அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.
வலைச்சரம் வழியாக உங்களை மீண்டும் சந்திப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய மதிப்புக்குரிய சீனா ஐயா அவர்களுக்கும்,
அன்புக்குரிய நண்பர் தமிழ்வாசி பிரகாசு அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளை முதலில்
தெரிவித்துக்கொள்கிறேன்.
வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவு வழியாக
கடந்த 7 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். தொடர்ந்து நான் எழுதும் ஆற்றலை எனக்கு நல்கியது
பல்வேறு நாடுகளிலும் தமிழ் உறவுகளே.. மறுமொழி வாயிலாக ஊக்கமளித்து வரும் அன்புள்ளங்களுக்கு
நன்றிகலந்த வணக்கத்தை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும்
இல்லை அதன் தொடர்ச்சியில் உண்டு என்று பெருமிதம் கொள்வதுண்டு. அதுபோல ஒரு வலைப்பதிவின்
சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடர்ச்சியிலும் உண்டு.
நாளொரு தொழில்நுட்பங்கள் வந்து மக்களை தன்வயப்படுத்திக்கொள்ளும்
இக்காலகட்டத்தில் வலைப்பதிவை தொடர்ந்து நடத்துவது என்பதே ஒரு பெரிய இலக்காகும். அதிலும்
பயனுள்ள சிந்தனைகளுடன் அவ்வலைப்பதிவை நடத்துவதும் எழுதிய செய்திகளை நிறைய பார்வையாளர்களிடம்
கொண்டு சேர்ப்பதும் அனுபவமிக்கவர்களாக இருந்தால் மட்டுமே முடியும். இந்த வலைச்சரம்
புதிய பதிவர்களை அறிமுகம் செய்வதுடன். மூத்த பதிவர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பளிக்கிறது. அதனால் புதிய பதிவர்களுக்கு அடிப்படைத்தேவையான அனுபவமும், வழிமுறைகளும் கிடைக்கின்றன.
இன்றைய பதிவர் அறிமுகத்தில் நாம் முதுமை
என்பது ஒரு வரம் என முதுமையைக் கொண்டாடும் பதிவர்களைக் கொண்டாட இருக்கிறோம்.
“வயதாகிறதே என வருத்தப்படாதீர்கள்
அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை“
“இளமை செலவு செய்ததையெல்லாம்
முதுமை எண்ணி எண்ணிக் கணக்குப் பாரக்கிறது.”
என முதுமையைச் சொல்வதுண்டு..
என முதுமையைச் சொல்வதுண்டு..
முதுமை வரமா? சாபமா?
கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!
இந்த வாழ்க்கை ஆற்றுநீர்போன்றது சில நொடிகளுக்கு முன் இருந்த நீர்
அடுத்த நொடி அங்கு நில்லாது ஓடும் அது போல இளமை நிலையில்லாதது.
இளமைக்காலத்தில் யாருடைய அறிவுரையையும் கேட்பதில்லை மனது.
இளமைக்காலத்தில் செய்வதெல்லாம் சரியென்றே சொல்லும் மனது எதற்கும் அஞ்சுவதில்லை.
வயது முதிர்ந்தபோது இளமைக்கால நிகழ்வுகளெல்லாம் வந்து வந்து வந்து போகும்.
மாடு அசைபோடுவது போல இங்கு ஒரு முதியவர் தன் இளமைக்கால அனுபவங்களை அசைபோட்டுப்பார்க்கிறார்.
2. முதுமை வரவேண்டும் முதிர்ந்துபோன வாழ்க்கையை நினைத்துப்பார்க்க
என்கிறார் அசரப் அலி..
6. முதுமை வந்தால் மூளை மந்தமாகுமா? என்று அறிவியல்
விளக்கம் தருகிறார் நண்பர் வே.நடனசாபபதி அவர்கள்.
என்கிறார் டாக்டர் எம்.கே.முருகானந்தம் அவர்கள்.
8. கோகிலா மகேந்திரன் அவர்கள் முதுமையின் சவால்களை
அழகாக பகர்கிறார்.
9. ஜிஎம் பாலசுப்ரமணியம் அவர்களின் முதுமையின் பரிசு நம்மை சிந்திக்கவைக்கிறது.
அன்பான தமிழ் உறவுகளே முதுமையைக் கொண்டாடும் இந்தப் பதிவர்களைக் கொண்டாடுவது நம் கடமையல்லவா..
வாருங்கள் இவர்களை ஊக்குவிப்போம்..
தங்களுக்கு நல்வரவு..
ReplyDeleteமுதுமையைச் சிறப்பிக்கும் இனிய தொகுப்பு..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteஇளமையில் நடை அழகு !
ReplyDeleteமுதுமையில் நரை அழகு !!
என்று சொல்லுவார்கள்.
இலை, மொட்டு, பூ, காய், கனி என எல்லாமே
அந்தந்த பருவங்களில் அழகோ அழகு தான்.
மிகச்சிறப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அழகாகச் சொன்னீர்கள் ஐயா.
Deleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
முதுமையைக் கொண்டாடும் இந்தப் பதிவர்களைக் கொண்டாடுவது நம் கடமையல்லவா..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்..
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி.
Deleteஎனது பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி முனைவர் குணசீலன் அவர்களே! தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteவலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. முதுமை ஒரு பரிசு என்று நோக்குவது ஒரு பக்கம் . அதற்கு இன்னொரு பக்கமுமிருக்கிறது. அதையே செய்யாத குற்றம் என்னும் டலைப்பில் எழுதி இருந்தேன். முதுமை பற்றிச் சொல்லிச் செல்லும் என் பதிப்புகளைப் படித்து நான் வயசானவன் என்று எண்ண வேண்டாம். 76 வயதே ஆகிய நான் எண்ணங்களில் இளமையானவன். மீண்டும் நன்றி .
ReplyDeleteஇளமை என்பதைத் தோற்றத்தை வைத்து மதிப்பிமுடியாது
Deleteமனதை வைத்துத்தான் மதிப்பிடவேண்டும் என்பதை அழகாகச் சொன்னீர்கள் அன்பரே..
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்று முதல் வலைச்சரம் தொடுக்க வந்த பேராசிரியர் முனைவர் இரா குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லோரும் தொடக்கத்திலிருந்து முடிவுக்கு செல்வார்கள். நீங்கள் முதுமை என்னும் முடிவிலிருந்து தொடக்கத்திற்குச் செல்கிறீர்கள். மாற்று சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!
த.ம.4
தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteமுதுமையைச் சிறப்பிக்கும் தொகுப்பு
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.
நன்றி பேராசிரியர் முனைவர் இரா குணசீலன்
தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteபேஸ்புக்கிலும் பகிர்ந்து உள்ளேன் .
Deleteநன்றி
நன்றி நண்பரே.
Deleteவணக்கம் !
ReplyDeleteஇவ்வார ஆசிரியர் பணியை மேற்கொண்டிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !சிறப்பான அறிமுகங்கள் !முதுமையைப்
போற்றும் முத்தான பகிர்வு தந்த அனைவரையும் அனைத்துப் பகிர்வுகளையும் இங்கே
அறிமுகப்படுத்திய விதம் மனத்தைக் கவர்ந்து நிற்கின்றது .அறிமுகமான அன்பு
உள்ளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் !
மிக்க நன்றி பகிர்வுக்கு .
மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்பாளடியாள்.
Deleteசிறப்பான தளங்களை முதல் நாளிலிலேயே தொகுத்து தந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.
Deleteவணக்கம் முனைவரே.
ReplyDeleteமுதலில் வலைச்சர ஆசிரியர் பதவிக்குப் பாராட்டுக்கள்.
முதியவர்களுக்கு முதலில் ஆசனம் கொடுத்துவிட்டு ஆரம்பித்திருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் இந்த முதுமையை தங்கள் தங்கள் கோணங்களில் பார்த்து எழுதியிருப்பது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
எல்லா தாத்தா பாட்டிகளுக்கும் இந்தப் பாட்டியின் வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி அம்மா. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.
Deleteமுனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDelete“வயதாகிறதே என வருத்தப்படாதீர்கள்
அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை“
அற்புதமான கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
தேவகோட்டை- கில்லர்ஜி.
அபுதாபி.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே
Deleteஅறிமுகங்களை இன்றே ஆரம்பித்து விட்டீர்களா?... வாழ்த்துக்கள்.... எனக்கு தெரியாதவர்கள் நிறைய பேர் அறிமுகப் பதிவில் தொடர முயல்கிறேன். நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் எழில்.
Deleteசிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் குணசீலன்.
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.
Deleteநல்ல ஆரம்பம்ங்க, திரு குணசீலன்!
ReplyDeleteமுதுமை பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாதவங்க, இளமையிலேயே போய் சேர்ந்து விடுவது அவர்களுக்கு நல்லது!
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் வருண்.
Deleteஅழகான ஆரம்பம். அழகான அறிமுகம். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தங்கள் பணி செவ்வனே ஈடேற வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதுமை பற்றிய
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
முதுமையைச் சிறப்பிக்கும் அறிமுகங்கள்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.