Saturday, May 30, 2015

மீண்டும் வலைச்சரம் - வை. கோபாலகிருஷ்ணன் (VGK) ஆசிரியர் பொறுப்பேற்கிறார்


வணக்கம் வலைச்சர நண்பர்களே...
நலமா? என கேட்க வேண்டிய சூழ்நிலை...

என்ன செய்ய? சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சரம் கடந்த இரு மாதங்களாக நின்று போனது. அப்போது கடைசியாக வலைச்சரத்தை தொடுத்தவர் பதிவர் யாதவன் நம்பி. அவரோடு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் உள்ள உறவு நின்று போனது. 

நமது உறவை புதுப்பிக்க, ஆசிரியர் பொறுப்பேற்க மூத்த பதிவர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிக மிக ஆர்வமுடன் தாமாக முன் வந்துள்ளார். அவரது பெயரிலேயே "வை. கோபாலகிருஷ்ணன்" என்ற வலைப்பூவை 02-01-2011 முதல் ஆரம்பித்து எழுதி வருகிறார். இவரது வலைப்பூவில் சுமாராக 750 பதிவுகள் எழுதியுள்ளார்.

மனைவியும், மூன்று புதல்வர்களையும் பெற்ற இவர் திருச்சி மாநகரத்தில் வசித்து வருகிறார். BHEL தொழிற்சாலையில் அக்கௌன்ட் ஆபீசராக (cash dept) பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன்னைப்பற்றி  ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும், என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” என சொல்கிறார். மேலும் அசாதாரண திறமைகள் பலவும் தன்னுள் கொண்டவராவார். 

வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் இவர் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வலைச்சர ஆசிரியராக இருப்பதாக கேட்டுக் கொண்டதால் வலைச்சர விதிமுறையான "வாரம் ஒரு ஆசிரியர்" என்பதை வலைச்சரத்தின் மறுமலர்ச்சிக்காகவும், வாசகர்களுக்காகவும் தளர்த்தி அவருக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

வை.கோ அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க "வருக.. வருக..." வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துக்கள் வைகோ..

பின் குறிப்பு:
வலைச்சரம் நின்று போனதால் பதிவர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் வலைச்சரம் மீது அக்கறை கொண்டு வலைச்சரம் – ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அவரது வலைப்பூவில் பதிவு எழுதியுள்ளார். அதில் பலரும் வலைச்சரம் தடைபடாமல் இருப்பதற்காக பல யோசனைகளை பின்னூட்டங்களாக பகிர்ந்துள்ளார்கள். அவர்களுக்கும், பதிவர் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் வலைச்சரக் குழு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அப்பதிவில் நானும் வலைச்சரம் சம்பந்தமான சில விளக்கங்களை பின்னூட்டத்தில் பதிந்துள்ளேன்.

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்...