Ramanujan by me :) |
கணிதம் என்றாலே, 'கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்' என்ற பிரபல திரைப்பட வசனம் நம்மில் பலருக்கு ஞாபகத்திற்கு வரலாம்! உண்மையும் கூட. 'எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம்' என்று சித்தாந்தத்தை சிந்தித்தால் இது புரியுமோ என்னவோ. சரி, இன்று நாம் பார்க்கவிருப்பது நமது பதிவர்களின் கணிதம் குறித்த பார்வை. வழக்கம் போல ஒரு சிறிய உரையுடன் ...
நல்லா கணக்கு பண்றவங்கள (தப்பர்த்தம் பண்ணக் கூடாது :)) நமது ராஜாக்கள் அமைச்சர்களாக அமைத்துக் கொள்வார்களாம். சோழர்கள் வேளாண் வல்லுநர்களையும், பாண்டியர்கள் வணிகர்களையும் அமைச்சர்களாகக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாறறிந்த உண்மை!
'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சொற்றொடரைக் கேட்கையில் கணியன் பூங்குன்றன் நினைவில் வருகிறார். இவர் பெயரில் இருக்கும் 'கணியன்' என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?
'The Man Who Knew Infinity' என்ற சொற்றொடரைத் தட்டினால், ராமானுஜரை அள்ளி வழங்குகிறது இணையம். 'கொடிது கொடிது இளமையில் வறுமை'. அதுவும் தன்னிடம் ஒரு சிறப்பான சக்தி இருந்தும், பொருளாதார சிக்கலினால், பெரிதும் ஆளாக முடியாமல் எத்தனையோ மேதாவிகள் தவித்திருக்கிறார்கள். அவர்களில் ராமானுஜனும் ஒருவர் என்றால் மிகையாகாது! ஆனால், அவர் செய்த புண்ணியம், நண்பர்களும், ஆசிரியர்களும் அவருக்கு உதவி, உலகம் சுற்ற வைத்து, பின்னாளில் உலகமே போற்றியது. இருப்பினும், இளமையின் வறுமை, உடல் ரீதியில் தன் வேலையைக் காட்டி, இளம் வயதிலேயே அவர் மரணிக்க நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. கணித மேதை ராமானுஜனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
கணித மேதை ராமானுஜன் - ஜெயபாரதன் அவர்களின் தளத்திலிருந்து 2009ல் எழுதியதென்றாலும், இன்று வரை மறுமொழிகள் பெற்ற/பெறுகின்ற பதிவு.
யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) - க்ரேக்கர்களின் கணிதம் பற்றி பல நுண்ணிய தகவல்களுடன் மாணவன் பதிந்திருக்கிறார்.
கணித மேதை காஸ் - ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. கல்வித்தேடல் தளத்திலிருந்து!
கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை - செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து. எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என்று நம்மை எண்ண வைக்கும் பதிவு.
கணித மேதைகள் - சோமசுந்தரம் ஹரிஹரன் அவர்கள் தளத்திலிருந்து, மூன்று கணித மேதகள் பற்றி சிறு குறிப்புகள் கொண்ட பதிவு. மேதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கவிதை ... கணிதம் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தளத்திலிருந்து ஒரு குட்டிக் கவிதை. ரெண்டே வரிகளில், 'அட சூப்பர்' என சொல்ல வைக்கிறது!
வேத கணிதம் - தே.அன்பழகன் அவர்கள் நடத்திவரும் தளத்திலிருந்து. தளம் முழுதும் கணிதம். எண்களின் மகத்துவம், கிழமையை அறிதல், கணிதப் புதிர்கள் என ஏராளம் உள. அவசியம் அனைவரும் பார்க்க/படிக்க வேண்டிய பதிவுகள்.
கணக்கதிகாரம்
15ம் நூற்றாண்டில் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல். தமிழும் கணிதமும் கலந்து செய்த கலவை இந்நூல். வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல். இதன் பிரதி Project Madurai தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம். கணக்கதிகாரம் பற்றி நம் பதிவர்களின் பதிவுகள் சில.
http://peramuwin.blogspot.com/2011/04/blog-post_28.html
http://kuzhalinnisai.blogspot.com/2014/10/blog-post_96.html
http://venkatesh1586.blogspot.com/2012/04/blog-post_5533.html
http://balasailam.blogspot.com/2012/12/blog-post_17.html
இன்றைக்கு கணக்குப் போட்டாச்சு, நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!!
வணக்கம்
ReplyDeleteஎல்லாம் வித்தியாசமான அறிமுகங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகச் சிறப்பான துவக்கம்
ReplyDeleteஇதுவரை நான் அறியாத பதிவர்களே
இந்த அறிமுகத்தில் அதிகம்
வலைச்சரத்தின் நோக்கமும் தெரியாத
சிறந்த பதிவர்களை தெரிந்து கொள்ளத்தானே ?
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி
ReplyDeleteகணக்கு பிள்ளையான நான் ரசித்து படித்த கணக்கு பதிவு. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். நல்ல பதிவு. சரியாக சொன்னீர்கள். ராமானுஜம் என்ன ஒரு மனிதர்.
ReplyDeleteகணிதம் குறித்த தளங்களின் அறிமுகத்தினை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ரூபன், Ramani S, சமுத்ரா, விசுAWESOME, துரை செல்வராஜூ, Yarlpavanan Kasirajalingam !!!
ReplyDeleteகணிதம் பற்றிய சில சுவையான தளங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்!
ReplyDeleteநன்றி முஹம்மது நிஜாமுத்தீன்!
ReplyDeleteஎன் தளத்தில் இருந்து ஒரு கவிதையை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி சகோ..பயணம் காரணமாகத் தாமத வருகை..மன்னிக்கவும்
ReplyDelete