண்டே இங்கே உங்களை அறிமுகபப்டுத்தினேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் அறிமுகம் செய்த தஞ்சையம்பதி துரை செல்வராஜு, ஆன்மீகப் பதிவுகள் என்றாலே இராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கத்தில் வாசம் புரியும் அம்மா கீதா சாம்பவசிம் ஆகியோரது வலைத் தளங்களுக்கு அடிக்கடி சென்று பார்வையிடுவதுண்டு.
ReplyDeleteவிஸ்வநாத் ராவ், அருள்செல்வன் பேரரசன், என்.ஆர்.ஜெயராமன், சித்தர்கள் ராச்சியம் தோழி – தளஙகள் சென்று பார்க்க வேண்டும்.
ஆன்மீக அறிமுகத்திற்கு நன்றி!
த.ம.2
உங்களுக்கு புதிதாய் மூன்று தளங்கள் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே.
Deleteஉங்கள் தமிழ் மண வாக்கிற்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி தமிழ் சார்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி சார்.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அருமை. அதுவும் நான் தினமும் மிகவும் ரஸித்து மகிழும் சில குறிப்பிட்ட தளங்களைப் பற்றி சிறப்பாக இனிக்க இனிக்க அறிமுகம் செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
ReplyDeleteஅன்புடன் கோபு
உங்கள் கருத்துக்கு நன்றி கோபு சார்.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteVetha.Elanagthilakam.
உங்கள் கருத்துக்கு நன்றி வேதா மேடம்.
Deleteபக்தி பூக்களை பறித்து பகிர்ந்து மணம் வீச செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteவஞ்சகன் கர்ணனா? கண்ணனா? :))))
ReplyDelete-----------------------------------
கடவுளான கண்ணன் வஞ்சித்தாலும், அது அவர் நமக்கு நடத்தும் பாடம், அது நம் நன்மைக்கே அவர் செய்யும் உதவி என்றுதானே நாம் நம்புகிறோம்?
தந்தை பெயர் தெரியாதவன், தாய் செய்த தவறால் தூக்கி எறியப்பட்ட ஒரு அப்பாவி! தந்தை வழி நடத்தல், தாயன்பு எதுவுமே இல்லாமல் வளர்ந்த ஒருவனை, எல்லா வசதியுடன் வாழும் இன்னொரு எழுத்தாளர், இரக்கமே இல்லாமல் வஞ்சகனாக்குவது என்ன அவ்வளவு கஷ்டமா என்ன?
_________________
Sorry for making a "small disturbance" in "the peaceful world", madam! I thought someone should speak for Karnan here. After all he is not going to come and justify that he is innocent. Right? :) Take it easy!
தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteஅறிமுக பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி Killergee.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சார்.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
என் வலை தளம் பற்றி பாராட்டியதற்கு மிக்க நன்றி. ஒரு பொழுதுபோக்காக துவங்கி இப்போது அவற்றை விட்டு எப்படி விலகலாம் என்ற மன நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
ReplyDeleteஜெயராமன்
இரண்டாம் நாள் ஆன்மீகப் பதிவுகள் - நீங்கள் இங்கு பாராட்டியிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி, திருமதி கீதா சாம்பசிவம், திரு துரை செல்வராஜ் தவிர மற்ற எல்லோரும் எனக்குப் புதிது. கர்ணனைப் பற்றி நிச்சயம் படிக்க வேண்டும்.
ReplyDeleteஇன்று வருகை புரிந்திருக்கும் ஆன்மீகப் பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.