Monday, November 17, 2014

விடாது கருப்பு – வலைச்சரத்தில்!


இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் விட்டுவிடு கருப்பாஎனும் நாவலை “விடாது கருப்புஎன்ற தலைப்பில் ராஜ் டி.வி.யில் மர்ம தேசம் தொடரின் இரண்டாவது பகுதியாக வெளியிட்டார்கள். அதனை பார்த்து பலரும் ரசித்திருக்கலாம்! அப்படி பார்க்காதவங்க அது என்ன அப்படி ரொம்ப த்ரில்லான தொடரா என்று கேள்வி கேட்டால், அதைப் பார்க்க விருப்பமிருந்தால் YOUTUBE-ல் விடாது கருப்பு எனத் தேடிப்பாருங்கள் – தொடரினைத் தயாரித்த ராஜ்ஸ்ரீ பக்கங்களில் உங்களுக்குக் கிடைக்கும்.


அது சரி, திங்கள் கிழமை எனில் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பவர் தன்னைப் பற்றிய அறிமுகமும், தான் எழுதிய பதிவுகளின் சுட்டிகளும் தானே தரவேண்டும் – இது என்ன விடாது கருப்பு – வலைச்சரத்தில்எனும் தலைப்பில் பதிவு வெளி வந்திருக்கிறதே என்று குழப்பமடைய வேண்டாம் நண்பர்களே....  ஆமாம் இந்த வாரம் வலைச்சரத்திலும் விடாது கருப்பு!  ஆமாம் இந்த வாரத்திற்கும் எனக்கே ஆசிரியர் பொறுப்பு – So, be ready for another week of posts from வெங்கட் நாகராஜ்!

சென்ற வாரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டி சீனா ஐயா, மூன்று வாரங்களுக்கு முன்னரே கேட்டுக்கொண்டதால் முன்கூட்டியே பதிவுகளைத் தயார் செய்து வைத்துக் கொள்ள முடிந்தது. இம்முறை அவ்வாறு தயார் செய்து கொள்ள முடியவில்லை.  ஆனாலும் கொடுத்த பொறுப்பிற்கு, கொஞ்சமாவது மரியாதை செய்ய வேண்டும் என்ற முயற்சியோடு இந்த வாரமும் அறிமுகங்கள் தொடரும்.

சென்ற வாரத்தில் குஜராத் அனுபவங்களை அறிமுகங்களுக்கு முன்னால் எழுதி இருந்தேன். மேலும் நிறைய விஷயங்கள் எழுதவதற்கு இருந்தாலும், இங்கே அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை! [எனது பக்கத்திலும் பயணக் கட்டுரை எழுதியாக வேண்டுமே!] இந்த வாரம் முழுவதும் வேறு சில இடங்கள் பற்றி பார்க்கலாம்! அது நாளை முதல் சரியா! – அந்த இடங்கள் என்ன என்பதை நாளைக்கே சொல்கிறேன்!

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மேலும் ஐந்து வலைப்பூக்களைப் பற்றி பார்க்கலாம்!

31.         வலைப்பூ:  என் அனுபவங்கள்

இந்த வலைப்பூவில் எழுதி வருவபர் லதா குப்பா – மதுரை மண்ணில் பிறந்தவர்.  தற்போது இருப்பது வெளி நாட்டில் என்றாலும் பிறந்து வளர்ந்த மதுரை மண்ணின் மணம் இன்றும் என்றும் என்றென்றும் என் நினைவில்...என்று பெருமையுடன் சொல்கிறார்.  இவ்வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது 12 ஜுன் 2012. இதுவரை 129 பதிவுகளை தன் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அறிமுக வலைப்பதிவு: இது ஒரு பூரியின் கதை



பூரி கிழங்கு மசால், பூரி தால், பூரி சன்னா மசாலா இதனுடன் தயிர் வெங்காயம் சாப்பிட்டிருக்கிறேன். புதிதாக தேங்காய் சட்னியும் கொடுத்தார்கள் மதுரையில்! இப்படி பூரி கண்ட இடமே சொர்க்கம் என்றிருந்த எனக்கு நண்பர் அனுப்பிய ஒரு பதிவில் பூரியுடன் பாஸந்தி காம்பினேஷன் மட்டும் ட்ரை செய்யவில்லை என்று தோன்றுகிறது. பாஸந்தி எனக்குப் பிடித்த இனிப்பும் கூட! (எனக்குப் பிடிக்காத இனிப்பு எது-ன்னு யோசிக்கணும்!

32.   வலைப்பூ:  தூமை

தூமை – எனும் பெயரைப் பற்றி பதிவர் மோனிகா தர்மினி சொல்வது “தூமை வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.




வாசிப்பு திறக்காத பல கதவுகளைத் திறந்து விடுகின்றது. புத்துயிர்ப்புத் தருணங்களை நல்ல புத்தகங்கள் ஒவ்வொரு தடவையும் தந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுடனான உரையாடல் என்பது வேறுலகு  போலப் பிரமையைச் சில புத்தகங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. மீளவும் ஓடிப் புதைந்து விடும் தலையுடன் இருக்கத் தோன்றும். வாழ்வின் ஏக்கங்கள், புறக்கணிப்பு, தனிமை எல்லாம் புதியதொரு புத்தகத்தில் சற்றே தீர்ந்துவிடும்.

33.   வலைப்பூ:  மலேசிய நினைவுகள்

2003-ஆம் ஆண்டே வலைப்பூவினை ஆரம்பித்திருக்கிறார் இவர். ஆனால் நடுவே சில ஆண்டுகள் பதிவு எழுதவில்லை.  இவரது பதிவில் மலேசியா நினைவுகளை அழகாய் எழுதிக் கொண்டு வருகிறார். மலேசியாவில் எடுத்த படமும் இடம் பற்றியும் நிறைய பதிவுகள் இங்கே உண்டு.  அப்படி ஒரு பதிவு இன்றைய அறிமுகமாக!




1925-ஆம் ஆண்டு வாக்கில் இங்கு பசுமை உற்பத்தி என்ற வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்த போது தேயிலை, பூக்கள், காய்கறி தோட்டங்கள் விரிவாக வளர்ச்சி பெற ஆரம்பித்தன. தமிழகத்தின் நாமக்கல் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த பல தமிழர்கள் இப்பகுதியில் வேலைக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சந்ததியினர் பலர் இன்னமும் இங்கேயே வாழ்கின்றனர். மற்ற இடங்களைக் காட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை இப்பகுதியில் சற்றே அதிகம். நான் பார்த்ததில் இரண்டு தமிழ் ஆரம்பப் பள்ளிகளும் இங்கிருக்கின்றன. ஆலயங்களோ ஏராளம். மலேசியாவில் எனது மனம் கவர்ந்த இடங்களில் இதுவும் ஒன்று.

34.   வலைப்பூ:  கறுப்பு வெள்ளை

“கறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காகஎன்று தனது வலைப்பூவின் முகப்பில் எழுதி இருக்கும் சேரலாதன் பாலசுப்ரமணியன் அவர்களின் வலைப்பூ இது.  2005-ஆம் ஆண்டு வலையுலகில் நுழைந்த இவர் கடைசியாய் எழுதிய பதிவு மே, 17, 2013.  தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே....

அறிமுகப் பதிவு:      யாரோ ஒருத்தி

என்முகம் பார்த்தபடியே
பயணித்தாள்

புருவம் உயர்த்தி
ஆச்சர்யம் காட்டினாள்

முகம் தாழ்த்திக்
கொஞ்சமாய்ச் சிணுங்கினாள்

உதடு வலிக்காமல்
ஏதேதோ முணுமுணுத்தாள்

ஏதோ யோசித்துத்
திடீரெனச் சிரித்தாள்

நிறுத்தம் வந்ததும்
இறங்கிப்போனாள்
அலைபேசிக்குத்
தலையைச் சாய்த்தபடி.

35.   வலைப்பூ:  புத்தகம்

தான் படித்த புத்தகங்கள் பற்றிய கருத்துகளைச் சொல்லி, அவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் தளம் இது. ஞானசேகர் என்பவரின் வலைப்பூ இது.

அறிமுக வலைப்பதிவு:      குன்னூத்தி நாயம்



புத்தகத்தில் இருந்து சில சொற்கள்: தகோலு (தகவல்), திலுப்பி (திரும்பி), ரோனு (loan), வாத்துரும்பு (bath room), ரைட்டு (light), ரட்சிமி (லட்சுமி), ராரி (lorry), டைக்கி (strike), தகலாறு (தகராறு), ரீவு (leave), ஈச்பரி (ஈஸ்வரி), உருவா (ரூபாய்), திலுப்பூர் (திருப்பூர்), ரைனு (line), நத்தம் (ரத்தம்), வதுலு (பதில்), ரக்கிப்பிரேசு (lucky prize), ரவுக்குனு (லவக்குனு = சிக்கீரமா / திடீரென்று), ரேசா (லேசா), மரிகேதி (மரியாதை), பித்தி (புத்தி), பிலி (புலி), (பிரிசன்) புருசன், சாக்கிரிதி (ஜாக்கரதை), கண்ணாலங் கார்த்தி (கல்யாணங் காட்சி). இப்படிப்பட்ட சொற்கள் ஆரம்பத்தில் பயங்காட்டினாலும், வாக்கியங்களைப் பிரித்து நிறுத்திப் படிப்பதில் கொஞ்சம் திணறினாலும், புதிர்களை விடுவித்துக் கொண்டே படிப்பது போல ஆர்வங்கொண்டு படித்து முடித்தேவிட்டேன். மிக இயல்பாக சரளமாக அமையும் மொழிநடையும், எல்லாக் கதைகளிலும் இழையோடும் நகைச்சுவை உணர்வும், எவ்வளவு பெரிய விசயத்தையும் அசால்ட்டாக சொல்லிவிடும் நேர்த்தியும் இக்கதைகளின் மாபெரும் பலம்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் முதல் நாளின் அறிமுகங்களைப் பார்த்தீர்களா? அவர்களின் தளங்களையும் படித்து ஊக்கம் தருவீர்கள் தானே!

தொடர்ந்து சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



எனது பக்கத்தில் இன்றைய பதிவு: கையைப் பிடி காலைப் பிடி - அதையும் படிக்கலாமே!
 

26 comments:

  1. விக்ரம் படத்தின் "மீண்டும் மீண்டும் வா.... வேண்டும் வேண்டும் வா" பாடலைக் கூறி வரவேற்கிறேன்.

    இன்று அறிமுகமாகியுள்ள சில தளங்கள் அதிக சுவாரஸ்யத்துக்குக் கட்டியம் சொல்கின்றன.

    வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.... மீண்டும் மீண்டும் வந்தேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  3. வலைச்சர ஆசிரியருக்கு,

    இனிய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

    சுவாரஸியமான வாரமாக அமையப்போவது உறுதியாயிற்று:-)

    நேற்று ஊர் திரும்பியாச்சு:-)

    ReplyDelete
    Replies
    1. ஊர் திரும்பியது அறிந்து மகிழ்ச்சி.

      சென்ற வாரமும் ஆசிரியர் பொறுப்பு - குஜராத் பற்றிய சில செய்திகள் சொல்லி இருக்கிறேன். முடிந்த போது படியுங்கள்.

      இது இரண்டாம் வாரம் - தொடர்ச்சியாக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      Delete
  4. சென்ற வார அசத்தல் பதிவர்களையே இன்னம் படித்து முடிக்கவில்லை... அதற்குள் அடுத்த அசத்தலா வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      Delete
  5. ஆஹா,இந்த வாரமும் தங்களா, வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அது ஏங்க, "விடாது கருப்புன்னு" தலைப்பைப் போட்டு பயமுறுத்திட்டீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா... இந்த வாரமும் உங்களை விடாது இந்த கருப்பு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      Delete
  6. ஆஹா..இந்த வாரமும் தாங்களா...தொடருங்கள்..தொடர்கிறோம்..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  7. முன்கூட்டி திட்டமிடாத போதும் இன்றைய வலைச்சரம் ஜொலிக்கவே செய்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  8. அருமையாக செல்லும் இந்த வாரமும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      Delete
  9. அறிமுகங்களுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      Delete
  10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      Delete
  11. இந்த வாரமும் வலைப்பூ ஆசிரியராக தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete
  12. ஆஹா! மீண்டும்! சூப்பர்! வந்துவிட்டோம்...வருகின்ரோம். உங்கள் பதிவும் அருமை! வாழ்த்துக்கள்!

    அறிமுகங்கள் சுவாரஸ்யம்.....அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      Delete
  13. //ஆமாம் இந்த வாரம் வலைச்சரத்திலும் விடாது கருப்பு! ஆமாம் இந்த வாரத்திற்கும் எனக்கே ஆசிரியர் பொறுப்பு – So, be ready for another week of posts from வெங்கட் நாகராஜ்!//

    என்னடாப்பானு பார்த்தேன். தொடர்ந்து கலக்குங்க. நான் விடாது கருப்பு னு ஒரு வலைப்பக்கம்/பதிவர் முன்னாலே இருந்தார். அவரோட பதிவின் அறிமுகமோனு நினைச்சுட்டேன். :)))) இங்கே சொல்லி இருக்கிறாப்போல் போன வார அறிமுகங்களையே இன்னமும் படிக்க முடியவில்லை. உங்களிடம் எனக்கு நேரமில்லைனு சொல்ல வெட்கமா இருக்கு. பார்ப்போம். இந்த வாரமாவது முடியுதானு! :))))

    ReplyDelete
    Replies
    1. முடிந்தபோது படியுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      Delete