Friday, March 20, 2015

மலர்களின் மகரந்த வாசம்






வணக்கம்
வலைச் சரத்தில் நறுமணம் வீசும் மலர்களை,  கொய்து வந்து தொடுக்க! தொடுக்க....!
மலர்களின் மகரந்த வாசம்,  எனது நாசியில் தூசியே இல்லாமல்,  தும்மலை வரவழைத்து விட்டது! ஒவ்வொரு பூவிலும் ஓராயிரம் மகரந்த பொடிகள் இருப்பதை போல,
ஒவ்வொரு வலைப்பூ பதிவாளரிடமும் இவ்வளவு திறமைகளா?  எண்ணி பார்க்க முடியவில்லை.  புதியதாக மொட்டுவிட்டு மலரும் புதிய பதிவாளர்களின் செய்திகளும்,
பதிவுகளும் போற்றுதலுக்குரிய பொக்கிஷங்கள்.
சரி! இணையத்தின்  இணையற்ற இன்றைய வலைப் பூ பதிவாளர்களில் சிலரை இன்று நாம் பார்ப்போம்!



http://yaathoramani.blogspot.fr/2015/03/blog-post_18.htmlhttp://yaathoramani.blogspot.fr/2015/03/blog-post_18.html


நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும் என்பார் புலவர் தம் புகழுரையில்!
அத்தகைய சிறப்புக்குரிய கவிதை இது!



பழனி. கந்தசாமி
பதிவாசிரியர் அவர்கள், சேவல் சண்டை விளையாட்டை, (சாவக்கட்டு) பற்றி மிக அழகுற விளக்கியுள்ளார். 
அனைவரும் அறிந்த "ஆடுகளம்" படத்தின் கதை உருவாக இந்த செய்தியும் ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
நகைச் சுவை ததும்ப பேசி, பின்னூட்டங்களில் எழுதி வரும், இவரது விளையாட்டு செய்தி பற்றிய பதிவு இது!



ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்முடியும்.
அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்னும் எவரெஸ்ட் வரிகள்! 
எட்டி பார்க்காமலே 'சிகரம்' எனது கண்களுக்கு தெரிகிறது.



இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துப் போன முகலாயர் கால ஓவியங்கள், புத்தகங்கள் என அனைத்துப் பொருட்களின் கண்காட்சி காட்சிகளை,  நமது பார்வைக்கு பதிவாக்கித் தந்துள்ளார். வெகு சிறப்பு!


சிந்தைக்கு விந்தயாக எழுந்த கேள்வியை, பதிவின் தலைப்பாக தந்துள்ளார் பதிவாசிரியர் தோழர் வலிப் போக்கன் அவர்கள்.
பதிவினை பகுத்தாய்ந்து படியுங்கள்! படித்தபின்பு, இனி அடுத்தவரை,  எப்படி அடைமொழி தந்து அழைப்பது? என்னும் முடிவுக்கு வாருங்கள்!


Bagawanjee KA
கொசுக்களும் செய்யுமோ இரத்த தானம்? 
ஜோக்காளியின் காமெடியால் வயிறு புண்ணாகி மருத்துவரிடம் போக வேண்டும் என்பதுதான் பகவான் ஜி யின் இலட்சியம். சிறுகவிதை கூட சிரிக்கின்றது என்றால் பாருங்களேன்!  

விமலன்  

"குளிர்ச்சி"

நயமிகு கவிதை மழையில் நனைவோமே!
நாளும் இவர் போல் நாம்கவி புனைவோமே!

பறவைகளின் மீது மிகவும் பற்றுள்ள பெண்மணி. புதுவை பிரதேசத்தை சேர்ந்தவர்.
ஊஞ்சல் வலைப்பூ மூலம் உன்னதமான எழுத்துப் பணியை பிறர் போற்றும் வகையில் செய்து வருகிறார்.
கரிச்சான், கொண்டைக் குருவி போன்ற பறவைகளின் சிறப்பியல்புகளை பறவை கூர் நோக்கல் பதிவில் சொல்லி வருகிறார்


"நட்பு"

குவைத்தில் வசித்து வரும் இவருக்கு கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் எனக்கு. மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை
இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா? இவரது சிறுகதை "நட்பு" இன்றயை சிறப்பு.! 
"பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்காதலும் நிலைக்காது"…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு  நாசுக்காக போகிறபோக்கில் வாழ்வின் நிலைபாட்டை தெளிவு படுத்தி இருப்பார் இந்த நட்பு சிறு கதையில்! படியுங்கள்!



kousalya Raj

விடியலுக்கான விதையினை மனதில் வைத்திருக்கும் இவர்மனதோடு மட்டும், வாசல் என்று இரு வலைப் பூ வில் கருத்தினை பதிவாக்கி பதியம் இட்டு வருகிறார். இவரது  இந்தபயணக் கட்டுரை வடிவத்தை படியுங்கள்

கார்த்திக் சரவணன்
உத்தம வில்லன்

உலக நாயகனின் படமோ என்றே பார்த்தேன்! 
உலகம் போற்றும் அனுபவம் பேசும்
உத்தம வில்லனை பார்த்தேன்! 
நீங்களும் வந்து பாருங்கள்.


அருணா செல்வம்
[அன்னம் விடு தூது – 8] 


சகோதரியின் வலை தளத்திற்குள், என்னால் சென்று பார்க்க முடியவில்லை.? தடுப்பு உள்ளது என எண்ணுகிறேன்! எனவே, நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களது வலைப் பதிவில் நான் கண்டு, http://venkatnagaraj.blogspot.com/2013/04/8.html,
பிடித்த ஆவரது அவரது அன்னம் விடு தூது கவிதையை, இங்கு பகிர்ந்தளிக்கின்றேன். 



இன்றைய சிறப்பு 'வலைப்பூ' பதிவாளர்களின் பதிவினை காணுங்கள்! 

நாளை, 

நன்மை பயக்கும், மேலும் பல பதிவாளர்களின் பதிவுகளோடு, 
உங்களை எல்லாம் வந்து சந்திக்கின்றேன்.
நன்றி!

நட்புடன்,

புதுவை வேலு

 

 

 





 





 

 

 

 

 

 




 
 

 
 

 



 

 
 
 


 

55 comments:

  1. அன்பு நண்பர் புதுவை வேலுவிற்கு,
    என்னை ஒரு பதிவாளனாக அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. அதுவும் என்னுடைய பதிவுகளில் நானே மறந்து போன ஒரு பதிவை எடுத்துக் காட்டியதற்கு மேலும் நன்றி.
    அன்புள்ள, பழனி.கந்தசாமி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா! வருக!
      ஒவ்வொரு பூவிலும் ஓராயிரம் மகரந்த பொடிகள் இருப்பதை போல,
      தங்களது வலைப்பூ வின் மகரந்தம்(பதிவு) துகள்கள் மணம் அருமை அய்யா!
      வெற்றிச் சேவல்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!
      வாழ்த்துகளை பகிர்ந்தளித்து மகிழ வலைச்சரம் நோக்கி
      வருகை தந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  3. நன்றி சார் என்னை அறிமுகம் செய்ததற்கு/

    ReplyDelete
    Replies

    1. நன்றி விமலன் அவர்களே!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  4. எனது தளத்தை இங்கே அறிமுகம் செய்த அன்பிற்கு என் நன்றிகள். பிற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துகள் + பாராட்டுகள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி,
      சிந்தையை தூண்டும் எழுத்தின் வலிமையே
      தங்களை இன்றைய சிறப்புக்கு ஆளாக்கி உள்ளது சகோதரி!
      பணி சிறக்க வாழ்த்துகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  5. இன்றைய அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
      வருகை தொடரட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  6. வலைச்சரத்தில் இன்று அறிமுகமான வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies


    1. வணக்கம் நண்பரே!
      இனி தங்கள் தளம் நாடி நான் வருவேன்!
      வருகைக்கும், வாழ்த்தினை அனைவருக்கும் தந்தமைக்கும்
      இனிய நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  7. இன்றைய அறிமுகங்களில் பெரும்பாலானவர்கள் மிகச்சிறப்பான எழுத்தாளர்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். அவர்களை இங்கு இன்று அடையாளம் காட்டி சிறப்பித்துள்ள தங்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுலகில் எழுத ஆரம்பித்து 50 மாதங்கள் கடந்து விட்ட போதும்,
      735 பதிவுகள் வெளியிட்ட பிறகும், நான் இதுவரை தங்களது தளத்திற்கு வந்தது இல்லை!
      பின்னூட்டமும் இட்டதும் இல்லை! இதற்காக மிகவும் வருந்துகிறேன் அய்யா!

      தங்களின் அறிமுகம் கிடைத்து விட்டது!
      வலைப் பூ உலகில் ஒரு வைகோ எனக்கு கிடைத்துவிட்டார் பெருமை கொள்வேன்.

      தங்கள் தளம் இனி எனக்கு ஒரு வேடந்தாங்கல்.
      உண்மையில் நீங்களிட்ட பின்னூட்டம் எனக்கு,

      " ஊட்டமளிக்கும் பின்னூட்டமே"

      இனிய நன்றி வலைப் பூ வைகோ அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. //நான் இதுவரை தங்களது தளத்திற்கு வந்தது இல்லை!
      பின்னூட்டமும் இட்டதும் இல்லை! இதற்காக மிகவும் வருந்துகிறேன் அய்யா!//

      வருந்தாதீர்கள். இதோ சமீபத்தில் என்னைப்பற்றிய 107வது வலைச்சர அறிமுகத்தை எனக்குத் தகவல் தெரிவிக்க என் பதிவுப்பக்கம் வந்துள்ளீர்கள்.

      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

      -=-=-=-=-=-

      yathavan nambi January 25, 2015 at 4:18 AM
      வணக்கம்!
      இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
      வாழ்த்துக்கள் ! ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
      திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
      பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
      படைப்புகள் யாவும்.

      நட்புடன்,
      புதுவை வேலு,
      www.kuzhalinnisai.blogspot.com

      -=-=-=-=-=-

      இதுவரை கடந்த 4 ஆண்டுகளுக்குள் வலைச்சரத்தில் 112 முறைகள் அறிமுகம் ஆகியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதோ அதற்கான என் சிறப்புப்பதிவுத்தொடரின் இறுதிப்பகுதிக்கான இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2015/02/16-101-111.html

      Delete
    3. வலைச்சரத்தின் என் 112வது அறிமுகத்தினை தகவல் கொடுக்க மீண்டும் ஒருமுறை என் வலைப்பக்கம் வந்துள்ளீர்கள்.

      http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html

      -=-=-=-=-

      yathavan nambiFebruary 4, 2015 at 3:14 AM
      நல்வணக்கம்!
      திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
      "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

      இன்றைய வலைச் சரத்தின்
      சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
      வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

      வாழ்த்துகளுடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.com
      http://youtu.be/KBsMu1m2xaE

      -=-=-=-=-

      இதுவும் தங்கள் தகவலுக்காக மட்டுமே.

      Delete
    4. நன்றி வலைப் பூ வைகோ அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  8. வாசமிகும் வண்ண மலர்த் தளங்கள்!..

    இன்றும் சிறப்பான தளங்களைச் சுட்டிக் காட்டும் தொகுப்பு!..
    தங்களுக்கும் - அறிமுக தளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாசமிகும் வண்ண மலர்த் தளங்களுக்கு,
      வாழ்த்து நலம் பாடியமைக்கு
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  9. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...
    எதிர்பாரா இன்ப அதிர்ச்சி..
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷத்திலே சந்தோஷம்
      பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பது தான்!
      தகுதிக்கு கிடைத்த பெருமை தோழரே!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Delete
  10. Replies

    1. தன்னம்பிக்கை தரும் தமிழ் மணம் வாக்கினை தந்தமைக்கு,
      நன்றி தோழரே!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Delete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    சகோதரி தளத்திற்கு செல்ல எந்த பிரச்சனையும் இல்லையே...

    இணைப்பு : http://arouna-selvame.blogspot.com/2013/03/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வார்த்தச் சித்தரே!
      தனபாலன் அவர்களே!
      சகோதரியின் வலைப் பூவை தொடர வழி செய்து தந்தால்
      நலமாக இருக்கும்!
      அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கு
      வலைச்சரத்தின் சார்பில் வளமான நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  12. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்
    சகோதரி அருணா அவர்களின் தளம் எனக்கு இரண்டு மாதமாகவே திறக்க முடியவில்லை, ஆகவே அவரது தளத்திற்க்கு நான் செல்வதில்லை, இதன் காரணமாகவோ என்னவோ அவரும் எனது தளம் வருவதில்லை.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிகழ்வை நிலை நிறுத்தி சொன்னமைக்கும்,
      தமிழ் மணம் வாக்கிற்கும் , நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  13. சிறந்த பதிவர்களுடன் என்னுடைய பதிவையும்
    இணைத்துத் சொன்னது மிக்க மகிழ்வளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. "நயமுடன் உரைக்கும் எல்லாம்
      நவயுக கவிதை ஆகும்"
      நற்கவி தந்தமைக்கும், வாழ்த்து சொல்ல வந்தமைக்கும்,
      இனிய நன்றி! அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  14. திரு. நட்புடன் புதுவை வேலு நண்பர்க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் “அறியாதவர்களை அறிய தந்ததற்கும்”. “அறிந்தவர்களின் பதிவுகளை படிக்கத் தூண்டிதற்கும்”...

    ReplyDelete
    Replies
    1. அறிந்தவர், அறியாதவரை நாடி வந்து,
      வலைச் சரத்தில்
      பின்னுட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Delete
  15. மலர்களின் மகரந்த வாசம் தலைப்பே அருமை.
    வாசமிகு மலர்கள் தான் அனைவரும் . வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    நல்ல தொக்குப்புக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. வாசமிகு மலர் "திருமதி பக்கங்கள்"
      நேசமுடன் வலைச்சரம் வந்து தனது
      மகரந்த வாசத்தை பின்னூட்டமாக தந்தமைக்கு
      மிக்க நன்றி!
      வருகை தொடரட்டும் சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  16. தோழர் வலிப்போக்கன் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் இதன் மூலம் அவரின் சமூகப்பார்வை மேலும் விரிவடையட்டும்

    ReplyDelete
    Replies
    1. தோழர் வலிப் போக்கன் அவர்களது சமூகப்பார்வை மேலும் விரிவடையட்டும்!
      வாழ்த்துகள்!
      வருகைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  17. மகரந்த வாசம் வீசும் மலர்களின் அணிவகுப்பில் என் மலரும் இடம் பெற்றிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திச் சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி வேலு சார்!
    நன்றியுடன்
    ஞா.கலையரசி

    ReplyDelete
    Replies
    1. மகரந்த வாசம் வீசும் மலர்களின் அணிவகுப்பில் தங்களது மலர் சிந்தும் அழகு
      அழகோ அழகு!
      வருகைக்கு நன்றி சகோதரி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  18. அன்புள்ள அய்யா,

    மலர்களின் மகரந்த வாசம் - பல வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி பூவின் வாசனையை நுகரச் செய்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொல்ல வந்தமைக்கு
      இனிய நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  19. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  20. Replies
    1. தமிழ் மணம் வாக்கிற்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
    2. மிக்க நன்றி!
      வருகை தொடரட்டும் சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  21. இந்த கொசுக் கடியிலும்கூட மகரந்த வாசம் நுகர்ந்த ,நுகரத் தந்ததற்கும் நன்றி :)

    ReplyDelete
  22. வாருங்கள் பகவான் ஜி,
    கொசு உறிஞ்சிய ரத்ததிலுமா?
    மகரந்த வாசம்!
    அய்யா! ஆளை விடுங்க சாமி!
    சிரிப்பு பின்னூட்டம்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  23. மிக அழகான பதிவு! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நண்பர்களும் அதில் அடக்கம்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்து சொல்ல வந்தமைக்கு,
      இனிய நன்றி! அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  24. தம 11

    அன்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. அருமையான வலைப்பூக்கள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை நிகழ்வை நிலை நிறுத்தி சொன்னமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  26. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!
      வருகை தொடரட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  27. இன்றைய அறிமுகங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

    தங்களின் வலைச்சர பணி தொடரட்டும் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. உளமார்ந்த வாழ்த்துகள்
      உரியவருக்கு சேரட்டும்
      உவகயுடன் ஏற்கின்றேன்!
      உள்ளார்ந்த உமது உயர்
      கருத்தினை நாளும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete