Monday, October 13, 2014

காப்புப் பருவம்!!!







ண்ணே! கனியமுதே!
காணக்கிடைக்காத
கருங்கடல் முத்தே! - என
கருவினில் எனைச்சுமந்து
கருப்பொருட்களை
கனகத் தூரிகையில்
கருத்தாய் சமைக்கும்
சபைநிறை ஆன்றோர்கள்
புகழ்நிறை சான்றோர்கள் - நிறைந்த
நிகழ்நிறை வலைச்சரத்தில்
ஆசிரியனாய் என்னையும்
பணியாற்ற இப்புவியினில்
பிறவியெடுக்கச் செய்த - எனைப்
பெற்ற தெய்வங்களுக்கு
முதல் மரியாதை!!!!





சொற்களாலும் பொருட்செறிவினாலும் பல்சுவைப் படைப்புகளை இனிதாய்ப் படைக்கும் பல பிரம்மாக்கள் மத்தியில் நீயும் ஒரு எழுத்தாளன், என என் எழுத்துக்களை அங்கீகரித்து இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியப் பணியினை எனக்கு உவந்தளித்த ஐயா.சீனா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி.பிரகாஷ் அவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.


ன்னைச் செம்மையாய் செதுக்கிய ஆசான்களுக்கும், என்னுடன் தோளோடு தோள்கொடுத்து தவங்கியபோது தாங்கியும் துவண்டபோது நம்பிக்கை கொடுத்தும் என் மெய்யோடு உயிராய் இருக்கும் என் மனைவிக்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


பிறந்தது அங்கயற்கண்ணி ஆட்சி செய்யும் நான்மாடக்கூடல். வளர்ந்ததும் வாழ்வதும் முத்துநகராம் திருமந்திரநகர். படித்தது இளங்கலை வேதியியல். பணிபுரிவது அமீரகத்தில் கச்சா எண்ணெய் எடுக்குமிடத்தில். அன்பான மனைவி, அழகான இரு குழந்தைகள் ஆதரவாக அன்னை இப்படி பன்னீர் சோலையில் ஆறுமாதம், ஆழ்கடலில் பணிநிமித்தம் ஆறுமாதமென விக்கிரமாதித்தன் போல வாழ்க்கை ஓட்டம். இடையிடையே தமிழின் தாகம் கொண்டு படைக்கும் படைப்புகளே வசந்த மண்டபம்.

சந்த மண்டபம் தொடக்கி மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. 2011 ம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதலாம் நாள் தொடங்கினேன். இன்று 174 பதிவுகள் ஏற்றி இருக்கிறேன். நான் வலைப்பதிவு எழுத வந்த காலத்தில் பத்து பதிவுகளுக்கு மேல் யாரும் கருத்து போடவில்லை. முதல் முதலாக முத்தான கருத்தாக சகோதரி கீதமஞ்சரி அவர்கள் தெரிவித்தார்கள். அந்தப் பொற்கரத்தால் கருத்து பெற்ற நான் இன்னும் பல பொன்னான கருத்தாளர்களுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன். சகோதரி கீதமஞ்சரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.





முதன்முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களுக்கும், முதலில் என் எழுத்துக்களை அங்கீகரித்து இலக்கியச் சிந்தனையாளர் விருது வழங்கிய முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் பல விருதுகள் அளித்த நண்பர் நாஞ்சில்.மனோ, நண்பர் பாலகணேஷ், அன்புத் தங்கை சசிகலா, நண்பர் தனசேகரன், சகோதரி குழந்தைநிலா ஹேமா, மற்றும் அன்பிற்குரிய வேதம்மா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ன் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து வசந்த மண்டபத்தை தொடரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நாட்டுப்புறக் கலைகள் என் எழுத்துக்களின் உயிர்மூச்சு. அந்த பொன்னான கலைகளை ஆணிவேர் போல இல்லாவிட்டாலும் சல்லிவேர் போலவாவது இருந்து வாழ்விக்க தணியாத விருப்பம். பல கலைகளை பற்றி கவிதை வடிவில் எழுதிவிட்டேன். தெருக்கூத்து எனும் மிகப்பெரிய கலை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய சமுத்திரம் அக்கலை. என்னால் இயன்ற அளவுக்கு செய்திகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன். முழுமையாக அக்கலை பற்றி எழுதி முடிக்கும் அந்த பொன்னான திருநாளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

