வலைச்சரம் நான்காம் நாள் 4-12-2014 வியாழக்கிழமை
பதிவுலகத்தில் வரலாறு படைத்த சில நிகழ்வுகள்
நான் வலையுலகில் பார்த்த ஓரிரண்டு நிகழ்வுகளை, அவை பெண்கள் சம்பந்தப்பட்டதினால் அவை பற்றிய என் கருத்துகளை இங்கே பதிகிறேன்.
ஆணாதிக்கம் என்பது மனிதன் தோன்றிய நாளில் இருந்து வருவது.
இன்று பெண்கள் முன்னேற்றம் என்பது பல துறைகளில் அவர்கள் ஆணுக்கு நிகராகவும் மேம்பட்டும்
இருப்பதிலிருந்து தெரியலாம். இருந்தாலும் ஆண் தன் மனதிலிருந்து இந்த ஆணாதிக்க மனப்பான்மையை
முற்றிலும் விலக்கவில்லை என்பது நான் சொல்லும் இரண்டு பதிவுலக நிகழ்வுகளில் இருந்து
புரிந்து கொள்ளலாம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் முதல்முதலாக பெரிய
அளவில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் ஈரோட்டிலிருக்கும் ஒரு பெண் பதிவரும் கலந்து
கொண்டார். அவர் ஒரு முஸ்லிம் பெண். பர்தா அணியும் பழக்கம் உள்ளவர். அவர் பதிவர் சந்திப்புக்கும்
பர்தா அணிந்தே கலந்து கொண்டார். பிறகு தன் பதிவில் இந்தப் பதிவர் சந்திப்பைப் பற்றி
எழுதுகையில் தான் பர்தாவுடனேயே பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் கடைசி வரையில்
அப்படியே இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதை சில ஆண் பதிவர்கள் கேலி செய்து “நாங்களும் வேட்டியுடனே
வந்தோம், கடைசி வரை வேட்டியுடனேயே இருந்தோம்” என்று எதிர் பதிவு போட்டார்கள். இந்த
கருத்து வேறுபாடு ஒரு பெரிய பிரச்சினையாகி இனக்கலவரம் ரேன்ஞ்சிற்குப் போய்விட்டது.
அந்தப் பெண் பதிவர் மனம் நொந்து போய் சில நாட்கள் பதிவுலகத்தில் இருந்து விலகி இருந்தார்.
இப்போது மனம் தேறி பதிவுகள் எழுதுகிறார்.
அடுத்த நிகழ்வு. சில வருடங்களுக்கு முன் ஒரு ஆண் பதிவருக்கும் பெண் பதிவருக்கும்
மனத்தாங்கல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தங்கள் பதிவுகளில் மறைமுக ஏச்சுக்களில் ஈடுபட்டனர்.
அதில் உணர்ச்சி வசப்பட்ட ஆண் பதிவர் “பூக்காரி” என்று ஒரு மகா கீழ்த்தரமான பதிவை எழுதி
தன் தளத்தில் வெளியிட்டார். இது பெரிய பிரச்சினையாக உருவாகி, பலரும் பஞ்சாயத்து பேசி,
கடைசியில் அந்தப் பதிவை நீக்கினார். வருத்தமும் தெரிவித்தார். ஆனாலும் அந்தப் பிரச்சினை
பல காலம் புகைந்து கொண்டே இருந்தது.
இந்த நிகழ்வுகளை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெண்
பதிவர்களுக்கு பதிவுலகில் பல ஆபத்துகள் மறைந்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டத்தான்.
இப்போது நிலை கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் பெண் பதிவர்கள்
கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் மாதிரி வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது பதிவுலகில் கோலோச்சி வரும் சில பிரபல பெண் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்தான் நெம்பர் ஒன். ஆனால் அவரை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டபடியால் இங்கு மறுபடியும் குறிப்பிடவில்லை,
1.துளசி கோபால் அவர்கள்
அவர்கள் தளத்தின் முகப்பு -
தளத்தின் லிங்க் : http://thulasidhalam.blogspot.in/
தமிழ்
நாட்டவரான இவர் தற்போது நியூசிலாந்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்
அனைத்து பதிவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
2004 ம்
வருடத்திலிருந்து பதிவு எழுதுவதாக இவரின் தளத்திலிருந்து தெரிய வருகிறது. இவருடைய
பெரும்பாலான பதிவுகள் பயணக் கட்டுரைகளே. இவர் போகாத ஊர்களே இல்லை என்ற அளவிற்கு பல
வெளிநாடுகளுக்கும் இந்திய ஊர்களுக்கும் தன் கணவர் கோபாலுடன் சென்று வந்திருக்கிறார்.
இவருடைய
பயணக் கட்டுரைகளைப் படிக்கும்போது நாமே அந்த ஊர்களில் இருப்பது போன்ற உணர்வு
வரும். இவர் நல்ல போட்டோகிராபர். இவருடைய பதிவுகளில் வரும் போட்டோக்களைப்
பார்க்கும்போது அந்த இடங்களை நேரில் பார்ப்பது போல் இருக்கும். இது போக அவர்கள்
ஊரில் நிலவும் சமூகப் பழக்க வழக்கங்களையும் தன் தளத்தில் அவ்வப்போது பதிகிறார்.
மதுரை
பதிவர் சந்திப்புக்கு வந்திருந்து அனைத்து பதிவர்களிடனும் அளவளாவினார். அதைப்
பற்றி அவர் எழுதின இரண்டு பதிவுகளைப் பாருங்கள்.
1.
http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post.html
2.
http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post_28.html
1.
http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post.html
2.
http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post_28.html
தமிழ் பதிவர்களுடன் அத்யந்த உறவுகள் ஏற்படுத்திக்கொள்வதில் இவருக்கு நிகர் யாருமில்லை. ஜிஎம்பி அவர்களின் இந்தப் பதிவைப் பாருங்கள். http://gmbat1649.blogspot.in/2014/11/to-via.html
அவர்கள் ஊரில் அதாவது நியூஸிலாந்தில் நடக்கும் விசேஷங்களை நமக்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுவார். இங்கே செல்லுங்கள்- http://thulasidhalam.blogspot.in/2014/09/blog-post_15.html
2.ரஞ்சனி
நாராயணன்.
இவருடைய
தளத்தின் பெயரும் இதுவே. தளத்தின் முகப்புப் படம்
லிங்க் : http://ranjaninarayanan.wordpress.com/
இவர் ஒரு
சகலகலா வல்லவர். பல பொருட்களில் பதிவு போட்டு வருகிறார். நான் இவருடன் பதிவர்
சந்திப்புகளில் பேசியிருக்கிறேன்.
பழகுவதற்கு
இனிமையானவர். சமீபத்தில் என்னுடைய ஒரு பதிவின் காரணமாக என் பேரில் லேசான வருத்தம்
கொண்டுள்ளார். அன்பு இருக்கும் போதுதான் வருத்தம் வரும். காலம்தான் இதற்கு
மருந்து.
இவருடைய நகைச்சுவைக்கு ஒரு சாம்பிள்.
அங்கு ஒரு குழாய். ‘மாலா! மன்னிக்கு பித்தளை வாளியும் மொண்டாளியும் (நீரை முகர்ந்து கொள்ள பயன்படும் பாத்திரம்) கொண்டுவந்து குடு’ என்றார். ‘நான் தளிபண்ற உள் கதவ சாத்திண்டு போறேன். கவலைப்படாம குளி’ என்றவாறே வெளியே போனார். அன்று நான் அங்கு பார்த்த பித்தளை வாளி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த மொண்டாளிக்கு ஈடு இணை இந்த காலத்து ‘மக்’ (mug) கிற்கு வருமா?
3.மனோ சாமிநாதன்
அங்கு ஒரு குழாய். ‘மாலா! மன்னிக்கு பித்தளை வாளியும் மொண்டாளியும் (நீரை முகர்ந்து கொள்ள பயன்படும் பாத்திரம்) கொண்டுவந்து குடு’ என்றார். ‘நான் தளிபண்ற உள் கதவ சாத்திண்டு போறேன். கவலைப்படாம குளி’ என்றவாறே வெளியே போனார். அன்று நான் அங்கு பார்த்த பித்தளை வாளி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த மொண்டாளிக்கு ஈடு இணை இந்த காலத்து ‘மக்’ (mug) கிற்கு வருமா?
