Thursday, March 5, 2015

சீரிய வழி செய்வோம்

வணக்கம் நண்பர்களே!

"பெண்கள் விழித்துக் கொண்டால் 
   பெருமலையும் நகருமாம் 
 விழித்தோர் இணைந்தும் விட்டால் 
   இழி பதர்கள்  எம்மாத்திரம்?
விழித்துக் கொண்டோம்,
இணைந்தும் விடுவோம் 
சீரிய வழி செய்வோம் 
கூரிய அறிவுடையோர்  நாம்!"

இன்றைய வலைத்தள அறிமுகங்கள்,

"11 ஆம் வகுப்பு படிக்கும் (16 வயது) நான் என்னால் முடிந்ததை, தெரிந்ததை இத்தளம் மூலம் உங்களுக்கு தெரிவித்து வந்தேன். அதில் மிக்க மகிழ்ச்சியும் அடைந்தேன்.  இப்பொழுது நான் இத்தளத்தில் 49 பதிவுகளை கடந்து 50 பதிவை வெற்றிகரமாக இப்பதிவின் மூலம் பதிவிடுகிறேன்..." என்று தன் நவின் வலை - தொழில்நுட்பம் என்ற தளத்தில் சொல்லியிருக்கும் நவின் அவர்களுக்கு வாழ்த்துகள்! மேலும் பல பயனுள்ள பதிவுகள் தர வேண்டும் என்று வாழ்த்துவோம். 
டி.என்.ஏ. ஸ்டோரேஜ் பற்றிய இவர் பதிவு, பதினாறு வயதில் அருமையான தகவல்களை அறிந்துகொள்வதுடன், மற்றவருக்கும் பயன்பட, குறிப்பாகத் தமிழில் எழுதும் இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
பென்டிரைவில் உள்ள கோப்புகளைப் பார்க்கலாமென்றால் பூமி சுற்றுவது போல் சுற்றிக் கொண்டேயிருக்கிறதா? இந்தப் பதிவைப் பாருங்கள், பென்டிரைவ் வேகத்தை அதிகப்படுத்த..

தொழில்நுட்பம் என்ற தளத்தில் இருந்து டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து பெரும் பயன்கள், அடிப்படை என்றாலும் சிலருக்கு உதவலாம்.
'வேலி இல்லா வானிலே விரையும் ராக்கெட் ஓட்டுவான்', யார் என்று பார்க்க சொடுக்குங்கள் இங்கே, கோலி குண்டு ஆடலாம். பிளாக்கர் டிப்ஸ், இலவச மென்பொருள், சிறுவர் பாடல்கள் என்று பல்வகைப் பதிவுகள் இத்தளத்தில் உள்ளன.

இந்தியாவில் வாகன ஓட்டுனர் உரிமம் எப்படி வாங்கினீர்கள், நினைவில் இருக்கிறதா? இவருக்கு இருக்கிறதாம், சொல்லத்தான் முடியவில்லையாம், சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு. அது எப்டி சொல்ல முடியும்? நம் நாட்டு 'சிறந்த' ரகசியம் ஆயுற்றே!!!  
""நான் இந்த வருட பரீட்சை மட்டும் அல்லாமல் அதன் கூடவே  CA வும் செய்கிறேன்", 
என்று சொல்ல ..அவர் முகம் மாறி ... 
எங்கே அவள் "?
என்று சத்தம் போட்டு கொண்டே மறைந்தார். " சிரித்து சிரித்து வயிறு வலிதான் வந்தது!! :)
"சி.ஏ. படிப்பின் இப்படியொரு அர்த்தம் எனக்குத் தெரியாமப் போச்சே, ஐ! காணும் பொங்கல் காணாமல் போகுமா?
"இப்படி காலையில் எழுந்து பிள்ளைகளை பரமாரிப்பது, பின் சமையல் அறை வேலை, பின்னர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, பின் அலுவலகம், மாலை,  பிள்ளைகளின் வீட்டு பாடங்கள் பிள்ளைகளின் இதர நடவடிக்கைகள், வீட்டை சுத்தம் படுத்துதல், வங்கி கணக்கு, வரவு செலவு என்று எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகின்றோம்." எனக்கு வர கோவத்துக்கு.. நியாயமான கோவம் தான்! பல அருமையான பதிவுகள், 'விசுawesomeமிண்துணிக்கைகள்' என்ற சகோதரர் விசு அவர்களின் தளத்தில். தளத்தின் பெயரே வித்தியாசமாய்!! இவர் இப்பொழுது தன் தளத்தை .com என்று மாற்றிவிட்டார். தொடர இந்த இணைப்பைப் பார்க்கவும்.

மாலதி என்ற தன் தளத்தில் எழுதிவரும் மாலதி அவர்கள் மாத்தியோசித்தது எதை? கைபேசியின் தீமைகள் படித்து கவனமாக இருந்துகொள்ளுங்கள். வெளுத்ததெல்லாம் பால் இல்லை என்பதைப் போல 'இனிப்பதெல்லாம் தேனல்ல' என்று சொல்லும் இவரின் கவிதை சில பெண்களுக்கு கண்திறக்கும் சாட்டையடி!

மழைச்சாரல் என்ற தளத்தில் பிரியா அவர்களின் இப்பதிவு மனதை உலுக்கியது..வாழ்வெனும் சுருக்கம். இதை இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் கேட்க வேண்டுமோ நம் திருநாட்டில், இந்தியா பெண்களுக்கான தேசமா? பெண்களின் வலி இவர் பதிவில் தெரிகிறது. என்னைக் கவர்ந்த மற்றொரு கவிதை, நடந்தேறா முயற்சி.

வேறு சில தளங்களுடன் நாளை உங்களைச் சந்திக்கிறேன், அதுவரை விடைபெறுவது,
--கிரேஸ் பிரதிபா 

34 comments:

  1. கவிதை அருமை சகோ இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. இன்றைய தொகுப்புக்காக காத்திருந்தேன். இரவு வேலைக்கு நேரமாகி விட்டது.
    நாளை காலையில் மீண்டும் சந்திக்கின்றேன்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. இன்று சற்று தாமதமாகிவிட்டது ஐயா. பள்ளி வேலை இருந்தது..
      நன்றி ஐயா,

      Delete
  3. அறிமுகத்திற்கு நன்றி மற்றும் அறிமுகபடுதபட்ட மற்ற பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.10 -20 பேர் படித்து கொண்டு இருந்தஎன் பதிவுகளை 100 கணக்கில் மாற்றியது சில ஒரு ஆறு மாதத்திற்கு முன் மற்றொருவர் செய்த அறிமுகம் தான் . மீண்டும் இங்கே .. நன்றி ... நன்றி ....

    ReplyDelete
    Replies
    1. "விசுAwesome "மறைந்து கிடந்த வைரம்....அது இப்பொழுதுதான் வெளியுலகிற்கு வந்து இருக்கிறது அது உங்களின் அறிமுகத்தால் இன்னும் மெருகேறும் என்பதில் சந்தேகமே இல்லை... பாராட்டுக்கள் கிரேஸ்

      Delete
    2. எவ்வளவு பெரிய வார்த்தை தமிழா! தங்கள் பாராட்டை தாழ்மையுடன் ஏற்று கொள்கிறேன். 2 மில்லியன் ஹிட்ஸ் வாங்கிய ஒரு ஜாம்பவாண்டியம் இருந்து வந்த பாராட்டலவா.. நன்றி கிரேஸ் .. நன்றி தமிழா ...

      Delete
    3. உண்மைதாம் மதுரைத்தமிழன் சகோ..நன்றி.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. என் தளத்தை அறிமுகப்பதியதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் சகோ...!

    ReplyDelete
  6. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுக தளங்களுக்கு சென்று நீங்களே தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சி... நன்றி...

    ReplyDelete
  7. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பதிவின் ஆரம்பத்தில் உள்ள ஆங்கிலக்கவிதையும் பொருத்தமான தமிழ்க்கவிதையும் நிதர்சனத்தை வெளிப்படுத்துவன. நன்றி.

    ReplyDelete
  8. கவிதை மிக அருமை.
    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    சிறப்பான தொகுப்பு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //பெண்கள் விழித்துக் கொண்டால்
    பெருமலையும் நகருமாம் //

    கவிதையில் அக்னி பறக்கின்றது.

    நல்ல தளங்களை இன்றைய தொகுப்பில் கண்டேன்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  10. கவிதையை விட்டு சிறிது நேரம் நகரவில்லை நான்... அறிமுகங்களும் சிறப்பு.

    ReplyDelete
  11. இழி பதர்கள்..............என்ன ஒரு நேர்த்தியான சொல்லாட்சி..!
    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டோர் அனைவர்க்கும் வாழ்த்துகள் சகோ!
    த ம கூடுதல் 1

    ReplyDelete
  12. கவிதை அருமைகிரேஸ் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
    நான்மீண்டும்வந்துநீங்கள் அறிமுகம் செய்திர்க்கும்தளங்களுக்கு சென்றுபார்க்கிறேன்

    ReplyDelete
  13. கவிதையும் அறிமுகங்களும் அருமை கிரேஸ்!

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அறிமுகங்களில் நண்பர் விசு அவர்களின் தளம் கண்டு மிக்க மகிழ்ச்சி! அவரது தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள்! வாசிப்பது மட்டுமல்ல...ரசித்துச் சிரித்துச் சிரித்து....தாங்காது....அத்தனை நகைச்சுவை....ஏனையோர் புதியவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ, ரசனையோடும் நகைச்சுவையோடும் எழுதுகிறார்.
      நன்றி

      Delete
  16. சிறப்பான தளங்கள்! பதினாறு வயது பதிவரின் சிறப்பான பதிவுகள் வியப்பைத் தருகிறது! நன்றி!

    ReplyDelete