இந்த பூக்கள்ல பூக்கள், அது பலவிதம். ரோஜாப்பூ, மல்லிப்பூ, பிச்சிப்பூல ஆரம்பிச்சு, அப்படியே தாமரை, அல்லின்னு தண்ணிக்குள்ள பூத்து, கனகாம்பரம், அரளி, எருக்கம், செம்பருத்தி, க்ரேந்தி, ஜினியா, சங்குபுஸ்ப்பம், காஸ்மாஸ், ஊதான்னு டிசைன் டிசைனா பூக்கள் உண்டு. அட, மாம்பூ, கொய்யா பூ, கொல்லாம்பூ, தென்னம்பூ, பனம்பூ, வாழைப்பூ, பலாப்பூ.... ஷப்பா, இதெல்லாம் வெறும் ஜுஜுபி பெயர்கள். பூக்கும் தாவரங்கள்ல பூக்குற ஆயிரக்கணக்கான பூக்கள் உண்டே...
இந்த பூக்கள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். எல்லா பூக்களுமே எதோ ஒரு வகைல தனித்துவம் கொண்டவை.
இந்த ரோஜாப்பூவ எடுத்துக்கோங்க, பாக்க அழகா இருக்கும். அப்படியே பாத்துகிட்டே இருக்கலாம். அவ்வளவு ரம்மியம். வாசனை ஆளை தூக்கிடும். மல்லிகை, பிச்சி, இதெல்லாமே அப்படி தானே. இத எல்லாம் வேணாம்னு சொல்றவங்க யாராவது உண்டா என்ன?
இப்படி, மனச சந்தோசப்படுத்துறதுல இருந்து, உணவாவும் பயன்படுற பூக்கள சொல்லிட்டே போகலாம்....
இந்த வாழப்பூ இருக்குல வாழப்பூ, அப்புறம் வெங்காயப்பூ, முருங்கைப் பூ, வேப்பம்பூ இதெல்லாம் சமைச்சு சாப்ட்டா, அவ்வளவு டேஸ்ட். விடியல் காலைல, வாழைப்பூவுல தேன் உறிஞ்சி குடிக்குற சுகம் இருக்கே, அடடா, அடடா.....
சங்குபுஸ்ப்பம், கும்குமப்பூ, புளியம்பூ, மாதுளம்பூ, தென்னம்பூ இதெல்லாம் ரொம்பவே மருத்துவ குணம் கொண்டவை...
சரி, இதெல்லாம் எதுக்கு? இப்ப நான் என்ன தான் சொல்ல வரேன்...
ம்ம்ம்ம் ஆமால, நான் இப்ப நிறைய வலைப்பூக்கள அறிமுகப்படுத்த தான வந்துருக்கேன். இப்ப நான் என்ன சொல்ல வரேன்னா, எப்படி எல்லா பூக்களுக்கும் விதம்விதமான பயன்கள் இருக்கோ, அப்படி எல்லா வலைபூக்களுக்கும் விதம் விதமான தனித்துவம் இருக்கும்..
நாம முதல்ல பாக்கப் போற வலைப்பூவுக்கு சொந்தக்காரங்க ஸ்ரீதேவி செல்வராஜன். இவங்களோட வலைப்பூ பெயர் கனவுத் திருடி. தன்னோட குடும்பத்துல இருந்து அன்றாடம் சந்திக்குற மனிதர்கள்கிட்ட கத்துக்குற விசயங்கள, ரசிக்குற விசயங்கள, முக்கியமா தான் வாங்குற பல்புகள அட்டகாசமா சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்ல, பயணக்கட்டுரையும் உண்டு, கவிதைகளையும் எதிர்பார்க்கலாம். இப்போ இதோ தன்னோட அப்பாவின் சைக்கிள் பத்தி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க...
அடுத்ததா நாமப் பாக்கப்போற வலைப்பூ பலகை. அதாவது பள்ளிக்கூட சிலேட்டுப் பலகையாம். இந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரங்க கிருத்திகா தரன். இவங்க புதுமுகம் எல்லாம் இல்ல, ஏற்கனவே இங்க நிறைய பேருக்கு பரிட்சயம் ஆனவங்க தான். ஆனாலும் இந்த நேரம் இவங்கள இங்க அறிமுகப்படுத்துறதுக்கான காரணம் இவங்களோட இந்த “கொண்டாட்டம் என்றும்” மகளிர் தின கொண்டாட்ட பதிவு தான்...
இந்த சுந்தர நேசங்கள் முழுக்க முழுக்க கவிதைகளால ஆனது. மனசுக்கு தோணுறத நிமிட நேர இடைவெளில எழுத்துல கொண்டு வந்துடுரவங்க இவங்க. காதல், இயற்கை, காப்பியம், தாய்மை, நட்பு, நேசம், பெண்மை, பொய்மை, மழலை, மழை, முதுமை, யதார்த்தம், ரொமான்ஸ்,ன்னு எக்கச்சக்க கவிதைகள் இங்க இருந்தாலும் இப்போதைக்கு இதோ உங்க பார்வைக்கு ஒண்ணு மட்டும் (பொற்காலம் தந்த பொன்மனச் செம்மல்)
மலரும் நினைவுகளுக்கு சொந்தக்காரங்க லலிதா முரளி. தன்னோட சொந்த மொக்கைகள தான் இதுல பதிவு செய்துருக்கேன்னு அவங்க சொன்னாலும், சிறந்த புத்தகங்களே நல்ல நண்பன்னு தன்னை ரொம்ப கவர்ந்த நூல் விமர்சனம் கூட எழுதியிருக்காங்க. பாதியிலயே இத விட்டுட்டேன்னு வருத்தப்படுற இவங்க தொடர்ந்து எழுதணும்ன்னு கேட்டுக்குவோம்...
இதோ இந்த ஒற்றைக்குயிலும் கவிதை சார்ந்த வலைப்பூ தான். குட்டி குட்டியா தன்னோட எண்ணங்கள அழகான கவிதையா சொல்லியிருக்குறவங்க கல்யாணி சுரேஷ். பாட்டும் கவிதையும் இருந்தா பசியை கூட மறந்து போற இவங்க, இப்ப மொபைல் யூஸ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து வலைப்பூவுல எழுதுறதையும் மறந்துட்டாங்களாம். அதெப்படி இவங்கள சும்மா விட முடியும்? நாம குடுக்குற உற்சாகம் மறுபடியும் அவங்கள எழுத தூண்டட்டுமே... இதோ எனக்கு பிடிச்ச ஒரு கவிதை ஆலமும் அமிர்தமும், துளி 17, உங்களுக்கும் பிடிக்கும்...
சொந்தமா நமக்கு தோணினத வலைப்பூவுல எழுதுவோம், இல்ல, பாத்து ரசிச்சத எழுதுவோம். ஆனா, தன்னோட அம்மாவுக்காக மட்டுமே அன்புடன் அம்மா அப்படிங்குற வலைப்பூ ஆரம்பிச்சு, தன்னோட அம்மா எழுதின பதிவுகள போட்டுட்டு வராங்க அம்பிகா மாணிக்கவாசகம். அம்மாவுக்காக தனியா ஒரு வெப்சைட் ஆரம்பிக்கணும்ங்குற இவங்க கனவு கூடிய சீக்கிரம் நிறைவேறட்டும்... இதுல நிறைய விஷயங்கள் இருந்தாலும் அம்மா போட்டுருக்குற விடுகதைகள பாத்து, அதுக்கு விடை சொல்லுங்க பாப்போம்... இது மட்டுமில்ல, இவங்ககிட்ட இன்னும் அஞ்சு வலைப்பூ இருக்கு... அதுல எனது பார்வையில் தமிழ்ல எழுதியிருக்காங்க...
கலா ஸ்ரீராமோட வலைப்பூ புதுகைத் தென்றல் . ஊர் சுத்தினது, ஆன்மிகம், சமையல், அனுபவம்ன்னு எக்கச்சக்க பதிவுகள் இவங்களோட வலைப்பூவுல இருக்கு. எத படிக்க, எத விடன்னே தெரியாம திண்டாடத் தான் வேணும். அப்படியே பாத்துட்டு வந்தப்ப இவங்க இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ் குடுத்தத பாத்துட்டேன். அத நீங்களும் பாக்கணும்ல, அப்போ படிங்க....
சரி, இன்னிக்கி இந்த அறிமுகங்கள் போதும்.... நாளைக்கு இன்னும் சிலபேரோட வலைப்பூக்களோட உங்களை சந்திக்கிறேன். அதுவரைக்கும், உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் பட்டர்ப்ளை காயத்ரி தேவி...
.
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅவர்களின் தளத்திற்கு செல்கிறேன்...
தேங்க்ஸ் அண்ணா.... ஆனா எங்க போனாலும் நீங்க இருக்கீங்க...
Deleteஅழகான தொகுப்புரையுடன் - இன்றைய அறிமுகங்கள்..
ReplyDeleteஅறிமுக தளங்களுக்கு நல் வாழ்த்துக்கள்..
தேங்க்ஸ் அண்ணா, அறிமுகத் தளங்களுக்கு போய் அவங்க போஸ்ட் படிச்சுப் பாருங்க
Deleteஅட..., இவங்க எல்லாருமே முகநூல்லயும் என் நட்புகள்தான்ங்கறதால கூடுதல் சந்தோஷம் காயூ. சுந்தர நேசங்களும், கல்யாணி சுரேஷ் தளமும் நான் இதுவரை கருத்திடாதவை. அருமையான அறிமுகங்களுக்கு... நன்றில்லாம் சொல்ல மாட்டேன். கொடுத்த வேலைய சரியா செஞ்சதுக்கு அழுத்தமான கைகுலுக்கல். வலது கைல ஒரு ரோஜாப்பூ வெச்சிருக்கேன் பாரு, அதுவும் உனக்குத்தான்மா. எடுத்துக்க....
ReplyDeleteஹஹா அப்போ கனவுத் திருடி பக்கம் போயிட்டீங்களா? நான் கூட அந்த வலைத்தளம் இதுவரைக்கும் யார் பார்வைக்கும் படலன்னுல நினச்சுட்டு இருந்தேன். ரோஜாப் பூவுக்கு தேங்க்ஸ் அண்ணா... நான் நன்றி சொல்லுவேன், சின்ன வயசு பழக்கம் அது... ஹஹா
Deleteஸ்ரீதேவியோட ஆரம்பப் பதிவுகள்லயே என் கருத்து இருக்கும் பாரும்மா. முகநூல்ல மை குட் ப்ரெண்ட் அந்த (கனவு) திருடி.
Deleteஅவ்வ்வ்வ் அப்ப நான் தான் லேட்டா.....
Deleteவலைப்பூக்கள் பக்கம் அடிக்கடி வந்து போனாலும் ரொம்ப அதிகமா இங்க படிக்குறதில்ல ஏன்னா ஏற்க்கனவே நம்ம கண்ணு டொக்க...ஆனா நீ எழுதுற அறிமுகங்கங்கள் இன்னும் வலைப்பூக்கள்ல நிறைய வாசிக்கனும் னு ஆவல தூண்டுது! வாழ்த்துகள் அனைவருக்கும்! :)
ReplyDeleteவாசிச்சா மட்டும் போதாது, கமன்ட்டும் போடணும். நீங்களும் நிறைய எழுதணும் அண்ணா
Deleteகண்டிப்பா மா :)
Deleteஎன் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றீஸ். நம்ம வலையுலக நட்பூஸ் சிலர் முகநூலில் இருந்தாலும் எனக்கு எல்லோரையும் தெரியவில்லை.
ReplyDeleteஇனி எல்லோரையும் தெரிஞ்சுக்கோங்க, வாழ்த்துகள்
Deleteஅழகான தொகுப்பாய்....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆமாமா, அனைவருக்கும் வாழ்த்துகள்
Deleteநன்றி காயூ..முதல்ல நிறைய எழுதின ப்லாக் பாஸ்வேர்ட் மறந்து போச்சுன்னு,புதுசா தொடங்கினது..சொந்த மொக்கையை திரும்ப என்னைக்காது படிக்கலாம்னு டைரியா நினைச்சு எழுத ஆரம்பிச்சேன்..நீ சொன்னதுக்காது இனிமே எழுத ஆரம்பிக்கிறேன்..
ReplyDeleteஇனி நிறைய எழுதுங்க அக்கா.... வாழ்த்துகள்
Deleteஎனக்கு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும், அவர்களுக்கு வாழ்த்துகளும்.
ReplyDelete- கில்லர்ஜி –
நேற்று முன்தினம் திருமதி என்று தவறுதலாக எழுதியதற்காக தமிழ் மணம் 4
ஆஹா..... இத விடவே மாட்டீங்க போலயே... ஏன் அண்ணா, இந்த கள்ள ஓட்டுக்கு எல்லாம் வழியே இல்லையா
Deleteநல்ல அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்..
ReplyDeleteதேங்க்ஸ்
Deleteபுதிய அறிமுகங்களுக்கு நன்றி காயத்ரி..
ReplyDeleteவாழ்த்துகள்!
வாழ்த்துக்கு நன்றி :)
Deleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி :)
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteசிலருடைய பதிவுகளை இதுவரை படித்ததில்லை. நன்றி.
படிக்கலனா கண்டிப்பா படிச்சிடுங்க அண்ணா...
Deleteமிக்க நன்றி..மகிழ்ச்சியும்..
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDelete