வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை, நான் தேர்வு செய்த தலைப்புக்களில்
அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை
இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:-
1 எம்.ஏ.சுசீலாவின்
தப்பவிடக்கூடாத சிறுகதைகள் தொகுப்பிலிருந்து மிகவும் பிடித்த ஒன்று:-
கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்
தன்னில் தன்னைக் காண்பது- தமக்குள் பார்வையைச் செலுத்திக்
கறாராகத் தம்மைச் சுயவிமர்சனம் செய்து மேம்படுத்திக்கொள்ள விழைவோருக்கான சுய தேடல் பதிவுகள்.
(இவர்
கதைகளுள் எனக்கு மிகவும் பிடித்தது)
7. வில்விசை வித்தையிலே- மகேந்திரன் - வசந்த மண்டபம் (அழிந்து வரும் தமிழர் கலையைப் பற்றிய அருமையான
பதிவு)
சுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும்
பதிவு)
9. பேந்தா, கொந்தம், முக்குழி - சிறுவயது விளையாட்டுக்கள் பற்றிய
பதிவு – இலக்கியச்சாரல் – சொ.ஞானசம்பந்தன் (தமிழர் விளையாட்டு பற்றிய வரலாற்றுக்குதவும்
பதிவு)
10. தஞ்சை பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் –முனைவர் ஜம்புலிங்கம்
(சோழர் ஓவியம் குறித்த புரிதலுக்குப் பயன்படும் கட்டுரை )
12. முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - தந்தை மகளுக்கு எழுதிய
கடிதம் (என்னை மிகவும் கவர்ந்த ஒன்று) நா.முத்துநிலவன்.-
வளரும் கவிதை (கல்வியாளர்களும், பெற்றோர்களும், இளந்தலைமுறையினரும் அவசியம் படிக்க
வேண்டிய ஒரு கடித இலக்கியம்)
ஊமைக்கனவுகள் - (பிரான்சு
நூலகத்தில் 135(?) அதிகாரங்கள் கொண்ட திருக்குறள் இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தேடும்
பதிவு)
17. சிலந்தி வலைகள் - மனோ சாமிநாதன் - முத்துச்சிதறல்
மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பதிவும் என்னைக் கவர்ந்த விதம் குறித்து இரண்டு வரிகளாவது எழுத ஆசை தான். நேரமின்மை காரணமாக இணைப்பை மட்டும் கொடுத்து விட்டேன்.
நாளை சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி.
ReplyDeleteபுதுவைக்கு புகழ் சேர்க்க
மது மலராய் புறப்பட்டு
"வலைச் சரம்" என்னும் நறுமணம் வீசும் நாரினிலே!
ஆறு தலைப்பினிலே
வலைச்சரத்தில் முதல் நாள் - மலர்ந்தும் மலராத
வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!
வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!
வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'
ஐந்தாம் நாள் - "வேருக்கு நீர் ஊற்றுவோம்"
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
மூவிரண்டு மலர் எடுத்து சரமாக தொடுத்த தமிழ்த் தொண்டிற்கு நன்றிகளை கரங்களிலே குவித்தபடி தருகின்றோம் மலர்ச் செண்டு!
வலைர் சரம் ஆசிரியர் ஊஞ்சல் ஞா.கலையரசி.
சீரிய பணியினை சிறப்புற ஆற்றியமைக்கு! மிக்க நன்றி!
இன்றைய வலைச்சரத்தில் தேர்வாகிய சிறப்பு பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்/பாராட்டுக்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
அறிமுக தகவலை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி...
Deleteவருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!
Deleteமுதல் பின்னூட்டத்துக்கும் எல்லாருடைய பக்கங்களுக்கும் சென்று தகவல் தெரிவித்தமைக்கும் மிகவும் நன்றி வேலு சார்!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்... எமது வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கு மிகவும் நன்றி கில்லர்ஜி சார்!
Delete//வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற இரண்டாம் நாள் முதல் நேற்று வரை, நான் தேர்வு செய்த தலைப்புக்களில் அமைந்த பதிவுகளாகத் தேடிப் பிடித்துத் தொகுத்த நான், எனக்குப் பிடித்த பல்சுவை பதிவுகளை இன்று குறிப்பிட விரும்புகின்றேன்:- //
ReplyDeleteஆஹா, தங்களுக்குப் பிடித்த பல்சுவைப் பதிவுகளில் என்னுடையதும் ஒன்றாக இருப்பது பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
>>>>>
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பதிவு அக்காலத்திய பள்ளி வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த் பதிவு.
Deleteமுதல் வகுப்பு ஆசிரியர் பெயரைக் கூட நீங்கள் நினைவில் வைத்திருந்து எழுதியிருப்பது உங்கள் நினைவுத் திறனைக் காட்டுவதாக உள்ளது.
நரைத்த முடியைக் கொண்டிருந்த தலைமையாசிரியரின் தலையில் (வெள்ளை) மையை கவிழ்த்ததால் ‘தலை; 'மை' ஆசிரியரோ என்று நினைத்ததாக எழுதியிருப்பது நல்ல நகைச்சுவை. மேலும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது கற்றுக் கொண்ட வேடிக்கையான பாடலைக் கூட அப்படியே எழுதியுள்ளீர்கள் .ஒன்னும் ஒன்னும் ரெண்டு ஜப்பான் காரன் குண்டு என்று ஜாலியாக கணிதத்தைப் பாடல் மூலம் எப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி சார்!
//8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteசுவையான பள்ளி நினைவலைகள் (பள்ளிக்கூடம் பற்றிய வரலாற்றுக்குதவும் பதிவு) //
எனது தொடர்பதிவு ஒன்றினை சிறப்பித்து இங்கு அடையாளம் காட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அதன் ஆரம்ப முதல் பகுதிக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/03/1.html
நிறைவுப்பகுதிக்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html
தாங்கள் கொடுத்துள்ள இணைப்பு நேராக அதன் இரண்டாம் பகுதிக்குச் செல்வதாக உள்ளது.
>>>>>
தூக்கக் கலக்கத்தில் தவறாகக் கொடுத்து விட்டேன். இப்போது சரி செய்து விட்டேன் சார்! சுட்டியமைக்கு நன்றி!
DeleteKalayarassy G Sat Jan 31, 04:28:00 PM
Delete//தூக்கக் கலக்கத்தில் தவறாகக் கொடுத்து விட்டேன். இப்போது சரி செய்து விட்டேன் சார்! சுட்டியமைக்கு நன்றி!//
இப்போது OK ...... மிக்க நன்றி, மேடம்.
நன்றியுடன் கோபு
நல்ல தொகுப்பு.
ReplyDeleteத.ம. +1
த ம வாக்குக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட் சார்!
Deleteஇன்று வலைச்சரத்தில் தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் + தங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
ReplyDeleteooooo
பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்!
Delete//மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பதிவும் என்னைக் கவர்ந்த விதம் குறித்து இரண்டு வரிகளாவது எழுத ஆசை தான். நேரமின்மை காரணமாக இணைப்பை மட்டும் கொடுத்து விட்டேன்.//
ReplyDeleteஅடடா, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்தப்பதிவுகளுக்கே தாங்கள் வருகை புரிந்து, தங்களைக்கவர்ந்த விதம் பற்றி இரண்டு வரிகளோ, ஒரு வரியோ அல்லது அரை வரியோ எழுதிவிட்டுப் போனால், சம்பந்தப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் மனதில் ஓர் மகிழ்ச்சியும், மேலும் சிறப்பாகத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எழுச்சியும் ஏற்படக்கூடுமே ! :)
- VGK
கண்டிப்பாக எழுதுவேன் சார்!
Deleteஅடேயப்பா.. சகோதரீ! உங்கள் வாசிப்பின் ஆழ-அகலம் கண்டு மகிழ்ந்தேன். அதிலும் கு.அ., அம்பை, எஸ்.ரா. வரிசையில் என் பெயர்கண்டு மலைத்துப்போனேன்! உங்களன்பின் ஆழமன்றி வேறிலலை. தங்களால் பாராட்டப்பட்ட -நான் இதுவரை கவனிக்காத- படைப்புகளைச் சென்று படிப்பேன். தங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்.நன்றி சகோதரி. வணக்கம்.
ReplyDeleteவலைச்சர தொகுப்புக்காக உங்கள் வலைத் தளத்தைப் பார்வையிட்ட போது இந்தத் தலைப்பு என்னைக் கவர்ந்தது.
Deleteஎல்லோரும் தம் பிள்ளைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று போராடும் இக்காலத்தில், முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற வித்தியாசமான தலைப்பு என்னைக் கவர்ந்ததில் வியப்பில்லை தானே?
பிள்ளைகள் பன்முகத்திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் பாடத்தை உருப்போட்டு, தேர்வில் வாந்தியெடுத்து, மதிப்பெண் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வலைச்சரம் வழியாக உங்களது அறிமுகம் கிடைத்திருப்பது அறிந்து மகிழ்கிறேன். தொடர்ந்து உங்கள் படைப்புக்களைப் படித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்!
சிறப்பான அறிமுகங்கள். அதிலும் ஊமைக்கனவுகளின் நூற்றாண்டுக்கு மிற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும் பதிவு அருமையான இதுவரை கேள்விப்படாத தகவல். பகிர்விற்கு நன்றி. த.ம.+
ReplyDeleteவாக்குக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிப்பிரியன்!
Deleteபல்சுவைப் பதிவுகளில் ஒரு சுவையாக கீதமஞ்சரியும் இடம்பெற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி அக்கா. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பதிவுகளில் சரிபாதி நான் அறியாதவை. ஒவ்வொன்றாய் சென்று வாசித்துக் கொண்டிருக்கிறேன். விளக்கமாகத் தர இயலவில்லை என்ற வருத்தம் வேண்டாம். இருக்கும் சொற்ப நேரத்திலும் நல்ல பதிவுகளைத் தேடித் தேர்ந்தெடுத்து தொகுத்தளிப்பது பெரிய விஷயம். அதற்காக பாராட்டுகள். அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி கீதா! எல்லாவற்றையும் வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி!
Deleteஎன் வலைத்தளத்தினை இன்று பதிவர் அறிமுகத்தில் இணைத்திருப்பதற்கு என் மனம் நிறைந்த நன்றி கலையரசி! அறிமுகம் பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மனோ!
Deleteபல்சுவை பதிவுகளில் ஒன்றாக எனது பதிவினையும் தெரிவு செய்து இணைத்தமையறிந்து வாழ்த்துக்கள். அறிமுகப்பதிவர்களின் பதிவுகளைப் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதொடர்ந்து வந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்த உங்களுக்கு என் நன்றி சார்!
Deleteமுத்திரைப் பதிவர்களுக்கு முத்தான அறிமுகம்!..
ReplyDeleteஇனியதொரு தொகுப்பு - பல்சுவைப் பதிவுகள்!..
வாழ்க நலம்..
பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!
Deleteபல்சுவைப் பதிவர்கள் அசத்தல்.வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteபல்சுவை விருந்தளித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் அசத்தல் எனப் பாராட்டியதற்கும் நன்றி காயத்ரி!
Deleteபல்சுவைப் பதிவர்கள் அசத்தல்.வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteபல்சுவை விருந்தளித்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பல்சுவை தொகுப்பு மிக அருமை. படிக்காத பதிவுகளை படிக்கிறேன். நன்றி.
ReplyDeleteஇன்று இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி!
Delete