3.மனோ சாமிநாதன்
இவருடைய தளத்தின் பெயர் -
முத்துச்சிதறல்
தளத்தின் லிங்க் : http://muthusidharal.blogspot.in/2014/12/blog-post.html
வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்களைக்கூட சுவையாகத் தர முடியும் என்பதற்கு இவருடைய பதிவுகள் உதாரணம். எடுத்துக்காட்டாக மனிதர்கள் பரஸ்பரம் செய்யும் சின்னச்சின்ன உதவிகள் கூட எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று “உதவி எனப்படுவது யாதெனில்...” என்னும் பதிவில் சொல்லியிருக்கிறார்.
பெண்கள்
சமையல் குறிப்புகளைத்தான் பதிவிடுவார்கள் என்ற பரவலான எண்ணத்தை இவரது தளம்
போக்குகிறது.
4.வேதா
இலங்காதிலகம்.
இவரைப்
பற்றிய கூகுளின் வாழ்க்கைக் குறிப்பு:
இலங்கையிலுள்ள கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா, இலங்கையின் கழுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்கா திலகம் என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். வாழ்வாதாரத்துக்காக 1986-ல் டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள் ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டெனிஷ் மொழியைக் கற்று பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகன் இயந்திரவியல் தொழில்நுட்பமும், இவர் மகள் தகவல் உதவியாளராகவும் படித்துள்ளனர். இவரது மகள் தற்போது இலண்டனில் உள்ள சிறந்த மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். தந்தை நகுலேஸ்வரர் ஊக்குவிப்பால் 1976-ல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் துவங்கிய இவர் சிறு சஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், சில தமிழ் இணைய இதழ்கள் போன்றவற்றில் எழுதி வருகிறார். இவர் 2002-ல் "வேதாவின் கவிதைகள்" என்ற கவிதை நூலையும், 2004-ல் "குழந்தைகள் இளையோர் சிறக்க" மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு நூலையும், 2007ல் கணவருடன் இணைந்து "உணர்வுப் பூக்கள்" எனும் வாழ்வியல் கவிதைகள் நூலையும் எழுதி வெளிக்கொண்டு வந்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இவருடைய வலைத்தளத்தின் பெயர்: வேதாவின் வலை..
முகப்புப் படம்
தளத்தின் லிங்க்: http://kovaikkavi.wordpress.com/
பல்சுவைப் பதிவுகள் போடுகிறார்.
புல்வெளியைப்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் பாருங்கள்
அவசியம் இவர் தளத்தைப் பார்வையிடுங்கள்.
5.அம்பாளடியாள்
தளத்தின் லிங்க் ; http://rupika-rupika.blogspot.com/
இந்த தளம்
காப்புரிமை பெற்றுள்ளது. தன் பதிவை திருடுகிறார்கள் என்று புலம்புபவர்கள் இவரிடம்
ஆலோசனை பெறலாம்.
இவர்
பெயரைக் கேள்விப்படாதவர் பதிவுலகில் இருக்கமாட்டார்கள். அவ்வளவு பிரபலம்.
அனைத்துப் பதிவர் தளங்களிலும் இவர் பின்னூட்டம் இருக்கும்.
கவிதைகளுக்காகவே
தன் தளத்தை அர்ப்பணித்துள்ளார்.
6.தேனம்மை லக்ஷ்மணன்
பதிவின்
பெயர் “சும்மா”
லிங்க் : http://honeylaksh.blogspot.in/
இவர் பதிவுகளில் பல சுவைகளும் விரவிக்
கிடக்கின்றன. உதாரணத்திற்கு
·
பல டிவி
நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். பதிவர் சந்திப்புகளில்
சந்தித்திருக்கிறேன். A versatile Blogger.
7.ஆதி
வெங்கட்
இவரது
தளத்தின் பெயர்: கோவை2தில்லி
லிங்க் : http://kovai2delhi.blogspot.in/
பிரபல பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின்
துணைவியார். பிறகு பதிவுகளின் தரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்.
எங்கள் ஊரில் வளர்ந்தவர் என்பதால் எனக்கு
இவர் மேல் ஒரு தனி அபிமானம் உண்டு. இவருடைய மகளும் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார்.
தான் படித்த ஒரு நாவலின் (மடிசார் மாமி) தாக்கத்தை விவரிப்பதை படித்தால் நாமும் உணர்ச்சி வசப்படுவோம்.
8. R. உமையாள் காயத்ரி
தன் தளத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கிறார்.
8. R. உமையாள் காயத்ரி
தன் தளத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கிறார்.
மிதிவண்டியைப் பற்றி இவர் எழுதியதைப் படத்தால் இவரின் யதார்த்த எழுத்து புரியும்.
9.சுமஜ்லா
தளத்தின் பெயர்: என்' எழுத்து இகழேல்
முஸ்லிம் பெண்ணான இவர் இந்தமாதிரி பொது தளத்தில் எழுத வந்திருப்பதே பெரிய முன்னேற்றமல்லவா? அவருடைய சமூகப் பின்னணியில் பல கதை கட்டரைகள் எழுதுகிறார். இவருடைய பொது நோக்கை இந்தப்பதிவில் பாருங்கள்.
10. Manjubashini Sampathkumar
இவருடைய தளத்தின் பெயர்:
2007
முதல் பதிவுகள் எழுதி வருகிறார். சென்ற வாரத்தில் வலைச்சர ஆசிரியராக இருந்து பிறகு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சமையல் குறிப்புகள், மற்றும் தனி மனித வாழ்க்கை பற்றி எழுதும் இவர் திறமைக்கு ஒரு சேம்பிள் பதிவு.
என்னுடைய போட்டோவை என் அறிமுகப் பதிவில் போட்டிருந்தேன். அது என்னை மிகவும் கடுமையானவனாக காட்டியிருக்கிறது. உடனே எனக்கு மின்னஞ்சல் அனுப்பி, சிரித்த முகமாக ஒரு போட்டோ எடுத்துப் போடவேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளை பிறப்பித்தார்கள்.
நானும் அந்த மாதிரி போட்டோ எடுக்க முயற்சித்தேன். படம் எடுத்த என் மகள், அப்பா, இந்த விஷப் பரீட்சை எல்லாம் வேண்டாம், மக்கள் பயந்து விடுவார்கள், பழைய படமே போதும் என்று சொல்லி விட்டாள்.
இருந்தாலும் மஞ்சுவின் வேண்டுகோளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இதோ சிரித்த முகமாக ஒரு அழகான போட்டோ.
இப்போது திருப்திதானே, மஞ்சு.
11.கோமதி
அரசு
தளத்தின் பெயர் : திருமதி பக்கங்கள்
லிங்க் : http://mathysblog.blogspot.com/
நிறைய ஆன்மீகப் பயணங்கள் பற்றி எழுதியிருக்கிறார். திருச்செந்தூர் அனுபவத்தைப் பற்றி இவர் சொல்வதை படியுங்கள்
இன்னும் அநேக பெண் பதிவர்கள் நல்ல பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே பதிவில் குறிப்பிட முடியவில்லை.
இன்னும் அநேக பெண் பதிவர்கள் நல்ல பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே பதிவில் குறிப்பிட முடியவில்லை.
அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.
இந்த வலைத்தளத்தின் செட்டிங்க்ஸை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வழக்கமாக வலைச்சரப் பதிவுகள் ஒரே மாதிரி Stereotype ஆக வெறும் எழுத்துகளோடு ஒரே Font ல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் கொஞ்சம் வித்தியசமாக பதிவிடலாம் என்று சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் வலைச்சரத்திற்குப் பிடிக்கவில்லை. அது தன் பாட்டுக்கு ஏதேதோ மாதிரி செய்கிறது. ஆகவே பதிவின் தோற்றம் சற்றே ஏறக்குறைய இருந்தால் அன்பர்கள் பொறுத்தருளவேண்டும்.
ReplyDeleteவலைச்சர தளத்தின் நடுவில் மட்டும் பதிவு வருமாறு இருப்பதால் தான் இவ்வாறு...
Deleteதளத்தின் அகலத்தை இன்னும் கொஞ்சம், கொஞ்சம் என்ன, நன்றாகவே அகலப்படுத்தலாம். Default font size ஐ கொஞ்சம் பெரிது பண்ணலாம். தளத்தின் தலைப்பையும் மாற்றலாம். ஆனால் வலைச்சரம் ஆரம்பித்தபோது எப்படியிருந்ததோ அதை மாற்றவேண்டாம் என்று ஆசிரியர் குழு நினைக்கலாம். ஆனால் காலம் மாறுகிறது. தோற்றத்தை மாற்றுவதில் தவறில்லை என்பது என் கருத்து.
Deleteவலைச்சர டெம்ப்ளேட் Fluid width template வகையைச் சார்ந்தது.
DeleteFluid width என்றால்...
Templates that change its width according to the screen resolution... என்பதே ஆகும்... இதனால் கணினி திரை வடிவத்திற்கு ஏற்றவாறு பதிவு மற்றும் பக்கப்பத்திகள் அகலமானது பெரிதாகும், சிறிதாகும்.. இது சிறிய திரை உள்ளவர்களுக்கும் வலைப்பூவை முழுமையாக, இன்னும் நன்றாக பார்க்க உதவும்... திரையை விட்டு வெளியே செல்லாது.
default font size போதுமான அளவு உள்ளது. நீங்கள் normal font வைத்து பதிவு எழுதினால் சரியான font அளவைக் காட்டும். அதை விடுத்து large font வைத்து எழுதினால் பதிவில் சற்றே பெரியதாய் தான் காட்டும். அதனால் தான் நீங்கள் large font இல் எழுதும் போது வலைச்சரத்தில் சற்று பெரியதாய் காட்டுகிறது..
தலைப்பில் என்ன குறை உள்ளது? விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும். இந்த டெம்ப்ளேட்க்கு சரியான அளவில் தான் வைத்துள்ளோம்.
வலைச்சரம் ஆரம்பித்த போது இருந்ததை விட நிறையவே அப்டேட் செய்துள்ளோம். கால மாற்றத்திற்கு என்னென்ன தேவையோ, அவையனைத்தும் வலைச்சரத்தில் உள்ளது.
Read more வசதி உள்ளது,
thearded comment reply வசதி உள்ளது.
தமிழ்மணம் திரட்டியில் என்னென்ன அப்டேட் உள்ளதோ, அது வலைச்சரத்தில் உள்ளது.
வலைச்சரம் custom template வகையை சார்ந்தது. ஆகையால் அதற்கென உள்ள settings படி பதிவுகள் எழுதினால் அழகாக வரும். பதிவு எழுதிய பின்னர் preview பார்த்தால் தங்களுக்கு குறையாக இருப்பதை சரி செய்யலாம்... தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா...
தலைப்பில் ஏதாவது இயற்கைக் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
Delete//இப்போது திருப்திதானே, மஞ்சு.//
ReplyDeleteமஞ்சுவுக்குத் திருப்தியோ இல்லையோ எனக்குத் திருப்தியாக உள்ளது.
சிரித்த முகத்துடனே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது அந்தப்படம். :)))))
>>>>>
யாராவது திருப்தி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே. அதிலும் நீங்கள் மகிழ்ச்சி அடைவதில் இரட்டிப்புச் சந்தோஷமே.
Delete//பழனி. கந்தசாமி
DeleteThu Dec 04, 08:37:00 AM
யாராவது திருப்தி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே. அதிலும் நீங்கள் மகிழ்ச்சி அடைவதில் இரட்டிப்புச் சந்தோஷமே.//
மஞ்சுவின் சிரிப்பினை நேரில் கண்டு மிகவும் ரசித்துள்ளேன். அது குழந்தை போன்ற தெய்வீகச்சிரிப்பு. நீங்க படத்தில் காட்டியுள்ளதைவிட அழகாக இருக்குமாக்கும். :))))))
அன்புடன் வீ...ஜீ
ஆஹா அண்ணா :) நாம இருக்கும் நேரம் எல்லாம் சிரித்துக்கொண்டே தான் இருந்தோம்... எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது உங்கள் எல்லோருடனும் மன்னியுடனும் சந்தோஷமாக கழிந்த அந்த நிமிடங்கள் எல்லாமே மிக மிக மகிழ்ச்சியானவை... மீண்டும் ஊருக்கு வந்தால் கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா....
Delete
ReplyDelete//..................... அவர்கள்தான் நெம்பர் ஒன். ஆனால் அவரை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டபடியால் இங்கு மறுபடியும் குறிப்பிடவில்லை//
குறிப்பிடாததைப் பற்றி குறிப்பிட்டுள்ளது குறையாகவே உள்ளது.
ஏற்கனவே படம் வெளியிட முடியாமல் இருப்பதாகக் குறைபட்டுக்கொண்டிருந்தீர்கள்.
அந்தக்குறையை நிறை செய்திருக்கலாம்.
நம் ஸ்ரீராம் அவர்கள்கூட க்ளூ கொடுத்திருந்தார் என்ற ஞாபகம் உள்ளது. :)))))
>>>>>
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன் சொந்தக் காரணங்களுக்காக தன் தனிமையைக் காக்கிறார். வலியப் போய் அந்தத் தனிமையைக் குலைக்க எனக்கு மனது இல்லை.
Delete//பழனி. கந்தசாமி Thu Dec 04, 08:39:00 AM
Deleteதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தன் சொந்தக் காரணங்களுக்காக தன் தனிமையைக் காக்கிறார். வலியப் போய் அந்தத் தனிமையைக் குலைக்க எனக்கு மனது இல்லை.//
தாங்கள் செய்தது மிகச்சரியே !
அதற்காக நான் தங்களைப் பாராட்டி நன்றி கூறிக்கொள்கிறேன் ஐயா.
நான் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கூட, அதனால்தான் கடைசிவரை அவர்களின் புகைப்படத்தினை எங்குமே நான் வெளியிடவில்லை.
அன்புடன் வீ...ஜீ
இன்று தங்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளவர்களில் பலரும் ஓரளவுக்கு பழக்கம் ஆனவர்கள் என்பதில் மகிழ்ச்சியே.
ReplyDeleteஅனைவருக்கும் அன்பான வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன் வீ....ஜீ
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்தான் நெம்பர் ஒன்
ReplyDeleteமிக்க நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன்' எழுத்து இகழேல்
ReplyDeleteநீங்கள் அறிமுகப் படுத்தியபின் தான் நான் அறிந்தேன். சென்றேன். ஆறஅமர அதில் உள்ளிட்ட செய்திகளை கருத்துக்களை படித்தேன்.
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபாற் கோடாமை சான்றோர்க்கணி
எனும் வள்ளுவன் சொன்னது நினைவுக்கு வந்தது.
வாழ்க அவரது மனித நேயம்.
சுப்பு தாத்தா.
நன்றி, சுப்புத் தாத்தா.
Deletebehind every successful man there is a woman
ReplyDeleteஎன்றதொரு வாசகம் உண்டு.
இங்கே, நீங்கள் குறிப்பிடும் துளசிதளம் வலை பதிவுகளைப் படிக்கும்போதெல்லாம்,
அவரையும் அவர் கணவர் மதிப்புக்குரிய திரு கோபால் அவர்களுடன் பேசிய போதெல்லாம்,
behind every successful woman,
there is a man
எனவே தோன்றியது.
துளசியும் கோபாலும் சாக்ஷாத்
தாயாரும் பெருமாளுமே
சுப்பு தாத்தா.
அவர்கள் ஒரு ஆதர்சத் தம்பதியினரே.
Deleteபுலவர் இராமானுஜம் இன்று அவர் வலையில் எழுதிய
Deleteகவிதை வெண்பா இதுவாகும்.
விட்டுக் கொடுப்பதுடன் வீண்வாதம் செய்யாமல்
தட்டிக் கொடுப்பதவும் தக்கதன்றோ ! –கட்டியவர்
என்றும் இனித்திடவே இல்லறம் ! இருவருக்கும்
பொன்றும் புகழென்றே போற்று
புலவர் சா இராமாநுசம்
subbu thatha
அனைத்துப் பதிவர்களின் பதிவுகளையும் ஒருசேரக் கண்டதில் மகிழ்ச்சி. பதிவின் ஆரம்பத்தில் தாங்கள் பகிர்ந்துகொண்ட இரு நிகழ்வுகள் மனதை நெகிழச் செய்தது. எனக்குத் தெரிந்த ஆய்வாளர் ஒருவர் ஆய்வுப்பணியில் இறங்கியபோது பல நண்பர்கள் அவரிடம் நீ ஒரு பெண் அவ்வாறு அலையமுடியாது, தகவலாளர்களைச் சந்திக்க முடியாது, பாதுகாப்பு கிடைக்காது, என்றெல்லாம் பயமுறுத்தினர் என்று கூறி என்னிடம் வேதனைப்பட்டார். நான் அவரிடம் தாங்கள் எடுக்கும் ஆய்வுத்தலைப்பில் தெளிவாக இருங்கள், ஆய்வினை மேற்கொள்ளுங்கள் என்றேன். ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று, இப்போது ஒரு கல்லூரியில் ஆசிரியையாகத் திறம்பட செயலாற்றுகிறார். எப்பொழுது என்னைப் பார்த்தாலும் எனது ஊக்கமே இவ்வாறான தனது நிலைக்குக் காரணம் என்பார். திறமைக்கும், மன உறுதிக்கும் நான் அவரை உதாரணமாகக் கூறுவதுண்டு.
ReplyDeleteமனிதர்கள் பல விதம்.
Deleteவணக்கம் சார், வாழ்க வளமுடன். என் பதிவையும் இங்கு குறிப்பிட்டதற்கு நன்றி.
ReplyDeleteஇன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் நெம்பர் ஒன் தான். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இவர்களில் எட்டு பேரின் வலைத்தளங்கள் எனக்கு பரிச்சயப்பட்டவை. சுமஜ்லா அவர்களின் பதிவைப் படித்தேன்.மிக அருமையாய் எழுதியிருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅவர்களைத்தான் சிலர் சீர் குலைத்தார்கள்.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புச் சகோதரி சுமஜ்லா அவர்களின் - என்' எழுத்து இகழேல் - எனும் தளத்தினைக் கண்ட பிறகு தான் - எனக்கும் ஒரு தளம் அமைத்துக் கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
ReplyDeleteவலைத்தளம் எப்படி துவக்குவது என்பதை அவர்கள் விவரித்திருந்த விதம் அழகு..
அவர்களைத் தொகுப்பில் கண்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இனிய பதிவினை அளித்த தங்களுக்கு நன்றி..
அனைவரும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..
ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றம், பெண் வலைப் பதிவர்கள் பங்கு மற்றும் கவனமாக இருத்தல் குறித்த ஆலோசனை – ஆகியவற்றை நன்றாகவே சொன்னீர்கள். இன்றைய வலைப் பதிவர்கள் வரிசையில் உள்ள அனைவரது பதிவுகளையும் படிப்பவர்களில் நானும் ஒருவன். முன்பு போல் எல்லோரது பதிவுகளுக்கும் சென்று என்னால் கருத்துரை எழுத இயலவில்லை.
ReplyDeleteத.ம.2
இன்றைய அனைத்து பதிவர்கள் மற்றும் துளசி கோபால் அவர்கள் சகோதரி ஆர். உமையாள் காயத்ரி, மனோ சாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டிருந்த இரண்டு நிகழ்வுகளுமே முக்கியமானவைகள்தான்.
ReplyDeleteமுதல் நிகழ்வைப் பற்றி நானறியேன். இரண்டாம் நிகழ்வில் நடந்த புகைச்சலை விவரமறியாமலேயே குழம்பிப் போய் நின்று கவனித்த அனுபவம் உண்டு.
இதை நீங்கள் எந்த நோக்கோடு சுட்டியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் பதிவர்கள் வட்டத்தில் கவனிக்கப்படவேண்டிய நிகழ்வுகள்தான். இத்தகைய bullies சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண் பதிவர்களுக்கிடையேயும் சாடலுண்டு. சில நாகரிகம் கடந்து போவதும் உண்டுதான்.
ஆனால் எல்லாவற்றையும் நாம் எதிர் நின்று பதில் கொடுத்துப் போராடவேண்டும் என்பதில்லை. அதை கவனியாது விடுவதே மிகச் சரியான சவுக்கடியாக இருக்கும் என்பது எனது கருத்து.
வயதுக்கேற்ற பக்குவம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. சுட்டிக் காட்டலிலும் தெரிகிறது. இத்தகைய எழுத்துக்களை படிப்பது நெஞ்சை வருடிக் கொடுப்பதுபோல இருக்கிறது.
சிறந்த பணி.
வாழ்த்துக்கள்.
இன்றைய பெண் பதிவர்களில் நானும் இடம்பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களின் தனி அபிமானத்தை பெற்றிருப்பதற்கு மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅஹா எதேச்சையாகப் படித்தேன் என் பெயரும் இடம் பெற்றிருந்தது.மிக்க நன்றி திரு பழனி. கந்தசாமி அவர்களே. :)
ReplyDeleteஅனைவருமே எனக்குத் தெரிந்த பெண் பதிவர்கள்தான அவர்களுக்கும் வாழ்த்துகள். :)
இன்றைக்கு என் வலைத்தளத்தை இங்கே அறிமுகம் செய்திருப்பதற்கும் என் எழுத்தைப் பாராட்டியிருப்பதற்கும் என் மனம் நிறைந்த நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!! அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுகவுரை மிக அருமை! பெண் பதிவர்களுக்கான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇனிய வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி கில்லர்ஜீ!
ReplyDeleteஇன்றைய பெண் பதிவர்களில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஅனைத்து அறிமுகமான சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்வுகளை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெண் பதிவர்களுக்கு பதிவுலகில் பல ஆபத்துகள் மறைந்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டத்தான்.//
இப்போது நிலை கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் பெண் பதிவர்கள் கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் மாதிரி வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.//
மிக்க நன்றி ஐயா.
தெளிந்த நீரோடை போன்ற எளிய நடையில், சொல்ல நினைப்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுகிறீர்கள்.
ReplyDeleteபாராட்டுகள்.
என் இனிய தோழிகளுடன் நானும் 'இங்கே' இருக்கிறேன் என்பதே மனதுக்கு மிகவும் உவப்பாக உள்ளது.
ReplyDeleteஅனைத்துப் பதிவர்களுக்கும் என் இனிய வாழ்த்து(க்)கள்.
தங்களுக்கு நன்றிகள் ஐயா.
நன்றி, அம்மா.
Deleteசொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மையே ஐயா…. பதிவர்கள் அறிமுகம் அருமை, பெரும்பாலனவர்கள் நான் தொடரும் பதிவர்கள் என்பதில் மகிழ்ச்சி ! !
ReplyDeleteஎன்னுடைய மனம் கவர் பதிவர்களை ஒன்றாய் இங்கே கண்டது மிக்க சந்தோஷம் ஐயா.
ReplyDeleteஆஹா என் வலைதளமும் இடம் பெற்றிருக்கிறது... மிக்க நன்றி ஐயா..
சிரிச்ச முகத்தோடு ஒரு போட்டோ போட சொன்னதுக்கு இவ்ளோ அக்கப்போரா :)
ஆஹா சிநேகா படம் போட்டால் விட்ருவோமா?
ஊருக்கு வரும்போது உங்களை சிரிக்கவைத்து போட்டோ எடுத்து அதை கொண்டு வந்து பகிர்வேன் பாருங்க :)
இன்றைய பதிவர்களின் அறிமுகத்திருக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா..
இராஜராஜேஸ்வரி இஸ் த பெஸ்ட் ஆஃப் ஆல்.. எப்பவுமே.. அவங்க இடத்தை யாராலும் கண்டிப்பா நிரப்ப முடியாது ஐயா..
அவங்க வலைதளத்தில் தினம் ஒரு கோயில் பகிர்வு தினம் ஒரு கோயிலுக்கு போவது போல் அத்தனை பரவசம்... கோயிலே இல்லாத எங்களை போல் ஊரில் வசிக்கும் இடத்தில் இராஜராஜேஸ்வரி வலைதளம் தான் எங்களுக்கு கோயில்..
அறிமுகப்படுத்தப்ப எல்லோருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteதங்களுக்கு எனது நன்றியும்.... :)
வணக்கம், பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு.
ReplyDeleteமிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன்.
என்னை இங்கு அறிமுகம் செய்ததற்கு மனமார்ந்த நன்றி.