என் மகனுடைய விருப்பத்திற்காக ஏழு வருடங்களுக்கு முன்னால் ஒரு இசை நிகழ்ச்சியை, பின்னணிப்பாடகர்கள் மனோ, சுஜாதா, ஹரிணி, ஸ்ரீனிவாஸ் இவர்களை துபாய் வரவழைத்து நடத்தினோம். ஹரிணியுடன் பேசிக்கொண்டிருந்த போது, நான் சொன்னேன்' உலகத்தில் யாருக்குமே இல்லாத ஒரு பெரிய கொடுப்பினை உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது உங்களிடமிருக்கும் இசை!இசையால் மட்டுமே மனிதர்களுக்கு விவரிக்க இயலாத ஆனந்தத்தையும் அமைதியையும் நிறைவையும் ஒரு சேரக் கொடுக்க முடிகிறது' என்றேன். உடனேயே ஹரிணி ' இந்த மாதிரி கொடுப்பினை உங்களை மாதிரி பெரியவர்கள் ஆசீர்வாதங்களினால் தன் கிடைக்கிறது அம்மா' என்றார்! இசைக்கு தன்னடக்கம் மிகவும் முக்கியமல்லவா? அது அவரிடம் நிறைய இருந்தது!
ஒரு பழைய பாட்டு இருக்கிறது, சீர்காழி கோவிந்தராஜன் பாடியது, 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்' என்று! அதை என் கொழுந்தனார் தன் மொபைலில் வைத்திருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்பவர்கள் எல்லோருமே, 'உடனே எடுத்து விடாதீர்கள், அந்தப்பாடலை கொஞ்சம் கேட்கிறோம்' என்பார்களாம்! நல்ல வார்த்தைக்களுக்கும் நல்ல இசைக்கும் மனிதர்கள் எப்படி அடிமையாகிறர்கள் பாருங்கள்!
இன்றைய ராகம் கானடா!
கானடா
காலை, மாலை, இரவு என்ற எல்லாப்பொழுதுக்கும் ஏற்ற ராகம். சாந்தமும், அமைதியும் தரவல்லது இந்த ராகம்!பெரும்பாலும் பக்திப்பாடல்களுக்கும் உருக்கமான காதல் பாடல்களுக்கும் இந்த ராகத்தை ஏராளமான இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். ஆலாபனைக்கு உகந்த இராகம் இது. கர்நாடக ராகமென்றாலும் ,ஹிந்துஸ்தானியில் தர்பாரி கானடா என்று கொண்டாடப்படுகிறது. தர்பாரி என்று பெயர் வர காரணமே,இந்த ராகத்தின் இனிமையில் மயங்கிய தான்சேன் ,இதில் பயிற்சி பெற்று ,அக்பர் தர்பாரில் பாடி, அனைவரையும் சொக்க வைத்தாராம்
இப்போது கானடா ராகப் பாடல்கள்!
எனக்கு கானடா ராக ஆலாபனை மிகவும் பிடிக்கும். அதுவும் மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும்போது எங்கிருந்தோ தென்றலில் தவழ்ந்து வரும் கானடா ஆலாபனையை கேட்க வேண்டும்! அத்தனை சுகமாக இருக்கும்! கானடா என்றால் 'அலைபாயுதே கண்ணா' பாடல் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்தப்பாடலை செம்பனார்கோவில் சகோதரர்கள் நாதஸ்வர இசையில் கேளுங்கள்! அத்தனை இனிமை!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து அறுபதுகளில் வெளி வந்த உத்தம புத்திரன் என்ற திரைப்படத்திலிருந்து ஒரு கானடா ராகப்படல்! 'முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே' என்ற இந்தப்பாடலை அத்தனை இனிமையாக, அழகாக டி.எம்.செளந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள். பாடல் அழகா, காட்சி அழகா என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவு பத்மினியும் சிவாஜியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்! நீங்களும் பார்த்து ரசியுங்கள்!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சற்றே மேற்கத்திய கலப்பில் ஒரு அருமையான கானடா ராக பாடல்! ரோஜா படத்தில் வரும் ' புது வெள்ளை மழை' தான் அது!! கேட்டு ரசியுங்கள்!
இனி பதிவர் அறிமுகங்கள்!!
1. சென்னையைப்பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை. ரவிசங்கர் கிருஷ்ணமூர்த்தி சென்னையைப்பற்றி மறக்க முடியாத பழைய நினைவுகளுடன் தன் வலைத்தளமான ' ரவி ஆதித்யா'வில் பகிர்ந்து கொள்கிறார். சுவாரசியமான எழுத்து இவருடையது!!

2. ஜெயகாந்தனின் சிறுகதைகளை ஒன்று விடாமல் சின்ன வயதில் விழுந்து விழுந்து வாசித்த அனுபவம் இருக்கிறது. அவரின் ' யாருக்காக அழுதான்', 'கருணையினால் அல்ல' கதைகள் என்றுமே நினைவுச்சுவடுகளில் அழுத்தமாக பதிந்து போனவை. அவரின் யுககசந்தி' சிறுகதையை இங்கே வெளியிட்டிருக்கிறார் பதிவர் கிருஷ்ணமூர்தி. புத்தகங்களை சுவாசிக்கப்போறேங்க என்கிறார் இவர்!இவரின் வலைத்தளம் முழுவதும் இவரைக் கவர்ந்த புத்தகங்களையும் சிறுகதைகளையும் பிரபலமானவர்களின் எழுத்தையும் ரசித்து எழுதிக்கொண்டே போகிறார்..
3. இவரின் எழுத்து கூர்வாள் போல கூர்மையாக இருக்கிறது! யாயும் ஞாயும் யாராகியரோ!' என்று ஆரம்பிக்கும் புகழ்பெற்ற குறுந்தொகைப்பாடலுக்கு அழகிய விளக்கம் கொடுத்திருக்கிறார் கயல் இங்கே! படித்துப்பாருங்கள்!!
4. ஒரு அழகான கிருஷ்ணன் சிலை. அது மழையில் நனைந்து விடப்போகிறதே என்ற பதட்ட உணர்வுடன் அழகிய மிக பாவங்களுடன் ஒரு குட்டிச் சிறுவன் பெருமாளுக்குக் குடை பிடிக்கிறான். தன்னை இந்தப்புகைப்படம் மிகவும் வசீகரித்து விட்டதாயும் பார்க்கும்போதே தானாகவே வெண்பாக்கள் கற்பனையில் வந்து விழுகின்றன என்றும் இலவசக்கொத்தனார் சொல்கிறார், இல்லை வெண்பாக்கள் இயற்றிய வண்ணம இருக்கிறார் இங்கு! வெண்பாக்களும் அற்புதம்! இந்த அழகிய புகைப்படமும் அற்புதம்! பார்க்கையில் நமக்கும் வெண்பாக்கள் மனதில் ஊற்றெடுக்கின்றன!!
5. ரசங்கள் பல வகையுண்டு. இங்கே சரிதா நெல்லிக்காய் ரசம் செய்ய அழகாய் சொல்லித்தருகிறார் தங்க மீன்கள் என்னும் இவரின் வலைத்தளத்தில்! !
6. கேழ்வரகில் தோசை, புட்டு, அடை இவற்றின் செய்முறைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் கலை இங்கே கேழ்வரகு கருப்பட்டி அல்வா செய்யும் குறிப்பைத்தந்திருக்கிறார்! செய்து பாருங்கள்!
7. குழந்தைகளை தற்போதெல்லாம் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எந்த அளவிற்கு அநாகரிகமாகவும் வக்ர உணர்வுகளை தூண்டும் விதமாகவும் உபயோகிக்கிறார்கள், எந்த அளவு சமூகப்பொறுப்பில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதை மிக அருமையாக சுட்டிக்காட்டுக்கிறார் ஓசை! இவரின் வலைத்தளமும் ஓசை..ஓயாத அலைகள் தான்!!
