பெண்ணியம் -ஒரு பார்வை.
பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களும் இணைந்து செயல்படவேண்டிய சமூக மாற்றநிலை ...
இப்பலாம் ஆணியம் தான் பேசனும் எங்கு பார்த்தாலும் பெண்களின் ஆதிக்கம் தான் திகழ்கின்றது...முன்பு போல பெண்கள் யாரும் அடிமைகளாக இல்லை...அவர்கள் இல்லாத் துறையே இல்லை..கல்வி,பொருளாதாரம்,சொத்து...ஆகிய எல்லா சுதந்திரமும் பெண்கள் பெற்று விட்ட நிலையில் ஏன் பெண்ணியம்... பெண்ணியம் ...என்று கூறுகின்றீர்கள்....என பல நண்பர்கள் பொருமுவதுண்டு...அவர்கள் கூறுவதுசரிதான்...
பெண்சிசுக்கொலை,குழந்தைத்திருமணம்,உடன்கட்டை ஏறுதல் போன்ற பெண்ணடிமைத்தனம் குறைந்துள்ளது .
.ஆனால் முற்றிலும் இல்லை என யாராலும் கூற முடியாது.மேலும் இன்றைய பெண் குழந்தைகளின் பாதுகாப்பில்லாத நிலை காரணமாக குழந்தை திருமணம் மறைமுகமாக அதிகரித்துள்ளது..இது பெற்றோர்களால் ஏற்படுகின்றது.பள்ளி வயது குழந்தைகள் எத்தனை பேர் திருமணம் செய்துகொள்கின்றனர் தெரியுமா.காதல் படுத்தும்பாட்டில்...
.பெண் மறுமணம் கூட ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பது உண்மைதான்...
அவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் நான் கேட்பதுண்டு உங்கள் பெண்குழந்தைகளை பயமின்றி வெளியில் அனுப்புவீர்களா...இரவில் அவள் வரத் தாமதமானால் கவலைப்படாது இருக்க இயலுமா?அல்லது வீட்டில் தான் தனியே விட்டுச்செல்ல முடியுமா...?காட்டில் கூட அவள் தனியே போகலாம் போல ..நாட்டில் அவள் செல்ல முடியாத நிலை தானே இன்றும்...பெண்ணை சக மனுஷியாய்,உணர்வுள்ளவளாய் மதிக்க தெரியாத சமூகமாகத்தானே இன்றைய சமூகம் உள்ளது...அப்படி ஒரு நிலை வரும் வரை பெண்ணியம் பேசித்தானாக வேண்டியுள்ளது...
இங்கு ஆண் பெண் இருவருமே குற்றவாளிகளாக உள்ளனர்....ஆண்களை மட்டுமே நான் குறை கூறவில்லை...ஒரு கயிற்றில் கட்டப்பட்ட சுதந்திரம் தான் அவளுக்கு கிடைத்துள்ளது..அதை மீறி அவளால் செயல்படமுடியாது..என்பது மறுக்கவியாலா உண்மை....
நடுநிலைவாதிகளாய் நின்று யோசித்தால் உண்மையை ஏற்கும் பக்குவம் வரும்...இன்றைய பெண்களின் கவனம் திசைத்திருப்பப்படுகின்றது..அழகான ,சிவப்பான,ஒல்லியான பெண்களே ஆண்களால் கவரப்படுகின்றார்கள் பெண் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து தகவல் ஒளிப்பரப்பு சாதனங்களால் வலியுறுத்தப்படுகின்றது..பெரியார் சொன்னதைப்போல நகை மாட்டும் ஸ்டாண்டாகவே பெண்கள் இருக்க வேண்டும் என்பதில் வியாபாரிகள் கவனமாக இருக்கின்றனர்...
அழகு சாதன விற்பனையாளர்களோ..தங்கள் பொருள் விற்க எதை வேண்டுமானாலும் செய்யத்தயாராக உள்ளனர்.திரைத்துறையினரைப்பற்றி கேட்கவே வேண்டாம்..பெண்ணின் அறிவை விட அழகிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.இளைஞர்கள் மத்தியில் பெண் போகப்பொருளாகவே காட்சிப்படுத்த படுகின்றாள்...இது அறிவின் சீர்கேடு..
.வளரும் சமுதாயம்..சரியானபடி வளர சமூகமும் ,குடும்பமும் முயற்சி எடுக்காத நிலையில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...
பெண்களுக்கு சமூகம் பற்றிய அக்கறை தேவை இல்லை என்பது ஒரு சமூகச்சீர்கேடான விசயமல்லவா?அவள் வீட்டை விட்டு வெளியே வந்து பணி புரிய ஆரம்பித்து விட்ட நிலையில் அவளுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை யார் எடுத்துக் கூறுவார்கள்..சில வீடுகளில் அவள் சம்பாதிக்கும் இயந்திரம்.
.பக்குவமற்ற வயதில் திருமணம் செய்து அல்லது உணர்வுகளுக்கு அடிமையாகி தவறான உறவில் உண்டாகும் குழந்தைகள் குப்பையில் அல்லவா வீசப்படுகின்றன..உயிரின் மதிப்பு எவ்வளவு கேவலமாக போயிற்று...!ஒரு கல்லூரிப்பெண் பாத்ரூமில் குழந்தை பெற்று பாலித்தீன் கவரில் வைத்து தூக்கி எறிந்தாளே எவ்வளவு கொடுமை.
இங்கு கல்வி எதைக்கற்று தருகின்றது என்பது கேள்விக்குரிய ஒன்றாகின்றது..மதுவும் ,ஆடம்பரமும் மனித நேயத்தை கொலைசெய்துவிட்டதல்லவா...
எத்தகைய ஆதிக்க உணர்வு இருந்தால் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாதென்று அவள் மீது ஆசிட் ஊற்றும் உணர்வு ஆண்களுக்கு வரக்கூடும்...மரணத்தை விட கொடியதல்லவா...? இந்நிலை..
பெண்களின் பார்வையில் சமூகம் எப்படி உள்ளதென்பதை,
ஆண்களால் பாதிப்பு மட்டுமல்ல அவர்கள் தோழனாகவும் உள்ளார்கள் என்பதை காட்டும் பதிவுகள் இவை.
*குழந்தை என்று கூட பாராத கொடூரன்களால் பூங்கொடி பட்டபாடு இது
*நாச்சியாரின்
வாழ்க்கையின் பாடங்களை கற்று தந்தவர்களை நினைவு கூறும் பதிவாய்
*கவியாழினியின் கவிச்சாரல்களில் ஓ இரவே...
பெண்ணின் பார்வையில் இரவு எத்தனை அழகாய் ..
*தமிழ்முகிழ் கூறும்
ஒரு தாய்க்கு தன் குழந்தையின் முதல் தொடுதல் எப்படி இருக்கும் எனக் கூறும் பதிவாய்
*அன்புடன் ஆனந்தியின்
அந்நிய நாட்டில் இருந்தாலும் மனமெல்லாம் தாய்நாட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் பதிவாய்
*அயல்நாட்டில் வாழும் இந்தியக்குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளாய் முகுந்தி அம்மாவின் கூற்றாய்
”அப்பொழுதே நம்பிக்கை வந்துவிட்டது. இந்த தலைமுறை எதையும் தாங்கிகொண்டு செல்பவர்கள் அல்லர், தமக்கு உரிமையானதை எப்படியாவது கேட்டு வாங்கி கொள்வார்கள் என்று. இருப்பினும் மீண்டுவருவது/சாதிப்பது எப்படி என்று குழந்தைகளுக்கு சொல்ல வேண்டியது முக்கியம் என்று நினைக்கிறேன்.”
* ஹுஸைனம்மாவின் கலகலப்பான பதிவு..நிறைய தலைப்புகளில் இவரின் பதிவுகள் உள்ளன.
*கவிஞர் உமாஷக்தியின் பதிவாய்
இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய்...இவர்களைப் போன்றவர்களால் பெண்கள் நிம்மதியாய் வாழ முடிகின்றது
*வீசும் போது நான் தென்றல் காற்று காற்றுக்கென்ன வேலி எனக் கூறும் புதுகைத்தென்றலின் பதிவு
*
துணையே தோழனாக அமைந்தால் வேறென்ன வேண்டும் இனிய இல்லறத்திற்கு உஷா அன்பரசின் பதிவாய்
சிலரின் தவறுகளால் எல்லோரையும் குறை கூறுதல் என்பது நடுநிலையானதல்ல..நம்பிக்கையுடன் பழகக்கூடிய ஆண்களும் உள்ளனர் என்பதைக் காட்டும் பதிவுகளும் உள்ளன.வலைப்பூவிலும்,முகநூலிலும் பெண்களை மதித்து நடக்கும் ஆண்கள் உள்ளனர்...இயல்பாய் பெண்கள் வாழும் காலம் இவர்களைப்போன்றவர்களால் உண்டாகும் நம்பிக்கையுடன் வாழ்வோம்..
நாளை சந்திப்போமா...
பெண்ணீயம் பற்றிய மிக அழகான பதிவு! முதல் வரியே நல்ல "நச்"! அறிமுகங்கள் பலர் புதியவர்கள்! சென்று பார்க்கின்றோம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம்.
Deleteமிக்க நன்றி சகோ...
என்னுடைய பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteவணக்கம்...உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துகள்..வருகைக்கு நன்றி.
Deleteத.ம ஒன்று
ReplyDeleteவணக்கம் ...எங்க இன்னும் ஓட்டு விழலயேன்னு பார்த்தேன் ..இவ்ளோ கஷ்டமா ..ஓட்டு வாங்குறது...நான் போட்டாத்தானே எனக்கு போடுவாங்க....ன்னு என்ன நானே...
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் .மிக்க நன்றி சகோ..
Deleteரணமான வார்த்தைகளில் தொடங்குகிற பதிவு மனம் கனக்கசெய்கிறது அக்கா! பலரும் தெரிந்தவர்கள் தான். புதியவர்களை போய் பார்க்கிறேன்:)
ReplyDeleteஇதை சொல்லாமல் இருக்கவே நினைத்தேன்.ஆனால் எப்படிம்மா...என்னால் முடியும்..நன்றிம்மா..
Deleteஅனைத்து பதிவுகளும் அருமையே.... பூங்கொடி பதிவு மனதை பிழிந்து விட்டது.
ReplyDeleteவணக்கம்...தெரியாத பூங்கொடிகள் நிறைய சகோ..நன்றி
Deleteவார்தைகளில் அடக்கிட முடியாத உணர்வு தரும் பதிவு!
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உண்மை சகோ..நன்றி
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeletenandrima
Deleteவணக்கம் சகோதரி அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteபூங்கொடி :( மனதை கிழித்த பதிவு ...
nandrima
Deleteசிறப்பான பார்வை! சிறப்பான வலைப்பதிவுகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகீதா, என் பதிவுகளையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி!! ஒவ்வொரு முறையும் வலைச்சர அறிமுகம் ஆனந்தத்தையே தருகிறது!
ReplyDeleteஆஹா உங்கள் பதிவுகள் அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றது...தொடருவோம்...
Deleteஎனது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி. அறிமுகமான நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
valaichara arimugathiruku manamarndha nandrigal
ReplyDelete