" ஏம்பா சண்முகம்.. எதுக்காக காலை தாங்கித் தாங்கி நடக்கிற"
" மாடிப்படி ஏறயில கால் தவறி சுளுக்கிடுச்சி முருகேசா..."
" ஏம்பா கொஞ்சம் பார்த்து கவனமா ஏறக்கூடாது........."
================================================================
"ஏன்டா மாப்ள... பாஸ் நேத்து உன்னை ரூம்க்கு கூப்பிட்டு லெப்டு ரைட்டு வாங்கிட்டார் போல... என்ன ஆச்சி..??"
"மாம்ஸ்... நேத்து பாஸ் ஒரு டாகுமென்ட் அனுப்பியிருந்தார். அது மிஸ் ஆயிடுச்சி அதான் திட்டினார்..."
"ஏன் மாப்ள... முக்கியமான டாகுமென்ட் போல தெரியுது கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதா..."
==========================================================
"கவனம்.....கவனம்...கவனம்.... கவனம்...."
நிச்சயமாக ஒருநாளைக்கு ஒரு நேரமாவது நம்மைப் பார்த்து வேறொருவரோ, வேறொருவரைப் பார்த்து நாமோ சொல்லும் சொல்.
"அக்கம் பக்கம் பார்க்காதே
ஆளைக்கண்டு மிரளாதே ....." என்ற பாடல் மிதிவண்டி ஓட்டும் போது இருக்கவேண்டிய கவனத்தைச் சொல்கிறது.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் கொஞ்சம் அதிக சிரத்தையுடன் கவனமாக செய்தால் வெற்றியுடன் பாதுகாப்பாக பணி நிறைவடையும்.
பொதுவாகவே அதீத தன்னம்பிக்கை, அலட்சியம், சுயநலம் போன்றவைகளே
கவனக்குறைவுக்கு காரணமாக அமைகின்றன. இதில் உயர்வு மனப்பான்மை (Superiority
Complex) என்ற ஒன்று உள்நுழைகிறது. இது வந்துவிட்டால் அவ்வளவுதான். தான்
இருக்கும் நிலையை பாதுகாத்துக் கொள்வோமே தவிர செய்யும் செயலை
மறந்துவிடுவோம். ஆகவே உயர்வு மனப்பான்மையும் கவனச் சிதறலுக்கான முக்கியமான
காரணி.
இந்த நொடி கடந்து போனா
அடுத்த நொடி கதவைத் தட்டும்..
இப்போது தோற்றிடினும்
வெற்றியது வெகு அருகில்..
காலம் போயிடினும்
கலக்கம் வேண்டாம்
செயலும் சுழியானால்
கலக்கம் வேண்டாம்...
கவனம் மட்டும் கைகொள்
காலமே உனது கையில்......==============================================================
வருகைப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் வருகைப் பருவம். பலவாறு சேட்டைகளை செய்யும் குழந்தை தனக்குப் பிடித்தவர்களைக் காண்கையில் இரண்டு கைகளையும் விரித்து வாரி அணைத்துக் கொள்ளும்படி நம்மை அழைக்கும் பருவம். இத்தகைய அழகான பருவத்தில் கவனம் பற்றிய பதிவுகள் இயற்றிய பதிவர்களைக் காண்போம்.
==============================================================
கவனம் என்றதுமே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது
சாலை விபத்து தான். எத்தனை பாதுகாப்பு கவசங்கள் இருந்தாலும் கவனச்சிதறல்
இருந்தால் விபத்து நிச்சயம். விபத்துக்கள் பலவிதம் ஆகையால் கவனம் தேவை
என்று சொல்கிறார் நண்பர் ஆரூர் மூனா செந்தில் அவர்கள் தோத்தவண்டா தளத்தில்.,
வேகம் நன்று தான் எப்போதும்
விவேகமற்ற வேகம் மூடத்தனம் முப்போதும்
விபத்து வரும்வழி தெரியாது - ஆனால்
நாம் செல்லும்வழி அடைத்திருக்கும்....
கவனம் அவசியம் கவனம் அவசியம்- நமக்கோ
பிடரியிலும் கண்கள் அவசியம்!!===================================================================
அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்து விடுகிறோம். சிலபல நேரங்களில் எதிர்பத விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கவனமின்மை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட அதிக கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் இந்த தளத்தில்.
சிறுகுஞ்சென்று நினைத்து
அவிழ்த்து விட்டால்
சிறகு முளைத்ததும்
பறந்து போய்விடும்!
நிலைக்கும் என்ற
அதீத நம்பிக்கையில்
கவனமின்றி இருப்பின்
கவளம் கூட உனக்கில்லை
கபாலத்தில் ஏற்றிடு!!===============================================================
அதே ஆசிரியர் தான் உனக்கும் பாடம் நடத்துகிறார். கணிதத்தில் நல்ல
மதிப்பெண்கள் பெற்ற நீ ஏன் ஆங்கிலத்தில் எடுக்கவில்லை? மாணவப் பருவத்தில் உண்டான பிரச்சனை இது. பெரும்பாலும் மாணாக்கர்கள் ஒருசில பாடத்தில் கவனமும்,
ஒருசில பாடத்தில் கவனமின்மையும் கொள்வார்கள். அதற்கான விளக்கத்தையும்
மார்க்கத்தையும் இங்கே சொல்கிறார்கள். சென்று பார்ப்போம் வாருங்கள்.
ஒன்றிருக்க ஒன்றுவந்தால்
என்றும் அமைதியில்லை - என்பதை
தவறாகப் புரிந்துகொண்டாயோ...??
உன் பருவத்தில் அனைத்தும்
நன்றாக வரவேண்டுமய்யா.....
கவனம் கொள்
புவனம் வெல்....================================================================
மாணவப் பருவத்தில் படிப்பு ஒன்றே கண்ணாக இருக்க வேண்டும். இன்றைய
போட்டி நிறைந்த காலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி
பெறுவதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அதற்காக நீண்ட நேரம் கவனத்துடன் படிக்க வழிமுறைகள் சொல்கிறார்கள் இங்கே, வாருங்கள் படித்துப் பயன்பெறுவோம்.
தோள் நிமிர்த்து தோழனே
நாளைய புவனத்தை - உன்
தோளில் சுமக்கவேண்டும்
இன்றே ஆயத்தமாகு
இனிதே பிரயத்தனமாகு
கவனமுடன் செயலாற்று
குவலயம் உன் காலடியில்!!===============================================================
பார்த்தல் என்பது வேறு கவனித்தல் என்பது வேறு.... பார்க்கும் காட்சியெல்லாம் மூளையில் பதியாது. கவனிப்பவை என்றும் கனிந்த கனியாக நினைவில் நிற்கும் என கவனத்திற்கான புதிர்கள் போட்டு விளக்குகிறார் நண்பர் முத்துராமன்.
விழிகள் நோக்கினால்
வழிகள் திறவாது
முயற்சியும் வேண்டும்...
வெறும் காற்று வெட்டவெளியில்
மூங்கிலுக்குள் நுழைந்து
மனம் நொந்து வந்தாலும்
ஏழு ராகங்களுடன் பயணிக்கும்...
வலிகள் தான் வாழ்க்கை...
கவனம் சிரமேற்று
அகிலம் உனதாக்கு.....
=================================================================
இதற்கெல்லாம் ஆரம்பமாக கவனம் என்பது வளர்ப்பு முதல் வேண்டும்..பசுமரத்தாணி போல குழந்தைகள் நெஞ்சில் பதிபவை மிகவும் ஆழமாக பதிந்துவிடும். கவனம் எனும் வாழ்வின் சூத்திரத்தை குழந்தையின் வளர்ச்சியிலேயே விதைத்திடுவோம் என்கிறார்கள் இங்கே.
விதை பரப்பிடல்
ஒரு செயலாமோ?
நன்னிலத்தில் பரப்பிடுதல்
நற்செயலாமே!!
==============================================================
கையில் எடுத்த செயலை நிறைவாக வெற்றிகரமாக முடிப்பதே
நம் எல்லோருடைய நோக்கமும். அப்படி ஒரு இலக்கினை அடைந்திட கவனம் எனும்
பாதுகாப்பு கவசம் மிகவும் அவசியம்.
கவனத்துடன் செயல்படுவோம்
புவனத்தில் நிலைபெறுவோம் !!!
அன்பன்
மகேந்திரன்
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
வித்தியாசமான அறிமுங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு நாளும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்கள் கவனம் பெறுகின்றன! அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவனம் பற்றிய அழகான தொகுப்பு இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவனிக்கப்பட வேண்டிய பதிவுகள் அனைத்தும் அருமை!
ReplyDeleteமிக்க நன்றி சார்!!!
தமிழ்மணம் ...3.
அருமையான பதிவர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
வித்தியாசமான தலைப்புடன்..இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றும் சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteநன்றே தொடருங்கள்
வித்தியாசமான அறிமுகங்கள்.....
ReplyDeleteபாராட்டுகள் மகேந்திரன்.
வித்தியாசமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDelete