தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று வந்...... சொன்னது தான் தாமதம் ’’சட்டீர்’’ என ஒரு சப்தம்..
இந்தமுறை அறை விழுந்தது யாருக்குத்தெரியமா ? வேறயாரு ? எனக்குத்தான்
எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அறைந்த சத்தமே அது சட்டென கண்ணிலிருந்து... மின்னல்
பறந்தது வரிகள் போல... ஏன்டா ? இந்த பிள்ளையார் கதையெல்லாம் நீ எங்கிட்ட
சொல்லவே இல்லையே என்றார் என்னது எல்லாருமே அறையுறாங்க ? எனக்கு
கண்ணீர் வருவதுபோல இருக்க பொன்னம்மாவும் என்னையவே பார்த்துக்கொண்டிருக்க.... அவளது
கண்ணில் சந்தோஷமா ? கவலையா ? என்னால்
அனுமானிக்க முடியவில்லை காரணம் வலி, வெட்கம், வேதனை, ஆத்திரம், அவமானம், கோபம்,
அவளைப்பார்ப்பதை தவிர்க்க சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்தை பார்த்தேன் அதில்
இருந்தவர் (ஒருவேளை என்னோட
கனவுல வருவாரோ... என்னவோ) என்னைப்பார்த்து
சிரிப்பது போலிருந்தது (அவர் யார் ? 80 இப்பத்தெரியும்) என்ன ? உலகமடா ? இது
தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ? ஜகத்தினை
அழித்திடுவோம் என்றானே செல்லம்மா புருஷன் எனது சந்தேகத்திற்க்கு பதிலில்லை என்றால் ? இந்த
உலகு எதற்க்கு ? பள்ளி எதற்க்கு ? ஏன் ? இந்த
பிள்ளைக்கு அடி வாங்கி கொடுத்த பிள்ளையாரே எதற்க்கு ? ஆயுதம்
செய்வோம் நல்ல காகிதம் செய்வோம், வேண்டாம் வேண்டாம் நாம் ஆயுதம் மட்டுமே செய்வோம்
என்மனதில் திட்டங்கள் உருவாகியது (நண்பர்களே நாட்டில் தீவிரவாதிகள் எப்படி ? உருவாகிறார்கள் 80 புரிகிறதா ? என்னைப்போன்ற பச்சப்பிள்ளைகளுக்கு ’’சட்டீர்’’ ’’சட்டீர்’’ என அடிவாங்கி
கொடுக்கும் பிள்ளையார்களே காரணம்) நான் இந்த ஆலோசனையில் இருக்கும்போது ’’சட்டீரென’’ ஒருசத்தம் ஞானி ஸ்ரீபூவு மீண்டும் அறைந்திருக்கிறார்
நான் சுயநினைவுக்கு வந்தேன் ஞானி ஸ்ரீபூவுக்கு கோபம் சிரசுக்கு ஏறியது ஏன்டா காமராஜரை எதுக்குடா ? முறைச்சுப்பார்க்கிறே ? அவரு
போடுற கோதுமை களியை நல்லா உருட்டி உருட்டித் தின்னுபுட்டு வாத்தியார்களை எகத்தாளம்
பண்ணுறது, ம் ராஸ்கல்.... உடனே எல்லா வாத்தியார்களையும் வரச்சொன்னார் அனைவரும்
வந்ததும் உடனடி ஸ்டான்டிங் வட்டமேசை மாநாடு ஞானி ஸ்ரீபூவு சொன்னார் இவண் ஏதாவது
சேட்டை செஞ்சா ? கண்ணு ரெண்டையும் விட்டுப்புட்டு தோலை உறிச்சுப்புடுங்க
சொல்லிவிட்டு ஸாரட் வண்டியை சரட் என்று எடுத்துக்கொண்டு சிட்டுக்குருவி விமலன்
மாதிரி பறந்து விட்டார் இனி வாத்தியார்கள் என்ன ? செய்வார்களோ...
எல்லோருமா, துளசிதரன் வாத்தியார் மாதிரி இருப்பாங்க... இதுவே எனக்கு
குழப்பமாகியது...
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
காணொளி.
நண்பர்களே...
மதுரை விழாவில் கண்டோம் ஆம்
எமது
வாழ்விலும் உண்டு சில நொடி சினேகம்
மனிதநேயம்
என்பது நாடு, மொழி, ஜாதி, மதத்திற்க்கு
அப்பாற்பட்டது
இதோ எமது வாழ்விலும்
சிலமணி
நேரங்கள் சிநேகம் ரயில் பயணங்களில்....
காணொளி.
அபாட்னபோத் அனிம்
நவராத்திரி இதைப்பற்றி
கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் ? இதன் பிண்ணனி விபரங்கள் தெரியுமா? தெரியவேண்டுமா ? வாருங்கள்
இவரைத்தெரியாதவர்கள் யாரும் வலைப்பதிவில் இருக்கமுடியுமா ? என்ன ? ஒவ்வொரு விசயங்களையும் அருமையாக, அழகிய புகைப்படங்களுடன்
விளக்குகிறார் அவர்தான் திருமதி.
இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவைக்காண
கீழே சொடுக்குக.
அபாட்னபோத் பிதோ
வலது கை ஒடிந்தாலும் இடது கை
கொண்டு விடாது எழுது இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. மழை பெய்து பார்த்திருப்பீர்கள் குடைக்குள் மழை பெய்து
பார்த்திருப்பீர்கள் மலையின் அடர்ந்த காட்டுக்குள் விடாது அடைமழை பெய்தால் ? எப்படியிருக்கும் ? மலைத்து
திணறித்தானே போவீர்கள்... ஆம் இவரின் கவிதை மழையும் இப்படித்தான் இயல்பான
மனநிலையோடு சுதந்திரமான சூழ்நிலையில் அமைதியான சூழலில் இவரின் கவிதையை படித்துப்
பாருங்கள் மலைத்துப்போய் உணச்சி வசப்படுவீர்கள் காரணம் அனைத்தும் தேன்.. தேன்..
இலக்கணம், இலக்கியம், மரபுக்கவிதைகள் பற்றி புட்டு புட்டு வைக்கிறார்.
ஐயங்களுக்கும், வினாக்களுக்கும் விடையளிக்கிறார் எனது இனிய நண்பர் திரு. ஊமைக்கனவுகள் பெயர்தான் இப்படியே தவிற பேசுவார், பேசுவார், பேசிக்கொண்டே
இருப்பார் என்ன ? முழிக்கிறீங்க... ஊமை எப்படி ? ஓ.... அதுவா.... அதாவது
எழுதுவார், எழுதுவார் எழுதிக்கொண்டே..... இருப்பார் கவியாய்.... இவரின் பதிவை
பார்க்க கீழே சொடுக்குக.
அபாட்னபோத் வாலோ
ஓ.... காதலர்களே... சொந்த ஊருவிட்டு, சொந்த
நாடுவிட்டு காதலியை பிரிந்து வாழ்கிறீர்களா ? அவளின் நினைவால் வாடுகிறீர்களா ? கவலை வேண்டாம் இனி கவிதையால்
பாடுங்கள் ஆம் இதன் மூலம் காதலை இன்னும் ஆழமாக, நீளமாக, அகலமாக, உயரமாக
வளர்க்கலாம் நமது இலங்கை வேந்தன் தாபத்துடன் தரும் கவிதை எமது இனிய நண்பர் திரு. ரூபன் அவர்களின் பதிவில் என்னை
மிகவும் கவர்ந்தவை கீழே சொடுக்குக.
இதுபோக இவர் வலைப்பதிவில் தகவல் தொடர்புத்துறை
அமைச்சராகவும் இருக்கிறார் அதாவது இங்கே உள்ளதை அங்கே சொல்வது அங்கே உள்ளதை இங்கே
சொல்வது (போட்டுக் கொடுப்பாரா ?) யோவ்
வாயை மூடுயா, அதாவது வலைச்சரத்துல அறிமுகமானவங்களை அதாவது இப்ப நான் ரூபனை
அறிமுகப்படுத்திகேனா ? இதை
கிளிக் பண்ணவும் நேரே ரூபன் தளத்திற்க்கு போகுமா ? அங்கே போயி இங்கே, இங்கேதான்
கீழே, கீழே பாருங்களேன்.
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-அன்புடன்-
-ரூபன்-
அப்படினு அவரு தளம்னே தெரியாமல் போட்டுட்டு
திரும்பிடுவாரு மறுநாள் அவருடைய டேஷ்போர்டில் கருத்துரையில் வந்து பார்க்கும்
போது...
1
comment awaiting moderation
இப்படி இருக்குமா ? உடனே ஓபன் செய்து விட்டு உடனே அந்த தளத்துக்கு
விரைந்து போயி படிச்சுட்டு கருத்துரை போடுவாரு.... யாருக்கு ? எனக்கு.
இவர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க ஃப்ரஷை
எடுப்பதில்லை முதலில் மவுஸைத்தான் எடுப்பார் கருத்துரை போட... இனிய
நண்பர் திரு. ரூபன் அவர்கள் விஸ்வரூபம்
எடுத்திருக்கும் மற்றொரு பதிவு என்னை மிகவும் கவர்ந்தவை கீழே சொடுக்குக.
அபாட்னபோத் சியாம்
தினம் எங்கெங்கோ போகிறோம்
வருகிறோம், பல மனிதர்களை சந்திக்கிறோம், பேசுகிறோம். குறிப்பாக டீக்கடையில்
நடக்கும் சம்பாஷனைகள் சுவாரஸ்யமானவை அப்படி நடந்த சம்பவங்களை அழகாக தனது பாணியில்
தொகுத்து தருகிறார் இந்தப்பதிவர் நூல்களும் எழுதியிருக்கிறார் தனது தளத்தை
சிட்டுக்குருவி எனச் சொல்லிக்கொள்கிறார் இவர்தான் அமைதியான நண்பர் திரு. விமலன் அவர்களின் பதிவைக்காண
கீழே சொடுக்குக
லிமாம்பு
எல்லோரும்
காதலித்திருக்கலாம், காதலிக்காமலும் இருந்திருக்கலாம் இவர் யாரை காதலித்து
இருக்கிறார் பாருங்கள் ப்ரெஞ்சு காதலியை வாழ்க வளமுடன் என அவரது வீட்டுக்கு
தெரியாமல் வாழ்த்துவோம் தன்னை தனிமரம் என்று சொன்னாலும் தமது சிந்தனையால்
பெரீரீரீரீரீரீய்ய்ய்ய தோப்பையே 35 ஏக்கருக்கும்
மேலே இருக்கும் நட்பு வட்டாரங்களாய் வளைத்துப்பிடித்து இருக்கிறார் என்னன்னா ? அப்பப்ப நான் இமயமலைக்கு போறேன் அப்படினு சொல்றது மாதிரி
போயிட்டு வந்து விடுவார் வாருங்கள் தனிமரம் வலைப்பதிவாளர் நமது நண்பர் நேசன் அவர்களின் பதிவைக்காண கீழே
சொடுக்குவீர்...
லிமாம்பூத் இஷா
பதினாறும் பெற்று பதினெட்டாய் வாழ் இது
ஞானி ஸ்ரீபூவு வாக்கு. இவர் இதற்க்கு நேர்மாறானவர் நன்றாக கவிதையை விதைக்கிறார் ஆனால் ? குறைவாகவே விதைக்கிறார் ஒருவேளை அளவோடு
பெற்று வளமோடு வாழ்க என்ற கொள்கையாளரோ... இவர் முகத்தை இப்படித்தான் காட்டுகிறார்
இவர்தான் திருமதி. ஜெயலட்சுமி இவரின் கவிதைகளைக்காண சொடுக்குக
லிமாம்பூத் டலவா
நமது
பணத்தில் ஒரு ரூபாயைக்கூட யாரவது எடுத்தால் ? விட்டுக்கொடுப்போமா ? அதுபோல்தானே எல்லாமே இதையேன் மனிதன் நினைத்துப்பார்க்க
மறுக்கின்றான் என கோப்படுகிறார் ஐந்தறிவு மனிதர்கள் ஏன் ? ஆறறிவு மிருகங்கள் வாழு… அய்யய்யோ தப்புத்தப்பா
டைப்பிட்டேனே.. SORRY ஐந்தறிவு
மிருகங்கள் ஏன் ? ஆறறிவு மனிதர்கள் வாழும்
இடத்தைத்தேடி வருகிறது ? தனக்கு சொந்தமில்லாத
தந்தங்களை ஏன் ? எடுக்கிறான் என்றும் வேதனைப்படுகிறார் இந்தப்பிள்ளை, இவர்
சாதாரண ஆள் இல்லை கோயில் பிள்ளை அப்படி ? என்னதான் சொல்கிறார் இதோ
சொடுக்குங்கள். கருடா சௌக்கியமா ? என்று நக்கலடிக்கிறார். சரி காந்திஜிக்கு
கவிதை எழுதியிருக்கிறார்கள் ஆனால் ? உலகிலேயே கில்லர்ஜிக்கும்
கவிதை எழுதியது இவராகத்தான் இருக்க வேண்டும் அது மட்டுமா ? காந்திஜிக்கு மல்லாக்கொட்டை, ஆட்டுப்பால் கொடுத்து
உபசரித்தும் இருக்கிறார் அவர்தான் எமது நண்பர்
திரு.கோயில் பிள்ளை அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக
லிமாம்பூத் தட்லோ
ஓட்டு போடுறவனுக்குக்கு முன்னாலே நோட்டு பின்னாலே வேட்டு இது ஞானி ஸ்ரீபூவு
வாக்கு எவ்வளவு காலத்துக்குத்தான் இந்தியாவுல ஓட்டுப்போடுவது
ஒருமுறை ஜெர்மனி போயி காங்கிரஸுக்கு போட்டுப்பாருங்களேன் அங்கேயும் எப்படித்தான்
தேர்தல் நடக்கிறது எப்படி ஓட்டு எண்ணுகிறார்கள் 80தை தெரிந்து கொள்ள
வேண்டாமா ? (ஒன்று, இரண்டு, மூணு, னுதான்) யாரது ? வாருங்கள் நண்பர்களே... தங்குவதற்க்கு
பிரட்சினை இல்லை நீங்க எத்தனைநாள் தங்கினாலும் சகித்துக்கொண்டு உங்களை பிரியமாக FREEயாக உபசரித்து பிரியா விடை கொடுத்து
அனுப்புவார் இதோ நமது தோழி திருமதி. பிரியசகி இவரின் தளம் காண சொடுக்குவீர்
லிமாம்பூத் அபாட்
நண்பர்களே சினிமாவில்
நடிக்கவரும் நடிகர்கள், நடிகைகளுக்கு சொந்தபெயர் ஏதோவொன்று இருக்கும் இருந்துதானே
ஆகவேண்டும் நடிகர் ஆனதும் ஆள் அழகாக இருக்கிறார்களோ ? இல்லையோ ? பெயர் அழகாக வைத்துக்கொள்(ல்)வார்கள் இதைப்போல
வலைப்பதிவர்கள் சிலரும் வைத்து இருக்கிறார்கள் நாம் நமக்காக வாழ்கிறோம் நமக்காக
புனைப்பெயர்கள் வைத்துக்கொள்கிறோம் இதில் மற்றவர்கள் அப்படிச்சொல்கிறார்கள்,
இப்படிச்சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை 80தே எமது கொள்கை. நாக்கு முளைத்த மனிதர்கள்
எப்படித்தான் சொல்லமாட்டார்கள், குப்புறப்படுத்தால் கும்பகோணம் தெரியுது
என்பார்கள், சரியென மல்லாக்கப்படுத்தால் மண்டபம் தெரியுது என்பார்கள், சரியென
ஒரிசாய்த்து படுத்தால், ஒரத்தநாடு தெரியுதுனு சொல்வார்கள் இதற்கெல்லாம் பயந்தால் ? துளசி தளம் வலைப்பூவின் முகப்பில் நிற்கின்றதே
இரண்டு யானைகள் அதனைப்போல நின்று கொண்டே தூங்கவேண்டும் ஆகவே இந்த திண்ணை
தூங்கிகாரரிடம் ஒரு கண்ணாய் இருக்கனுங்கிறது நான் எலி மண்டே கறி ஸ்கூல் பையனாக
இருக்கும் போதே குருந்தன் வாத்தியார் படிச்சுக்கொடுத்துட்டார் நானும்கூட எமது 12 வது அகவையில் விமலாஸி என்ற புனைப்பெயரில் எவ்வளவோ
எழுதி, எழுதி, எழுதி, எழுதி, எழுதி (யோவ் நீ எழுதிக்கிழிச்சே நிறுத்துயா) சரி, சரி அதாவது வாரஇதழ்களுக்கு அனுப்பி
விட்டேன் அதெல்லாம் இப்போ எங்கே..... அது... என்றே மனம் தேடுதே...
ஆவலாய்
எனக்கு கிடைக்கும் மூன்று பைசா, ஐந்து பைசா, இவையெல்லாம் சேர்த்து பெட்டிக்கடையில்
விற்க்கும் தேன் மிட்டாய்க்கோ, சூடை மிட்டாய்க்கோ, கடலை அச்சுக்கோ, பொரி
உருண்டைக்கோ, வெள்ளைக்கலரில் உருகி வடியும் பால் ஐஸ்சுக்கோ போகாது
அஞ்சலகத்துக்குப்போய் அஞ்சல்தலை வாங்கி சேமித்து வைத்திருப்பேன் அது ஒரு பொற்காலம்
இதோ நமது தோழமை வலைப்திவர்கள் சுருக்கமாக அன்புடன் ஸ்பை என்று அழைக்கும் எமது நண்பர் திரு. ஸ்கூல் பையன் அவருக்கும்
பெயர்ப்பிரட்சினை வந்து இருக்கிறது வாருங்கள் அவர்களுடைய பதிவை
படித்துப்பாருங்களேன்.
இன்றைய கொசுறு
நண்பர்களே, இந்த தேவகோட்டை தமிழனின் மகன் தமிழ்
வானிலிருந்து பொழியும் மழையில் நனைந்து விடக்கூடாதென வாணன் குடை பிடிப்பது தமிழின்
பற்றுதானே நானும் தமிழ்வாணன் என்று பெயர் வைத்தது எத்தனை பொருத்தம் மேலே
இருப்பவர்கள் எனது மகன்கள் தப்பு. தப்பு ஒரு மகன்தானே எனது மகன் தமிழ்வாணன்.
இனிய வலைப்பூ இதயங்களே... இன்று எனது 16 வது பிறந்தநாள் அதாவது
பதினாறு பதினாறு (இரண்டு தடவை எழுத்தால் ஏன் ? தெரியுமா ? பாலக்காட்டு
அப்பாவி ஒருத்தர் கேட்பாரு 61 னா... ஆ.... அப்படினு அதுக்குத்தான்) பெறும்பாலும் நான் பிறந்த நாளை கொண்டுறது
இல்லை இன்று கொண்டாடுவதற்க்கு காரணம் வலைச்சரத்தில் நிறைய நண்பர்கள் வந்து
கருத்துரை போட்டார்களே அந்த நன்றிக்கடனுக்காக ஒரு ஃபப்பெட் பார்ட்டி வைக்கலாம்னு
தோன்றியது ஆகவே கேக் நான் வெட்டனும்னா ? எனக்கு கோடரி வேணும் சாணை புடிக்கப்போன சோலந்தூர் சோனையன் திடீரென வந்த
சண்டையில ஒருத்தனை வெட்டிப்புட்டான் கோடரி இப்ப அபுதாபி போலீஸ் கையில அதுல எங்க
குடும்பத்து குறி போட்டு இருக்கும் ஸ்ரீ அப்படினு அந்தப் பிரட்சினையில
அலைஞ்சுக்கிட்டு இருக்கேன் நான் வரமுடியாது அதனால எல்லோரும் நல்ல விதமாக கேக்
வெட்டி கொண்டாடவும்
பக்குவமா,
வரிசையில நின்று எடுத்து.....
டேபில்ல
உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு...
மொய்ப்பணத்தை எனது
KILLER/gee SWISS BANK A/c No: SF 5465 * *
* * 3851 * * * * 6994
அனுப்பிடுங்க...
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி தேவகோட்டையான்)
அன்பு இதயங்களுக்கு ஒரு ’’ப்ளாஷ் நியூஸ்’’ எனது வலைப்பு கில்லர்ஜியில் ப்ளாஷ் நியூஸ்
தொடங்கப்பட்டு இருக்கிறது ஒருநாள் ஐயன் வள்ளுவனின் திருக்குறளும், மறுநாள்
பையன் கில்லர்ஜியின் தெருக்குரலும் ஒலிக்கும் 80தை மகிழ்ச்சியுடன்
அறியத்தருகிறேன்
தற்போது எமது வலைப்பூ கில்லர்ஜியில் இன்றைய வாழ்க்கைச் சூழலைப்பற்றி
எழுதியிருக்கிறேன் அவசியம் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்றைய மனிதர்கள். நன்றி.
வாழ்க ! தமிழ்.
முந்திரிக் கொட்டை மாதிரி இவன் ஏன் வந்தான் முதலில் கருத்து சொல்ல என்று பார்க்கிறீர்களா?
ReplyDeleteகருத்து கருப்பு சாமி அதாங்க சாம்ராட் சாமானியன் தான் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தார் ! போப்பா! போய் எல்லாருக்கும் வாழ்த்து சொல்லு நான் பின்னாடியே வரேன் என்று!
சரி மேட்டருக்கு வரேன்!
வெள்ளிக் கிழமை விடியும் வேளை
வாசலில் கோலம் இட்டு
வள்ளிக் கணவன் முருகன் பெயரைச் சொல்லி
கூந்தலில் பூ முடிச்சாரே! நம்ம தேவக்கோட்டை அபுதாபி கில்லரிஜி
அவருக்கு வாழ்த்துக்கள் அருமையான தேர்வு!
அலசி ஆராய்ந்து தேர்வு செய்துள்ளார். பாராட்டுக்கள்.வலைச் சரம் அறிமுகம் அனைவருக்கும் குழலூதும் கண்ணனின் பாராட்டுக்கள் வாழ்துக்கள்!
அன்புடன்,
புதுவை வேலு,www.kuzhalinnisai.blogspot.fr
( இன்றைய பதிவு நாராய்! கவி காண வாராய்)
வருக நண்பரே, முந்திரிக்கொட்டை முதலில் வந்த்து எமது பாக்கியமே.. முந்திரிக்கொட்டையின் இன்றைய விலை அறியாதவன் அல்ல நான் கருத்து கருப்பு சாமி அதாங்க சாம்ராட் சாமானியன் அவர்களுக்கு நன்றியை எடுத்துறைப்பீராக... தங்களின் மனம் நிறைந்த பாராட்டு கண்டு மணம் மகிழ்ச்சி.
Deleteஞானி ஸ்ரீபூவிடமும் அடியா..சரியா போச்சு அப்ப நீங்க மெய்யாலுமே தப்பாத்தான் கேட்டுருக்கீங்க...அத விடுங்க நண்பரே ஸ்ரீபூவுக்கு விளக்கம் கொடுத்துக்கலாம்....ஹ்ஹ்ஹ் என்ன துளசிதரன் அடிக்கமாட்டார்னு நினைச்சுடீங்களா.....ம்ம் அவரு வேணா அடிக்கமாட்டாரு..ஆனா அந்த்த் தளத்துல இன்னொருத்தர விட்டுப்புட்டீங்களே...அவங்க??!!! அடிப்பாங்கனு சொல்லறீங்களா...வாங்க மாட்டிக்குவீங்க...அவங்க கிட்டயும்...ஹ்ஹ்ஹ்
ReplyDeleteமுதல் காணொளி கிடைக்கலையே நண்பரே!
பயணங்கள் ....ரயில் பயணங்கல் அருமை....புல்லட், ட்ரெயின் நம்மூர் எல்லாம் போட்டுருக்கீங்க....ஸ்விஸ், ஃப்ரான்ஸ் போனது எல்லாம்...அதுவும் பாட்டு + அவ்வூர் மனிதர்களுடன்...சூப்பர்...எடிட்டிங்க் நேத்தும், இன்றும் நல்லாருந்துச்சுங்க
ஹ்ஹ்ஹ் மகன் டபுள் ஆக்ட்டு..???!!! டெக்னிக்ல புகுந்து விளையாடுறீங்கப்பா....
16+16 நு சொல்லித் தப்பிக்க நினைப்பா...பின்ன பாலக்காட்டு அப்பாவி கேக்க மாட்டாருக்கும்...அது என்ன எப்ப பாரு அந்த அப்பாவி மட்டும்...? இன்ன்னுரு அப்பாவி...??!! 2 ரீசன் ஒண்ணு கூட உள்ளத கண்டுக்காம போனதுக்கு. ரெண்டாவது....கேக்குக்கு பதிலா பாயாசம் கேட்டும் கொடுக்கல.......அதனால உங்க டின்னர நல்லா மூக்கு முட்ட வெட்டிப்புட்டு ...பர்த்டே பார்டிக்கு மொய்யா.....நாங்க பாதி மொய் தான் வைப்போம்...அதுவும் உங்க ஸ்விஸ் அக்கௌன்ட் ??!!......அப்ப உங்களுக்கு பிரதமர் பதவி கிடையாதுங்க...
சரி சாப்ட்துக்கு.....வேணா போனா போகுதுன்னு....ஹேப்பி பர்த்டே பாட்டு வேணா பாடறோம்....
கலக்கல்!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். எல்லோரும் நண்பர்களே!
வாங்க, நாங்களெல்லாம் தூங்கும்போதுகூட தவறா கேட்கமாட்டோம் நான் இப்ப கொஞ்சம் பிஸியாக இருக்கேன் யாராயிருந்தாலும் பயப்படமாட்டோம் காரணம் நான் கோடரி பார்ட்டி முதல் காணொளி எல்லோரும் பார்த்து கருத்து எழுதியிருக்காங்களே... நாங்க ரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே எடிட்டிங் படிச்சுட்டோம் தெரியுமுள்ள. ?
Deleteசினிமா நடிகை சொன்னாலா நம்புவீங்களோ....
டின்னர் சாப்பிட்டமைக்கு சந்தோஷம் மொய் வைக்காமைக்கு சந்தேகம்
எனக்கு ஏன். ? பிரதமர் பதவி இல்லை
வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் விரிவாக எழுத நேரமின்மை SORRY
அந்த அருவி, போட் பயணம் காணொளி....உங்க தளத்துல அல்ரெடி ஸ்விஸ் போனப்போ போட்ட்துதானே....??!!
ReplyDelete( இன்றைய பதிவு நாராய்! கவி காண வாராய்)
Deleteநண்பரே வடிவேலு ஸ்டைலுல அடி வாங்கறீங்க போல....ம்ம்ம்ம்ம் "என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாய்ங்க" அடப்பாவி....அப்பாவி...ஹஹஹஹ்
DeleteTo, நண்பர் துளசிதரன் ஆம் ஆனால் ? கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது நன்றி
DeleteTo, கண்டிப்பாக வருவேன் நண்பா,
DeleteTo, நண்பர் துளசிதரன் என்ன. ? நக்கலா. ?
Deleteஹஹாஹ் சரி இப்பத்தான் திரும்ப காணொளி பார்த்தோம் வேலை செய்யுது...நேத்து அதுக்கு ஏனோ எரர் வந்துச்சு....
Deleteயாரப் போயி வெள்ளையம்மாள்னு போட்டுருக்கீங்க...கலர்லியா இல்ல மனசுலயா....
எப்படிங்க? எப்படி.... இப்படி.......
ReplyDeleteகலக்கல்தான், போங்க!
உங்களை நேரில் சந்தித்தபோது 'அப்பாவி'யா இருக்கீங்களேன்னு நினைச்சேன்!
வாங்க, வாங்க ஏதோ தங்களின் ஆசீர்வாதம் நேரில் சந்திக்காவிட்டாலும் நான் ஒன்னும் தெரியாத அப்பாவியே..... வருகைக்கு நன்றி.
Deleteஎன்ன நேரில் சந்திக்கலையா? அப்ப மதுரையில் நான் சந்திச்சது உங்க மகனையா??? :-)))))
Deleteநான் சொன்னதின் அர்த்தம் நான் என்றுமே அப்பாவியே
Deleteமதுரை என்னுடன் வந்தது தங்கையின் மகன் கே. விவேக்
மீள் வருகைக்கு நன்றி
வருக, யாரு அடி வாங்கினானு நாளைக்கிலே தெரியும் எங்க ஐயா அடிச்சா,,, வலிக்காதே எங்க ஐயா தங்க ஐயாவுல//
ReplyDeleteஅடடா....இன்னைக்கு என்ன ஆச்சு...நான் சொன்னது சரிதானே சகோ..தங்க..ஐயா கையும் தங்கம் போல ஸ்ட்ராங்...இல்ல...
நேற்று வந்...... சொன்னது தான் தாமதம் ’’சட்டீர்’’ என ஒரு சப்தம்..
இந்தமுறை அறை விழுந்தது யாருக்குத்தெரியமா ? வேறயாரு ? எனக்குத்தான் எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு அறைந்த சத்தமே அது சட்டென கண்ணிலிருந்து... மின்னல் பறந்தது வரிகள் போல... ஏன்டா ? இந்த பிள்ளையார் கதையெல்லாம் நீ எங்கிட்ட சொல்லவே இல்லையே என்றார் என்னது எல்லாருமே அறையுறாங்க ? எனக்கு கண்ணீர் வருவதுபோல இருக்க //
அடடா...கரைக்கிட்டா கண்டு புடித்துவிட்டோம் அப்பாஆ....
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் மேலும் வளமான வாழ்க்கையும், ஆரோக்கியமும் கிடைத்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்...!!!
சாப்பாடு சாப்பிட்டோம். மொய்க்கணக்கு நீங்கதான் எங்களுக்கு கொடுக்கனும். நாங்க வந்து அட்டென் பண்ணீனதுக்கு...ஹஹஹா....
தொடரட்டும்....பணி... தம 4
நேற்றே தங்களின் கணிப்பு கண்டு மகிழ்ந்தேன் ஆசிரியரை ஞானி ஸ்ரீபூவு அடித்தார் என்றால் ? அவர் ஞானியாக இருக்க முடியாதே... அது தர்மம் இல்லையே
Deleteவிருந்தும் வைத்து மொய்யும் நானா ? இது தேவகோட்டையார்கள் பழக்கமில்லையே..... வருகைக்கு நன்றி
துளசி கோபால அவர்கள் சொல்லிப் போனதுதான்
ReplyDeleteஎனது கருத்தும்
பதிவினைப் படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருக்கிறது
அற்புதமான அறிமுகங்கள்
சொல்லிப் ப்னவிதம் மிக மிக அருமை
உங்களிடன் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது
வாழ்த்துக்கள்
வருக, கவிஞரே தங்களின் மனம் திறந்த பாராட்டிற்க்கு நன்றிகள்
Delete//உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது//
இதை எழுதும் பொழுது மனசாட்சியை அடகு வைத்து விட்டீர்கள் என்றே கருதுகின்றேன் தொடர் வருகைக்கு மீண்டும் நன்றி.
நண்பர் கில்லர்ஜீக்கு,
ReplyDeleteஇந்த பிறந்த நாளும் இனிவரும் பிறந்த நாட்களும், சிறந்த நாட்களாக அமைய இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
தங்களுக்கான மொய் பணம் திரும்பி வந்துவிட்டது ஒரு இணைப்பு கடிதத்துடன்.
" மேற்கொண்டு பணம் போட இடமின்றி கில்லர்ஜீயின் வங்கிகணக்கு ஏற்கனவே நிரம்பி வழிகின்றது, இத்துடன் தங்களின் காசோலையும் இணைக்கப்பட்டுள்ளது "- வங்கி மேலாளர் ஸ்டேட் பேங்க் ஆப் சுவிஸ்.
நிரம்பி வழியும் எல்லா நலன்களுடன் நீடு வாழ வாழ்த்துக்கள்.
வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள்.
அனைத்து அறிமுக பதிவருக்கும் வாழ்த்துக்கள்.
நட்புடன்
கோ
தங்களின் வருகை கண்டு மணம் மகிழ்கிறேன் மொய்பணம் திரும்பி விட்டதா ? நண்பரே தயவு செய்து அந்த லட்டரையும் மொய்ப்பணத்தையும் அபுதாபி அனுப்பி வைக்கவும்
Deleteஅந்த மேலாளரின் பெயர் என்ன போட்டு இருக்கிறது வடுக நாதனா ?
அதைக்கொஞ்சம் பார்த்து சொல்லமுடியுமா ? நண்பரே... வருகைக்கு நன்றி
அற்புதமான அறிமுகங்கள் நண்பரே
ReplyDeleteதங்களின் மகன் தமிழ்வாணனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்வில் சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்
தங்களுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் வருகையும் எனது அன்பு மகனை வாழ்த்திமை கண்டு அகமகிழ்கின்றேன் நண்பரே....
Deleteதம 4
ReplyDeleteநன்றி
Deleteஒரு வாரமா அடி வாங்கிக்கிட்டே இருக்கீங்களே (இப்பத்தான் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு) , இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவரு.
ReplyDelete85 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நான் வாழ்த்து சொல்லிட்டேன். அதனால எனக்கு சாப்பாட்டை பார்சல் பண்ணி அனுப்புங்கள். இல்ல ஃப்ளைட் டிக்கெட்டை அனுப்புங்க நான் நேர்ல வந்து பாராட்டுறேன்.
இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நான் அடி வாங்குறது உங்களுக்கு சந்தோஷமா ? பேரை மட்டும் உண்மையானவர் னு போட்டுக்கிறீங்க எண்ணங்கள் சரியில்லையே,,,,
Delete85 ஆ ? நீங்க கணக்குல வீக் ஆ
நண்பரே உங்களின் என்றும் பதினாறாவது பிறந்த நாளுக்கு ஸ்ரீ பூவு ஞானிகளின் ஆசி என்றும் இருப்பதாக.
ReplyDeleteகாலையில் கண்விழித்ததும் குழலின்னிசை காதில் விழ ஓடி வந்தேன்.
தங்களின் அன்பு கண்டு மலைத்தேன் அய்யா மலைத்தேன்!!!
உங்களுக்கும்
அபாங்சும் சபீர்.
அறிமுகப்படுத்திய தங்களுக்கும் , தங்களால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள, படவிருக்கிற சக பதிவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும்
அபின்கொன்மஹோ.
வருக கவிஞரே வலைச்சத்தை கோர்கத்தொடங்கி 7 வது பதிவு முடியும் தருவாயில் வருகிறீர்களே நியாயமா ? ஒருக்கால் குழலின்னிசை கேட்காவிடில் முழுமையாக தடைபட்டிருக்குமோ ?
Deleteதங்களின் வரவு எமது அன்பு கண்டு மலைத்தீர்களா ? இன்றுதானா ?
அபாங்சும் சபீர் // அபின்கொன்மஹோ.
புரிந்து விட்டது ஆனால் ? புரியவில்லை கவிஞரே நேரமின்மை காரணமாக தற்காலம் தேடுதல் வேட்டையை அடக்கி வாசிக்கிறேன் மீண்டும் வருவேன்
தினம் தினம் அடி என்றால் எங்கே போவது? இன்றைய அறிமுகப் பதிவர்களைக் கண்டேன். 16ஆவது பிறந்த நாள் என்பதற்கு பதிலாக 16ஐ இரண்டால் வகுத்து எட்டாவது பிறந்த நாள் என்று கூறியிருக்கலாமே? இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? நாளை சந்திப்போம்.
ReplyDeleteவருக முனைவரே,,, என்ன ? செய்யவது எல்லாம் விதி அவ்வளவுதான் 16 ஐ 8 ஆகவாஇல்லை நண்பரே எனக்கு பொய்யுரைக்கு பழக்கம் இல்லை முனைவரின் தொடர் வருகைக்கு நன்றிகள் கோடி
Deleteஅன்புள்ள ஜி,
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள். தங்களின் வெள்ளிக்கிழமை விரதம் கண்டு களித்தேன். மலைத்தேன். இரசித்தேன். தங்களின் பல பயணங்களைக் கண்டு பிரமித்தேன். அறிமுகப் படுத்திய வலைத்தள அன்பர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி.
தங்களி தொடர் வருகையும் கருத்துரையும் கண்டு நானும் மலைத்தேன் அதனால் மனம் இனித்தேன்
Deleteஇன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! தங்கள் மகன் தமிழ்வாணனுக்கும் இன்றைய அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! தங்களின் இரயில் பயணத்தை இரசித்தேன்!
ReplyDeleteவருக நண்பரே, வாழ்த்தியதில் எனது மகனை வாத்தியமைக்கு சிறப்பான நன்றிகள்
Deleteசேட்டையே இன்னும் ஆரம்பிக்கவில்லை... அதற்குள் சட்டீர்... சட்டீர்... என்ன இது நியாயம்...? ஹிஹி...
ReplyDeleteதம்பி ரூபன் அறிமுகம் செய்த விதமும் அசத்தல்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
ஆம் நண்பரே மனசாட்சியின்றி அடிக்கிறார்களே... வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி
Deleteவணக்கம்
Deleteஜீ
தனபாலன் அண்ணா சொன்னது என்ன தப்பு.. சரியாத்தான் சொல்லியுள்ளார்....ஜீ
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த இனிய பிறந்தநஆள் வாழ்த்துகள்..
ReplyDeleteஎமது தளத்தை சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள்..
வருக சகோ வாழ்த்தியமைக்கு நன்றி
Deleteமீண்டும் மீண்டும் அசத்துகின்றீர்கள்..
ReplyDeleteஅற்புதமான அறிமுகங்கள் ஜி!..
அப்படியே தங்களின் அன்பு மகன் தமிழ்வாணனையும் அறிமுகம் செய்து விட்டீர்கள்.. நல்வாழ்த்துக்கள்!..
இனிய நண்பரே எனது அன்பு மகளை வாழ்த்தியமை கண்டு மனம் மகிழ்கிறேன் நன்றிகள் கோடி.
Deleteஅறிமுகங்களில் பெரும்பாலானோர் நான் தொடரும் பதிவர்களாய் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது . தங்களுடைய 61-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் .
ReplyDeleteவாங்க, இப்ப செய்துக்கிட்டு இருக்கிற வேலையை ராஜினாமா செய்துட்டு உடனே எல்.கே.ஜி. யில சேருங்க கணக்குல வீக்கா ? நீங்க ? எவ்வளவு அழகு தமிழில் பதினாறு என்று எழுதியிருக்கேன் இப்படிப்படித்தால் ? முதல்ல நான் சொன்னதை செய்ங்க போங்க
DeleteDifferent style :)
ReplyDeleteThank You Sir
Deleteஇனிய சகோதரர் கில்லர்ஜி!
ReplyDeleteஉள்ளம் மகிழ்வுற ஊற்றாய் நகையூட்டும்
கில்லர்ஜி வாழ்க கிளைத்து!
என்றும் நகைச்சுவை ஈர்க்கும் குணநிலை
கொண்டிருப்பீர் வாழ்விற் கொழித்து!
நல்லாண்டு வாழ்க! நறுந்தமிழைப் போற்றியே
பல்லாண்டு வாழ்க படர்ந்து!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரரே!
இன்றைய அறிமுகப் பதிவர்களும் மிக அருமை!
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
வருக கவிஞரே...
Deleteஉள்ளம் நிறைந்தது தங்களின்
வாழ்த்து கண்டு என்றும் வேண்டும்
இந்த கவிஞரின் வரவு
பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோடி
உங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெள்ளிக்கிழமை விடியும்வேளை,வலைச்சரத்தில் அறிமுகமாயிருப் பது பார்த்து மகிழ்ச்சி. எனது தளத்தை அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள். Danke schön. Thank you.
இன்று அறிமுகப்படுத்திய ஏனைய பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
சகோ.ரூபனை இந்தளவு யாருமே புகழ்ந்ததில்லையென நினைக்கிறேன்!!! காணொளிகள்,மகனின் புகைப்படம் அருமை. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். இப்படி மாறி,மாறி,மாறி... அடிவாங்கிக்கிட்டே இருக்கிறீங்களே.... ????
வருக, வருக, தங்களின் மனம் திறந்த பாராட்டு கண் மனம் மகிழ்கிறேன் சகோ ஆமா ஏன் ? இந்த வலைச்சரத்துக்கு வந்தோம்னு நினைக்கிறேன் இங்க வந்ததால்தானே இந்த அடி
Deleteபிறந்தநாள் காணும் நண்பர்க்கு வயது கூடுமா..? குறையுமா..? என்று ஞானியிடம் கேட்டபோது என் நண்பரிடமே கேட்கச் சொன்னார். நண்பர் பிசியாக இருப்பதால்... முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteவாங்க நண்பா, மற்றவங்களுக்கு எப்படியோ ? எனக்கு முன்னூறிலிருந்து குறைந்து கொண்டே வருகிறது இதற்க்கு காரணம் சொல்ல வேண்டுமென்றால் ? நாலு பதிவு போடனும் தற்போது நேரமில்லை நண்பா SORRY
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி நண்பரே...
Deleteவணக்கம் சகோதரரே! .
ReplyDeleteஅடாடா! மறுபடியும் அடி உங்களுக்குத்தானா? நான் வேறு விதமாக நல்லபடியாக நினைத்தேனே! (இதற்குத்தான் நல்லதுக்கு காலமில்லை என்று சொல்லுகிறார்களோ?) ஒரு வாத்தியாரிடம் மாட்டிக்கொண்டது போய், பல வாத்தியார்களுக்கு மத்தியில்…பாவம்! தங்கள் நிலை பரிதாபத்துக்குரியதுதான்! அந்த “பிள்ளையார்”தான் இனி இந்தப் பிள்ளையை காப்பாற்ற வேண்டும்! இன்று வேண்டிக் கொள்வதை தவிர வேறு வழியில்லை..!
இன்றும் அனைவரின் அறிமுகப் படலம் படு அமர்க்களம்…!
இன்று அறிமுகமாயிருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்களும், நல்வாழ்த்துக்களும்.!
காணொளிகளும், தங்கள் மகனும் அவருக்கு குடைப் பிடிக்கும் மகனுமாக இரட்டை வேடத்தில் அருமை! (புது யுக்திக்கு பாராட்டுக்கள்,)
தங்கள் மகனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
உங்களுடைய பதினாறாவது ( என்னவோ “16 “என்று சொல்கிறீர்கள்.! நம்பித்தானே ஆக வேண்டும்.. கேக் படமும் அதை ஊர்ஜித படுத்துகின்றதே!. ) பிறந்த நாளுக்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் “16 “ஆக சிரஞ்சீவியாக (நடிகர் அல்ல! என் வாழ்த்துக் கேட்டு டென்ஷனாகி விட வேண்டாம்..) வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எதை எடுப்பது, எதை விடுப்பது, என்று தெரியாமல் நிறைய அயிட்டங்களை பார்க்கும் போதே தலைச்சுற்றுகிறதே.! அடுத்து முக்கியமாக மொய் வைக்க “பணம் “ அய்யோ.!அதை கையோடு எடுத்து வர மறந்து விட்டேனே! என்ன செய்வது? சரி! மனம் நிறைந்த வாழ்த்துக்களே போதும் என்கிறீர்களா? நல்லது.! அடுத்த 16 ல், சேர்த்து தந்து விட்டால் போகிறது..! வரட்டுமா?
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வருக பட்டகால்லயே படும் னு பெரியவங்க சொல்லாங்க இல்லையா ? அதான் இது மறுபடியும் பிள்ளையாராஐயோ வேண்டாம் அவரால்தானே இவ்வளவு அடி
Deleteஎனது அன்பு மகனை பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்
ஆமா பெர்த் சர்டிபிகேட் அனுப்புனாத்தான் நம்புவீங்களோ வேனும்னா ? தயார் செய்யி.... SORRY இல்லை பெட்டியில ரெடியா இருக்கு அனுப்பி வைக்கிறேன்,
சினிமா நடிகன் அரசியல்வாதிகளோடு என்னை ஒப்பிட்டா ? எனக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே.....
அடுத்த பதினாறா ? அது எப்படி அடுத்து 15 துல
விருந்து உண்டு கழித்தமைக்கும், வருகைக்கும் நன்றி
நண்பரே சிரித்துக்கொண்டே படித்துவிட்டு தீவிரமாய் சிதிக்கவும் தொடங்கிவிட்டேன்...
ReplyDeleteசில வரி ஹாஸ்ய பதிவில் வார்த்தைக்கு வார்த்தை பொடி வைத்து, இவ்வளவு விசயங்களுடன்...
" எழுத ஆரம்பித்தால் எழுதுகோல் தீரும், அல்லது உடையும் அல்லது பிடுங்கப்படும்வரை " எழுத என்னை போல பலர் உண்டு. ஆனால் இப்படி எழுத உங்களைப்போல் ஒருவர் தான் !
தொடருங்கள் நண்பரே !
வலைப்பூ அறிமுகங்களுக்கு வந்தனம் !
தங்கள் மகன் தமிழ்வாணன் " தந்தையை மிஞ்சிய தமயனாய் " வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
இல்லை நண்பரே எனக்கு சிறு வயதிலிருந்தே பொடிபோடும் பழக்கம் இல்லை
Deleteஆஹா ஒரு 35 கிலோ இருக்குமா ? நண்பா,, என்ன ? முழிக்கிறீங்க... அந்த ஐஸ் கட்டியைத்தான் கேட்டேன்
எனது தமையனை வாழ்த்தியமைக்கு ஈபில் டவர் உயர நன்றிகள்
வருகைக்கு நன்றி
(நண்பரே ஈபில் டவரின் லிப்ட் வேலைகளின் பணி முடிந்து விட்டதா ?)
தங்களின் வருகையும், கருத்தும் கண்டு மனம் மகிழ்ச்சி.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteகாணொளிகள், பதிவர்களை அறிமுக படுத்திய விதம் அனைதும் அருமை.
வலைச்சரத்தை சிறப்பாக நடத்தி செல்வதற்கு வாழ்த்துக்கள்.
விரிவான முறையில் வாழ்த்தியமைக்கு நன்றி
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.ரயில் காணொலி பயணக்காட்சி அருமை
ReplyDeleteநன்றி நண்பா..
Deleteரூபனுக்கு பொறுத்தமான புகழ் உரை.
ReplyDeleteசரி நண்பா,,,
Deleteதனிமரம் என்று சொன்னாலும் தமது சிந்தனையால் பெரீரீரீரீரீரீய்ய்ய்ய தோப்பையே 35 ஏக்கருக்கும் மேலே இருக்கும் நட்பு வட்டாரங்களாய் வளைத்துப்பிடித்து இருக்கிறார் // எல்லாம் வலை நட்புக்களின் அன்பினால்தான்.
ReplyDeleteஆமா நண்பா...
Deleteவலைச்சரத்தில் தனிமரத்தையும் அறிமுகம் செய்த உங்கள் அன்புக்கு நன்றிகள்.வலையில் வந்து தகவல் தெரிவித்த யாதவன் நம்பிக்கு நன்றிகள்
ReplyDeleteநல்லது நண்பா,,,,
Deleteஎன்னுடன் இன்று அறிமுகமான வலைவுறவுகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசொல்லிடுறேன் நண்பா....
Deleteதொடரட்டும் பணி கில்லர்ஜீ!
ReplyDeleteஓகே நண்பா,,,
Deleteஅட இந்த முறையும் அடி உங்களுக்கு தானா? அட அடி வாங்கினதும் ஞானியிடமா.. அப்படின்னா கண்டிப்பா பண்பட்டிருப்பீங்க. இத்தனை பேரிடம் அடி வாங்கினா வேறே என்ன தான் ஆகும்பா?
ReplyDeleteஆயுள் ஆரோக்கியம் வெற்றிகள் மகிழ்ச்சி நிம்மதி மூத்தோர் ஆசிப்பெற்று பல்லாண்டு காலம் பிள்ளைகளோடு சௌக்கியமாக வாழ மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஜீ.
இன்றைய முகவுரையும் அசத்தல்.. அறிமுகங்களில் ஆரம்பம் என் ஃபேவரைட் இராஜராஜேஸ்வரியில் ஆரம்பித்து இறுதியில் ஸ்பை என்னும் தம்பியின் வலைச்சரத்தில் முடித்தது அமோகம்... ரசித்து வாசித்தேன்.
இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதுவுமா காணொளியில் பாடியது போல் வாசல் தெளித்து கோலம் போடலாம் தான்.. ஆனால் நம்மூரில் இல்லையே...
அருமையான அசத்தலான அறிமுகங்களோடு இன்றைய வலைச்சரம் பிரகாசிக்கிறது என்றால் போட்டோவில் இருப்பது ட்வின்ஸாயிருக்க சாத்தியமில்லையே என்று குழம்பினேன். இதுவும் உங்களுடைய திறமை தான் என்று வாசித்தேன்.. சிறப்பு ஜீ. மகன் தமிழ்வாணனுக்கு இறையாசி நல்கட்டும்.. வெற்றிகள் சேரட்டும்..
அற்புதமான இன்றைய வலைச்சர தொகுப்புக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு நண்பர்களுக்கும் தொகுத்த ஜீ அவர்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் !!
த.ம.9
வாங்க, வாங்க அடிவாங்கி புண்பட்டு போயி இருக்கேன் பன்னா ?
Deleteபிறந்தநான் வாழ்த்துக்கு நன்றி
வாசல்லதான் இப்ப கோலம் போட்ட பெட்ஷீட்கள் வந்துருச்சே...
குழப்பி விட்டு தெளிவாக்குவதே எமது கலை,,,
என் அன்பு மகனை வாழ்த்தியமைக்கு நன்றி.
மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கில்லர்ஜீ.... மீண்டும் இந்தியா வரும்போது எங்கள் பரிசான கடலை மிட்டாயை கொடுத்து விட்டு உங்களின் ட்ரீட்டுக்காக காத்திருக்கிறோம்.... (எலந்தை வடையாய்க் கூட இருக்கலாம் நண்பர் கொடுத்தால் மகிழ்வே...)உங்கள் மகனுக்கும் என் வாழ்த்துக்கள். பயணம் பாடல் அருமை... ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க பதிவினை உருவாக்க.... ஆமா அவ்வளவு உயரத்துல போய் தனியா எப்படி மாட்டினீங்க.... இன்று அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteநல்லது சூடை மிட்டாய் பார்ட்டி வைத்துக்கொள்வோம்
எனது அன்பு மகனை வாழ்த்தியமைக்கு நன்றி
ஆமா சரியான வேலை மூளைக்கும், கண்களுக்கும்
அதாவது உயரத்தில் ஒரு டவர் இருக்கிறது அதில் ஏறி நின்று பார்த்து விட்டு திரும்பி விடவேண்டும்
வருகைக்கு நன்றி
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...சகோ ஆஹா சகோ ரூபனின் கவிதைகட்கு இது தான் காரணமா?
ReplyDeleteவாங்க வாங்க லேட்டாத்தான் வரனும்ணு வரமா ?
Deleteவருகைக்கு நன்றி
காணொளிகளை கண்டு ரசித்தேன் ,உங்கள் சில நொடி சிநேகமும் அருமை ,நிறைய படம் பிடித்து வைத்துள்ளீர்களோ ,கலர்புல்லா இருக்கே !
ReplyDeleteத ம 11
காணொளியை ரசித்தமைக்கும், கருத்துரைக்கும், நன்றி, ஆம் நண்பரே நான் விபரம் தெரிந்த 2 ½ வயதிலிருந்தே கண்களால் படம் பிடிக்கத்தொடங்கி விட்டேன் அன்றிவிருந்து சேர்க்க ஆரம்பித்தவன் இன்று வரை முடியவில்லை.....
Deleteஅன்புள்ள ஜி,
ReplyDeleteத.ம.10
காணொளிக் காட்சிகளை அனைவரையும் காணவைத்து அசத்துகிறீர்கள். பயணம் பாடல் அருமை.
திருமதி. இராஜராஜேஸ்வரி
நண்பர் திரு. ஊமைக்கனவுகள்
திரு. ரூபன்
திரு. விமலன்
திருமதி. ஜெயலட்சுமி இவர்களின் வலைத்துளத்துள் சென்று பார்க்கும் வாய்ப்பை கொடுத்தீர்கள்... பார்த்து மகிழ்ந்தேன். அவர்களோடு... இவரையும் சேர்த்துப் பார்த்தேன்...
12 வது அகவையில் விமலாஜி பட்ட கஷ்டம்... இப்பொழுது வலைத்தளத்தில் படும் கஷ்டமும் தெரிகிறது.
அன்றைய மனிதர்கள் மிகவும் அழகாக அருமையாக படம் பிடித்து... இயற்கையோடு எப்படி இயைந்து வாழ்ந்தார்கள்.... இருந்தார்கள் என்பதை காட்டியது மிகமிக நன்றாக இருந்தது. பாராட்டுகள்.... வாழ்த்துகள்.
நன்றி.
மணவையாரின் வருகைக்கும் நீண்ட கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி
Deleteஅன்றைய மனிதர்களைத் தொடர்ந்து விரைவில் வருகிறது இன்றைய MONEYதர்கள்
என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ ! எனக்கும் ஓர் முகம் உண்டு என்பதை உணர்த்தியவரும் நீங்கள்தான். அந்த முகத்திற்கு வனப்பும் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டவரும் நீங்கள்தான். நன்றியுடன் நினைவு கூருகிறேன் சகோ !
ReplyDeleteவருக சகோ எல்லோருக்குமே ஒரு முகமும், அதன் அகமும் உண்டு அதன் அழகும் வளமும் நமது வாழ்வின் செயல் பாட்டில் தென்படும். வருகைக்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteகில்லர்ஜீ
என்னில் வைத்த கோபத்தை வைத்து சரியான சொல்லடிதான் கொடுத்துள்ளீர்கள்... எல்லாத்துக்கும் தங்களின் வலைச்சரப்பணி முடிந்த பின் அலைபேசியில் தருகிறேன்... மொத்தமாக எடுத்துக்கொள்ளுங்கள்.......
என்னை மட்டும்மல்ல மற்ற உறவுகளையும் நல்ல அறிமுகத்துடன் அசத்தியுள்ளீர்கள்... அறிமுகமான உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எவ்வளவு வேலைச் சுமைக்கு மத்தியில் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் ஜீ... நாளைக்கு சந்திக்கலாம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக நண்பரே,,, கோபமா ? அப்படியென்றால் ? தங்களை அறிமுகப்படுத்த தாமதமானதற்கான காரணத்தை அலைபேசியில் சொல்கிறேன்
Deleteநல்லது நாளையும் சந்திக்கலாம் நன்றி
வணக்கம்
Deleteஜீ
எனக்கு கோபம் இல்லை.. மகிழ்ச்சிதான்... நகைச்சுவையாக சொன்னேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தெரியும் நண்பா....
Deleteஅருமையான பதிவுகள் வாரம் முழுவதும். ரூபன் பற்றிய அறிமுகம் - :)))) ரசித்தேன்.....
ReplyDeleteவருக வெங்கட் ஸார் நன்றி.
Deleteவணக்கம் கில்லர் ஜி.
ReplyDeleteநான் ரொம்ம்ம்ம்ம்ம்ப தாமதமாக வந்ததற்கு மன்னியுங்கள்.
வருடா வருடம் பதினாறாவது வயது பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்க்கள்.
தொடர்ந்து நிறைய பதினாறாம் வயது பிறந்த நாட்களைக் கொண்டாடுங்கள்.
பதிவும் அறிமுகங்களும் அருமையாக உள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருக இதில் மன்னிப்பு எதற்கு ? பிறந்தநாள் விழாவுக்கு லேட்டாக வந்ததற்காக எத்தனை ஆயிரம் டோலர் மொய் செய்யப்போறீங்களோ,,,, கோபப்பட முடியுமா ? நன்றி
Deleteவணக்கம் சகோ.
ReplyDeleteதினம் அறை வாங்குறீங்களே..ஞானி ஸ்ரீபூவு வேற இன்னும் உசுப்பேத்திச் சென்றுவிட்டார். என்ன ஆகப்போகுதோ?
பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ. உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள். கேக், விருந்து சாப்பிட்டாச்சு..மொய் வந்துவிட்டதா? சுவிஸ்கு அனுப்பிவிட்டேன் :)
ஆமா நாளைக்கு யாரோ.....மொய் பணம் கிடைச்சதா ? இன்னும் மெசேஜ் வரலையே....
Deleteதங்களின் இந்த பதிவினை முன்பே படித்து விட்டேன். இன்றுதான் இங்கு வர முடிந்தது. ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி, ஊமைக்கனவுகள் – ஆசிரியர் ஜோசப் விஜூ, காதல் கவிஞர் ரூபன், தோழர் விமலன், கல்வி அதிகாரி ஜெயலட்சுமி, ஸ்கூல் பையன் – ஆகிய அனைவரின் வலைப்பதிவுகள் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவை. நீங்கள் அறிமுகப்படுத்தியது தனிச் சிறப்பு.
ReplyDeleteதனிமரம் நேசன், கோயில் பிள்ளை – ஆகியோர் பதிவுகளை இனி பார்க்கின்றேன்.
த.ம.13
தங்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் மகன் தமிழ்வாணனுக்கு என்னுடைய ஆசிகள்.
ReplyDeleteபிறந்தநான் வாழ்த்துக்கு நன்றி
Deleteஎன் அன்பு மகனுக்கு ஆசி வழங்கியதற்க்கு நன்றிகள்.
வருகைக்கு நன்றி
Delete\\ரயில் பயணங்களில்..\\ இரயில் பாதையில் நம் நாடு ரொம்ப பின் தங்கித்தான் இருக்கிறோம். நீர்வீழ்ச்சி, உங்கள் பயணம் எல்லாம் நன்றாக உள்ளது கில்லர்ஜீ ..........
ReplyDeleteஆம் நண்பா ரொம்பவே பின் இருப்பது மட்டுமல்ல, பின்னோக்கி போய்க்கொண்டும் இருக்கிரோம் வருகைக்கு நன்றி.
Deleteநன்றி சார் இனிய அறிமுகத்திற்கு/
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே...
Delete