குஜராத்
மாநிலத்தில் நான் பார்த்த ஒரு மூன்று சக்கர வாகனத்தினைப் பற்றி தான் இன்று
பார்க்கப் போகிறோம். குஜராத் மாநிலத்தில் சாலைகள் மிகவும் அருமையாக அமைத்திருப்பது
மட்டுமல்லாது சீராக பராமரிப்பதும் நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் தவிர மாநில
நெடுஞ்சாலைகள் என்ற பெயரில் பல மாவட்ட தலைநகரங்களும் இணைக்கப்பட்டு
இருக்கின்றன. இதனால் வாகனங்கள் சீரான
வேகத்தில் சென்று வருகிறது. இந்த
சாலைகளில் பயணம் செய்யும் போது பயணம் விரைவில் முடிய வேண்டும் என்ற எண்ணமே
தோன்றுவதில்லை – அப்படியே பயணித்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றியது!
இந்த
சாலைகளில், குஜராத் மாநிலத் தலைநகரான காந்திநகரிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு பல
பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை
அனைத்தும் இப்படி பிரதான சாலைகளில் மட்டுமே இயங்குகின்றன. பிரதான சாலையிலிருந்து விலகி, கிராமங்களுக்குள்
செல்லும் பேருந்துகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். அதனால் இங்கே
நிறைய மூன்று சக்கர வண்டிகள், பிரதான சாலைகளிலிருந்து கிராமங்களுக்கு பயணிக்கிறது.
அப்படி இருக்கும் இந்த மூன்று சக்கர வண்டிகளுக்கு குஜராத்தி மொழியில் “[ch]ச[g]கடா” என்று
பெயர் சொல்கிறார்கள்.
மனிதர்கள்
முதல், காய்கறிகள், உணவுப் பொருட்கள், ஆடு-மாடு-மீன், வீட்டுப் பொருட்கள் என
இவற்றில் கொண்டு செல்லாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். பிரதான சாலையில்
பயணிக்கும்போது பார்த்த பல வண்டிகளில் இப்படி எல்லா விதமான போக்குவரத்திற்கும்
இந்த வண்டி பயன்படுத்துவதைப் பார்க்க முடிந்தது.
மனிதர்களும் நிறையவே பயணிக்கிறார்கள். உள்ளே அமர இடம் இல்லாதவர்கள்
பின்னால் நின்றபடி பயணிக்கிறார்கள்.
இருந்தாலும்,
இந்த “[ch]ச[g]கடா” வண்டியைப்
பார்க்கும்போதெல்லாம் இதில் பயணிக்கும் ஆசை வந்தது. ஓட்டுனர் இருக்கை அதிக
உயரத்தில் இருக்க, பின் பக்கம் கொஞ்சம் சாய்ந்த மாதிரி இருக்கிறது. ஓட்டுனர்கள்
ஏதோ ராஜா மாதிரி உட்கார்ந்திருக்கிறார்.
இந்த வாகனங்களை சிறப்பாக அலங்கரித்தும் வைத்திருக்கிறார்கள். பழைய
என்ஃபீல்ட் புல்லட்டின் இஞ்சின் மட்டும் எடுத்து அதனை வைத்து இந்த வண்டிகளைச் செய்கிறார்கள்.
இதை இயக்க டீசல் பயன்படுத்துகிறார்கள்.
படபடவென்று ஒரு ஓசையுடன் இவை பயணிப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
இப்படி
கிராமங்களுக்குள் பயணம் செல்ல நமது ஊரில் இருக்கும் வசதிகள் போல நிறைய பேருந்து
வசதிகள் இல்லை என்றாலும், இப்படி ஒரு வசதியாவது இருக்கிறதே என்று நினைத்தேன். வேறு சில வட இந்திய நகரங்களில் இந்த வசதி கூட
இல்லை.
இந்த
வண்டிகள் பற்றி இன்னும் சில தகவல்களும், படங்களும் எனது பக்கத்தில் வேறொரு
சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். வலைச்சர வாரத்தில் இன்றைய அறிமுகங்களைப்
பார்க்கலாம்....
11 வலைப்பூ: விதானம் – ஓவியக் குறிப்புகள்
பெங்களூர்
நகரத்தில் வசிக்கும் ரஞ்சித் பரஞ்சோதி அவர்கள் தனது ஓவியங்களையும் அவை வரையப்பட்ட
பின்னணியினையும் பதிவு செய்ய வைத்திருக்கும் தளம் தான் விதானம். ஜனவரி 2012 முதல் இந்த தளத்தில் தனது
படைப்புகளை பகிர்ந்து வருகிறார்.
அறிமுகப்
பதிவு: கலைக்கு உண்மையான கலைஞனை மதிப்போம்
“நீ ஆடுன
கூத்து நல்லதா கெட்டதான்னும் எனக்குத் தெரியாது”
“ஆனா.. சாயந்தரம் ஆரம்பிச்சு ஒரு வா தண்ணி கூட குடிக்காம வைராக்கியத்தோட அயத்துப் போகாம விடியக் காலம் வரைக்கு நீ ஆடீருக்க”
“உன்னோட
அந்த வெறித்தனமான உழைப்ப பாத்து மலைச்சுப் போனேன். இந்தா வச்சுக்கோ”
முடிஞ்சு
வச்சிருந்த கொஞ்சம் பணத்தையும், பானை
அரிசியையும் கொடுத்தான் செவிடன்.
12. வலைப்பூ: திருமூலர் திரு அருள் மொழி
கே. கார்த்திகைநாதன் எனும் பெயர் கொண்ட இப்பதிவர் நமது
தமிழகத்தில் இருக்கும் பழமையான கோவில்களில் இருக்கும் ஓவியங்களை தனது பக்கத்தில்
பகிர்ந்து கொண்டிருக்கிறார். சில அருமையான ஓவியங்களை இங்கே பார்க்க முடியும். தற்போது ஏனோ இவரது தளத்தில் புதியதாக பதிவுகள்
எழுதுவதில்லை.
அறிமுகப் பதிவு: திருவண்ணாமலைக் கோவில் ஓவியங்கள்
சங்க காலத்தின் இறுதியிலிருந்து கோயில்களில் வண்ண
ஓவியங்களை வரைந்து வைக்கும் வழக்கம் வந்துள்ளது. இவற்றின் தொழில் நுட்பமும் பொருளும் காலந்தோறும்
மாறுபட்டுள்ளன. பல்லவர், பாண்டியர்,
சோழர் காலத்து ஓவியங்கள் இந்திய நாட்டின் பழமையான
மரபில், அடித்தளமும் வண்ணங்களும்
அதிக நாட்கள் இருக்கும்
முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. வெண்சுதையின் மீது தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களின்
திறமையையும் உயர் கலைத் தரத்தையும் உணர்த்துகின்றவையாய் உள்ளன.
13. வலைப்பூ:
ரசனைக்காரி
ஃபிப்ரவரி
2009 முதல் பதிவுலகில் இருக்கிறார் ராஜேஸ்வரி. ஐந்து வருடங்களுக்கு மேலாக
பதிவுலகில் இருந்தாலும் இவர் எழுதும் பதிவுகள் மிகக் குறைவே. இதுவரை மொத்தம் 54
பதிவுகள் மட்டுமே எழுதி இருக்கிறார். தொடர்ந்து எழுதலாமே சகோ!
அறிமுகப் பதிவு: நகைச்சுவை கதம்பம்
நான் பேந்த பேந்த மேடையிலேயே நின்று கொண்டிருந்தேன்.
ஏற்கனவே இருந்த குழப்பம் தீர்வதற்குள், அடுத்த காட்சிக்கு வந்த என் அக்காவின் கணவனான, என் தோழி ரோஸ்மேரி, கடகடவென்று வசனங்களை ஒப்பித்துவிட்டு, “ வாடி உள்ளே” என்று என் கையை பிடித்து இழுத்தாள். நான் அழுது விடும்
குரலில், “ஏய்...உங்கூட நான்
வரக்கூடாதுடி” என்று சொல்ல,
அனைவரும் ”ஓ” வென்று
கத்தி சிரிக்க....
14. வலைப்பூ:
கை. அறிவழகன்
2008-ஆம்
வருடம் ஜூன் மாதம் ஆரம்பித்திருக்கிறது இவரது வலைப்பயணம். கவிதைகள், கட்டுரைகள்,
புகைப்படங்கள் என பல தளங்களில் எழுதும் இவர் தற்போது வசிப்பது பெங்களூரில்.
அறிமுகப்
பதிவு: இல்லறம் என்கிற
பேராற்றல்
இரண்டடி, மூன்றடி யாரேனும் முன்னே பின்னே நகர்ந்து விட்டால் கூட நின்று பிறகு இணைந்தே நடப்பார்கள்,
நேசம் பெருகி வழிகிற இல்லற வாழ்க்கை என்பது வெகு
சிலருக்குத்தான் வாய்க்கிறது. மனப் பிணக்குகளோடு ஒரே வீட்டில் பல ஆண்டுகளாக வாழும் எண்ணற்ற
கணவன் மனைவியரைப் பார்த்திருக்கிறேன், அன்பும்
நேசமும் இல்லாத இடங்களில் வாழும் மனிதர்கள் இறந்தவர்கள், அவர்கள் புதைக்கப்படாமல் வீடுகளுக்குள் நகர்ந்து திரிகிறார்கள், அவ்வளவுதான் வேறுபாடு.
15. வலைப்பூ: கே. பாலமுருகன்
கே.
பாலமுருகன் – வசிப்பது மலேசியாவில். ஃபிப்ரவரி 2008-ஆம் ஆண்டிலிருந்து வலையுலகில்
இருக்கிறார். மொத்தம் ஐத்து வலைப்பூக்கள்
வைத்திருக்காராம் – கவிதைக்கான உரையாடல்-புரிதல்..., அநங்கம், கே.பாலமுருகன், கே. பாலமுருகன் கவிதைகள்
மற்றும் yugamayini –
என்பவை. – தன்னைப்பற்றிய குறிப்பாக
சொல்லியிருப்பது – “ஊரும் வாழ்க்கை
அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள் என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும்
பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது மனம்”
அறிமுகப்
பதிவு: விடைப்பெறுதல்
விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு
முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும்
யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று
மறைகிறது.
என்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும்
விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பதிவுகளோடும்,
குஜராத் பற்றிய வேறு சில செய்திகளோடும் உங்களைச் சந்திக்கும் வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: எனது
பக்கத்தில் இன்றைய பதிவு: செல்ஃபி புள்ள! - அதையும்
படிக்கலாமே!
அன்பின் வெங்கட் நாகராஜ் - அறிமுகங்கள் உள்ளிட்ட பதிவு அருமை - அறிமுகங்களை ஒவ்வொன்றாகப் படித்து இரசித்து மறுமொழிகள் இடுகிறேன்.
ReplyDeleteநல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
Deleteஎல்லா வலைப் பக்கங்களுமே புதுசு.
ReplyDeleteசகடா வண்டி அடைசலாய் இருக்கிறது. நம் ஊர் தேவலாம் போல!
நம் ஊர் ஷேர் ஆட்டோவை விட இது மோசம் தான்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இன்றைய அறிமுகப் பதிவுகள் அருமை..
ReplyDeleteநல்வாழ்த்துகள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ....
Deleteஎல்லோருமே புது அறிமுகங்கள்.. போய் பார்க்கிறேன். :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
Deleteமுதல் படத்தில் உள்ள சகடா வண்டியைப் பார்க்க ஜாலியாக இருந்தாலும், இரண்டாவது படத்தைப் பார்க்க பயணம் ஆபத்தாக இருக்கும்போல் உள்ளதே .
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லோருமே (எனக்கு)புதியவர்கள்தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
Deleteகும்பலாய் இருக்கும் வண்டியில் செல்வது பிடிக்காது தான் - இருந்தாலும், காலியாக இருக்கும் வண்டியில் பயணம் செய்திருக்கலாம் நான்!
வித்தியாசமான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
Deleteஅறிமுகங்கள் அருமை. எல்லாமே புதியவை எனக்கு.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.
Deleteஅனைத்தும் மிக அருமையான தளங்கள்.’இல்லறம் என்கிற பேராற்றல்’
ReplyDeleteதிரு அறிவழகன் அவர்கள் பதிவு நெகிழவைத்த பகிர்வு.
இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
Deleteதிருவண்ணாமலை கோவில் வண்ண ஓவியங்களை கண்டபின்
ReplyDeleteஅங்கு எதோ ஒரு தடவை சென்றபோது இதெல்லாம் பார்க்கவில்லையே என்று தோன்றியது.
வேங்கட நாகராஜ் அவர்கள் துணையுடன் திரும்பவும் ஒரு தடவை
அங்கு சென்று வரவேண்டும்.
சுப்பு தாத்தா.
அடுத்த பயணத்தின் போது சொல்கிறேன். வாருங்கள் போகலாம்!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
அறிமுகங்கள் எல்லாமே மிக அருமை ... வாழ்த்துக்கள் ..
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதாஸ் க்ரியேஷன்ஸ்.
Deleteசகடா வண்டி நம்ம ஊர் மீன் பாடி வண்டியாட்டம் இருக்கிறது! பதிவர்களை தேடி தொகுத்து இருப்பது நன்கு புரிகிறது! சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
Delete[ch]ச[g]கடா” வண்டி முன்பு டில்லியில் ஓடிய ஃபட் ஃபட் ஊர்தியின் புது அவதாரம் போல் தெரிகிறதே! அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஃபட் ஃபட்டி வண்டி போலதான் - சில மாற்றங்களோடு!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Deleteஅழகுற அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
Deleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் பார்க்கிறேன் நண்பரே,,,,
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!
DeleteAnaiththu arimugangalum arumai. Illaram yennum peratral miga arumai.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
Deleteகுஜராத் தகவல்கள் அருமை!~
ReplyDeleteபயனுள்ள பதிவுகள் அறிமுகம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteஎனது வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி வெங்கட் அவர்களே. கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்.
ReplyDeleteஉங்களை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி.
குஜாராத் என்றால் அரசியல் பேசும் நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலையை நிதர்சனத்துடன் பகிரும் உங்களின் வழிகாட்டு வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஇன்றும் புதிய அறிமுகங்கள் பகிர்வுக்கு நன்றிகள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள், குஜராத் தகவல்களை பற்றி தெரிந்து கொண்டோம்.
ReplyDeleteஜலீலா
http://samaiyalattakaasam.blogspot.com/
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா....
Deleteசகடா வண்டி அழகாக இருக்கின்றதெ! பய்னிக்க வேண்டும் போல் உள்ளது! பதிவும் அருமை! குஜராத்தைத்தான் சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவினர் தமிழகத்தில் எடுத்துக்காட்டாகச் சொல்லி அதைப்போல் தமிழகத்தையும் மாற்றுவோம் என்றனர். நீங்கள் சொல்லுவதைப் பார்க்கும் போது அது சரிதான் என்பதும் தெரிகின்றது!
ReplyDeleteஅறிமுகங்கள் எல்லாமே புதியவை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
Deleteவட மானிலங்களுடன் நாம் எவ்வளவோ போக்குவரத்தில் முன்னேறியிருப்பது மகிழ்வாக இருக்கிறது... பாவமாய் இருக்கு அவர்களைப் பார்க்கும்போது...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
Deleteஉலகையே வியக்க வைத்த புத்தம் புதிய குறும்படத்தின் பெயர். இந்த குறும்படம் ஜூன் 2015 தான் ரிலிஸ் ஆகும். ஆனால், இந்த குறும்படம் மிக பிரமாண்டமாக இருக்கும். இந்த குறும்படத்தின் பெயரைப் பார்க்க :- https://www.youtube.com/watch?v=6uqSozz48Ac
ReplyDeleteஇந்த Channelக்கு Subscribe செய்வதன் மூலம் நீங்கள் இந்த படத்தைப் பார்க்கலாம். நிச்சயம் பார்க்க வேண்டிய படம்!!
www.youtube.com/thevashokkumar
#Tamil #Tamilshortfilm #tamilfilm #shortfilms #tamilfilms #lingaa #Chennai #Youtube
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஷோக் குமார்.
Delete