8. ஈகையின் முழு அர்த்தம் எத்தனை அழகானது! தானம் செய்வது மட்டும் ஈகை என்பதில்லை என்று அழகாய் சொல்கிறார் ஜெயா! ஈகையில்லாத நிலையில் சாதல் கூட இனிது என்கிறார் இவர் தன் 'நிற்க அதற்கு தக' என்னும் தன் வலைத்தளத்தில்!அவசியம் படித்துப்பாருங்கள்!
9. இளம் வயதில் கல்கி, அகிலன் போன்ற மாபெரும் எழுத்தாளர்களின் எழுத்தினூடே வளர்ந்தவள் நான். தேடித்தேடி அகிலனின் கதைகளைப் படித்தவள். என்னைப்போலவே திரு.செல்லப்பா யோகஸ்வாமியும் அகிலனின் சிறப்புகளையும் அவரின் கதை சொல்லும் ஆற்றலையும் ரசித்து ரசித்து மிக அருமையாக எழுதியிருக்கிரார் இங்கே!
10. ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றைப்பெற முடியும் என்று அழகாய் சொல்லுகிறார் தன் பெயரிலேயே தன் வலைத்தளத்தை வைத்திருக்கும் காந்தி பனங்கூர்! வெளிநாட்டில் வாழும் பல இலட்சக்கணக்கான தமிழர்களின் நிலைமையும் மன வேதனையும் இது தான்! வெளிநாட்டு வாழ்க்கை மதில் மேல் பூனை என்று இவர் சொல்வது மிகவும் சரியே!!

வணக்கம்
ReplyDeleteநல்ல முகவுரையுடன் இரசிக்கவைக்கும் பாடலுடன் இன்றைய அறிமுகத்தை அசத்தி விட்டீங்கள்... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.. த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்! தொடர்ந்து உற்சாகப்படுத்துவது மனதிற்கு மேலும் ஊக்கம் சேர்க்கிறது.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமாகிய தளங்களில் 6 வலைப்பூக்கள் புதிவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய ராகமும், புதிய அறிமுகங்களும் அருமை. நாளையும் புதிய ராகம் ரசிக்க வருவேன். நன்றி. தம2
ReplyDeleteதொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துவதற்கும் பதிவுகளைப் பாராட்டுவதற்கும் மனம் நிறைந்த வந்தனங்கள்!
Deleteசிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் மனமார்ந்த நன்றி தனபாலன்!
Deleteஉன் ஆனந்த மோகன வேணு கானமதில் அலை பாயுதே கண்ணா!..
ReplyDelete- இனிய கானடாவிலும் இன்றைய தொகுப்பிலும்!..
தொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துவதற்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
Deleteஇன்று என்ன ராகம் என்று ஆவலில் வந்தால்....அட கானடா...!
ReplyDeleteஎன்ன ஒரு அருமையான ராகம் (எந்த ராகம் தான் சோடை போகின்றது என்கின்றீர்களா....அதுவும் சரிதான்...) இந்த ராகம் சில சமயம் ஒரு சோகம் இழையோடுவது போல் தோன்றும்.....என்றாலும் மிகவும் மனதிற்கு ஒரு சூதிங்க் இஃபெக்ட் தரும் ராகம்....சரியாகக் கையாண்டால்...
நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல்கள் அருமையான பாடல்கள்...
கேள்வியின் நாயகனே, பொன்னென்பேன், பூமாலை வாங்கி வந்தேன், மன்னவா மன்னவா மன்னாதி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....ராயசெல்லப்பா சாரை மட்டும் தெரியும் மற்றவர்கள் புதிது...பார்க்கின்றோம்.
அழகான பின்னூட்டத்திற்கும் ரசித்துப்பாராட்டியதற்கும் இதயங்கனிந்த நன்றி துளசிதரன்!
Deleteஇசை பாட்டுடன் அறிமுகங்கள் - ரசித்தேன் ,ருசித்தேன்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் ரசித்து பின்னூட்டம் தந்தற்கும் இனிய நன்றி
Delete//'முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
ReplyDeleteஉள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே' என்ற இந்தப்பாடலை அத்தனை இனிமையாக, அழகாக டி.எம்.செளந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியிருப்பார்கள். பாடல் அழகா, காட்சி அழகா என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவு பத்மினியும் சிவாஜியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்! நீங்களும் பார்த்து ரசியுங்கள்! //
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். ரசித்......தேன் ! மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்......தேன்.
//ரோஜா படத்தில் வரும் ' புது வெள்ளை மழை' தான் அது!! கேட்டு ரசியுங்கள்!//
இதுவும் அருமையான பாடல் தான். பகிர்வுக்கு நன்றிகள்.
ரசித்து இனிய பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
Deleteபகிர்ந்த பாடல்கள் என்றும் இனியவை.
ReplyDeleteஇன்று இடம்பெற்ற பதிவர்கள் பதிவுகளையும் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் படிக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வந்து பதிவுகளை ரசித்து பாராட்டுவது மனதிற்கு உற்சாகமும் மகிழ்வையும் தருகிறது கோமதி அரசு! உங்களுக்கு என் அன்பு நன்றி!
Deleteஅசத்தல் அறிமுகங்கள். புது வெள்ளை மழை.... பாடல் இனிமையானிசைய்யிலும் கவிதையான வரிகளிலும் லயிக்கச்செய்த பாடல். த.ம.+
ReplyDeleteதொடர் வருகைக்கும் என் பதிவுகளை ரசித்துப் பாராட்டுவதற்கும் அன்பு நன்றி கவிப்ரியன்!
Deleteஇன்றைய தினம் அறிமுகமாயிருக்கும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் பிடித்தமான, இனிமையான ராகம். பகிர்ந்த பாடல்களும் மிக இனிமையான பாடல்கள் அக்கா. இவ்ராகத்தில் அமைந்த 'மலரே மெளனமா, நீ காற்று நான் மரம் என்ற பாடல்கள் விருப்பமான வையே. ரெம்ப நன்றிகள்.
அருமையான பின்னூட்டத்திற்கும் தொடர் வருகைக்கும் மனம் நிறைந்த வந்தனங்கள் ! மலரே மெளனமா எனக்கு மிக மிக பிடித்த பாடல். ஆனால் அது தர்பாரி கானடா ராகத்தில் அமைந்தது. கானடாவிலிருந்து முரண்பட விரும்பாததால்தான் அதை பாட்டில் போடவில்லை!
Delete‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்’னு கண்ணதாசன் பாடி நடித்த பாட்டு எனக்கு மிகப் பிடித்தமானது. மின்னல்வரிகள்-ன்ற தளத்து பேருக்குக் கீழ அதைத்தான் வெச்சிருக்கேன். உத்தமபுத்திரன் பாட்டுல் உற்சாகமான சிவாஜியும், க்யூட்டான பத்மினியும், அழகான அந்த ராகமும்.... கேக்கும் போதெல்லாம் தலையாட்ட வைப்பவையாச்சே. இலவசக் கொத்தனார், செல்லப்பா ஸார் இப்படி தெரிஞ்சவங்களுக்கிடையில சில புதியவங்களும் இன்னிக்கு எனக்கு அறிமுகம். நன்றி.
ReplyDeleteதொடர்ந்து வந்து உற்சாகப்படுத்துவதற்கும் பாடல்களை ரசித்து எழுதுவதற்கும் அன்பு நன்றி பாலகணேஷ்!
Delete//இசைக்கு தன்னடக்கம் மிகவும் முக்கியமல்லவா?//
ReplyDeleteஅது இல்லாதவர்களும் இருக்கிறார்கள்!! அவர்கள் பேசுவதை மறந்து கேட்க வைப்பது அவர்களின் வித்வத்!
செல்லப்பா ஸார் ப்ளாக் போயிருக்கேன். இலவசக் கொத்தனார் கமெண்ட்ஸ் படித்திருக்கிறேன். வலைப்பக்கம் சென்றதில்லை.
அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்ப் உ நன்றி ஸ்ரீராம்/!
Deleteஇன்றும் அருமையான இசை விருந்துடன் பதிவர் அறிமுகம் சிறப்பு! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சுரேஷ்!
Deleteஇன்றைய ராகங்களை ரசித்தேன் அனைத்தும் தேன்..
ReplyDeleteமுல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட பாடலே.
இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.
தமிழ் மணம் 7
மின்னஞ்சல் அனுப்பி இருந்தேனே.....
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
தொடர்ந்து உற்சாகமூட்டுவதற்கும் பதிவுகளை ரசித்து எழுதுவதற்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!
Deleteஎப்படியாவது உங்கள் கடிதத்திற்கு பதில் எழுத 2 நாட்களாக முயன்று கொன்டிருக்கிறேன். முடியவில்லை. விரைவில் பதில் எழுதுகிறேன்.
கானடா இராகத்தில் அமைந்த பாடல்களை கேட்கும்போது ‘கானடா என் பாட்டு தேனடா’ என்ற திரு பால முரளிகிருஷ்ணா அவர்கள் பாடிய வரிகள் நினைவுக்கு வருகிறது. செம்பனார் கோயில் சகோதரர்களின் நாதஸ்வர இசையையும் ‘முல்லை மலர் மேலே’ மற்றும் ‘புது வெள்ளை மழை’ பாடல்களையும் இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர் வருகைக்கும் பதிவுகளை ரசித்து எழுதுவதற்கும் மனம் கனிந்த நன்றி!
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!
Deleteமுல்லை மலர் மேலே எனக்கு மிகவும் பிடித்த பாடல்.மீண்டும் கேட்டு ரசித்தேன். அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteபாடல்களை ரசித்து பின்னூட்டம் கொடுத்ததற்கு அன்பு நன்றி கலையரசி!
Deleteவணக்கம்!
ReplyDeleteஇன்றைய வலைச் சரம் அறிமுக பதிவாளர்கள்
அனைவருக்கும்
தமிழ்அமுதத்தை அள்ளித் தரும் வாழ்த்துக்கள்!
இன்றைய எனது பதிவில், தாங்கள் குறிப்பிட்ட
""எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்" (ரிங் டோன்)
பாடல் தொடர்பான செய்திகளும்/ நீதிக் கதையும்
இடம்பெற்றுள்ளது தங்களது படத்துடன்!
கண்டு கருத்தினை இடுமாறு வேண்டுகிறேன்!
நன்றி!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
உங்கள் தளத்திற்குச் சென்று நீங்கள் எழுதியவற்றை படித்து ரசித்து, கருத்தும் இட்டு விட்டேன் வேலு!
Deleteஅம்மா,
ReplyDeleteநீங்கள் வலைச்சர பொறுப்பேற்றதை இன்றுதான் அறிந்தேன்... மனமார்ந்த வாழ்த்துகள்.
தாங்கள் குறிப்பிட்ட காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடலான " முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே " பாடலை போன்றே நீங்கள் அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களும் சிறந்து வளர வாழ்த்துகிறேன்.
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சாமானியன்!
Deleteஅருமையான பாடல்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!
Deleteவணக்கம் ! இசையோடு என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு இசைந்து வாழ்த்துகிறேன். நன்றிகள்.
ReplyDeleteஇரு பாடல்களையும் ரசித்தேன்.
ReplyDeleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அன்பின் மனோ சாமிநாதன்
ReplyDeleteபதிவு அருமை - 10 பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் இந்த நான்காவது பதிவினில் பதிவு செய்து ஒரு ராகத்தினைப் பற்றியும் எழுதி 43 மறுமொழிகளும் 7 வாக்குகளும் பெற்றது பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா