யாதும் ஊரே ; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா என உலகத்துக்கே நீதி சொன்னதல்லவா நம்
சங்க இலக்கியப் பாடல்கள். சங்க இலக்கியம் எனப்படுபவை எட்டுத்
தொகை,பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதி நூல்களாகும்.473
புலவர்கள் பாடிய 2381 பாடல்களைக் கொண்டு தொகைப் பாடல்களாக இவை
விளங்குகின்றன.அகம்,புறம் என்பன பாடுபொருள்களாகும்.அகத்தில்
களவு,கற்பு ஆகியனவும்,புறத்தில் வீரம்,கொடை ஆகியனவும்
பாடப்பெற்றுள்ளன.
இன்று சங்கஇலக்கியத்தை அழகிய தமிழில் எளிய நடையில் யாவரும் உணர
எடுத்தியம்பும் பதிவர்களைக் காண இருக்கிறாம்..
21. மலையருவி என்ற வலைப்பதிவில் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்
நிறைய சங்க இலக்கியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். சான்றாக
பத்துபாட்டில் முல்லைப்பாட்டு குறித்த கட்டுரை சங்ககால வாழ்வியலை
அழகுபட மொழிகிறது.
22. அணிலாடு முன்றில் என்ற வலைப்பதிவில் காயத்ரி சித்தார்த் அவர்கள்
உறக்கமற்ற காத்திருப்பு என்ற பதிவு குறுந்தொகையின் நயத்தை
எடுத்துரைத்து வாசிப்போர் மனதைக் கவர்கிறது.
23. சங்கஇலக்கியத்தின் சுவையான பாடல்களை பொருளுடன் வாசிக்க ஓபன்
ரீடிங் ரூம் என்ற வலைப்பக்கம் பயன்படுகிறது. இதிலிருந்து மின்னூலக்
பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. குறுந்தொகைக் காட்சிகள் என்ற
பதிவு என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கவைத்தது.
24. தேவர்தளம் என்ற வலைப்பதிவில் இரா.ச.இமலாதித்தன் அவர்கள்
எழுதிவருகிறார். இவரது சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள்
யார் என்ற பதிவு குறிப்பிடத்தக்கதாக
உள்ளது,
25. மாதவிப் பந்தல் என்ற வலைப்பதிவை கண்ணபிரான் எழுதிவருகிறார்.
இதில் தமிழ் சினிமாவில் சங்க இலக்கியம் என்ற பதிவு திரையுலகில்
சங்கஇலக்கியத்தின் தாக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.
26. சங்க இலக்கியப் பாடல்களை உரையுடன் வாசிக்க லேர்ன் சங்கத்தமிழ்
என்ற வலைப்பக்கம் பயனுள்ளதாக உள்ளது. அதில் குறுந்தொகை குறித்த
பதிவு மிகவும் எளிமையானதாக உள்ளது. சங்க இலக்கியத்தை
அறியாதவர்களும் அவ்விலக்கியத்தைப் புரிந்துகொள்ளுமாறு உள்ளது.
27. தமிழா தமிழா என்ற வலைப்பதிவில் எழுதி வரும் காஞ்சனா
ராதாகிருஷ்ணன் அவர்கள் குறுந்தொகைப் பாடல்களை உரையோடு
வெளியிட்டு வருகிறார்.
28. அகரமுதல என்ற வலைபக்கத்தில்இலக்குவனார் திருவள்ளுவன்
அவர்கள் எழுதிவருகிறார். அவரது குறுந்தொகை கூறும் உயிரியல்
செய்திகள் பழந்தமிழரின் அறிவைப் பறைசாற்றுவதாக அமைகிறது.
29. புறநானூறு குறித்த பதிவுகளுள் முனைவர் பிரபாகரன் அவர்களின் பதிவு
குறிப்பிடத்தக்கது
30. தமிழாசிரியர் தி.சேதுராமலிங்கம் அவர்களின் அகமெல்லாம் புறநானூறு
தமிழரின் செம்மாந்த மாண்புகளை முன்மொழிகிறது.
இலக்கியத் தேன் பருக உதவும் தளங்கள்....
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி முனைவரே.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteசங்க இலக்கியத்தை முன் நிறுத்தும் - இனிய தளங்கள்..
ReplyDeleteநிறைய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.
நலம் வாழ்க..
சிறந்த தமிழறிஞர்களை அறிமுகம் செய்தமைக்கு
ReplyDeleteபாராட்டுகள்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteசிறப்பான தளங்களின் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி.
Deleteசங்க இலக்கிய பதிவர்களின் சிறப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteசங்க இலக்கிய பதிவர்களுக்கு எமது வாழ்த்துக்களும்.
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteஇலக்கிய பதிவர்களின் அணிவகுப்பு அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteமிகச் சிறப்பான இலக்கியத்தளங்களின் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றியும்!
ReplyDeleteதேன்மதுரத்தமிழ் க்ரேஸ் அவர்களும், ஊமைக்கனவுகள் விஜு அவர்களும் கூட இலக்கியங்கள் பற்றி எழுதிவருகின்றார்கள் நண்பரே! எங்கள் சிற்றறிவிற்கு எட்டியது!
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete