"இந்த ஜென்மத்துக்கும் எனக்கு ஒரே ஒரு ஆசை தான் யா ...." இப்படி பலர் வாய்மொழிகளை தினம் தினம் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும் நமது முழுமூச்சான வாழ்வின் குறிக்கோளே அதுதான்.
அந்த ஆசை... வாழ்வின் குறிக்கோள் எல்லாமே ..
எந்த வர்க்கத்தினராயினும் அவரவர்கள் நிலைக்கேற்ப வீட்டுக்கனவுகள் வாழ்வில் நிலைகொண்டு இருக்கும். பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் தமக்கான வீடு கட்டுவதற்குள் படும் பாடு அப்பப்பா... சொற்களால் அடங்காது அந்த நிலை.
"எலி வளையானாலும் தனி வளை வேணும் ....."
"இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு...."
இப்படி பல பழமொழிகள் வீடுகளை மையப்படுத்தி நம்மிடையே வலம்வருகின்றன.
இந்த நேரத்தில் ஒரு முக்கியமான நபரை சொல்லியே ஆகவேண்டும். அவர் ஒளிவேந்தர் இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள். நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் மேல் உள்ள தாகத்தையும் அதற்காக அவர்கள் பாட்டையும் " வீடு " என்ற மிகப்பெரும் திரைக்காவியத்தின் மூலம் நமக்கு படம்பிடித்துக் காட்டினார்.
காலம் கடந்துபோச்சி
காதோரம் நரைச்சி போச்சி!- இந்தக்
கட்டைய சாத்திடத்தான்
குச்சி வீடேனும் கட்டனும்யா .......
ஏனைய மனிதர்களின் ஏகோபித்த புலம்பல்கள் இது.
===============================================================
தாலப் பருவம்!
இன்றைய வலைச்சரப் பிள்ளைத்தமிழில் தாலப் பருவம். "தால் " என்பது நாக்கு... நாக்கை ஆட்டி பாட்டிசைத்து தன் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாடலே தாலாட்டு எனப்பட்டது. அப்படி தாலாட்டு கேட்டு தூங்கும் பருவமே தாலப்பருவம். இப்படியொரு அழகான இன்னிசைத் தாலப்பருவத்தில், நம்மிடையே வீடுகள் பற்றி எழுதியிருக்கும் பதிவர்களைப் பற்றி காண்போம்.
=============================================================
வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்பாகி வரும் இந்தக் காலத்தில், அதில் இருக்கும் ஏமாற்று காரணிகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. அப்படி சிரமப்பட்டு சம்பாதித்து பணத்தை சேர்த்து வீடோ அல்லது மனையோ வாங்கச் செல்லும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை இங்கே விளக்குகிறார்கள். நாமும் தெரிந்துகொள்வோம்.
ஏமாளியாய் நான் ஆனால்
தூற்றாதோ இவ்வுலகம்!
சிறுகச் சிறுக நான் சேர்த்தது
பெருங்காற்றில் போய்விடுமோ?!
உம்மைப்போல் புண்ணியவான்
போட்டுவைத்த பதிவுகள் - எம்மை
விழித்தெழச் செய்கிறதே!!
===================================================================
இதோ இந்தியன் குரல் எனும் வலைத்தளத்தில் பாலசுப்ரமணியன் எனும் நண்பர் தகவல் பெறும் உரிமைச்சட்டம் பற்றிய காணொளியைப் பகிர்ந்திருக்கிறார். வீடு மனை வாங்கும் பொழுது ஏமார்ந்து போகாமல் இருக்க தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படி பயன்படுத்திக்கொள்ள என விளக்குகிறார். தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பூக்களால அபிஷேகம் - உமது
பூமலர் பாதத்துக்கு...
புல்லுருவிகள் ஏமாற்றுதலுக்கு
பலியாடு ஆகாமல் - எமை
தடுத்தாட் கொண்டமைக்காக....
=====================================================================
எமது ஆருயிர் அண்ணன் திரு.சி.பி.செந்தில்குமார் அவர்கள் தனது அட்ராசக்க தளத்தில், நமக்கு வீடு கட்டும்போது ஏற்படும் சட்ட சிக்கல்களை கேள்வியாக கணைவிடுத்து அதற்கான பதிலையும் தகுந்த நபர்களிடமிருந்து பெற்று நமக்காக பகிர்ந்தளிக்கிறார்.
கூலிங் கிளாஸ்
போட்ட அண்ணே!
கும்பிட்டு வணங்குகிறேன்!
குலசாமி போல நீங்க
குலம்காக்க வந்தீக!
புத்திகெட்டு போகாமல்
புரிந்து நடந்துகொள்ள
புதினமாய் பதிவு தந்து
புண்ணியம் சேர்த்தீக!!!
=============================================================
அட பாவிகளா... இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க என்று சொல்லும் அளவுக்கு சம்பவங்களை இங்கே நமக்காக கொடுத்து, அப்படி ஒரு ஏமாற்றத்துக்கு நாம் தள்ளப்படாது இருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள் அதிரை கடிதம் எனும் தளத்தில்.
மனமிங்கு புழுங்குது
இதயம்கூட குலுங்குது!
இதயமில்லா மனிதர்களை
இயல்பினில் பார்க்கும்போது!
இடுகாடு சேரானோ என
உள்ளமும் ஏங்குது!!
===============================================================
இளவேனில் எனும் தளத்தில் தமிழ்நதி அவர்கள் அற்புதமான பதிவொன்றை
இயற்றியுள்ளார். அந்தரத்தில் இருக்கிறது வீடு. என்னடா இது திரிசங்கு
சொர்கமாக இருக்குமோ என்று சற்றே பதைப்புடன் தான் படித்தேன். ஆனால் படிக்க
படிக்க... புலம்பெயர் உள்ளங்களும், வெளிநாடு வாழ் உள்ளங்களும் தங்கள்
வீட்டின் மேல் வைத்திருக்கும் பற்று மற்றும் தனது சொந்த வீட்டினை
நெருங்கும் சமயம் என வார்த்தைகளால் நம்மை மயக்க வைக்கிறார்.
மச்சான் எங்க இருக்கீக...
இதோ இங்கே வந்திட்டேன் புள்ள...
மச்சான் எங்க இருக்கீக..
இன்னும் பத்து நிமிஷத்தில வருவேன் புள்ள....
நீளாண்டுகளுக்குப் பின்
சந்திக்கும் மனதுகள் - அந்த
சுகமான வீட்டில்...........=============================================================
எங்கள் நெல்லைச்சீமையில் பிறந்த நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா
மன்னன் திரு. வண்ணதாசன் எனும் எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது தளத்தில்
வீடு எனும் தலைப்பில் ஒரு குறுங்கவிதை கொடுத்திருக்கிறார். வரிகள் தான் ஆறு
ஆனால் உணர்வுகளோ நூறு.
எங்க ஊர்க்காரர் என
சொல்லுவதில் பெருமை ஐயா...
உமது கவிதைகளின்
சொல்லபடாத மீதங்களே
நாங்களாக இருந்திட ஆசை ஐயா...==============================================================
நிழலுடன் வாழாதே, நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற முகவரியுடன் கசியும் மௌனம் எனும் வலைத்தளத்தில் திரு.ஈரோடு கதிர் அவர்கள் பிறந்த மனிதர்களை
அடைகாக்கும் கருவறை என்கிறார் வீட்டை. அழகான உணர்ச்சி ததும்பும் கவிதையை
இங்கே காணுங்கள்.
நிழலென்ன நிழலடா
நிஜம்தானே வாழ்க்கையடா...
பிறக்கும் முன்னர்
அடைகாத்தல் தொழிலே!
பிறந்த பின்னும்
அடைகாத்தால் உணர்வே!
அவ் உணர்வினை அழகாய்
கவி புனைந்தீர் மன்னவனே!!===========================================================
ஆண்களுக்கு எப்படியோ, ஆனால் பெண்களுக்கு வீடே கோயிலாக மதிப்பர்.
அதிலும் பெற்ற தாய் தந்தை உடன்பிறந்தோருடன் தாய்வீட்டில் வாழ்ந்த அந்தத்
தருணங்கள் அவர்கள் நெஞ்சில் எப்போதும் மாறாத மணம் வீசும் மல்லிகையாய்.
அப்படித்தான் இங்கே சகோதரி ஆனந்தி தனது அன்புடன் ஆனந்தி எனும் தளத்தில்
எங்கள்வீடு என்று கவிதையில் மனம் குளிரச் செய்கிறார்.
எந்த வீடு சென்றாலும்
அந்த வீட்டுக்கு இணையில்லை!
சொர்க்கமே என்றாலும்
அதுவும் என் வீட்டு
புழக்கடைக்கும் அப்புறம் தான்!!===============================================================
"வீடு" எனபது ஒவ்வொருவர் நெஞ்சிலும் குடிகொண்டிருக்கும் மந்திரச்சொல்.
அதற்கான பிரயத்தனம் நம் வாழ்நாளில் முக்கால் பாகம். அப்படிப்பட்ட வீடு
பற்றி கணக்கில் அடங்காத பதிவுகள் கொட்டிக்கிடக்கின்றன வலைப்பூக்களில்.
சிலரை இங்கே அடையாளம் காட்டியிருக்கிறேன்.
சுங்குடி சேலை கட்டி
இடுப்பு குலுக்கி போற புள்ளே
மனசு கசங்குதடி - செல்லம்மா
உன் கொசுவத்தில முடிஞ்சிக்கோடி - பொன்னம்மா!!
கன்னங்கருத்த மச்சான்
கொசுவத்தை உருவாதே
வெட்கம் பிடுங்குதய்யா - செல்லையா
பொழுது சாயட்டுமே - பொன்னையா!
நாளெல்லாம் ஏர்பிடிச்சி
நரம்பெல்லாம் வலிக்குதடி
நான்கண்ட சுகமென்ன - செல்லம்மா
நாலுகாசு சேர்க்கலியே - பொன்னம்மா!!
மனசு கலங்காதய்யா
நான் கொஞ்சும் செல்ல மச்சான்
நஞ்ச விளையட்டும் - செல்லையா
நாலுகாசு கைக்குவரும் - பொன்னய்யா!!
அந்த நாளைத்தானே
நானும் பார்த்திருக்கேன்
குளத்துக்கு பக்கத்தில - செல்லம்மா
குடிசையொன்னு போடவேணும் - பொன்னம்மா!!
நாளை அடுத்த பருவத்துடன் சந்திக்கிறேன் அன்பர்களே.....
அன்பன்
மகேந்திரன்
மிகவும் பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்கியமைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிறப்பான தளங்கள் !அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
ReplyDeleteமென்மேலும் தங்களின் தேடல் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் சகோதரா .
இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகம் ஆனா அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனிய வணக்கம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்,
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள்..புதிய தளங்கள் எனக்கு...சென்று பார்க்கிறேன் .மிக்க நன்றி..
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி கீதா..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
உபயோகமான தகவல்கள்...அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..தொகுத்து வழங்கிய தங்களுக்கும் மிக்க நன்றி.உலா வர வேண்டும் இத்தளங்களுக்கு.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி உமையாள் காயத்ரி..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம் சகோ!
ReplyDeleteஅடிப்படைத் தேவையென ஆகுமொரு வீடு!
எடுத்தமைத்த நற்பதிவு ஏற்பு!
அருமையான மிகத்தேவையான பதிவும், பதிவர்கள் அறிமுகமும் சிறப்பு!
மிக்க நன்றியுடன் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
இனிய வணக்கம் சகோதரி இளமதி..
Deleteஉங்கள் கருத்து எனக்கு வினையூக்கி ..
தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வீடு பற்றிய தலைப்பில் அறிமுகம் செய்தது நன்று!
ReplyDeleteஇனிய வணக்கம் புலவர்ப் பெருந்தகையே..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
SUPER From Devakottai
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் கில்லர்ஜீ
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
படங்களும் பதிவர்கள் அறிமுகமும் வெகு சிறப்பு.
ReplyDeleteஇனிய வணக்கம் தங்கை சசிகலா...
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வித்தியாசமான முறையில் சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் சுரேஷ்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வணக்கம்
ReplyDeleteஎல்லாவற்றையும் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய வணக்கம் சகோதரர் ரூபன்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான தளங்களின் அணிவகுப்பு. தேவைப்படும் என்பதால் குறித்து வைத்துக் கொண்டேன். நன்றி மகேந்திரன்.
ReplyDeleteஇனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான தளங்கள்..
ReplyDeleteஅழகான அறிமுகம்...
வாழ்த்துக்கள் அண்ணா...
இனிய வணக்கம் சகோதரர் குமார்...
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
வீடு பற்றிய கனவு விளங்காதஒரு சிறைஎன்பேன்! விளக்கமான கவிதை விளம்பியது கண்டு பூரித்தேன் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரர் நேசன்...
Deleteதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரர் நேசன்...
Delete