Saturday, February 7, 2015

மழை...!!!



 மழையை பிடிக்காதவர்கள் எவரேனும் உண்டா....? ம்கூம்...இல்லவே இல்லை இல்லையா....? சிறுவயதில் மழைத்துளிகள் உடலில் படும்போது அப்பப்பா...என்னமா சிலிர்க்கும் உடம்பு..... உள்ளமும் சிலிர்க்கும். சகவயதுக் காரர்கள் சேர்ந்து விட்டால் ஜாலியோ ஜாலி தான்.



பாவம் அம்மாக்கள் பாடு திண்டாட்டம். அவர்களுக்கும் தெரியும் இது ஜாலி தான்னு...அவர்களும் இவ்வயது கடந்து தான் வந்து இருக்கிறார்கள் இல்லையா...? ஆனால் இப்போ அம்மாவாகிட்டாங்களே...பிள்ளைகளுக்கு உடலுக்கு ஏதாவது வந்திடுமோன்னு...பயம். அவர்கள் கூப்பிட கூப்பிட இன்னும் கொஞ்சம் என நாம கேட்க ஆஹா.....!!!




மழையில் நனையாவிட்டாலும் அதை பார்க்க பிடிக்கும் எல்லோருக்குமே. காற்று அடிக்கும் போது  சாரலாய்...நம்மை தழுவும் சுகம் இருக்கிறதே  சிலிர்ப்பும், ஜில்லிப்புமாக அருமையல்லவா...? 
அது சோ...என ( துக்களக் சோ இல்லைங்க)  பெய்யும் போது சூடா.க..டீயும்..அப்படியே காரமா...பஜ்ஜியும் ( யாராவது செய்து தந்தால்) சாப்பிட எப்படி இருக்கும்...? ம் ஆஹா...நினைக்கும் போதே நல்லா இருக்கே...

மழையாய் பதிவுகளைப் பொழியும் நம் சகாக்கள் வலையில் மழையைப்பற்றி பொழிந்து இருக்கிறார்கள்....

மழையில் நனைய நான் ரெடி நீங்க ரெடியா....?  ஜீட்....





மனசு வலைத்தளத்தில் நண்பர் பரிவை சே. குமார் 
வேண்டுமடி மழை எனக்கு என்கிறார்....நமக்கும் மழை வேண்டுமல்லவா...?  அப்படியே ஒரு எட்டு அவர் தளம் போய் நாம் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமா...?
வாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா?நிச்சயமா இல்லை தான். நமக்கு என்ன என்ன அட்டை வரும்...? நாம மத்தவங்களுக்கு எந்த மாதிரி  அட்டை வாங்கி அனுப்பலாம்னு.......பார்த்த பழைய நினைவுகள்....எல்லாம் வருது. நீங்களும் பாருங்களேன் நண்பர்களே.


மழைப்பயணம் என தன் வலைத்தளத்திற்கு பெயர் சூட்டி இருக்கும் இவர் ஒரு மழைக்காதலர் அப்படின்னு நினைக்கிறேன்.ஏன்...அப்படின்னு நீங்க யோசிக்கிறீங்க இல்லையா...இவர் தளத்தில் மழையைத்தவிற வேறு  பதிவுகளே இல்லைனா பார்த்துக்குங்களேன்...!!! மழைநாள், மழை பயணம், மழை கவிதை,மழை செய்திகள், மழை படங்கள் அப்படின்னு பதிவிடுகிறார்.
மழை – குடை – கவனிக்க...என குடை வாங்குவது பற்றி பதிவிட்டு இருக்கிறார்...யாராவது குடை வாங்கனும்னா...இந்த ஐடியா...உபயோகமாக இருக்கும்...பாருங்கமழை-கவிதைகள் அழகு பாருங்கள்.






மழை குருவி என்கிற வலைத்தளத்தில் அவர் மழையோடு பயணம் செய்ததை பதிவிட்டு இருக்கிறார் தானும் நண்பர் துரை பாஸ்கரும் மழையில் நனைந்த படியே  ஸ்கூட்டரில் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
மழை எனக்குப்பிடித்தமானது. ஒவ்வொரு மழைத்துளியும் பூக்களாக என் மீதும், நண்பர் துரை பாஸ்கர் மீதும் சொரிய ஒரு ஆனந்தப் பயணம், அதுவும் ஸ்கூட்டரில்…… வானிலை அறிவிப்பு கனத்த மழை பெய்யும் என்று சொல்லியும், பயணம் மேற்கொண்ட தூரம் 60 கி.மீ இருக்கும். நண்பர் பாலாஜியின் வெல் வேலமரக் காட்டில் வரும் பறவைகளைக்காண மழையோடு மழையாக சாலையில் வழுக்கினோம். நகரத்தை விட கிராமம் அழகானது. இந்த வருடப் பருவமழை எதிர் பாரா சந்தோஷத்தைக்கொண்டு வந்த விதம் அருமை. சென்றபாதை இருமருங்கிலும், பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பயிர்கள்  நாமும் அவர்களுடன் பயணம் செய்வோமா...? பறவைகள் அறிமுகம் என்று பறவைகள் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். சுவாரஸ்யம். யமுனை நதிக்கரைப் பறவைகள்......அட பார்க்கலாமா...? இவர் நிறை சுவாரஸ்யமாக பதிவிட்டு இருக்கிறார் பாருங்களேன்.




சுப்பிரமணிய பாண்டி கவிதைகள் என தன் சொந்தப் பெயரிலான வலைத்தளத்தில் கவிதைகள் பல எழுதி இருக்கிறார்மழை செய் என்கிற கவிதையில்.

மனிதனில் எவனுக்கு
மழை செய்யத் தெரியும்? //

அப்படிங்கிறார் வாஸ்தவமான கேள்வி இல்லையா...?
இனிமேல் உலகம் அழியாது.... அப்படின்னு  கவிதை  எழுதி 
இருக்கிறார். கவிதைகள் அருமையாக இருக்கின்றன.





முருக கவி மழைக்குறித்து அழகாய் கவிதை செய்திருக்கிறார்.மழை...

கவிதையை அவரின் முருக.கவி தளத்தில் இங்கே காணலாம்.



EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள் என்னும் வலைப்பூவில்  கஸ்தூரி சுதாகர் மழையும் மனிதமும் அப்படிங்கிற தலைப்பில் தனக்கு நடந்த அனுபவத்தை எண்ணங்கள் எழுத்துக்கள் என்கிற தன்னுடைய தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்

அடைமழை நேற்று மும்பையில். ஆபீஸை விட்டுக் கிளம்பும்போது லேசாகத் தூறிக்கொண்டிருந்ததால், நிதானமாகக் கிளம்பினேன். ஜோகேஷ்வரி லிங்க் ரோடு தொடக்கத்தில் பிடித்த மழை நிற்கவேயில்லை. மனைவி வேறொரு ஆட்டோவில் அந்த வழியாக வருகிறார் என்று தெரிந்ததும், காத்திருக்கலாம் என்று, வண்டியை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அலுவலகமருகே ஓரம் கட்டினேன். எனக்கு முன்னே ஒரு I 20 மினுக் மினுக்கென விளக்கைப் போட்டபடி நின்றிருக்க, புத்திசாலித்தனமாக அதற்கும் ஓரமாக வண்டியைக் கொண்டு போனேன். அவ்வளவுதான் தெரியும்...

படித்துப்  பாருங்கள்



ஙே...!!! என்னும் வலைத்தளத்தில் joe Felix  மழை ...!!!  கவிதையை இவ்வாறு தொடங்குகிறார்..

உதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா                      எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை!!!

மிக நன்றாக இருக்கிறது பாருங்களேன்



Mounam Pesum mozhigal  என்னும் வலைத்தளத்தில் ராஜராஜன் ராஜமகேந்திரன்  என்கிற தன் வலைப்பூவில் மழைக்காலம் ஆரம்பம்...! அரைமணி நேர மழையில்....எப்படியெல்லாம் ஆகும் என கவிதை வடிவில் சொல்லிச்செல்கிறார் உண்மை தான்.




மழை சுடும்  என்ற கவிதையை.....என்ன இது மழை சுடுமா...?  Seasonsnidur என்னும் வலைத்தளைத்தில் அபூஹாசிமாவாவாரின் கவிதையை  S.E.A. Mohamed Ali    அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் காணுங்கள்






மழையில நிறைய நனைந்து விடாதீர்கள்.....அப்புறம் காய்சல் வந்துட்டா என்னைச் சொல்லக்கூடாது....? சரியா...?

ஏம்மா மழையை போட்டு விட்டு...சும்மா நனையுங்கள் அப்படின்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்லுறீயே....? இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமா சொல்லிப்புட்டேன்....

எனக்கு எதுவும் கேட்கவில்லை.....!!! ஹஹஹா.....!!!

நீங்கள் எல்லோரும் குழந்தையாக மாறி ஜாலியா.....பழைய நினைவுகளுக்கு போய் வந்து இருப்பீர்கள்.......  ஆனந்தமாக இருந்ததா நண்பர்களே...!!!

இன்னும் ஒரே ஒரு நாள் உங்களுடன்......நான்...வலைச்சரத்தில்....

நிறைய கருத்துக்கள் இட்டு....தமிழ்மண வாக்கும்....கொடுத்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டு இருக்கும் நண்பர்களே....நாளை காணலாம் வரட்டா...!!! 



ஊங்களுக்காக குடை வைத்து இருக்கிறேன்...எடுத்துக் கொள்ளுங்கள்.

   


 என்னுடைய     குற்றாலம் - கவிதை   க்காக நான் வரைந்த ஆயில் பெயிண்ட்





43 comments:

  1. தங்கள் காட்டில் நல்ல மழை !

    பதிவினை மழையெனப்பொழிந்து தள்ளியுள்ளீர்கள் ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தங்கள் காட்டில் நல்ல மழை !//

      ஹஹஹா.....ஆம் ஐயா

      பதிவினை மழையெனப்பொழிந்து தள்ளியுள்ளீர்கள் ;)//

      மிக்க நன்றி

      Delete
  2. //அது சோ...என ( துக்களக் சோ இல்லைங்க) பெய்யும் போது சூடா.க..டீயும்..அப்படியே காரமா...பஜ்ஜியும் ( யாராவது செய்து தந்தால்) சாப்பிட எப்படி இருக்கும்...? ம் ஆஹா...நினைக்கும் போதே நல்லா இருக்கே...//

    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html இதோ இங்கே வாங்கோ. சூடான சுவையான சூப்பரான பஜ்ஜிகள் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அப்படியா.....தெரியாம போச்சே செய்தி .......!

      இதோ வருகிறேன்...ஐயா....

      Delete
  3. மழையைப்பற்றி மழையாக பொழிந்து எழுதியுள்ள பதிவர்களுக்கும், அவர்களை மழையில் அதிகமாக நனையவிடாமல் குடை பிடித்துக் கொண்டு வந்து அழகாக தொகுத்து / தொடுத்து அடையாளம் காட்டியுள்ளது அருமை. அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    ooooo

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகளுக்கு மகிழ்வான நன்றி ஐயா..

      Delete
    2. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகளுக்கு மகிழ்வான நன்றி ஐயா..

      Delete
  4. http://gopu1949.blogspot.in/2014/08/vgk-33.html

    சூடான சுவையான உப்பலான பஜ்ஜி சாப்பிட்டபின் ‘எல்லோருக்கும் பெய்யும் மழை’க்கு வாங்கோ.

    அதில் கடைசியில் சூடான சுவையான ‘டீ’ தரப்படுகிறதாக்கும். :)

    ReplyDelete
  5. மழையினால் ஒருவர் பட்ட பாடு உங்களுக்குத் தெரியுமா ?

    தெரியாட்டி இங்கே ஓடியாங்கோ .......

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-20_30.html

    ReplyDelete
    Replies
    1. தெரியாட்டி இங்கே ஓடியாங்கோ //

      ஓடி வந்தேன்.....

      Delete
  6. வணக்கம் வலைச்சரம் ஆசிரியை அவர்களே!
    இந்த வாரம் முழுவதும் ,பல நல்ல பதிவுகளை கொடையாக தந்ததோடு மட்டுமல்லாமல்,
    குடையையும் தந்து, மழையில் கும்மாளமும் போட வைத்து, "குற்றாலம்" கவிதையை பருகி இளைப்பாறவும் செய்து உள்ளீர்கள்! உள்ளம் குளிர்ந்த உன்னத பதிவுகளை வழங்கிய இன்றைய பதிவாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்! நன்றி!

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வந்து எனக்கு ஊக்கமும்,பாராட்டும் வழங்கிக் கொண்டு இருக்கும் உங்களுக்கு மனம் கனிந்த நன்றி சகோ

      Delete
  7. என்னவள் வெளியில் சுற்ற அழைக்கிறாள்
    கொஞ்சம் பொறு
    மழை வரட்டும் என்கிறேன் நான்..!
    மழையைப் பிடிக்காதவர்கள் இருப்பார்களா! இப்போதெல்லாம் மழை பெய்வதே அரிதாகிறது. அழகான அறிமுகத்துடன் பல நல்ல பதிவுகளை அடையாளப்படுத்தியுள்ளீர்கள். குற்றாலத்தைவிட ஆயில் பெயிண்ட்டிங்கில் தண்ணீஇ அதிகமாக விழுகிறது. அவ்ளோ அழகு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. என்னவள் வெளியில் சுற்ற அழைக்கிறாள்
      கொஞ்சம் பொறு
      மழை வரட்டும் என்கிறேன் நான்..! //

      சூப்பர் கவிதை.

      குற்றாலத்தைவிட ஆயில் பெயிண்ட்டிங்கில் தண்ணீஇ அதிகமாக விழுகிறது. //

      செயற்கையிலாவது ....தண்ணீர் அதிகமாய் விழுந்தால் சந்தோஷம் தானே...சகோ

      Delete
  8. உமையாள்,

    காலையிலிருந்து எனக்கு ஒரே மகிழ்ச்சிதான். எல்லாம் பலத்த காற்றுடன் இங்கு மழை பெய்துகொண்டிருப்பதால்தான். நனைஞ்சிட்டே இங்கு வந்தால் மழைக்கு குடை கொடுக்குறீங்க.

    மழை பற்றிய அறிமுகம் அருமை. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமாக மழையில் நனைந்த படி வந்து....குடையை எடுத்துக் கொண்டு கருத்து இட்டமைக்கு நன்றி சித்ரா.

      Delete
  9. உங்களின் கைவண்ணமும் அழகு... பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ

      Delete
  10. நீங்கள் எல்லோரும் குழந்தையாக மாறி ஜாலியா.....பழைய நினைவுகளுக்கு போய் வந்து இருப்பீர்கள்....... ஆனந்தமாக இருந்ததா நண்பர்களே...!!!//
    ஆனந்தம், ஆனந்தம்.
    குழந்தை பருவத்தில் மழையில் நனைந்து ஆனந்தமாய் விளையாடியதும்,அம்மாவிடம் திட்டுவாங்கியதையும் நினைத்து கொண்டேன்.
    நன்றி.

    மழை பதிவிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஓவியம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நினைவில் நனைந்து.....வாழ்த்தும் பாராட்டும் சென்ன அம்மாவிற்கு நன்றி.

      Delete
  11. அட!மழையில் இவ்வளவு பதிவுகள் இருகிறதா நான் படிக்காத பல பதிவுகளை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மழைக்காதலர்கள்...நிறைய இருக்கிறார்கள்....மிக்க நன்றி சகோ

      Delete
  12. மழைபற்றியே மலைக்க வைத்தீர்... அருமை.
    மழை வருது... மழை வருது... குடை கொண்டு வந்தீர்... மழைக் கொடை... அருமை.

    ReplyDelete
    Replies
    1. வந்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்வான நன்றி ஐயா

      Delete
  13. மழையில் நனைந்து மனம் குளிர்ந்தோம்! உங்கள் எழுத்து வண்ணம் போலவே கை வண்ணமும், கலை வண்ணமும் மிக அழகு. சகலகலாவல்லியா தாங்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கவிநயா.

      Delete
  14. எங்கள் வீட்டு ஜன்னலில் வேடிக்கை பார்க்கும் போது(சில தினங்களுக்கு முன் ) மழை வந்து ரொம்ப நாளாச்சுன்னு நினைத்தேன்.இன்று வலைச்சரத்தில் ஒரே மழை. மழையில் ஆனந்தமாய் நனைய வைத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
    குடை கொடுத்த ஆசிரியைக்கும் நன்றி ...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  15. மழையில் நனைந்த சுகம் அருமை...
    மழையில் நனைய வைத்த எழுத்தாளர்களுடன் நானும்...
    வலைச்சரத்தில் மீண்டும் ஒரு அறிமுகம்.... தங்களால்...
    இங்கு அறிமுகமானதை எனக்குத் தெரிவித்த நண்பர் யாதவன் நம்பிக்கு நன்றி..
    இங்கு அறிமுகமாகியிருக்கும் மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அறிமுகம் செய்த தங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  16. மழை-மலை -அருவி--அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  17. உங்களால் வலைச்சரக் காட்டில் நல்ல மழை. தேர்ந்தெடுத்த பதிவுகள். அனைத்தையும் படித்துக்கொண்டு குடையின்றி நனைந்தோம். ஆயில் பெயிண்ட் ஓவியத்தை ரசித்தோம். அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம். இன்று மழை. நாளை வெயிலா?

    ReplyDelete
    Replies
    1. இன்று மழை. நாளை வெயிலா?//
      ஹஹஹா...!!!
      தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
  18. மழையைக்குறித்த விடயங்களோடு மழை பொழிந்த பதிவர்கள்... மனசு சே.குமார் அவர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகள்.
    கில்லர்ஜி
    தமிழ் மணம் - நவராத்திரி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நவராத்திரிக்கும்......மிக்க நன்றி சகோ

      Delete
  19. இங்கே - குவைத்தில் இன்னும் குளிர் விலகாத நிலையில் மழை பெய்ய வைத்து விட்டீர்கள்..

    மழை - என்னைப் பொறுத்தவரை இன்னொரு தாய்!..

    அருவி - தங்கள் கைவண்ணத்தில் மேலும் அழகாக இருக்கின்றது!..
    மழைச் சாரலாக இன்றைய தொகுப்பு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மழை - என்னைப் பொறுத்தவரை இன்னொரு தாய்!//

      அருமை ஐயா

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  20. மழையில் நனைய எனக்கும் ரெம்ம்ம்ப பிடிக்கும். மழைபற்றி அழகாக கூறி அதற்கேற்ப அழகான படங்களை இணைத்தமைக்கு பாராட்டுக்கள் நீங்கள் வரைந்த பெயிண்டிங் அழகா இருக்கு உமையாள்.
    இன்றைய தினம் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பிரியசகி

      Delete
  21. ஆஹா மழைக்காலமா இன்று!

    அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. மிகவும் அருமை. இன்றுதான் பார்க்க நேர்ந்தது. கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    அன்புடன்
    சுதாகர் கஸ்தூரி

    ReplyDelete