வணக்கம் நண்பர்களே!
உலக மகளிர் தின வரலாறு தொடர்ச்சி..
முதல் உலகப்போர் துவங்கும் முன்னர் அமைதியை வலியுறுத்தி,ரஷ்ய மகளிர் பெப்ரவரி 1913, கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அவர்களின் முதல் உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடினர். அதன் பின்னர் ஏற்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின் உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து அதுவே கடைபிடிக்கப் படுகிறது. 1914இல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் போருக்கு எதிராகப் பெண்கள் ஊர்வலம் நடத்தி, பெண்கள் ஒற்றுமையைக் காட்டினர்.
1917இல் இரண்டு மில்லியனிற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் போரில் உயிர் துறந்திருந்தனர். அந்த ஆண்டு பெப்ரவரித் திங்கள் கடைசி ஞாயிறன்று பெண்கள் 'பிரட் and பீஸ்' (bread and peace) என்ற போராட்டத்தைத் துவக்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் ஜார் அரசு நீக்கப்பட்டு, பதவிக்கு வந்த தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பெண்களின் மன உறுதிக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு! பெண்கள் இணைந்து போராடினால் எந்த அரசையும் நிலை குலையச் செய்ய முடியும். பெண்களின் போராட்டம் துவங்கியது அப்பொழுது ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ஜூலியன் காலெண்டரில் பெப்ரவரி 23ஆம் நாள், அது தற்போதைய கிரகோரியன் காலெண்டரில் மார்ச் 8.
சோசியலிஸ்ட் இயக்கத்தால் துவங்கப்பட்ட உலக மகளிர் தினம் பின்னர் உலகளாவிய கவனம் பெற்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையும் வருடாந்திர மாநாடுகள் நடத்தி உலக மகளிரின் உரிமைகளையும் சமூக, அரசியல் பொருளாதாரப் பங்கேற்பையும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபை 1975 ஆம் ஆண்டை உலக மகளிர் ஆண்டாக அறிவித்தது. மகளிர் இயக்கங்களும் அரசுகளும் மகளிர் தினத்தன்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடியும் வாழ்வின் அனைத்துத் தரப்பிலும் கிடைக்கவேண்டிய சமஉரிமைகள் கிடைப்பதற்கான விழிப்புணர்வை நினைவுபடுத்தியும் வருகின்றன.
இந்த நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், அர்மேனியா, பெலாரஸ், கம்போடியா, கியூபா, கசகிஸ்தான், ஜியார்ஜியா, லாவ்ஸ், மங்கோலியா, எரித்ரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உகாண்டா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியெட்னாம், சாம்பியா போன்ற நாடுகளில் மகளிர் தினம் அரசு விடுமுறையாகவும், நேபால், சீனா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெண்களுக்கான அரசு விடுமுறையாகவும் அனுசரிக்கபப்டுகிறது. ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மரியாதை செய்யும் விதமாகப் பரிசுகள் கொடுத்தும் கொண்டாடுகின்றனர். இதைப் படிக்கும் ஆண்கள் ஏதாவது சிறு பரிசை உங்கள் வீட்டுப் பெண்களுக்குக் கொடுங்கள் :)))
சமூக வலைத்தளங்களில் கீழே உள்ள hashtags பயன்படுத்தி நம் ஆதரவைக் காட்டுவோம்.
#MakeItHappen
- #womensday
- #IWD2015
- #internationalwomensday
இப்பொழுது இன்றைய அறிமுகங்கள்.
கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் என்ற வலைத்தளத்தில், "வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்து பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரி அமைப்பை 2000 ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். " -
பாரதி பயிலகம் வலைப்பூ என்ற தளத்தில் கட்டுரைகள் மற்றும் கலை இலக்கியத் திரையில் முத்திரை பதித்தோரின் வரலாற்றுச் சுருக்கம் என்ற தலைப்பிற்கு ஏற்ப பதிவுகள் இருப்பதைக் காணலாம்,
தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி பல பதிவுகள், அதில் ஒன்று இது.
பலராமன் பக்கங்கள் என்ற வலைத்தளத்தில், ஊரே திரண்டு சிறைச்சாலையை உடைத்தால்.."மக்களுக்கு இருக்கும் ஆத்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்."
வித்தியாசமான ஆனால் இன்றைய யதார்த்த பார்வையில், முதியவர் பதிவு. இன்றைய இளைஞர் சமுதாயம் தாய் மொழி பற்றி என்ன நினைக்கிறது என்ற பதிவு. பெண்ணைப் பெற்றவன் நெடுங்கதை.
ஓலைக் கொழுக்கட்டை சாப்பிட நாகேந்திர பாரதி அவர்களின் தளத்திற்கு வாருங்கள். பிரம்பு வாத்தியார் இப்போதைய சிறுவர் தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
சொக்கலிங்கம் கருப்பையா அவர்களின் தமிழ் வான் என்ற தளத்தில் நாலடியார் பாடல்களை அருமையாய் விலக்கிப் பதிவு செய்து வருகிறார்.
நாளும் ஒரு நாலடியார் - பாடல் 37
நாளும் ஒரு நாலடியார் - பாடல் 29
கடந்த இரு மாதங்களாகத்தான் வலைதளத்தில் எழுதுகிறார், அவரை வாழ்த்தி ஊக்குவிப்போம்.

jobstamilan என்ற வலைத்தளத்தில் இருந்து சில பயனுள்ள பதிவுகள்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்காக, இப்பதிவு.
இத்துடன் எனது வலைச்சரப் பணி இந்த வாரம் நிறைவடைகிறது. மீண்டும் எப்பொழுதேனும் உங்களைச் சந்திக்கிறேன்.
உலக மகளிர் தின வாழ்த்துகள்!
நன்றியுடன்,
கிரேஸ் பிரதிபா
கிரேஸ் !! சிறப்பான பணி !! முழு வரலாறையும் தெரிந்து கொண்டேன். இன்றைய அறிமுகங்கள் எல்லோரும் எனக்கு புதியவர்கள் !! எல்லோருக்கும் என் வாழ்த்துகள். கிரேஸ் டியருக்கும்:) happy women's day:)
ReplyDeleteமிக்க நன்றி டியர்.
Deleteஎல்லோரும் புதியவர்களா? மகிழ்ச்சி டியர்.. :)))
உங்கள் வாழ்த்திற்கும் நன்றி டியர்..Happy Women's day, Lets MAKE IT HAPPEN! :)
எனக்கு புதியவை பல. படிக்கிறேன்.
ReplyDeleteஇன்னும் ஒரு நாள் மிச்சம் இருக்கிறதே !
ஓ மகிழ்ச்சி, நன்றி சகோ.
Deleteஅப்படியா? :)) சனிக்கிழமை வரை தானே?
அனைத்தும் புதியவை எனக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றிமா
ReplyDeleteமகிழ்ச்சி கீதா, நன்றி :)
Deleteநன்று..
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி ஐயா
Deleteபுதுமையான விடயங்களும், புதிய (எனக்கு) பதிவர்களும் தந்தமைக்கு நன்றி சகோ மகளிர் தின வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteமகளிர் தினம் துவங்கிய வரலாற்றுப் பின்னணியை அறியச் செய்த பதிவுக்கு நன்றி. மகளிர் தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி தோழி..உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்
Deleteசிறப்பான பதிவுகள்... அருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteஎன கலக்கலாய் கொண்டு சென்றீர்கள்... அருமை.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோ
Deleteபல புதிய தகவல்கள்! சகோதரி! எல்லோருமே புதியவர்கள் எங்களுக்கு! அறிமுகங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteமிக மிக அருமையான ப்திவுகள்! உழைப்பு, சிறப்பான வலைச்சரப் பணி! புதிய புதிய அறிமுகங்கள்! கலக்கிட்டீங்க சகோதரி!
தங்களுக்கும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரரே.
Deleteஎன்னுடைய வலை தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி! நன்றி சகோ
Deleteஅரிய செய்தி! அருமையான அறிமுகங்கள்.. வாழ்த்துகள் கிரேஸ்!
ReplyDeleteநன்றி தியானா
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteஉலக மகளிர் தின வாழ்த்துகள்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றுச் சிறப்பாக பணியாற்றியதற்குப் பாராட்டுகள்.
நன்றி.
மிக்க நன்றி அண்ணா.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா
Deleteசிறப்பான பணியை மிகவும் நிறைவாக முடித்ததோடு, பல புதிய அறிமுகப் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Deleteஅனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமகளிர் தின நல்வாழ்த்துகள்.
நன்றி சகோ
Deleteஉங்களை விரைவில் சந்திக்கலாம் என்று நம்புகிறேன்/...
ReplyDeleteநன்றி சகோ
DeleteVaalthukal.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஇனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteத ம +
நன்றி அண்ணா
Deleteஅன்புத் தங்கை கிரேசுக்கும், வலைப்பக்கம் படைத்துவரும் -படித்துவரும் சகோதரிகளுக்கும் வலைச்சரம் வழி உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉலக மகளிர் தின வரலாறும் அருமை, புதியன தேடும் கிரேசின் பதிவுகளில் நானறியாத சில வலைப்பக்க அறிமுகத்திற்கும் நன்றி. வாழ்த்துகள்.
த.ம. 5
Deleteமிக்க நன்றி அண்ணா.
Deleteஉலகமகளிர்தினவாழ்த்துக்கள் அப்பாடாஎத்தனை பணிகளுக்குஇடையில் ஏற்றபணியை
ReplyDeleteசெவ்வனேமுடித்த சகோதரிக்குஎனதுவழ்த்துக்கள்.
நன்றிங்க மாலதி
Deleteஅன்பின் தேன் மதுரத் தமிழ் கிரேஸ், அறிமுகத்திற்கும் ஊக்கம் அளிக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி.
ReplyDelete