நாட்டுப்புறக் கலைகள் பற்றிய என்னுடைய பதிவுகள்:

பொய்க்கால்குதிரை ஆட்டம்!!
முளைப்பாரிக்கும்மி!!
பூங்கரகம் ஆடிவந்தேன்!!
துடிப்பான புலியாட்டம்!!

தமிழன்னையின் பாதகமலங்களுக்கு நான் எழுதிய சில கவிதைகள்:
மருளும் மான்விழி!!
திணை மயக்கம்!!
ஆழிப்பேரலை அமைதி!!

நிழற்படக் கவிதைகள் சில:
நிழற்படக் கவிதைகள்...!!!
நிழற்படக் கவிதைகள்...3!!!


பூமிப்பந்தின் அங்கமடி

தீந்தமிழின் செல்வனடி!
தங்கமே தங்கம்!
பிள்ளைத்தமிழ் பாடவந்தேன்
தங்கமே தங்கம்!!

பாற்கடலின் நாரணனே
அலைமகளின் காதலனே!
தங்கமே தங்கம்!
பாடும் பிள்ளை காத்தருள்வாய்
தங்கமே தங்கம்!!

லைப் பூந்தோட்டத்தில்
பூத்திருக்கும் பூக்கள் கொண்டு
தங்கமே தங்கம்!
வலைச்சரம் தொடுக்க வந்தேன்
தங்கமே தங்கம்!!






ந்த வாரம் முழுதும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். குறைகள் ஏதும் இருப்பின் அறிவுறுத்துங்கள். இதோ இன்றுமுதல் பிள்ளைத்தமிழ் நாட்டுப்புற நடையில் வலைச்சரமாய் உங்களுக்கு. காப்புப் பருவத்துடன் தொடங்கும் இந்த வார ஆசிரியப்பணி சிறக்க உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நன்றியுடன் எதிர்நோக்கி தொடர்கிறேன்....


அன்பன்
மகேந்திரன்

54 comments:

  1. இந்த வாரம் உங்கள் வாரம்......

    மிக்க மகிழ்ச்சி மகேந்திரன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்,
      தங்களின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

      Delete
  2. வணக்கம் சகோ ! நீண்ட இடைவேளைக்குப் பின் தங்கள் வருகை தொடர்கிறது வலைத்தளத்தில் மிக்க மகிழ்ச்சி. அத்துடன் ஆசிரியப் பொறுப்பு ஏற்று க்கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சியே.சுய அறிமுகம் அருமை! தங்கள் பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன்.....!.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி இனியா...
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேன்மையான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  3. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் சுய அறிமுகத்தைப் பார்த்தேன் நன்றாக உள்ளது. தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் அன்புச் சகோதரர் ரூபன்,
      தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
      மனமார்ந்த நன்றிகள்.

      Delete
  4. இனிய வாரம் அமையட்டும். சகோதரா.
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் வேதம்மா..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  5. இனிய வாரம் அமையட்டும். சகோதரா.
    இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் வேதம்மா..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  6. தங்கமே தங்கம் பாடல் அழகாக இருக்கு அண்ணா. இந்த வாரமும் தங்கமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் அன்புத் தங்கை சசிகலா..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  7. வலைச்சரத்தில் தங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் துரை செல்வராஜூ ஐயா..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  8. வணக்கம் அன்புச் சகோதரர் மகேந்திரன்!

    வசந்தமண்ட பத்தில் வலைச்சர வாரம்!
    இசையொடுநல் ஆரவார மே!

    இவ்வார வலைச்சர ஆசிரியராக
    உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

    சுய அறிமுகம் சிறப்பு! நாட்டுப் புறக்காற்றோடு
    வசந்த மண்டபத்து வாசனை நுகர்ந்தோம்!
    களைகட்டப் போகிறது வலைச்சரம் எனக் கட்டியம் கூறுகிறது!
    ஆசிரியப் பணி சிறக்க உளமார வாழ்த்துகிறேன்! தொடருங்கள்!...

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி இளமதி..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.
      கவிப்பூக்களால் எமை எங்கெங்கும் ஊக்குவிக்கும்
      அன்புகொண்ட நெஞ்சமே உங்களுக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள்.

      Delete
  9. அன்பு நண்பரே இவ்வார வலைச்சர ஆசிரியராக தங்களைக் காண்பதில் மகிழ்வடைகிறேன்.

    தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் முனைவரே..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  10. வாழ்த்துக்கள் சார்! அறிமுகம் மிகச்சிறப்பாய் அமைந்தது! உங்களின் படைப்புக்களால் வலைச்சரத்தை வசந்த மண்டபமாக ஜொலிக்க செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் சுரேஷ்..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  11. வாழ்த்துக்கள் இனிய பணிக்கு
    வசந்த மண்டபம் மீண்டும்
    வலைச்சர மேடையில்
    வரிசையில் நாம் வாழ்த்துக்களுடன் காத்தே இருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரர் தனிமரம் நேசன் ...
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  12. //முதல் முதலாக முத்தான கருத்தாக சகோதரி கீதமஞ்சரி அவர்கள் தெரிவித்தார்கள். அந்தப் பொற்கரத்தால் கருத்து பெற்ற நான் ................................//

    ஆஹா, மிகவும் அருமையான அழகான செய்தி. :)))))

    //சகோதரி கீதமஞ்சரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.//

    என் நன்றிகளும்.

    சுய அறிமுகப் பதிவின் கவிதை வரிகள் அத்தனையும் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் வை.கோ ஐயா...
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      சிரம்தாழ்ந்த நன்றிகள்.

      Delete
  13. அன்பின் மகேந்திரன்

    பெற்ற தெய்வங்களுக்கு அருமையான கவிதை மூலம் செலுத்திய முதல் மரியாதை தங்களின் குண நலன்களை வெளிப்படுத்துகிறது.

    தங்களீன் இரண்டாவது முறையாக இவ்வார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று - இவ்வாய்ப்பினை அளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் குழுவினிற்கு நன்றி தெரிவித்தது பாராட்டுக்குரிய செயல்.

    அடுத்து ஆசான்களூக்கும் மெய்யோடு உயிராய் இருக்கும் துணைவியாருக்கும் நன்றி தெரிவித்து பண்பாட்டினை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

    அடுத்து சுய அறிமுகமும் வசந்த மண்டபத்தில் பதிவுகள் - பாராட்டுவதற்கு ச் சொற்களே இல்லை,

    174 பதிவுகள் இட்ட பின்னரும் முதல் பதிவினிற்கு மறுமொழி இட்ட கீத மஞ்சரிக்கு நன்றி நவில்வது நற்செயல் அல்லவா .....

    முதல் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய அருமை நண்பர் கவிதை வீதி சௌந்தருக்கும் - விருதுகளை அள்ளி வழங்கிய அத்தனை பதிவர்களூக்கும் நன்றி செலுத்தியது நெகிழ்ச்சியான செயல் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

    தெருக்கூத்து என்னும் மிகப் பெரிய கலை பற்றி எழுதுவது நன்று.

    நாட்டுப்புறக் கவிதைகள் பல - இறுதியாகப் படைத்ததற்குப் பாராட்டுகள்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சீனா ஐயா...
      எழுதுவதற்கு வார்த்தைகள் வரவில்லை ஐயா..
      உங்களின் பொன்னான கருத்துரை என்னை இன்னுமின்னும்
      மிளிரவைக்கும்.
      முதன்முதலில் வலைச்சர ஆசிரியராய் பொறுப்பு ஏற்கையில்
      ஆறுமாத குழந்தை நான்...
      அன்று என்னை நம்பி பொறுப்பினை எனக்கு அளித்தீர்கள்
      அதன் தாக்கம் இன்று அன்பிற்குரிய பல நெஞ்சங்களுடன்
      வலைப்பூவில் வசந்த மண்டபத்தில் வாசப் பன்னீருடன் வலம்
      வருகிறேன்.
      அனைத்தும் உங்களைப் போன்ற அன்பு நெஞ்சங்களால் விளைந்த
      விளைச்சல்கள் ஐயா..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      சிரம்தாழ்ந்த நன்றிகள்.

      Delete
  14. அன்பின் மகேந்திரன்

    த.ம : 5

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா...

      Delete
  15. அன்புள்ள திரு.மகேந்திரன் அய்யா,

    இந்த வாரம் தாங்கள் ‘வலைச்சரத்தில்’ ஆசிரியர் பொறுப்பேற்று...இயக்க இருக்கும் இயக்குநர் மகேந்திரன் அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துகள்.

    தங்களின் சுய அறிமுகமே அசத்தலாக இருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் என் எழுத்துக்களின் உயிர்மூச்சு என்று முழங்கி நாட்டுக்கு வழங்கி வரும் தங்களின் நல்ல பணி சிறக்கட்டும். பாராட்டுகள்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் மணவை ஜேம்ஸ் ஐயா..
      உங்களை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
      என்னோடு பயணியுங்கள் வலைச்சரத்தை
      மணம் மிக்க பாமாலையை திகழ்ச் செய்வோம்.
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      சிரம்தாழ்ந்த நன்றிகள்.

      Delete
    2. நன்றி அய்யா.

      Delete
  16. வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி உமையாள் காயத்ரி..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      சிரம்தாழ்ந்த நன்றிகள்.

      Delete
  17. பணிசிறக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன்..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  18. இன்று அழகான கவிதை வரிகளோடு தங்களின் சுய அறிமுகம் சிறப்பாய் அமைந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    தொடரட்டும் வலைச்சரப் பயணம்!!

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் நிஜாமுதீன்..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  19. வணக்கம் !
    ஆஹா !..வருக வருக எனதன்புச் சகோதரனே !தங்களின் வலைச்சர வாரம்
    மிகவும் சிறப்பாகவும் பொலிவாகவும் விளங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
    அறிமுகப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்...
      உங்கள் வார்த்தைகள் எனக்கு தெம்பு கொடுக்கும்
      ஊக்க மருந்து...
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  20. அசத்துங்க... சீனா ஐயாவின் கருத்துரையும் பிரமாதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்..
      எம் வலைப்பயணத்தின் சாரல்களில் கண்டெடுத்த நல்முத்தே...
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  21. தங்கமே தங்கம்!!
    தங்கத்தமிழ் தாலாட்டாய்
    தந்த வலைச்சரம் அருமை.!

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
      தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  22. இனிய வணக்கம் சுப்பு தாத்தா..
    தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
    சிரம்தாழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  23. Replies
    1. இனிய வணக்கம் நண்பர் கருண்...
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  24. தங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ...
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  25. நல்ல தொடக்கம் . சிறக்கட்டும் வலைச்சரப் பணி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் நண்பர் முரளிதரன்..
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  26. நல்ல அறிமுகம் வாழ்த்துகள் ...

    ReplyDelete
    Replies
    1. இனிய வணக்கம் சகோதரி கீதா...
      தங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்
      நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
  27. கலக்கலான வாரமாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  28. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete