ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், அப்பாடா. பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் தேடிப்பிடிச்சு, தினம் ஒரு பதிவு வீதம் போட்டு, வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதி, மூச்சு முட்டிப் போச்சுங்க.
ஆச்சு, ஒரு மாதிரியாகத்தானே இந்த வலைச்சர ஆசிரியப் பொறுப்பு
என்னும் இன்பமான சுமையை இறக்கி வைக்கிறேன்.
ஸ்ரீரங்கத்து உலக்கை என்று சொல்வார்கள். அதை நான் பார்த்ததில்லை. அதை கீழே வைக்கப்படாதாமே,
அடுத்து யாராவதிடம்தான் கொடுக்கவேண்டுமாம். வலைச்சர ஆசிரியர் பணியும் அப்படித்தான். ஆனால் என் வேலை முடிந்து விட்டது என்று அதை அப்படியே அம்போவென்று
விட்டு விட்டு, “பாப்பாத்தி அம்மா, மாடு வந்திருச்சு, புடிச்சுக் கட்டிக்கோ” என்கிற
மாதிரி போகமுடியாது. (இந்தக்
கதை தெரியாதவர்களுக்காக, இதை என் தளத்தில் ஒரு பதிவாகப் போடுகிறேன். வரவர பதிவுகளுக்கு
சப்ஜெக்ட் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இப்படி எங்கே சான்ஸ் கிடைத்தாலும் லவட்டிக்கொள்ள
வேண்டியதுதான்.) ஒரு பிரிவுரை எழுதி கடைசிப் பதிவாப் போடவேண்டுமாம். அதனால்தான்
இந்தப் பதிவு.
இந்த ஒரு வாரமும் நான் தூங்கவில்லை என்றால் நீங்கள் நம்பித்தான்
ஆகவேண்டும்.
நான் எப்போதும்
முதல் வரியை மட்டும் முழுதாகக் கடைப்பிடிப்பவன். அதுவே சொர்க்கம் என்று இருப்பவன். உண்மையிலேயே என் வயதில் அதுதான் பூலோக சொர்க்கம். நண்பர் திரு
சீனா ஐயா அவர்கள் என்னை அந்த சொர்க்கத்திலிருந்து வெளியே வரும்படி செய்து, இரண்டாவது
வரியை அனுபவிக்கச் செய்து விட்டார். அவரை என்றும் நிஜ சொர்க்கத்தில் அனுமதிக்கக் கூடாது
என்று இந்திரனுக்கு மனு செய்திருக்கிறேன்.
நீச்சல் பழக்கும்
போது சிறுவர்களை டபால் என்று தூக்கித் தண்ணிக்குள் போட்டு விடுவார்கள். அவன் தண்ணிக்குள்
போய் மூச்சுத்திணறி தண்ணி குடிச்சு மேலே வந்த பிறகு அவனைத் தூக்கி விடுவார்கள். அந்த
மாதிரி இரண்டு நாளைக்கு முன்பாக “வரும் ஞாயிறு முதல் நீங்கள்தான் வலைச்சர ஆசிரியர்”
என்று திரு சீனா ஐயா சொல்லி விட்டார்.
நான் தண்ணியில் விழுந்த
சிறுவன் மாதிரி மூச்சுத் திணறி, தண்ணீர் குடிக்கும்போது இருவர் கை கொடுத்தார்கள். ஒருவர்
சகோதரி மஞ்சு. அடுத்தவர் தமிழ்வாசி பிரகாஷ். எப்படியோ கரை சேர்ந்து பதிவுகள் போட ஆரம்பித்தேன்.
இரண்டு மூன்று பதிவுகள் போட்ட பிறகுதான் நான் என் full form க்கு வந்தேன். ஆனால் மனதிற்குள் ஒரு அலாரம் அடித்தது. இன்னும் இரண்டு
நாட்கள்தான் உன் ஆட்ட பாட்டமெல்லாம். ஞாயிற்றுக்கிழமை இடத்தைக் காலி பண்ணவேண்டும். மூட்டை
முடிச்செல்லாம் கட்டி ரெடியாகுங்கள் என்று மனச் செய்தி நினைவு படுத்தியது. நான் ஊசி குத்தின பலூன் ஆனேன். என்ன செய்ய முடியும். ரூல்
என்றால் ரூல்தான்.
எப்படியோ நம்ம பதவி காலத்தில் கொடுத்த வேலையை முடிந்தவரை ஒழுங்காகப்
பார்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நூத்துக்கு நூறு வாங்காவிட்டாலும் பாஸ் மார்க்காவது வாங்கியிருப்பேன் என்று நம்புகிறேன். அதைப் பற்றி நீங்கள்தான் அபிப்பிராயம் கூற வேண்டும்.
இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தும், எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இந்த வாரம் முழுவதும் என்னுடைய பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டும் கருத்துக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தும், எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
எனக்குப் பரிச்சயமான நல்ல பல பதிவர்களை என்னுடைய கவனமின்மையாலும்
சோம்பேறித்தனத்தினாலும் அறிமுகப்படுத்தாமல் விட்டிருப்பேன். அவர்கள் பெரிய மனதுடன்
என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்களித்த அன்பு நண்பர் சீனா ஐயா அவர்களுக்கும் வழி காட்டிய தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திருமதி மஞ்சுபாஷிணி சம்பத்குமார் அவர்களுக்கும் மற்றும் வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கும் என் ஆழ்ந்த
நன்றியை உரித்தாக்குகிறேன்.
நன்றி, வணக்கம்.
அய்யா ,நீங்கள் பாஸ் மட்டும் ஆகவில்லை ,நல்ல மார்க்கும் எடுத்துள்ளீர்கள் என்பதற்கு சாட்சி ,வலைச்சரத்தை இந்த வாரம் தமிழ்மணத்தில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்து இருப்பதுதான் !
ReplyDeleteத ம 1
நன்றி, பகவான்ஜி.
Deleteபதிவுகளில் உங்களின் கடின உழைப்பு தெரிந்தது.
ReplyDeleteபதிவுகளைப் போலவே ‘பிரிவுரை’யும் வெகு சுவாரசியம்.
உங்கள் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது உங்களின் வலைச்சரப் பணி.
நன்றி, பரமசிவம்.
Deleteஉங்களுக்கே உரித்தான பாணியில் பிரிவுரை...
ReplyDeleteஅடுத்த ஆண்டு உங்களுக்கு இரண்டு வாரம் என்று கேள்விப்பட்டேன்... (!)
நன்றி, தனபாலன்.
Deleteசிறந்த முறையில் இந்த வார வலைச்சரத்தை நடத்திய ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி, கில்லர்ஜி.
Deleteஅருமையான முறையில் வாரம் முழுவதும் பதிவர்களை அறிமுகம் செய்து ஆசிரியர் பணியாற்றிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி, நாகராஜ்
Deleteதன்னடக்கம் காரணமாக பாஸ் மார்க் வாங்கியிருப்பதாக சொல்கிறீர்கள். உங்களுக்கே உரித்தான முறையில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமாக தொடங்கி, பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். எனவே சென்று வருக! பின்னொரு வாரத்தில் வலைச்சர ஆசிரியர் குழுமம் தங்களை திரும்பவும் ஆசிரியராக பணியேற்க அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் திரும்பி வருக வருக என அழைக்கின்றேன்.
ReplyDeleteநன்றி, நடனசபாபதி.
Deleteஅருமையாக அசத்தி விட்டீர்கள் ஐய்யா
ReplyDeleteவாழ்த்துக்கள்,நன்றி.
நன்றி, காயத்ரி.
Deleteபணியினை சிறப்பாகவும் கலகலப்பாகவும் செய்து முடித்தீர்கள்.
ReplyDeleteமீண்டும் வருவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி, நிஜாமுத்தீன்.
Deleteஅன்பின் ஐயா..
ReplyDeleteசிறப்பான முறையில் இந்த வாரத்தின் வலைச்சரத்தை தொகுத்து வழங்கினீர்கள்..
தங்களின் சீரிய பணிக்கு அன்பின் நல்வாழ்த்துகள்.. வணக்கம்..
நன்றி, செல்வராஜு.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைச்சரம் ஆசிரியர் பணியை (ஆரம்பத்தில் நீங்கள் கொஞ்சம் பதற்றம் ஆகி விட்டாலும்) சிறப்பாகவே செய்தீர்கள்.
Deleteஅய்யா அவர்களுக்கு நன்றி! மீண்டும் வருக! (மீண்டும் வலைசசர ஆசிரியராக வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு) உங்கள வலைச்சர அனுபவத்தினை ஒரு பதிவாக போடவும்.
த.ம.6
நன்றி, தமிழ் இளங்கோ.
Deleteநூற்றுக்கு நூற்றி இருவது மார்க் போட்டுருக்கேன்!
ReplyDeleteஇனிய பாராட்டுகளும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்.
ரொம்ப தேங்க்ஸ் டீச்சர்.
Deleteதாமி இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு
ReplyDeleteகாமுறுவர் கற்றறிந் தார்
குறள் -(399)-
அய்யா!
வாய்மை அரசர் வள்ளுவரே வந்திருந்து வாக்களித்து விட்டார்
நூறு சதவித்தை அரும்பணியில் ஆற்றியவர் நீவீர் என்று!
வெற்றியின் வெற்றியை வெற்றிடம் ஆக்காமல் வெல்வதற்கு
அடுத்து யார் வருவார்?
அவரின் மூலம் சிறந்த பதிவாளர்களாக யார் பெறுவார் அரியாசனம்?
புதுவை வேலு
மிக்க நன்றி, வேலு.
Deleteமிகச்சிறப்பான பணி.பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறப்பான பணி, நகைச்சுவை பாணியில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்தீர்கள், மனம் உருகவும் வைத்தீர்கள்.... ஒவ்வொருவரின் கருத்துக்கு உடனே வந்து நன்றி சொன்னீர்கள்.. எல்லோருடனும் நேரில் இருந்து பேசுவது போலவே இருந்தது... அடுத்த வாரமும் நீங்களே தொடர்வீர்கள் என்ற எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டது உங்கள் எழுத்து ரசனை ஐயா.. ஆனால் இதுக்கே நாக்கு தள்ளிப்போச்சுங்க.. ஒரு வாரம் தூக்கம் பறிப்போச்சுங்க என்று நீங்க நகைச்சுவை பாணியில் சொன்னாலும் உண்மை இது தான்.. ஏனெனில் இந்த அனுபவம் ஒவ்வொரு வாரமும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அனுபவித்த ஒரு இனிய சுமை..... வயிற்றில் பிள்ளை உண்டாகும் தாய்க்கு அது சுமையாகவே தெரிவதில்லை. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்ற ஒவ்வொருவருக்கும் அப்படியே.. சுமையை சுமக்கும்போதும் இனிமையான அனுபவம் தான்.. இறக்கி வைக்கும்போதும் ஸ்ஸ்ஸ்ஸப்பா இறக்கி வெச்சுட்டோம் என்ற பெருமிதம் கலந்த மகிழ்ச்சி தான் பரவும் மனதில்....
ReplyDeleteஇந்த ஒருவாரமும் ஜனரஞ்சமாக இருந்தது என்று சொன்னால் மிகையில்லை ஐயா.. உங்கள் எழுத்தும், ஒவ்வொருவரை அறிமுகப்படுத்த நீங்கள் எழுதிய வரிகள் எல்லாமே ரசிக்க வைத்தது. நண்பர் பகவான் ஜீ சொன்னது போல் தமிழ் மணத்தில் இரண்டாம் இடம் வர வைத்த வெற்றி உங்களுக்கே சாரும்..
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் ஐயா...
கொஞ்சம் கன்சிடர் பண்ணக்கூடாதா ஐயா? இந்த வாரமும் தொடரலாம் தானே?? ஒரு நாளைக்கு 5 பதிவர்கள் என்ற முறையில் கூட அறிமுகப்படுத்தலாம்.. நிறைய உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதலாம்...
ஒவ்வொரு பதிவர் வலையை தேடி சிறப்பான விஷயம் எடுத்து அறிமுகப்படுத்துவது சிரமம் தான்.. என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இதில் தான் இருக்கிறது வெற்றியும் சந்தோஷமும் ஐயா....
வெற்றிகரமான ஏழு நாட்கள் ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக முடித்து வைத்துவிட்டு இன்னும் தொடரக்கூடாதா என்ற ஏக்கத்தையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்ட உங்கள் பணிக்கு என் மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் ஐயா...
தினம் நிறைய பதிவுகளை படித்து அருமையாக அறிமுகங்கள் செய்து கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் துளசி கோபாலை வழி மொழிகிறேன். மிகவும் சுவாரஸ்யமாக, ஒரு தேர்ந்த எழுத்தாளரின் அருமையான எழுத்தில் ஒரு வாரத்தை மிக அழகாகக் கொண்டு சென்றீர்கள்! என் மனமார்ந்த பாராட்டுக்கள்! இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteசீனா பூலோகசொர்க்க நண்பர். வலைச்சரத்தில் பல வளையல்சரம்,பல விளைச்சல் ,மறைந்திருக்கும் மூலிகைச் செடி என வெளிக்கொணரும் பாங்கு
ReplyDeleteஅங்கே பழனி. கந்தசாமி பலரை வெளிச்சம் காட்டினர். பூலோக சுவர்க்கம் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவன் உடனிருக்கட்டும். பாராட்டுக்கள்.
ஆசிரியப்பணியை மிகவும் சிறப்பாக நிறைவேற்றியமைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் சிறப்பான தலைப்பாகத் தெரிவு செய்து வலைப்பதிவர்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களது முறைமை பாராட்டத்தக்கதாக இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடையை கடைபிடிப்பார்கள். தங்களது நடை முற்றிலும் வேறுபாடாக, அதே சமயம் பல நிலை நண்பர்களை கோர்வையாக அறிந்துகொள்ள உதவியது. மறுபடியும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteThe job done was truly well done. . Congrats...!
ReplyDeleteWhat idea killergeee
ReplyDelete