Friday, December 26, 2014

பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் - 2


கூடுதல் முகம் - 2 வலைப்பூ உறுப்பினர்களுக்கு வணக்கம். இது எனக்கு ஒன்பதாவது இடுகை என நினைக்கிறேன். இதுவரை என்னை ஊக்கம் அளித்துத் தோள் தட்டியமைக்கு மிக்க நன்றி. இப்பொழுதும் இவ்விடுகையில் ஆறு வலைப்பூக்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்துள்ளேன். சித்திரக்கூடம் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. சில பயணங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும். சில பயணங்கள் அற்புதமானவையாக இருக்கும். அவ்வகையில் தன் பயணச் சுவடுகளை சுவைகாகப் பதிவு செய்துள்ள சந்தனமுல்லைக்குப் பாராட்டுகள். நீங்களும் சென்றால் கல்கத்தாவைக் கண்டு களிக்கலாம். புதுகைத்தென்றல் 2015 ஆம் ஆண்டின் நிறம் என்னவாக இருக்கும் என்ற வியப்பான பதிவொன்றைக் காண நேர்ந்த்து. ஆட்டின் வருடமாக கொள்ளப்படுகிற இவ்வாண்டில் நீங்கள் இருக்க வேண்டியது சமையற்கூடமாம். வித்தியாசமான பதிவு. போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். புதியவன் பக்கம் பொதுவாகப் புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்ட்து. நானும் ஐயா முத்துநிலவனின் புத்தகம் ஒன்றை இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் மதிப்பிடுகையை எதிர்பார்த்து அவரும் சோர்ந்து போனார். ஆனால் ஷாஜஹானிரகுமானின் புத்தக மதிப்புரை என்னை வெகுவாய்க் கவர்ந்த்து. கருணாகரனின் காகிதப்படகில் சாகசப் பயணம் என்ற புத்தகத்தை நான் வாங்குவதெனத் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் ? தீதும் நன்றும் பிறர் தர வாரா "கரையது உயர்ந்து நன்றாய் இருபுறம் இருக்க நீரும் சிறையது பட்டாற் போல அடங்கியே நடத்தல் போல வரையரை ஒன்றை நீயும் வகுத்தபின் வார்த்தை தன்னை சிறையிட நினைத்தால் போதும் சிலநொடி கவிக்குப் போதும் “ கவிதை எழுதும் இயல்பினை நற்கவிதையில் கூறிய இரமணியின் இன்கவி பெறலாம் யாரும் என்னை மிகவும் கட்டிப்போட்டது. மரபின் பக்கமும் கொஞ்சம் இளைப்பாறுதல் நம் கடமையென்றே கருதுகிறேன். விஜயநகரம் இப்படியும் இருக்கலாம் ஒரு ஆங்கில படத்தில் வருமே. ஒரு மனித குரங்கு ஒரு பெண்ணை விரும்பி அவளுக்காக நகருக்கு வந்து உயிரை விடுமே. அது போல் இதுவும் எதாவது காதல் விவகாரமோ என்னவோ? எதற்கும் இதற்கு ஒரு விசாரணை கமிசன் அமைக்கலாம். சமீபத்தில் ஒரு பள்ளியில் சிறுத்தை ஒன்று புகுந்ததை இப்படி வேடிக்கையாகச் சொல்லும் பொன்னியின் செல்வன் கார்த்திகேயனின் பதிவு வேடிக்கையாக மட்டுமல்ல. நகையாகவும் இருந்த்து. இளைப்பாற இங்கே செல்லலாம். ஊமைக்கனவுகள் திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்க விஜீவால் தான் முடியும். இலக்கிய முரண்களை எடுத்தாண்டு தீர்வை நோக்கிய பயணத்திற்கு தமிழை இட்டுச்செல்லும் பாங்கிற்குப் பாராட்டுகள். திருக்குறள் உரையாசிரியர்களின் காலவரலாற்றை நானும் புரட்டிப்பார்த்து அவரின் வினாவிற்குத் தீர்வு சொல்லக் கிளம்பிவிட்டேண். நீங்களும் தானே? அன்புடன், சி.குருநாதசுந்தரம்.( பெருநாழி )

13 comments:

  1. சிறப்பான பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! நன்றி! த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களின் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. அய்யா வணக்கம்.
    தங்களின் அன்பிற்கும் அறிமுகத்திற்கும் நன்றிகள்.
    தங்களின் வருகையையும் என் தளத்தில் எதிர்நோக்குகிறேன்.
    தமிழால் தொடர்வோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

      Delete
  3. அறிமுகங்கள் அருமை ! வாழ்த்துகள் அண்ணா !!

    ReplyDelete
  4. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் அறிமுகப்படுத்தியவர்களின் தளங்களைக் கண்டேன்.நன்றி.

    ReplyDelete
  5. நன்றி.
    அய்யா, என் வலையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.ஆனால் இந்த வலையை தொடர்வது கார்த்தியின் அம்மா, கலாகார்த்திக். என் உயிருக்கு உயிரான அன்பு மகன் என்னை விட்டு இந்த உலகை விட்டு ஒரு விபத்தில் சென்று விட்டான்.அவன் 2002ல் ஆரம்பித்த அந்த வலையை கார்த்தியின் பெயரிலேயே தொடர்ந்து எழுதி வரும் ஒரு துர்பாக்கிய தாய் நான்.எல்லோரும் கார்த்திதான் எழுதுகிறான், அவன் இந்த உலகில்தான் இருக்கிறான் என்று நினைக்க வேண்டும் என்ற ஆதங்கம்தான் ,பரிதவிப்புடன்தான் இப்படி அவன் பெயரை மாற்றாமல் இருக்கிறேன்.
    தங்களுக்கு மீண்டும் .
    அய்யா, என் வலையை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.ஆனால் இந்த வலையை தொடர்வது கார்த்தியின் அம்மா, கலாகார்த்திக். என் உயிருக்கு உயிரான அன்பு மகன் என்னை விட்டு இந்த உலகை விட்டு ஒரு விபத்தில் சென்று விட்டான்.அவன் 2002ல் ஆரம்பித்த அந்த வலையை கார்த்தியின் பெயரிலேயே தொடர்ந்து எழுதி வரும் ஒரு துர்பாக்கிய தாய் நான்.எல்லோரும் கார்த்திதான் எழுதுகிறான், அவன் இந்த உலகில்தான் இருக்கிறான் என்று நினைக்க வேண்டும் என்ற ஆதங்கம்தான் ,பரிதவிப்புடன்தான் இப்படி அவன் பெயரை மாற்றாமல் இருக்கிறேன்.
    தங்களுக்கு மீண்டும் நன்றி
    KALA KARTHIK (karthik amma )

    ReplyDelete
    Replies
    1. மனம் நெகிழ்கிறதம்மா. தங்களின் எப்பொழுதும் தங்களுடனேயே இருப்பான். தங்களின் மகன் வலையுலகு இருக்கும் வரை வாழ்வான். வருந்தாதீர்கள். தங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

      Delete
  6. வணக்கம் ஐயா
    தங்களது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நண்பர் விஐு அவர்களின் படைப்புகள் அனைத்தும் புருவம் உயர்த்திப் பார்க்க வைக்கிறது. கலா அம்மாவின் செய்தி கேட்டு இதயம் கனத்து விட்டது. இழப்பிலும் அவரது தமிழ்ப்பணி போற்றப்பட வேண்டிய ஒன்று. தமிழால் இணைந்திருப்போம். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. வரவிற்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  7. நல்ல பணி வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. என் வலைப்பூவின் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete