சரம் – மூன்று மலர் – நான்கு
உலகம் முழுவதும் உள்ள நட்புகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை வலைச்சரம் மூலம் சொல்லிக் கொள்கிறேன். புதிதாக பிறந்திருக்கும் இந்த ஆண்டில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். நல்லதே நடக்கட்டும்.
இன்று வைகுண்ட ஏகாதசி. லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே திருவரங்கத்தில் குழுமியுள்ளார்கள். பகல்பத்து உற்சவங்கள் முடிந்து இனி ராப்பத்து உற்சவங்கள் நடைபெறும். நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் காணப்பட்டார். வைகுந்த வாசல் வழியாக கடந்து இன்று சிறப்புமிக்க ரத்னங்களை அங்கியாக அணிந்து கொண்டு, திருமாமணி மண்டபம் என்று சொல்லப்படுகிற ஆயிரங்கால் மண்டபத்தில் காட்சியளிப்பார்.
சரி! நாம் ஜெய்ப்பூர் பயணத்தை தொடர்வோமா? ஆமேர் கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்து நாங்கள் சென்றது ”JAL MAHAL” என்று சொல்லப்படுகிற ஏரிக்கு நடுவில் இருந்த மஹால் பார்க்க…. அழகாக அமைக்கப்பட்ட இந்த மஹாலில் ராஜாக்கள் ஓய்வு எடுக்க வருவார்களாம். உள்ளே செல்ல அனுமதியில்லாததால், அங்கே கிடைக்கும் சுவையான குல்ஃபியை ரசித்து சாப்பிட்டுக் கொண்டே சாலையில் நின்று ஜல்மஹாலின் எழிலை பார்த்து ரசித்தோம்.
நாங்கள் சென்றது ஏப்ரல் மாதத்தில் என்பதால் அந்த வெயிலுக்கு அங்கு கிடைத்த ருசியான குல்ஃபிக்களை அந்த இரண்டு நாட்களும் முடிந்த வரை சாப்பிட்டோம். அப்போ அதன் விலை பத்து ரூபாய் மட்டுமே.
வட மாநிலங்களில் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவை அதிகம் கிடைக்கும் என்பதால் பத்து ரூபாய் குல்ஃபியிலும் ஏராளமாய் இந்த உலர்பழங்கள் இடப்பட்டிருந்தன. குல்ஃபியின் குச்சியில் ஒரு பேப்பர் தட்டை குத்தி தருகிறார்கள். ஒழுகினாலும் தட்டிலேயே இருக்கும் இல்லையா! நல்ல ஐடியா! சுண்டக்காய்ச்சின பாலில் இடப்பட்ட உலர்பழங்களும் சேர்ந்து அபார சுவை. இன்றும் அந்த சுவை என் நாவில்…:)
அடுத்து என்ன! நாங்கள் தங்க ஒரு இடத்தை தேட வேண்டுமே. முன்கூட்டியே பதிவு செய்து கொள்வது எப்போதுமே நல்லது. நாங்கள் திடீரென புறப்பட்டதால் சிரமப்பட்டு ஒருவழியாக ஏற்பாடு செய்தாகிவிட்டது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலையில் கிராமத்து சூழலுக்கு சென்று வரலாம் என்று என்னவர் சொல்ல, எங்கே என்று யோசித்தபடி உறங்கிப் போனேன்.
நீங்களும் நாளை வாருங்கள் – எங்கு சென்றோம் என்பதை நாளை சொல்கிறேன்.
சரி! இன்றைக்கான வலைச்சர அறிமுகங்களைக் காணலாம்!
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்று தன்னுடைய தளத்தில் சொல்லும் ஜி.எம்.பி சார் தன்னுடைய நினைவடுக்குகளிலிருந்து பயண அனுபவங்களை இங்கேபகிர்ந்து கொள்கிறார்.
காவியக்கவி என்ற தளத்தில் இனியா அவர்களின் கவிதைகள் நிறைய உண்டு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக இதோ இங்கே!
ராஜ்மாவில் சப்ஜி செய்து தான் சாப்பிட்டிருக்கிறேன். இங்கே மேனகா சாத்தியா அவர்களின் சசிகாவின் கிச்சனில் ராஜ்மா கட்லெட் செய்வது எப்படி என்பதை பார்த்து நீங்களும் அதைச் சுவைக்கலாம்!
தேனம்மை லெஷ்மணன் அவர்களின் சமையல் தளம். இங்கே பண்டிகைக் கால நைவேத்தியங்கள் ஏராளமாக இருக்கு. Sample பதிவாக இங்கே ஒன்று..
தில்லையகத்து துளசிதரன் சார் அவர்களின் பிரிவு தரும் வேதனை…. பிரிந்து போகா வேதனையை வாசித்துப் பாருங்களேன்!
என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? நாளை வேறு சில பதிவர்களின் இணைப்புகளோடும், பயணம் பற்றிய குறிப்புகளோடும் சந்திக்கிறேன்!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
யாரது? புதிதாக உள்ளதே...:))
Deleteஇனிய ஆங்கிலப் புத்தாண்டு + வைகுண்ட ஏகாதஸி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் வை.கோ சார்.
Deleteமிக்க நன்றி சகோதரி! எங்கள் தளத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் (தங்கள் வெங்கட் ஜியின் பரம ரசிகர்கள் நாங்கள்) வலைச்சர வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
வேலைப் பளுவினால் வர இயலாமல் போனது. நேற்றுதான் வலைத்தளம் வந்தொம். தொடர்கின்றோம் தங்கள் வலைத்தளத்தையும் சகோதரி!
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசிதரன் சார்.
Deleteமிக்க நன்றி சகோ! என்னையும் அறிமுகப்படுதியமை யிட்டு மிக்க மகிழ்ச்சி. அறிமுகங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். தங்கள் பணி சிறக்கவும் என் வாழ்த்துக்கள் சகோ ...!
ReplyDeleteஅனைவருக்கும். இனிவரும் ஆண்டில் சிறப்பாக அமையவேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்....!
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் இனியா.
Deleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நடனசபாபதி சார்.
Deleteவலைச் சர அறிமுகத்துக்கு நன்றி. நானும் ஜெய்பூர் சென்று வந்ததை எழுதி உள்ளேன். உங்கள் அனுபவங்களைஉம் வாசிக்க ஆசை. இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி.எம்.பி ஐயா.
Deleteவைகுண்ட வாசலைக் காமிச்சதுக்கு நன்றி.
ReplyDeleteசரத்தில் இன்றைய மலர்களனைத்துக்கும் இனிய பாராட்டுகள்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் இங்கே சொல்லிக்கறேன்.
வைகுண்ட வாசலையும், பெருமாளையும் பதிவில் சேர்க்கும் போது நிஜமாகவே உங்களை நினைத்தேன் டீச்சர்...:)
Deleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இன்றைய தொகுப்பின் அறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ சார்.
Deleteமிக அருமை ஆதி.. வெங்கட்ஜியின் பரம ரசிகர்கள் நாங்கள் என்று துளசிதரன் சார் சொன்னதை ரசித்தேன். :) மிக அருமையான வர்ணனை ஆதி. நாங்களும் ஜெய்ப்பூர், ஹரித்வார், ரிஷிகேஷ், வைஷ்ணோதேவி ஆக்ரா மதுரா எல்லாம் சென்று வந்திருக்கிறோம். ஆனால் அப்போது எடுத்தது சாதாரண காமிரா ரோலில் இருக்கு. மேலும் மறந்தது போல் ஆகிவிட்டது. :) உங்கள் இடுகை படித்ததும் திரும்ப சென்று வந்தேன்.
ReplyDeleteடில்லியில் 3 வருடங்கள் இருந்ததால் அந்த குல்ஃபி மறக்க முடியவில்லை. அதே சுவை இப்போதும் நாவில் ஜொள்ளூறியது. ஹிஹி :)
அப்புறம் இது வலைச்சரம் ஆசிரியர் சீனா சாருக்கு:-
சீனா சார் வலைச்சர ஆசிரியர் பட்டியலில் என் பெயர் இல்லையே.. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தேடித் தேடிப் பார்த்தேன். இரண்டு வாரங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையைக் காணச் சென்றேன். ப்ளீஸ் என்னையும் அந்த( முந்தைய) ஆசிரியர் லிஸ்டில் சேர்க்குமாறு வேண்டுகிறேன். :) :) :)
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தேனம்மை மேடம்.
Deleteசிறப்பான அறிமுகத்ததுடன் புத்தாண்டு சிறப்புகளை சொன்னீர்கள். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் சசிகலா.
Deleteவலைச்சரம் ஆசிரியர் பணியினை சிறப்பாக செய்து கொண்டு இருக்கும், சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்களின் வாசகர்களில் நானும் ஒருவன்
த.ம.4
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தமிழ் இளங்கோ சார்.
Deleteகுல்ஃபியின் சுவை புத்தாண்டில் பல்கிப் பெருகட்டும்
ReplyDeleteபுத்தாண்டுச் சிறப்புச் சரத்தில் கோர்க்கப்பட்டுள்ள நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும்..
மிக்க நன்றி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஸ்ரீராம் சார்.
Deleteஇன்றைய பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி கில்லர்ஜி சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி ஜனா சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅறிமுகமான அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ராஜலஷ்மி அம்மா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஜெய்ப்பூர் கூட்டிட்டுப் போறதுக்கு முன்னால ஸ்ரீரங்க தரிசனம்... ஆஹா... அந்த ஜல் மஹால் கொள்ளை அழகா இருக்கு. அங்க ஓய்வெடுத்துத் தங்கி அனுபவிச்ச ராஜாக்கள் ரசனைக்காரய்ங்க.... குல்ஃபி இங்கயும் கிடைக்குது. ஆனா ட்ரைப்ரூட்ஸோட.... நெனக்கையிலயே நாவில் நீர் ஊறுகிறது. ஒருமுறை வெங்கட்டைக் கூட்டிக்கிட்டு (கடத்திக்கிட்டு?) போயிர வேண்டியதுதான். இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் எனக்கு நட்பு வட்டமே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. உங்களுக்கும் ரோஷ்ணிக்கும் மற்றும் வீட்டினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ் சார். வட மாநிலங்களில் சமோசாவில் கூட முந்திரி, பாதாம் இருக்கும்....:) தில்லியில் நான் சாப்பிட்ட பாதாம் பாலை பற்றி எழுதணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன். தில்லிக்கு போயிட்டு வாங்க....:)
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இன்று இனியா மற்றும் தில்லையகம் சகாக்களுக்காக நன்றி :) அந்த குல்பி கள் ஒட்டகத்து பாலில் செய்யப்பட்டவை என முன்பு சொன்னார்கள். விசாரித்தீர்களா?? நான் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டிருப்பேன்:)
ReplyDeleteஒட்டகப் பாலில் செய்வது இல்லை - எருமைப் பால் தான்! :) தயக்கம் இன்றி சாப்பிடலாம் மைதிலி!
Deleteபதில் தான் தங்களுக்கு கிடைத்து விட்டதே....:) தைரியமாக சாப்பிடுங்கள் இனி...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மைதிலி.
ஜல்மகாலில் இப்போது யாராவது இருக்கிறார்களா? பாதுகாப்பு எப்படி? நாங்கள் ஒருமுறை பஞ்ச துவாரகா சென்றிருந்த போது இந்த குல்பி ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கிறோம் - நிறைய! எங்கே பார்த்தாலும் வாங்கிவிடுவோம். அப்போது இதன் விலை ஐந்து ரூபாய்தான்! மிகவும் சுவையானது. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்! எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி ரஞ்சனிம்மா. ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் உபயோகப்படுத்துவதாக சொன்னார்கள்.
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஆதி., வாழ்க வளமுடன்.
ReplyDeleteபயண அனுபவம் இனிமையாக உள்ளது.
இன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கோமதிம்மா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... வலைச்சர ஆசிரியருக்கும், வாசகர்களுக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றிங்க சரவணன்.
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சொக்கன் சகோ. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க சத்யா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteசுவையான பயண அனுபவங்கள்!
ReplyDeleteசுவாரஸ்யமான அறிமுகங்கள்!!
மிக்க நன்றிங்க முஹம்மது நிஜாமுத்தீன் சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteசிறந்த பதிவர்கள் அறிமுகம்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ் சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅனைவருக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க ஜெயலஷ்மி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Delete"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
ReplyDeleteதுன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"
வலைப் பூ சகோதரியே!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றிங்க புதுவை வேலு சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅறிமுகமான பிரபல பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி குமார் சார். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஆதி,
ReplyDeleteராஜாக்கள் நல்லாதான் எஞ்ஜாய் பண்ணியிருக்காங்க !
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் சித்ராசுந்தர்.
ஆமாங்க...:) மிக்க நன்றிங்க சித்ரா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteகுல்ஃபி போல் இனித்த அறிமுகங்கள்
ReplyDeleteமிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். குல்பியை விட ஜல்மகாலை ரசித்தேன். நல்லதொரு பயணம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Deleteஅறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றிங்க..மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் !!சொர்க்கவாசல் புகைபடங்களுக்கு மிக்க மகிழ்ச்சி !!
ReplyDelete