வலைச்சர அன்பர்களே நண்பர்களே...
எல்லோரும் நலமா இருங்கீங்களா...?
அன்பின் சீனா ஐயா இந்த ஒரு வாரத்திற்கு நீ ஆசிரியரா இரும்மான்னாங்க........நான் பாடு கூட்டத்துல உட்கார்ந்து வறுத்த கடலையை சாப்பிட்டுட்டு
இருந்தேன். திருவிழாவுல காணாம போனவர்களை ஒலி பெருக்கியில் கூப்பிடுவது போல திடீர்ன்னு சீனா ஐயா என் பெயரை கூப்பிட்டுட்டாங்க...அப்போது எனக்கு கமல் படத்துல வருகிற இந்த வசனம் தான் நினைவிற்கு வந்தது.
எனக்கு விளையாட்டில் ஜெயிக்கிறவனை பிடிக்கும், தோற்கிறவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா வெறுமன வேடிக்கை பார்க்கிறவனை சுத்தமா
பிடிக்கவே பிடிக்காது. அதனால சீனா ஐயாவுக்கு பிடித்தவனாகவே
மாறிட்டேன்.
பார்வையாளனே பேச்சாளனாய் உங்கள் முன்...
எனக்கு ஷாக் ஆகிடுச்சுங்க....இல்லையா பின்னே, ஒருவயதே ஆகி இருக்கிற என் கிட்ட இப்படி கேட்டா...? இங்க நாங்க
பழைய புதிய ப்ளாக்காரர்கள் எல்லோரும் இருக்கோம். நீயும் வந்து
பழகிக்க...அப்படியே உனக்கு தெரிந்த புதிய,பழைய பதிவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்...அப்படின்னு வாய்ப்பு கொடுத்தாங்க...! ஐயாவுக்கு நன்றி.
நிறைய பேருக்கு என்னை தெரியாது... சிலருக்கு என்னை தெரியும்...அதனால நான் வந்து...வந்து..வந்து...
சரிப்பா(சரிம்மா)....சொல்லு...
உங்க கூட எல்லாம் பழகலாம்னு வந்து இருக்கேன்.
இப்படி உர்ருன்னு பார்த்தா...? எப்படிப்பா...பழகுறது..?
என் மூஞ்சியே இப்படித்தாங்க என்ன செய்றது....சொல்லுங்க...
நமக்குள்ளாற ஒரு டீலு வச்சுக்கலாமா...டீலு
என் புள்ளைக்கு இந்த வாத்து பொம்மையை வாங்க விடுப்பா(ம்மா)
உன்னைய முன்ன பின்ன தெரியாது...நீ என்ன டான்னா...
பாத்தீங்களா பாத்தீங்களா எம்புட்டு கரக்கிட்டா சொல்லிட்டீங்க..
அதனாலதாங்க
வடிவேலுக்கு சொந்தக்காரங்களா இருப்பாங்க போல...(மைண்ட் வாய்ஸ்)
இல்லைய்யா....இல்லை...உங்க எல்லோருக்கும் தான் நான்
சொந்தமைய்யா..சொந்தம்...
மைண்ட் வாய்ஸ் வேற தெரியும் போல...ம்...
நீங்க கவுண்டர்ல பணத்தை கட்டிப்புட்டு வாங்க...சொல்லுறேன்
சரி சரி சொல்லு....சீக்கிரம்
இப்படி கால்ல வெந்நித்தண்ணி ஊத்துனாப்ல பறந்தா எனக்கு மறந்து
போகுமில்ல...
நாம எல்லாம் ப்ளாகர் வகைக்காரங்க இல்ல...அதான் சொந்தம்ன்னு
சொன்னேன்யா...
சரி இப்ப அதுக்கு என்ன...
என்ன இப்புடி கேட்டுப்புட்டீங்க...இந்த ஒரு வாரம் முழுவதும் உங்ககிட்ட
எல்லாம் பழகலாம்னு வர்றேன்...நீங்க எல்லோரும் வந்தா அப்படியே நல்லா பழகிடலாம்னு..
சரி சரி...இந்த வாரம் முழுதும் தினமும் வந்திடுறேன், கருத்து போட்டுடுறேன்,தமிழ் மணவாக்கு குத்திடுறேன். சரியா தாயி நான் இப்பவாது போகலாமா...
அண்ணேன்னா அண்ணே...தான் லபக்குன்னு விஷயத்தை புடிச்சுட்டீங்களே...
வாருங்கள் வலைச்சர மழையில் நனைவோம்.
திருமணம் ஆனதில் இருந்து ஓசூர் வாசம். கணவரும், மகனும் காலையில் சென்றால் சாயங்காலம் வருவார்கள். ( என்னம்மா..உங்க வீட்டில மட்டுமா..?எல்லோர் வீட்டிலேயும் அப்படித்தானே...என நீங்க நினைப்பது தெரியுது)
இல்லத்தரசி நான். என் அண்ணனின் திடீர் மரணத்தால் வீட்டில் தனியாக
இருக்க முடியவில்லை. வேலைக்கு சென்றால் சற்று மாறுதல் கிடைக்கும்.
ஆனாஎன்ன செய்வது...? ஆகையால் சிறுசேமிப்பு முகவர் ஆனேன். நிறைய
மக்களுக்கு சேமிப்பின் ருசியைக் காட்டினேன். அது அவர்களுக்கு தக்க
சமயத்தில் உபயோகமாய் இருந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
செய்வதை திருந்தச் செய்யனும் எனக்கு.2 வருடங்கள் முகவர் பணியில்
முதன்மையாக இருந்ததற்கு தருமபுரி கலக்டர் கையால் பரிசு வாங்கினேன்.( இப்போ தருமபுரி மாவட்டம் 2 பிரிந்து விட்டது)
இல்லத்தரசி நான். என் அண்ணனின் திடீர் மரணத்தால் வீட்டில் தனியாக
இருக்க முடியவில்லை. வேலைக்கு சென்றால் சற்று மாறுதல் கிடைக்கும்.
ஆனாஎன்ன செய்வது...? ஆகையால் சிறுசேமிப்பு முகவர் ஆனேன். நிறைய
மக்களுக்கு சேமிப்பின் ருசியைக் காட்டினேன். அது அவர்களுக்கு தக்க
சமயத்தில் உபயோகமாய் இருந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.
செய்வதை திருந்தச் செய்யனும் எனக்கு.2 வருடங்கள் முகவர் பணியில்
முதன்மையாக இருந்ததற்கு தருமபுரி கலக்டர் கையால் பரிசு வாங்கினேன்.( இப்போ தருமபுரி மாவட்டம் 2 பிரிந்து விட்டது)
இதனுடன் எல்.ஐ.சி முகவராகவும் செயலாற்றினேன் 9 வருடங்கள்.
உண்மை, நேர்மை, நாணயமாய் இருக்கும் பண்பே என்னை
வாழ்க்கையில் வெற்றியடையச் செய்தது, செய்கிறது,செய்யும்.
வாழ்க்கையில் வெற்றியடையச் செய்தது, செய்கிறது,செய்யும்.
10 வருட ஓடலில் முழங்கால் வலி. மருத்துவர் கண்டிப்பாக 9 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றார். ஆகையால் முழு நேர வீட்டரசியாக மாறி
விட்டேன்.
பொழுது போக்கு -
படம் வரைவது, ஓவியம் தீட்டுவது,கவிதை,கதை,சாமி பாடல்கள் எழுதுவது,குரோஷா, ஸ்வெட்டர் பின்னுவது, புத்தகம் வாசிப்பது, ,கோலம் போடுவது.
ஆந்திரா வாசம் அங்கேயும் போய் சும்மா இருக்க முடியுமா..? நீங்க வேற எதையோ நினைக்காதீங்க...தெலுங்கு கற்றுக்க முயற்சி பண்ணி ( நாமாகத்தான்)
பேச மட்டும் கத்துக்கிட்டேன். பொருளெல்லாம் போய் கடையில வாங்கனுமே....அந்தப் பெயரை யெல்லாம் சொல்லிச் சொல்லி பார்த்து மனப்பாடமாக்கி
பேச மட்டும் கத்துக்கிட்டேன். பொருளெல்லாம் போய் கடையில வாங்கனுமே....அந்தப் பெயரை யெல்லாம் சொல்லிச் சொல்லி பார்த்து மனப்பாடமாக்கி
வைத்துக்கொண்டேன்( வாய்ப்பாடு தான் நினைவுக்கு வந்தது) முதல்ல
அங்கே சரியா பேச பழக முடியலை போகப் போக நல்லா பேசுறீங்கன்னு
அவர்களே ஆச்சரியப்பட்டார்கள். ஒரு முறை காய்கறி கடையில் தெலுங்கில் சண்டை போட்டதைப் பார்த்து விடுமுறைக்கு வந்திருந்த என் சகோதரியின் மருமகளுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது!!!!
அங்கே சரியா பேச பழக முடியலை போகப் போக நல்லா பேசுறீங்கன்னு
அவர்களே ஆச்சரியப்பட்டார்கள். ஒரு முறை காய்கறி கடையில் தெலுங்கில் சண்டை போட்டதைப் பார்த்து விடுமுறைக்கு வந்திருந்த என் சகோதரியின் மருமகளுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது!!!!
இப்போ..அரபிக் தெரியுமா...? அப்படின்னு கேட்காதீங்க ப்ளீஸ்...ஏன்னா..?
தெரியாது. கத்துக்கல, கஷ்டமா இருக்குங்க. அதான் சரி அப்படின்னு
விட்டுட்டேன்.
தெரியாது. கத்துக்கல, கஷ்டமா இருக்குங்க. அதான் சரி அப்படின்னு
விட்டுட்டேன்.
இப்போ...ஜாலியா..எனக்கு பிடித்ததை செய்துக்கிட்டு,என்னுள் என்னை எடை போடாமல் நோக்கிக்கிட்டு இருக்கிறேன், ( இதற்கு ஒரு அசாத்தியமான துணிச்சல் வேணும்னு தோணுது.. கொஞ்சம் கொஞ்சமா பழகுகிறேன்..)
நான் முன்பு எழுதின கவிதை, கதை , சாமி பாட்டு எல்லாம் எழுதின டைரியைபடிக்கக்கேட்டவரிடம் கொடுத்து காணாம போச்சு.ஆனா இப்போ கவலை
இல்லை. அதான் ப்ளாக் இருக்கே. இது தான் இப்போ என்னோட டைரி.
இல்லை. அதான் ப்ளாக் இருக்கே. இது தான் இப்போ என்னோட டைரி.
மற்றவர்களுக்கும் அது உபயோகமாக இருக்கிறது.
எளிமையா, யதார்த்தமாக இருப்பது எனக்கு பிடிக்கும். அதனால தானோ
என்னமோ ப்ளாகிற்கு என்னை அறியாமல் எளிமையான யதார்த்தம்
அப்படின்னு என்னோட பெயருடன் வைத்து இருக்கிறேன்.
அப்படின்னு என்னோட பெயருடன் வைத்து இருக்கிறேன்.
எழுத வேண்டும் என்கிற ஆவலில் ப்ளாக் ஆரம்பித்த போது சிலர் உங்க
சமையலையும் அதில் போடுங்க, அப்பப்போ கேட்கிறதுக்கு நாங்க பார்த்துக்
கொள்ள ஏதுவாக இருக்கும் என கேட்க பயணம் போய்க் கொண்டு
இருக்கிறது.
கொள்ள ஏதுவாக இருக்கும் என கேட்க பயணம் போய்க் கொண்டு
இருக்கிறது.
என்னுடைய சில பதிவுகள் உங்கள்
பார்வைக்கு…!!!
40 வயதுக்கு மேலே பெண்களுக்கு
மென்சுவாசம் வேண்டும் அல்லவா…? அதை பற்றிய கவிதை - .மென்சுவாசம் விட
வயது ஏறஏற வருகிற நிதானம் உண்மை தானே…? - வயது தந்த தானம் - கவிதை
வியாழன் வியாழன்…பாமாலை பதிவிடுகிறேன். எழுதுவது நானல்ல..என்னுள் இருந்து அவர் தான் எழுதுகிறார் என
நினைக்கிறேன். முதல் பாமாலை - சாய் பாமாலை மற்றொன்று
மரம் செடிகளோடு பேசி இருக்கிறீர்களா..?
அதற்கு நன்கு புரியும். நம் நேசத்தை ஸ்வீகரிக்கும். என்னுடய அனுபவம் - நேசம்
புதிதாக எதையாவது செய்யும் போது நம்முடைய மூளை புத்துணர்ச்சி அடைவதை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். அதுவே என் சமையலில் பல முறை பரீட்சிர்த்துப்பார்க்க தூண்டுதலாக இருக்கிறது.
சமையலில் புதிதாக எனக்கு தோன்றுவதை
செய்கிறேன். விதவிதமாகவும், சுவையாகவும், புதிய முறையிலும் வருவது இதனால் தானோ என்னவோ!! .
மாவடு - சுலபமா மாவடு போடலாம் பாருங்க.
நாம் எல்லோரும் சுற்றுப்பயணம் போவோம், உள்நாடு, வெளிநாடு சமதளம், மலைகள், பள்ளத்தாக்கு, கடல் மேல் மற்றும் நீர் மூழ்கிக் கப்பலிலும் கடலின் அற்புதங்களைக் காணவென.
கிணற்றுக்குள் போயிருக்கீங்களா...? என்னது இல்லையா...? வாங்க போகலாம். என்ன பயந்துட்டீங்களா...? இல்லங்க நிஜமாகத்தான். அதெல்லாம் மூச்சு முட்டாம... கூட்டிக்கிட்டு போறேன். என்ன மனசை திடப்படுத்திட்டு ரெடியாகிட்டீங்க போல..வா ஒருகை பார்க்கலாம் அப்படின்னு சொல்வது கேட்கிறது. ஓகே.
இது நான் வரைந்த ஆயில் பெயிண்ட்.
போஸ்ட் கார்டு அளவுள்ள படத்தை பெரிய அளவாக கான்வாஸ் போர்டில் வரைந்த படம்.
இன்று எங்களின் 28வது திருமணநாள் ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள்.
வரட்டா...வரட்டா... வரட்டா..
சுய அறிமுகம் மிக அருமை.
ReplyDelete//இன்று எங்களின் 28வது திருமணநாள் //
மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். வாழ்க !
மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும்,இனிய ஆசிர்வாதத்திற்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.
Deleteகுழலின்னிசை வரவேற்பு இசை இசைத்து,
ReplyDelete"வலைச்சரம்" வாசலிலே நின்ற படி சகோதரி உமையாள் காயத்ரி அவர்களை
வருக வருக என்று வரவேற்று மகிழ்கின்றது.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
குழல் நாதம் கேட்டேன்
Deleteஅதில்
புதுவை வேலுவின்
அன்பு கண்டு நெகிழ்ந்தேன்...
வலைச்சர வாசலில் நின்று
இன்முகமாய் வருகை நல்கிய
அன்பு சகோவிற்கு
அன்பான நன்றிகள்.
வருக வருக :) இவ்வார ஆசிரிய பணிக்கு மற்றும் இனிய மண நாள் வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவரவேற்புக்கும், ஆசிரியப்பணி மற்றும் திருமண நாள் வாழ்த்திற்கும்...இனிய நன்றி ஏஞ்சலின்
Deleteஅன்புச் சகோதரி உமையாள் காயத்ரி
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள்
நட்புடன் சீனா
அன்பின் ஐயா...தங்களின் பாரட்டிற்கும், ஆர்வாதத்திற்கும்...மனம் நிறைந்த நன்றி
Deleteஹல்லோ சிஸ்டர்
ReplyDeleteபீன்ஸ் துவட்டல் பாக்கணும் - திருமண நாள் ஸ்வீட் சாப்பிடனும் - வேலை நெரெய இருக்கு - செய்யறேன்.
பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பீன்ஸ் துவட்டல் பாக்கணும் - திருமண நாள் ஸ்வீட் சாப்பிடனும் - வேலை நெரெய இருக்கு - செய்யறேன்.//
Deleteமிக்க நன்றி ஐயா
ஹல்லோ சிஸ்டர்
ReplyDeleteஎங்க நாட்டு ஸ்டைல் - காலி ஃப்ளவர் சூப் - மாவடு - எப்ப அனுப்பப் போறீங்க
நாக்க்க்க்க்க்கு ஊறுது
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எங்க நாட்டு ஸ்டைல் - காலி ஃப்ளவர் சூப் - மாவடு - எப்ப அனுப்பப் போறீங்க //
Deleteஐயா பார்சல் அனுப்பி விட்டுத்தான் வந்து கருத்து போடுறேன்....
நன்றி
அன்புச் சகோதரி உமையாள் காயத்ரி
ReplyDeleteஇன்னும் படிக்க வேண்டியது நெரெய இருக்கு - அவ்வளவு எழுதி இருக்கீங்க - படிச்சுடறேன்.
தங்களது சுய பதிவுகள் வேற இருக்கு - அத்தனையும் படிக்கணூம் - படிச்சுடறேன் - மறு மொழி போட்டுடறேன்.
பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Deleteபெருமையா படிச்சுட்டு மறுமொழி வழங்குங்க.
தமிழ் மண ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteசரியா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தமிழ் மண வாங்கிற்கு நன்றி ஐயா
Deleteவணக்கம்
ReplyDeleteசுய அறிமுகம் மிக அருமையாக உள்ளது ...
தங்களின் 28வது திருமண வாழ்த்துக்கள்.... தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்ந்து என்னை ஊக்கப்படுதுவதற்கும்,மணநாள் வாழ்த்திற்கும் நன்றி ரூபன்
Deleteசகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.4
தங்களின் இனிய வாழ்த்திற்கும், மனம் நிறைந்த ஆசிர்வாதத்திற்கும் நன்றி ஐயா
Deleteதமிழ் மண வாக்கிற்கும் நன்றி ஐயா
Deleteவலைசர தொகுப்பாசிரியர் பணிக்கும் தங்கள் திருமண நாளுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபட்ட திருவிழா ஓவியம் அருமை
தொகுப்பாசிரியர் பணிக்கும், திருமன நாள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஓவியத்தை பாராட்டியதற்கும் நன்றி
செய்வதை திருந்தச் செய்வீர்கள்... அறிமுக பதிவிலும் செய்து இருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கும் அன்பு சகோவிற்கு மிக்க நன்றி
Deleteவலைச்சரம் ஆசிரியரா..! மிக்க சந்தோஷம். ஆரம்பமே அருமையாக உள்ளது. தங்களை நகைச்சுவையாக அறிமுகப்படுத்தியவிதம் ரசிக்க வைத்தது.படம் வரைவது, ஓவியம் தீட்டுவது,கவிதை,கதை,சாமி பாடல்கள் எழுதுவது,குரோஷா, ஸ்வெட்டர் பின்னுவது, புத்தகம் வாசிப்பது, ,கோலம் போடுவது. அப்பப்பா..!!!!!!!! எவ்வளவு திறமைகள். வாழ்த்துக்கள்..
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி விச்சு.
DeleteIm coming after
ReplyDeleteIm coming after
ReplyDeleteஆசிரியப்பணி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள். சுய அறிமுகம் அருமையாக உள்ளது. வித்தியாசமான அறிமுகமும், தங்களின் பதிவுகளும் எங்களைக் கவர்ந்துள்ளன. தொடரின் தலைப்பு வாங்க பழகலாம் தங்களின் நட்பின் மேலான ஈடுபாட்டைத் தெளிவுபடுத்தியது.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.com
www.ponnibuddha.blogspot.com
ஆசிரியப்பணி ஏற்றமைக்கு வாழ்த்துக்கள். சுய அறிமுகம் அருமையாக உள்ளது. வித்தியாசமான அறிமுகமும்//
Deleteவாழ்த்துக்களுக்கு, பாராட்டுக்களுக்கும் நன்றி
தங்களின் பதிவுகளும் எங்களைக் கவர்ந்துள்ளன.
சந்தோஷமாக இருக்கிறது ஐயா.
தொடரின் தலைப்பு வாங்க பழகலாம் தங்களின் நட்பின் மேலான ஈடுபாட்டைத் தெளிவுபடுத்தியது.//
ஆம் ஐயா வலைப்பூக்கள் வாயிலாக அருமையான அன்பான நட்பு வட்டம் கிடைத்து இருக்கிறது அல்லவா
.
வலைச்சர ஆசிரியர் + திருமண வாழ்த்துக்கள் ...அரபி மொழியை கில்லர்ஜீயிடம் எளிதாய் கற்றுக்கலாமே:)
ReplyDeleteத ம 8
ஏனய்யா.. நாங்க எதுக்கு இருக்கின்றோம்!?..
Deleteஆசிரியப் பணிக்கும், திருமண நாள் வாழ்த்திற்கும் அன்பான ஆசிர்வாதத்திற்கும் நன்றி பகவாஜி அவர்களே.
Deleteநிறைய நண்பர்கள் அரபிக் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். யார் சொல்லித்தந்தாலும் கற்றுக் கொள்ள ஆசையுடன் இருக்கிறேன்.
ஏனய்யா.. நாங்க எதுக்கு இருக்கின்றோம்!?.//
Deleteதுரைராஜூ ஐயாவின் அன்பிற்கு நன்றி
வாருங்கள் அக்கா..
ReplyDeleteகலக்கலான வாரமாக அமையட்டும்...
திருமண நாள் வாழ்த்துக்கள்.
கலக்கலான வாரமாக அமையட்டும்...
Deleteதிருமண நாள் வாழ்த்துக்கள்.//
அன்புடன் நன்றி சகோ
முதற்கண் திருமண நாள் - நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteகல்யாணத்துக்குத் தான் பத்திரிக்கை வைக்கலே!..
இப்பவாவது ஸ்வீட் கொடுத்தீங்களே!.. வாழ்க வளமுடன்!..
இனிய ஆசிர்வாதத்திற்கு முதற்கண் நன்றி.
Deleteகல்யாணத்துக்குத் தான் பத்திரிக்கை வைக்கலே!.//
ஹஹஹஹா....!!!
இப்பவாவது ஸ்வீட் கொடுத்தீங்களே//
இப்போது கொடுத்துட்டேன்...நன்றி ஐயா
//..எழுதுவது நானல்ல..
ReplyDeleteஎன்னுள் இருந்து அவர் தான் எழுதுகிறார்!..//
சாய்நாதா!.. சரணம்.. சரணம்!..
சற்குருநாதா!.. சரணம்.. சரணம்!..
அது தான் உண்மை ஐயா நன்றி
Deleteஇனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உமையாள்.
ReplyDeleteஉங்க அறிமுகத்துடனான ஆரம்பம் அருமை. பாராட்டுக்கள்.
திருமண நாள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ப்ரியசகி
Deleteதிருமண நாள் வாழ்த்துக்கள்.... ...சுவாரசியமான பதிவு...
ReplyDeleteஅன்பானவாழ்த்திற்கு நன்றி அனுராதா பிரேம்
Deleteஇனிய மண நாள் வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி!
ReplyDeleteதங்களின் இனிமையான ஆசிர்வாதத்திற்கு நன்றி மனோ அக்கா.
Deleteதி கிரேட் தேவகோட்டையா ? கொக்கா ?
ReplyDeleteதங்களின் சுய அறிமுகம் செட்டிநாட்டு சமையலுடன் மணத்தது
இன்று 28 வது திருமண நாள் கொண்டாடும் சகோதரி திருமதி. ஆர். உமையாள் காயத்ரி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
ஸ்வீட் நல்ல சுவை உப்புதான் கொஞ்சம் கூடி விட்டது.
வடிவேலு சொன்னது மாதிரி எதையுமே ‘’ப்ளான்’’ போட்டு செய்யனும் வலைச்சர ஆசிரியர் + திருமண நாள் இந்த ஏரோப்ளேன் எனக்கு பிடிச்சு இருக்கு.
சகோ எனக்குத்தெரிய உலகத்திலேயே பழகுவதற்க்கு, எழுதுவதற்க்கு சுலபமான மொழி அரபிக்தான் பார்ப்பதற்க்கு, கேட்பதற்க்கு குழப்பமாக, பிரமாண்டமாக தோன்றும் எஜிப்த் பிரமிட் போல... எஜிப்தில் இருக்கும்போதே இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்
ஆனால் ? நமது இனிய தமிழை அரேபியர்களால் எழுத முடியாது நான் பலபேரிடம் சவால் இட்டு இருக்கிறேன்.
தங்களுக்காகவே இன்னும் இரண்டு தினங்களில் அரபிக்பற்றி எனது தளத்தில் ஒரு பதிவு இடுகிறேன் தங்களுக்கு நேரமிருக்காது இருப்பினும் 10 நிமிடம் ஒதுக்கி அவசியம் பாருங்கள் காரணம் உங்களுக்காகவே இந்தப்பதிவு.
நாமெல்லாம் தேவகோட்டைக்காரவுங்க.... ம் அது.
தங்களின் அறிமுக பதிவுகளில் சில நான் படிக்காததாக உள்ளது அவசியம் படிப்பேன்.
தமிழ் மணம் – 8
(நான் அதிகாலையிலேயே முதல் ஆளாக கைப்பேசியில் படித்து விடுவேன் கருத்துரை இடுவதுதான் மாலையில் கணினியில் சூழ்நிலை அப்படி... கண்டிப்பாக தினம் ஆஜராகி விடுவேன்)
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
முதலில் திருமண நாள் வாழ்த்துக்கு நன்றி சகோ.
Deleteசுய அறிமுகம் செட்டிநாட்டு சமையலுடன் மணத்தது //
கல்யாண நாள் அதுவுமா இனிப்பு, கல்யாண சூப் கொடுக்காட்டி எப்படிசகோ
ஸ்வீட் நல்ல சுவை உப்புதான் கொஞ்சம் கூடி விட்டது//
மாவடுவும் சேர்ந்து விட்டதோ...?
வடிவேலு சொன்னது மாதிரி எதையுமே ‘’ப்ளான்’’ போட்டு செய்யனும் வலைச்சர ஆசிரியர் + திருமண நாள் இந்த ஏரோப்ளேன் எனக்கு பிடிச்சு இருக்கு. //
அது எதேச்சையாக அமைந்து விட்டது
தங்களுக்காகவே இன்னும் இரண்டு தினங்களில் அரபிக்பற்றி எனது தளத்தில் ஒரு பதிவு இடுகிறேன் //
மிக்க நன்றி சகோ
தங்களின் அறிமுக பதிவுகளில் சில நான் படிக்காததாக உள்ளது அவசியம் படிப்பேன்//
நேரம் கிடைக்கும் போது படித்து விட்டு மறுமொழி இடுங்கள்.
தமிழ் மண வாக்கிற்கும் மற்றும் அனைத்திற்கும் நன்றி
கல்யாண நாளுக்கும் வலைச்சர வாரம் இனிதாய் அமையவும் வாழ்த்துக்கள் காயத்ரி!
ReplyDeleteதங்களின் ஆசிர்வாதத்திற்கும், வலைச்சர வாரம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் கூறிய அதற்கும்
Deleteமிக்க நன்றி அக்கா.
ஆரம்பமே அசத்தல். பேச்சு நடையில் உண்மையிலேயே ந்தார்த்தமாக இருக்கிறது உங்கள் பதிவு. த.ம.+
ReplyDeleteஆரம்பமே அசத்தல். பேச்சு நடையில் உண்மையிலேயே ந்தார்த்தமாக இருக்கிறது உங்கள் பதிவு. த.ம.+//
Deleteஅன்புடன் பாராட்டியதற்கும் தமிழ் மண வாக்கு வழங்கியமைக்கும் நன்றி சகோ
ஆஹா! வாருங்கள் பன்முகக் கலைஞர் சகோதரி! அறிமுகப் படலமே அருமை! முதலில் வாழ்த்துக்கள்2 (ஸ்கொயர்) வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் மணநாளிற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் பலவகையில் பெருக ஸ்கொயர்!
ReplyDeleteஆயில் பெயிண்டிங்க் அருமை! உங்கள் சூப் செய்து சாப்டுருக்கமே!
டாங்க்ஸ்பா ஸ்வீட்டுக்கு...என்ன கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!
தொடர்கின்றோம்!
ஆஹா! வாருங்கள் பன்முகக் கலைஞர் சகோதரி! அறிமுகப் படலமே அருமை! முதலில் வாழ்த்துக்கள்2 (ஸ்கொயர்) வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் மணநாளிற்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் பலவகையில் பெருக ஸ்கொயர்! //
Deleteமிக மிக மிக.மிக்க......நன்றி சகோஸ்
ஆயில் பெயிண்டிங்க் அருமை! உங்கள் சூப் செய்து சாப்டுருக்கமே! //
பராட்டிற்கும், முன்பே சூப் செய்து ருசித்தமைக்கும் நன்றி
டாங்க்ஸ்பா ஸ்வீட்டுக்கு...என்ன கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! //
ஹஹஹா...!!!
சகோதரி! நம்ம கில்லர்ஜி சொல்றத நம்பிப்புடாதீங்க....அவரு சொல்லுவாரு நாங்க மொய் வைக்காமப் போய்டுவோம்னு....இப்பக் கூட பாருங்க மொய் வைச்சுட்டுத்தான் ஸ்வீட்டே எடுக்க போனோம்...ஸ்வீட்டுதான் கைக்கு வர மாட்டேங்குது....
ReplyDeleteஸ்வீட் Copy எடுத்து Paste பண்ணினால் வருமே.....
Deleteநாங்களெல்லாம் ஒரு ஊருக்காரவுங்க... எங்க கிட்ட மோதாதீங்க... என் கையில கோடரி இருக்கு, சகோ கையில மிளகாய்ப்பொடி இருக்கு ஜாக்கிரதை.
Deleteசகோதரி! நம்ம கில்லர்ஜி சொல்றத நம்பிப்புடாதீங்க....அவரு சொல்லுவாரு நாங்க மொய் வைக்காமப் போய்டுவோம்னு....இப்பக் கூட பாருங்க மொய் வைச்சுட்டுத்தான் ஸ்வீட்டே எடுக்க போனோம்...ஸ்வீட்டுதான் கைக்கு வர மாட்டேங்குது.//
Deleteஹஹஹஹ......ஹா.....!!!!
மொய் வைத்தமைக்கு....நன்றி சகோஸ்
உமையாள்,
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
சுய அறிமுகம் அருமையாக உள்ளது. எல்லாவற்றிலும் கலக்கும் நீங்கள் ஒரு சகலகலாவல்லிதான். இப்போ நேரே மாவடுவுக்குத்தான் போறேன்.
திருமண நாள் வாழ்த்திற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி சித்ரா.
Deleteஆஹா..மாவடுக்கா...போங்க போங்க...
திருமண நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுக உரை அருமை.
எத்தனை திறமைகள் உங்களிடம் வியந்து போகிறேன்.
வாழ்த்துக்கள். ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
திருமண நாள் வாழ்த்திற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி கோமதி அக்கா
Deleteஅறிமுகம் அருமை. இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்திற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி கவிநயா.
Deleteஅட்ட்காசமான அறிமுகம் கா . வாழ்த்துகள் . உங்களோட ஓவியம் அதிஅற்புதம் .
ReplyDeleteஅட்ட்காசமான அறிமுகம் கா . வாழ்த்துகள் . உங்களோட ஓவியம் அதிஅற்புதம்//
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகேஷ்.
சிறப்பான சுய அறிமுகம். பாராட்டுகள்.
ReplyDeleteதிருமண நாள் நல்வாழ்த்துகள்.
வாருங்கள் வெங்கட் நாகராஜ்....திருமண நாள் வாழ்த்திற்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDelete