சரம் – மூன்று! மலர் – பதினொன்று!
நேற்றைய பதிவில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்ல தகுந்த இரண்டு இடங்களைப் பார்த்தோம். இன்றைய பதிவில் சில வழிபாட்டுத் தலங்களைப் பார்க்கலாம்....
குருத்வாரா பங்க்ளா சாஹேப்: தில்லியில் இருக்கும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களில் முக்கியமானது குருத்வாரா பங்க்ளா சாஹேப். எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே இருந்தாலும் இதுவரை ஏனோ போனதில்லை. என்னவர் பலமுறை சென்றதாகச் சொல்லுவார். அவர் சொன்ன சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ராஜா ஜெய்சிங் அவர்களின் ஒரு பங்களாவாக இருந்த இடத்தில் சீக்கிய மதகுருமார்களில் எட்டாம் குருவான குரு ஹர்க்ருஷன் அவர்கள் வசித்து வந்தார்கள். இங்கிருக்கும் கிணற்றுத் தண்ணீர் நோய் போக்க வல்ல அருமருந்தாக இருந்ததாகச் சொல்வார்கள். குரு ஹர்க்ருஷன் இறந்த பிறகு, அவ்விடத்தில் 1783-ஆம் ஆண்டு குருத்வாரா கட்டப்பட்டது. கிணறு இருந்த இடத்தில் “சரோவர்” என்று அழைக்கப்படும் குளமும் உண்டு. இக்குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்வது சீக்கியர்களின் வழக்கம். மிகப் பெரிய இக்குருத்வாராவில் எல்லா நாட்களிலும் லங்கர் என்று அழைக்கப்படும் உணவு வழங்கியபடியே இருப்பார்கள். தூரத்திலிருந்தே இக்குருத்வாராவின் தங்க கோபுரங்களை நீங்கள் பார்க்க முடியும்.
மலை மந்திர்: வட இந்தியர்கள் “மலாய் மந்திர்” என்று அழைக்கும் உத்திர ஸ்வாமி மலை கோவில் தில்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் உள்ள ஒரு முருகன் கோவில். ஒரு சிறிய மலை மீது முருகன் குடி கொண்டிருக்கும் இக்கோவில் 1973-ஆம் வருடம் தில்லி வாழ் தமிழ் மக்களால் கட்டப்பட்டது. பல்வேறு விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லியில் இருந்த போது சில முறை இங்கே சென்று வந்ததுண்டு. பெரிய வளாகத்தில் இயங்கி வரும் இக்கோவிலில் முருகப் பெருமானைத் தவிர கற்பக விநாயகர், சுந்தரேஸ்வரர், தேவி மீனாக்ஷி மற்றும் நவகிரஹங்களுக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. விழாக் காலங்களில் தில்லி வாழ் தமிழர்கள் அனைவருமே இக்கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
ஜமா மஸ்ஜித்: பழைய தில்லியில் இருக்கும் இந்த மசூதி இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி – கிட்டத்தட்ட 25000 பேர் இம்மசூதியின் முற்றத்தில் ஒரே நேரத்தில் தொழுகை செய்ய முடியும். முகலாய மன்னரான ஷாஜஹான் அவர்கள் தனது ஆளுமையில் கட்டிய கடைசி கட்டிடம் என்றும் சொல்வதுண்டு. கட்டத் தொடங்கிய ஆண்டு 1644. தில்லியின் செங்கோட்டை அருகிலேயே இருக்கிறது என்பதால் செங்கோட்டை பார்க்க வரும் போது இங்கும் செல்ல முடியும். தொழுகை நேரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மற்ற நேரத்தில் இங்கே செல்ல அனுமதி உண்டு. தில்லி வரும் அனைத்து இஸ்லாமியர்களும் இங்கே செல்லத் தவறுவதில்லை.
செயிண்ட் ஜேம்ஸ் சர்ச்: பழைய தில்லியில் இருக்கும் காஷ்மீரி கேட் பகுதியில் அமைந்த செயிண்ட் ஜேம்ஸ் சர்ச் தான் தில்லியின் பழமையான சர்ச். 1836-ஆம் ஆண்டு கர்னல் ஜேம்ஸ் ஸ்கின்னர் அவர்களால் கட்டப்பட்ட இந்த கிறிஸ்துவ தேவாலயத்தினை ஸ்கின்னர் சர்ச் என்றும் அழைப்பதுண்டு. கர்னல் ஜேம்ஸ் அவர்களுக்கு ஒரு சண்டையில் பலத்த அடிபட்டு விட, தான் பிழைத்துக் கொண்டால் தில்லியில் ஒரு தேவாலயம் அமைக்க வேண்டும் என நினைத்தாராம். உடல் நிலை சரியானபின் தனது செலவிலேயே இந்த தேவாலயத்தினை கட்டி முடித்தாராம். அப்போது இதற்கான செலவு – இந்திய ரூபாயில் 95000 மட்டுமே!
நொறுக்குத்தீனி வகையறாக்கள்:- தில்லியில் சாப்பாட்டுக்கு நன்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் வருங்காலத்துக்காக சேமித்து வைப்பதைக் காட்டிலும், நன்கு சாப்பிட்டு, நன்கு உடுத்தி, வீட்டை அலங்கரிப்பது என்று இவ்வாறு வாழுகிற வாழ்க்கையை நன்கு அனுபவிப்பார்கள்...:) ஒரு தெருவிலேயே ஒன்றிரண்டு அகர்வால் இனிப்புக் கடைகளும், சாலையோரக் உணவுக்கடைகளும் தென்படும்....:)
சமோசா:- கோதுமை மாவில் செய்யப்படும் இந்த சமோசாவில் உருளைக்கிழங்கு, பட்டாணி, பனீர், முந்திரி, திராட்சை இப்படி ஏகப்பட்ட ஐட்டங்கள் போடப்பட்டிருக்கும். அப்போது 5 ரூபாய்.
பிரெட் பக்கோடா:- இரண்டு பிரெட் துண்டங்களின் நடுவில் உருளைக்கிழங்கு பூரணமும், பிரெட்டின் அளவுக்கு ஸ்லைஸ் செய்யப்பட்ட பனீர் துண்டும் வைத்து பஜ்ஜி போல் கடலைமாவில் முக்கி பொரிக்கும் ஐட்டம் தான் இது. அப்போ 8 ரூபாய்!
படங்கள் உதவி - இணையம்
கச்சோரி:- இதுவும் கோதுமை மாவில் சப்பாத்தி போல் செய்து, இரண்டுக்கு நடுவில் மசாலா வைத்து பொரிக்கும் ஐட்டம் தான். தொட்டுக்கொள்ள சப்ஜி அல்லது சன்னா மசாலா பரிமாறப்படும்.
என்ன நண்பர்களே, தில்லியின் சில முக்கியமான வழிபாட்டுத் தலங்களைப் பற்றியும், நொறுக்குத்தீனி ஐட்டங்களையும் இன்று பார்த்தோம்! சரி! அப்படியே வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம்!
கட்டுமானத்துறை என்ற வலைப்பூவில் எழுதி வருபவர் வடுவூர் குமார் அவர்கள். அவரது பதிவுகளில் ஒன்றான பஹாய் கோவிலின் கதை எனும் பதிவில் இந்த வாரத்தில் பார்த்த தில்லி Lotus Temple எப்படி கட்டப்பட்டது என்பதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பதிவுலகில் மூத்தவர்களில் ஒருவரான சென்னைப் பித்தன் ஐயாவின் வலைப்பூ ”நான் பேச நினைப்பதெல்லாம்”. தும்மல் வருவது ஏன், தும்மல் வந்தால் வாழ்த்துவது எதற்கு என்று தெரிந்து கொள்ள அவரது வலைப்பூவில் எச்சச்ச எச்சச்ச,கச்சச்ச கச்சச்ச! பதிவினை படித்துப் பாருங்களேன்!
அன்பே ஆண்டவன் எனும் தலைப்பில் வலைப்பூவில் எழுதி வருகிறார் திரு சேதுராமன் அனந்தகிருஷ்ணன் அவர்கள். அவரது பதிவில் ஒன்றான ”அகத்தில் அமர்த்தலாம் குடி” இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக....
அரையாய் நிறை எனும் பெயரில் எழுதும் ஒருவரின் வலைப்பூ பொன்னார் மேனியனே!. ”சிந்தையிலே சிவனை வைத்து” எனும் பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக!
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் எனும் வலைப்பூவில் அறிவியல் சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறார் மஹாலக்ஷ்மி விஜயன். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலைப்பூவிலிருந்து “மின்விசிறிக்கு என்ன ஆச்சு?”எனும் பதிவு இன்றைய அறிமுகங்களில் ஒன்றாக!
என்ன நண்பர்களே இன்றைய தில்லி ஸ்பெஷலில் வந்த விஷயங்களை ரசித்தீர்களா? நாளை வேறு சில இடங்களையும் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
கோவில்கள் தரிசனம், சுவையான ஸ்நாக்ஸ்....
ReplyDeleteரசித்தேன், சுவைத்தேன்.
இன்றைய சரத்தில் கோர்க்கப்படிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
Deleteவழிபாட்டுத் தலங்களை சுற்றினோம்... நொறுக்குத்தீனிகள் ஸ்ஸ்...!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
Deleteபுதுதில்லியில் உள்ள குறிப்பிடத்தக்க வழிபாட்டுத்தலங்களுக்கு அழைத்துச் சென்றதோடு மட்டுமன்றி பசியாற்றியமைக்கும் நன்றி. அறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteசுற்றிப் பார்த்தால் பின்பு பசி எடுக்குமே.... அது தான்...:)
Deleteதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.
தில்லியை திரும்பவும் சுற்றிப்பார்த்தேன் உங்கள் தயவால். நன்றி! இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.
Deleteஅப்படியே காலாற நடந்து சுவாமி தரிசனம்.
ReplyDeleteநொறுக்குத் தீனிகளையும் ஒரு கை பார்த்தாயிற்று.
இன்றைய தொகுப்பு அருமை.. வாழ்க நலம்..
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
Deleteமிக அருமை.தொடர்ந்து அசத்துங்க.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்.
Deleteஅருமை! அந்த சர்ச்சும் குருத்வாராவும் நான் மிஸ் செஞ்சுருக்கேன்:(
ReplyDeleteமற்றபடி தீனிகள் எனக்கானதல்ல. கேமெராக் கண்ணால் தின்பதோடு சரி.
அடுத்த முறை போயிட்டு வந்துருங்க டீச்சர்.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
பிரெட் பக்கோடா- டெல்லியில் இருந்த போது சாப்பிட்டது பிறகு மறந்தே போய்விட்டது.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார் சார்.
DeleteMarubadiyum Delhi sutri parththadhu pol vulladhu. Arumayana photography. Samosa, etc., sappidanum pol irukku.
ReplyDeleteபடங்கள் இணையத்திலிருந்து எடுத்தது....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..
என் வலை பதிவை பார்வையிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பல தரப்பட்ட பயனுள்ள வலைதலங்களை பகிர்ந்து நற்பணியை ஆற்றுவதற்கு பாராட்டுகள். :)
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க.
Deleteசரத்தில் என் பூவும் சேர்த்தமைக்கு நன்றி.
ReplyDeleteதில்லி சமோசாவும் கச்சோரியும் பார்த்து நாக்கில் நீர் ஊறுகிறது!
சமோசாவையும், கச்சோரியையும் எடுத்துக்கொள்ளுங்கள்....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
ஆதி வெங்கட்,
ReplyDeleteமிக அருமையாக இருக்கிறது இந்த இடுகை.
பல தடவை டெல்லிக்கு சென்று வந்திருக்கும்
எனக்கே பல புதிய விஷயங்களை
சொல்லிக் கொடுக்கும் விதத்தில் இருக்கிறது.
இனிதே தொடர வாழ்த்துக்கள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
Deleteநான் ஹிந்தி ஆசிரியர். வட இந்தியா சென்றதில்லை.
ReplyDeleteவலைச்சரம் மூலம் டில்லியை காண்கிறேன். ஆதி வெங்கட் அவர்கள் என் பதிவையும் அறிமுகபடுத்தி உள்ளார் . நன்றி.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சேதுராமன் ஐயா.
Deleteசுற்றுலாக் குறிப்புகளுடன் வலைப்பதிவர் அறிமுகமும். புதுமை. அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராமலஷ்மி.
Deleteஅனைசத்து மதங்களின் ஆலயங்களையும் ஒன்றாக இணைத்து மதநல்லிணக்கை ஏற்படுத்தியமைக்கு நன்றி நொறுக்குத் தீனியோடு டெ்லியை சுற்றினேன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
Deleteஇங்கும் குருத்வாரா கோயில் இருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல், எந்த நேரம் போனாலும் அங்கு சாப்பாடு தடையின்றி நமக்கு கிடைக்கும். அதுவும் நம்மை உட்கார வைத்து பரிமாறுவார்கள் (பொதுவாக இங்கே எல்லாம் எங்கு போனாலும் buffey சிஸ்டம் தான்). அந்த உணவும் - சப்பாத்தி,சப்ஜி,,சாதம் பருப்பு என்று அமர்க்களமாக இருக்கும்.
ReplyDeleteகோயிலுக்கு வருவோரும் சப்பாத்தி மாவு,அரிசி,வெங்காயம் ,தக்காளி என்று வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள்.
பழைய தில்லிக்கு பெயர் - நிசாமுதின் தானே?
இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஆமாம் சார் நிசாமுதீன் தான்.. அங்கும் குருத்வாரா இருப்பது குறித்து மகிழ்ச்சி.
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.
உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் தான் தாத்தா நாவூறுகின்றது :))
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி இப்போது தான் பார்த்தேன் நீங்கள் வலைச்சரப்
பணியில் ஈடுபட்டிருப்பதை !இங்கு அறிமுகமான அனைவருக்கும் என்
மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .த .ம.7
பிந்தி வந்தாலும் தக்க சமயத்தில் அரங்கில் ஏற்றியும் விட்டேன் :))
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அம்பாளடியாள்.
Deleteடெல்லியின் வழிபாட்டு தலங்கள் நொறுக்கு தீனிகளை அறிந்தேன்! இன்றைய அறிமுகப்பதிவர்களில் சென்னை பித்தன் அவர்களை மட்டும் தெரியும். மற்றவர்கள் தளங்களுக்குச் செல்ல வேண்டும்!
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.
Deleteகோவில்கள், மற்றும் பலகாரங்கள், எல்லாம் மிக அருமை. இன்று இடம் பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete