Monday, August 11, 2014

வலைச் சரத்தில் முதல் நாள்!


வலைச் சரத்தில் முதல் நாள்!
2
om sri sai ram
 (புகைப்படம் - ரவிஜி)
 
அன்பின் வலை சொந்தங்களுக்கு,
ரவிஜி என்கிற இந்த மாயவரத்தான் எம்ஜிஆரின் அன்பு காலை வணக்கங்கள்! 11.08.2014 ல் தொடங்கி 16.08.2014 வரையிலான காலகட்டத்திற்கு எனக்கு வலைச்சர மாணவ(ஆசிரிய)ப்பணி அளிக்கப்பட்டதற்கு அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!  காலம் முழுவதும் நான் நல்ல மாணவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்! கல்லாதது உலகளவு அல்லவா? வலையுலகில் நான் கற்றுக்கொள்ளத் துவங்குவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு! நான்  படித்த, கண்டு மகிழ்ந்த வியப்புற்ற செய்திகளை, பதிவுகளை, படங்களை, காணொளிகளை இன்னும் பிறவற்றை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்!  உங்களின் ஆரோக்கியமான பின்னூட்டம் என்னை மேலும் கூர்மைப்படுத்தும்! வாருங்கள்!
      தாய்மொழியாகிய தமிழில் காலை வணக்கம் சொல்லியாகிவிட்டது! உலகெங்கிலிருந்தும் உள்ள பல்வேறு நாடுகளிலிலிருந்து வரும் தமிழ் மக்கள் வரும் தளமல்லவா? அதனால் அவர்கள் வாழும் பல உலக நாடுகளின் பல்வேறு மொழிகளிலிலும் அவர்களுக்கு காலை வணக்கம் சொல்வோம்!

Language
(abā il kẖayr) صباح الخير
সুপ্ৰভাত (suprobhaat)
Asturian
Bonos díes
সুপ্রভাত (shuprobhat) - frm
Dobro jutro
Добро утро (Dobro utro)
Goedemorgen / Goeiemorgen
Ni sa yadra
Hyvää huomenta / Huomenta
Guten Morgen
Guete Morge
Καλημέρα σας (Kaliméra sas)
Iterluarit / Kumoorn
(boker tov) בוקר טוב
Selamat pagi
お早うございます / おはようございます (ohayō gozaimasu)
お早う / おはよう (ohayō)
ಶುಭೋದಯ (shubhodaya)
안녕하십니까 (annyeong hashimnikka)
Ladino
(Buenos dias) בואינוס דיאס
Quid agis mane?
Добро утро (Dobro utro)
Manao ahoana ianao
Bajaveri hendhune
Mauritian Creole
Bonzour
Өглөөний мэнд (Öglöönii mend)
शुभ प्रभात (subha prabhat)
Mino gigizheb ("It's a good morning")
Ukimi soo chii
ସୁପ୍ରଭାତ୍ (suprabhaat)
Bon dia / Mòro
(sobh bekheir) صبح بخير
Bom dia
Доброе утро! (Dobroe utro!)
Guid mornin
Добро јутро (Dobro jutro)
Dobré ráno (used until 8am)
Dobrý deň (used from 8am until dark)
Guete Morge
காலை வணக்கம் (kaalai vanakkam)
సుప్రభాతం (supra bhetam)
สวัสดีครับ/ค่ะ (sà-wàt-dee kráp/kâ)
སྔ་དྲོ་བདེ་ལེགས། (nga-to delek)
Доброго ранку! (Dobroho ranku)
(subha bākhair) صبح بخير

இன்னும் வேண்டுமா? கீழே உள்ள இணைப்பை நாடுங்கள்!
http://www.omniglot.com/language/phrases/goodmorning.htm


 

காலை வணக்கம் சொல்லியாகிவிட்டது; பணியைத் துவங்குமுன்னர் இறைவணக்கம் சொல்லவேண்டுமே!
வலைச்சரத்தில் இறைவணக்கதிற்கென இடுகை இட என் இஷ்ட குரு ஷீர்டி சாய்நாதரை ஆஸ்க்-ல் தேடி கிடைத்த முதல் இணைப்பு = “மணிராஜ் - நானிருக்க பயமேன்” இணைப்பிற்குள் சென்றால் அன்புச்சகோதரி ராஜராஜேஸ்வரியி அவர்களின் வலைப்பூ! என்னை கோவை – மேட்டுப்பாளையம் நாகசாய் மந்திருக்கு அழைத்துச் சென்று சேவிக்க வைத்துவிட்டார்! பாபாவின் லீலையே லீலை! நீங்களும் வலைப்பூவிற்குள் சென்று பகவானை தரிசித்துவாருங்கள்!
அப்படியே வேறு பல சுவாரசியமான பதிவுகளையும்.
http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_18.html
ஷீரடி சாயிபாபாவின் நேரடி தரிசனத்திற்கும் அவரின் அருளைப்பெறவும் கீழே உள்ள இணைப்பை நாடவும்!
மேடையில் அதிசயங்களை நிகழ்த்திய அந்நாளைய நாடகக் கலைஞர் கலைமாமணி ராது அவர்களின் மகள். எம்.பி.. பட்டதாரி. ‘தினந்தோறும் பாபாவை வணங்குவோம்எனும் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சென்னை-மயிலாப்பூர் ஷீரடி சாய் பாபா ஆலயத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார்.  பாபாவின் மகிமை குறித்து அவர் சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதியும் மேலும் விபரங்களுக்கும் அது குறித்த இணைப்புகளுக்கும் – கீழே செல்லுங்கள்!
http://www.penmai.com/forums/saints/69524-shirdi-baba.html
எனது வலைப்பூவின் பெயர் மாயவரத்தான் எம்ஜிஆர். மாயவரத்தான் என்ற பெயரை முயற்சித்தபோது ஏற்கனவே அந்தப்பெயரில் ஒருவர் துவங்கிவிட்டார்! எனவே Mayavaram Ganapathy Ravi  MGR சேர்த்து மாயவரத்தான் எம்ஜிஆர் என்று நாமகரணம் சூட்டிக் கொண்டேன்! கொடிகட்டிப் பறந்த பெயரும்கூட அல்லவா?!!! எதையோ கிறுக்கிவிட்டு கவிதை என்று சொல்லிக்கொள்வதாலும், கவிதைகளின்பால் ஒரு கிறுக்கும் இருப்பதால் ‘கவிதைக்கிறுக்கன்’ என்றும் வலைப்பூவில் குறிப்பிட்டேன். மற்றவர்கள் ரசித்த எனது சில கவிதைகள் கீழே அவற்றுக்கான இணைப்புடன்! உண்மையில் என்னுடைய உன்னதமான கவிதை – இனிமேல்தான் எழுதப்படவேண்டும்!
 
1. உயர்வு! (தாமரை இதழில் வெளியான எனது முதல் கவிதை)

2. தருணங்கள்! (பரணி இதழில் வெளியான எனது விருப்பமான கவிதை)
http://mayavarathanmgr.blogspot.in/2012/09/blog-post_7.html

3. இளக்கா(ம)ரம்! (ஓவியர் மாரிமுத்து நடத்திவந்த ‘குதிரைவீரன் பயணம்’ இதழில் வெளியான கவிதை!
http://mayavarathanmgr.blogspot.in/2012/10/blog-post.html

4. வாழ்க்கை! (எங்களின் அமெரிக்க வாழ் மகள்களால் விரும்பப்பட்டது)

5. வீ(ட்)டு பத்திரம்! (விற்றுவிட்ட எனது மாமாவின் வீட்டிற்கு முன்பாக எனது தம்பியின் இரட்டை மகள்கள் இடும் கோலம்! இரண்டாவது நான் இதற்கு முன்பாகக் குடியிருந்த வீட்டை விற்று நாங்கள் காலி செய்தததும் இடிக்கப்பட்டபொழுது வருத்ததுடன் நான் எடுத்த படம் இவையே கவிதை எழுதத்தூண்டியது)
http://mayavarathanmgr.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=26

6. பட்டுப்போன மரம்..?!

(அனாதையாகிவிட்ட ஒரு முதுமையின் குமுறல்)
http://mayavarathanmgr.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00-08:00&updated-max=2014-01-01T00:00:00-08:00&max-results=26
7. ஒரு(க்)காலும் இல்லை! (நான் தலை வணங்கிய தன்னம்பிக்கை!)
http://mayavarathanmgr.blogspot.in/2014_03_01_archive.html
8. வானமே எல்லை! (உறக்கத்திற்கும், கனவுகளுக்கும் என்றும் வறுமை இல்லை)
http://mayavarathanmgr.blogspot.in/2014_03_01_archive.html
9. நெஞ்சப் புல்வெளி! (அமெரிக்க வாழ் நண்பர் வெங்கட் குட்வா எடுத்த நண்பரின் மகளுடைய புகைப்படம்தான் தூண்டுதல்)
 10. தரையிறங்கல் (கிழக்கு – சிற்றிதழுக்கு தெரிவானது)

13 comments:

  1. மிகவும் வித்தியாசமான ஒரு அறிமுகம்.
    தங்களின் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அழகான அறிமுகம் ..வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. //முதல் இணைப்பு = “மணிராஜ் - நானிருக்க பயமேன்” இணைப்பிற்குள் சென்றால் அன்புச்சகோதரி ராஜராஜேஸ்வரியி அவர்களின் வலைப்பூ! என்னை கோவை – மேட்டுப்பாளையம் நாகசாய் மந்திருக்கு அழைத்துச் சென்று சேவிக்க வைத்துவிட்டார்! //

    ஆஹா, அகஸ்மாத்தாகத் தங்கள் முதல் அறிமுகமே முத்தான அறிமுகமாக அமைந்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  4. Mayavaram Ganapathy Ravi = MGR

    பெயர் காரணம் அருமை, வாத்யாரே

    ReplyDelete
  5. கலக்குங்க! கலக்குங்க !! தொடர்ந்து கலக்குங்க !!! வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. எமது பதிவை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  7. வலைச்சரம் பொறுப்பேற்ற ஆசிரியரை வரவேற்கிறேன்! அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது சிறுகதை விமர்சனப் போட்டிகளில் வெற்றிப் பரிசுகள் பல பெற்றவர் நீங்கள். அவரது வலைத்தளம் உங்களை எனக்கு அறிமுகப் படுத்தியது.

    வலைச்சரத்தில் முதல்நாள் அறிமுகத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை! தொடர்ந்திட வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
  8. அமர்க்களமான அறிமுகம் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  9. சாயிநாதரின் அருளுடன் தங்கள் வலைச்சர ஆரம்பமே அதிரடிதான்....மிகவும் வித்தியாசமான அறிமுகம்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வித்தியாசமான அறிமுகம்! சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சிறக்கட்டும் தங்கள் ஆசிரியப்பணி!

    ReplyDelete
  12. சுவையான சுய அறிமுகம்.
    சுருக்கமாக, சிறப்பாக இருக்கின்றது

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஆசிரியர் பணிக்கு.
    அழகான அறிமுகம்.
    ஓம் சாய்ராம்!

    ReplyDelete