வணக்கம் வலைச்சர நண்பர்களே...
நலமா? என கேட்க வேண்டிய சூழ்நிலை...
என்ன செய்ய? சில தவிர்க்க இயலாத காரணத்தால் வலைச்சரம் கடந்த இரு மாதங்களாக நின்று போனது. அப்போது கடைசியாக வலைச்சரத்தை தொடுத்தவர் பதிவர் யாதவன் நம்பி. அவரோடு உங்களுக்கும் வலைச்சரத்துக்கும் உள்ள உறவு நின்று போனது.
நமது உறவை புதுப்பிக்க, ஆசிரியர் பொறுப்பேற்க மூத்த பதிவர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிக மிக ஆர்வமுடன் தாமாக முன் வந்துள்ளார். அவரது பெயரிலேயே "வை. கோபாலகிருஷ்ணன்" என்ற வலைப்பூவை 02-01-2011 முதல் ஆரம்பித்து எழுதி வருகிறார். இவரது வலைப்பூவில் சுமாராக 750 பதிவுகள் எழுதியுள்ளார்.
மனைவியும், மூன்று புதல்வர்களையும் பெற்ற இவர் திருச்சி மாநகரத்தில் வசித்து வருகிறார். BHEL தொழிற்சாலையில் அக்கௌன்ட் ஆபீசராக (cash dept) பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன்னைப்பற்றி ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும், என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” என சொல்கிறார். மேலும் அசாதாரண திறமைகள் பலவும் தன்னுள் கொண்டவராவார்.
வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் இவர் தொடர்ந்து ஐந்து வாரங்கள் வலைச்சர ஆசிரியராக இருப்பதாக கேட்டுக் கொண்டதால் வலைச்சர விதிமுறையான "வாரம் ஒரு ஆசிரியர்" என்பதை வலைச்சரத்தின் மறுமலர்ச்சிக்காகவும், வாசகர்களுக்காகவும் தளர்த்தி அவருக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.
வை.கோ அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க "வருக.. வருக..." வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நல்வாழ்த்துக்கள் வைகோ..
பின் குறிப்பு:
வலைச்சரம் நின்று போனதால் பதிவர் தி. தமிழ் இளங்கோ அவர்கள் வலைச்சரம் மீது அக்கறை கொண்டு வலைச்சரம் – ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அவரது வலைப்பூவில் பதிவு எழுதியுள்ளார். அதில் பலரும் வலைச்சரம் தடைபடாமல் இருப்பதற்காக பல யோசனைகளை பின்னூட்டங்களாக பகிர்ந்துள்ளார்கள். அவர்களுக்கும், பதிவர் தமிழ் இளங்கோ அவர்களுக்கும் வலைச்சரக் குழு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. அப்பதிவில் நானும் வலைச்சரம் சம்பந்தமான சில விளக்கங்களை பின்னூட்டத்தில் பதிந்துள்ளேன்.
தமிழ்வாசி பிரகாஷ்...
சோதனை மறுமொழி.........
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅன்புள்ள திரு. தமிழ்வாசி பிரகாஷ்,
Deleteவணக்கம்.
மேலே ஒருபத்தியில் ஒருசில தவறுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்யுமாறு தொலைபேசி + மின்னஞ்சல் மூலம் தங்களைக்கேட்டுக்கொண்டேன். ஆனால் நீங்கள் இன்னும் அதைச் செய்யவில்லை என்பதைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அந்தப்பத்தி கீழேயுள்ளது போல அமைந்தால் மட்டுமே நன்றாக இருக்கக்கூடும்:
===============================================
**
மனைவியும், மூன்று புதல்வர்களையும் பெற்ற இவர் திருச்சி மாநகரத்தில் வசித்து வருகிறார். BHEL தொழிற்சாலையில் நிதித்துறை அதிகாரியாக (Accounts Officer/Cash) பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன்னைப்பற்றி ”சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்” என சொல்கிறார். இருப்பினும் அசாதாரண திறமைகள் பலவும் இவரிடம் உள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம்.
**
அதே போல அதற்கு அடுத்த பத்தியில் ஓர் எழுத்து மட்டும் விட்டுப்போய் உள்ளது.
Delete//வலைச்சர விதிமுறையான "வாரம் ஒரு ஆசிரியர்" என்பதை வலைச்சரத்தின் மறுமலர்ச்சிக்காகவும், வாசகர்களுக்காவும் தளர்த்தி அவருக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.//
வாசகர்களுக்காவும் = வா ச க ர் க ளு க் கா க வு ம்
தவறுகள் திருத்தம் செய்யப்பட்டது.
Deleteமிக்க நன்றி.
Deleteவாழ்த்துக்கள்
ReplyDelete@செ செந்தழல் சேது
Deleteமிக்க நன்றி.
வாழ்த்துக்கள் கோபு அண்ணா ..
ReplyDeleteபிரியமுள்ள Angelin அவர்களுக்கு,
Deleteசந்தோஷம். தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.
வாழ்த்துகள் அய்யா!
ReplyDeleteவருக!
வருக!
வருக!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzghalinnisai.blogspot.com
@yathavan nambi
Deleteசந்தோஷம். தங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே ! :)
“மீண்டும் வலைச்சரம்” – என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தந்த சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி. இதற்கான முயற்சிகளில் தளராது ஈடுபட்ட அன்பின் சீனா அய்யா அவர்களுக்கும் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எனது அன்பான வணக்கங்களும் நன்றியும்.
ReplyDeleteஇதோ நானிருக்கிறேன் என்று களத்தில் வந்து செயல்வீரராக நிற்கும் அய்யா V.G.K அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன். (அரசியலில் வை.கோ என்ற பெயரில் திரு. வை.கோபால்சாமி அவர்கள் அழைக்கப்படுவதால், நான் அன்பின் வை. கோபாலகிருஷ்ணன் அவர்களை V.G.K என்றே குறிப்பிடுவது வழக்கம்)
த.ம.4
என் அருமை நண்பர் திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே,
Deleteவாருங்கள், வணக்கம்.
//இதோ நானிருக்கிறேன் என்று களத்தில் வந்து செயல்வீரராக நிற்கும் ஐயா V.G.K அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன். //
மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வரவேற்பு என் மனதுக்கு மிகவும் நெகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி. :)
வலைச்சரம் மீண்டும் வரும் என்ற நல்ல செய்தியைத் தம்பி (தமிழ்வாசி)பிரகாஷ் அவர்களின் அறிவிப்பு கண்டு மகிழ்ந்தேன்! மூத்த பதிவர் திருமிகு வை கோ அவர்கள் முன் வந்திருப்பதும் பாரட்டத் தக்கது! வருக! வருக ! என அவரையும் வலைச்சரத்தையும் வாழ்த்துகிறேன்!
ReplyDeleteபுலவர் இராமாநுசம் Sat May 30, 04:12:00 PM
Deleteவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//மூத்த பதிவர் திருமிகு வை கோ அவர்கள் முன் வந்திருப்பதும் பாரட்டத் தக்கது! வருக! வருக ! என அவரையும் வலைச்சரத்தையும் வாழ்த்துகிறேன்!//
தங்களின் அன்பான வருகைக்கும், மன மகிழ்ச்சிகளுக்கும், வரவேற்புகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
வலைச்சரத்தில் வீழ்ந்து மகிழ்ந்த பலரில் நானும் ஒருவன். புதிய பலவற்றை அறிமுகப்படுத்திய வலைச்சரம் சிலநாட்கள் நின்றது வருத்தமே. மீண்டும் வருவதால் மிகுந்த மகிழ்ச்சி.
ReplyDelete@வர்மா
Deleteமிக்க நன்றி.
வலைச்சரம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. வைகோவிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபழனி. கந்தசாமி Sat May 30, 04:35:00 PM
Deleteவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//வலைச்சரம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. வைகோவிற்கு வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
வலைச்சரம் தொடுக்க வந்த உற்சாகமான வைகோ ஐயாவிற்கு.... உற்சாகமான வரவேற்பை அளித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
ReplyDeleteவருக வருக வருக...!!!
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்.
R.Umayal Gayathri Sat May 30, 04:45:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வலைச்சரம் தொடுக்க வந்த உற்சாகமான வைகோ ஐயாவிற்கு.... உற்சாகமான வரவேற்பை அளித்து மகிழ்ச்சி கொள்கிறேன். வருக வருக வருக...!!! வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்.//
ஆஹா, உற்சாகத்தின் மறுபெயரே ‘உமையாள் காயத்ரி’யோ?
தங்களின் அன்பான வருகையும், உற்சாகமான வரவேற்பும் என்னை மென்மேலும் உற்சாகம் கொள்ளவைக்கிறது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றிங்க! :)
தடைபட்ட வலைச்சரத்தை மீண்டும் சரமாக்க வந்த வைகோ ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசசி கலா Sat May 30, 05:58:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//தடைபட்ட வலைச்சரத்தை மீண்டும் சரமாக்க வந்த வைகோ ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.//
தென்றலாக வருகை தந்து வாழ்த்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து தினமும் வாங்கோ, ப்ளீஸ். :)
வலைச்சரம் தொடுக்க வரும் ஐயா திரு. வை.கோ அவர்களை வரவேற்கிறேன்.
ReplyDelete- கில்லர்ஜி -
KILLERGEE Devakottai Sat May 30, 07:07:00 PM
Delete//வலைச்சரம் தொடுக்க வரும் ஐயா திரு. வை.கோ அவர்களை வரவேற்கிறேன். - கில்லர்ஜி -//
தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி.
வலைச்சர ஆசிரியபணி ஏற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்..!
ReplyDeletepriyasaki Sat May 30, 07:41:00 PM
Deleteவாங்கோ அம்முலு, வணக்கம். செளக்யமா சந்தோஷமா நல்லா இருக்கீங்களாம்மா ?
//வலைச்சர ஆசிரியபணி ஏற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்..!//
அம்முலுவின்அன்பு வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
'' மீண்டும் வலைச்சரம் '' – என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.,
ReplyDeleteஆல் போல் தழைக்க வேண்டுகின்றேன்..
அன்பின் வை.கோ. அண்ணா அவர்களுக்கு நல்வரவு!..
துரை செல்வராஜூ Sat May 30, 09:03:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//'' மீண்டும் வலைச்சரம் '' – என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆல் போல் தழைக்க வேண்டுகின்றேன்.. அன்பின் வை.கோ. அண்ணா அவர்களுக்கு நல்வரவு!..//
தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சிக்கும், வேண்டுதலுக்கும், எனக்கான வரவேற்புக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)
மீண்டும் வலைச்சரம். மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான நபரைத் தேர்ந்தெடுததுப் பொறுப்பு தந்ததை நினைக்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. பொறுப்பேற்றுள்ள ஆசிரியருக்கும், தமிழ்வாசி பிரகாசுக்கும் குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteDr B Jambulingam Sat May 30, 09:18:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
மீண்டும் வலைச்சரம். மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான நபரைத் தேர்ந்தெடுததுப் பொறுப்பு தந்ததை நினைக்கும்போது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. பொறுப்பேற்றுள்ள ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த நிறைவான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
'மீண்டும் வலைச்சரம்' _ பார்த்ததும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் !!
ReplyDelete@chitrasundar
Deleteமிக்க நன்றி.
பொருத்தமான ஆசிரியர்
ReplyDeleteவாழ்த்துக்கள்
Muruganandan M.K. Sat May 30, 10:22:00 PM
Deleteவாங்கோ டாக்டர். வணக்கம்.
//பொருத்தமான ஆசிரியர் .... வாழ்த்துக்கள்//
தங்களின் அன்பான வருகைக்கும், பொருத்தமான ஆசிரியர் என்ற அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
மீண்டும் புத்துணர்ச்சியுடன் புதுப் பொலிவுடன் வரையிருக்கும் வலைச்சரம் பற்றி அறிய மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete35 தினங்கள் தொடர்ந்து பணியாற்ற இருக்கும் திரு. வை. கோ. பா. அவர்களுக்கு வாழ்த்துகள்!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் Sat May 30, 10:50:00 PM
Deleteவாருங்கள் நண்பரே, இனிய காலை வணக்கங்கள்.
//மீண்டும் புத்துணர்ச்சியுடன் புதுப் பொலிவுடன் வர இருக்கும் வலைச்சரம் பற்றி அறிய மிக்க மகிழ்ச்சி!//
மிக்க நன்றி.
//35 தினங்கள் தொடர்ந்து பணியாற்ற இருக்கும் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!//
எல்லாமே இறை நாட்டம். நல்லபடியாக முடிய/முடிக்க வேண்டும். தினமும் வருகை தாருங்கள், நண்பா.
தங்களின் அன்பு வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
அஹா வாழ்த்துகள் வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
ReplyDeleteநான் இந்த இரண்டு மூன்று நாட்கள் வருவேன். அதன் பின் ஊருக்குச் செல்கிறேன்.அதுதான் என் வலைப்பதிவிலும் ஒரே அவசர அப்லோட்ஸ்.
ஆனால் ஊர் சென்று வந்தபின் உங்கள் எல்லா இடுகைகளையும் பார்த்துப் படித்து ரசித்துப் பின்னூட்டமிட்டுவிடுவேன் சார்.
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன் :)
மலர்வதை அறிந்து மகிழ்ச்சியுடன்.
DeleteThenammai Lakshmanan Sun May 31, 12:20:00 AM
Deleteவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.
//ஆஹா, வாழ்த்துகள் ... வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.//
தேனினும் இனிய தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
//நான் இந்த இரண்டு மூன்று நாட்கள் வருவேன். அதன் பின் ஊருக்குச் செல்கிறேன்.அதுதான் என் வலைப்பதிவிலும் ஒரே அவசர அப்லோட்ஸ். ஆனால் ஊர் சென்று வந்தபின் உங்கள் எல்லா இடுகைகளையும் பார்த்துப் படித்து ரசித்துப் பின்னூட்டமிட்டுவிடுவேன் சார்.//
ஆஹா ! மிக்க நன்றி !! அதுபோதும் எனக்கு. :)
வாழ்த்துகள் வாழ்க வளமுடன், அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன் :)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல நல்ல மகிழ்வூட்டும் செய்திகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
தங்கள் பயணம் மிக இனிமையாகவும், பாதுகாப்பாகவும் அமைய என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு
This comment has been removed by the author.
ReplyDeleteகோபு ஐயாவின் பணிசிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தொடர்ந்து பயனிப்போம்.
ReplyDeleteதனிமரம் Sun May 31, 03:33:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//மலர்வதை அறிந்து மகிழ்ச்சியுடன்.//
மலர்வதெல்லாம் மகிழ்ச்சியளிக்கக்கூடியவைகளே ! :)
தனிமரம் Sun May 31, 03:38:00 AM
//கோபு ஐயாவின் பணிசிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தொடர்ந்து பயணிப்போம்.//
மிக்க மகிழ்ச்சி + நன்றி நண்பரே, தொடர்ந்து வருகை தாருங்கள்.
வாழ்த்துகள் சார்.
ReplyDeleteவலைச்சரம் மீண்டும் மலர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.
ADHI VENKAT Sun May 31, 07:20:00 AM
Deleteவாங்கோ மேடம், வணக்கம்.
//வாழ்த்துகள் சார். வலைச்சரம் மீண்டும் மலர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.//
மிக்க நன்றி. வலைச்சரம் மீண்டும் மலர அடிப்படை காரண கர்தாவாகிய தங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். :)
தினமும் வருகை தாருங்கள்.
மிகவும் மகிழ்ச்சி... பதியுலக பிதாமகருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் Sun May 31, 07:21:00 AM
Deleteவாங்கோ Mr. DD Sir. வணக்கம்.
//மிகவும் மகிழ்ச்சி... பதியுலக பிதாமகருக்கு வாழ்த்துகள்...//
தங்களின் அன்பு வருகைக்கும், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ஐயா அவர்களை
ReplyDeleteவாழ்த்தி வரவேற்போம்
தம +1
கரந்தை ஜெயக்குமார் Sun May 31, 07:46:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//ஐயா அவர்களை வாழ்த்தி வரவேற்போம்//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
மீண்டும் வலைச்சரம் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. வலைச்சரத்தை நான் ரொம்பவும் மிஸ் செய்தேன் என அற்ற சொல்ல வேண்டும். எத்தனையெத்தனை புது நட்புகள் இத்தளம் வழியாக கிடைக்கப் பெற்றோம் . அது தொடராமல் போகிறதே என்கிற வருத்தம் இருந்து வந்தது .
ReplyDeleteமீண்டும் வலைச்சரம் புதுப்பொலிவுடன்உலாவரும் என்பது எல்லையில்லாத்து மகிழ்ச்சியளிக்கிறது. கோபு சார் அந்தப் பணியை ஆரம்பிக்கப் போகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் சார்.எ
rajalakshmi paramasivam Sun May 31, 08:51:00 AM
Deleteவாங்கோ மேடம், வணக்கம்.
//மீண்டும் வலைச்சரம் புதுப்பொலிவுடன் உலாவரும் என்பது எல்லையில்லா மகிழ்ச்சியளிக்கிறது. கோபு சார் அந்தப் பணியை ஆரம்பிக்கப் போகிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் சார்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியும் கூடுதல் மகிழ்ச்சியும் கொண்ட அழகான நீண்ண்ண்ட பல கருத்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
’அரட்டை’ அடிக்க தினமும் வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
i(blogintamil) am Back thanks valaicharam
ReplyDeletestalin wesley Sun May 31, 10:03:00 AM
Delete//I (blogintamil) am Back thanks valaicharam//
Thanks for your kind visit & comments. - vgk
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருக்கும் வை. கோ சாருக்கு வாழ்த்துக்கள் !!
ReplyDeleteSaratha J Sun May 31, 11:54:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருக்கும் வை. கோ சாருக்கு வாழ்த்துக்கள் !!//
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
முதலில் பதிவுல வை. கோ அய்யா அவர்களுக்கு என் நன்றிகள். யார் முயல்வது என்ற நிலையில் நான் இருக்கிறேன் என்று அபயம் தந்தவர்.
ReplyDeleteவலைச்சரம் மீள் தொடுக்க காரணமாக இருந்த அத்துனைப்பேருக்கும் நன்றிகள்.
அய்யா அவர்களின் பல பதிவுகளை போட்டி என்று இல்லாமல் படித்துள்ளேன். எத்துனைப் பதிவுகள், அத்துனையும் அருமையானவை. இனி வலைச்சரம் வசந்தத்துடன் வலம் வரும். வாழ்த்த வயதில்லையாயினும் வணங்குறேன். வாருங்கள் வலைச்சிறக்க,
அழைப்பின் மகிழ்வில்
மகேசுவரி.
mageswari balachandran Sun May 31, 03:35:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//முதலில் பதிவுல வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள். யார் முயல்வது? என்ற நிலையில் ’நான் இருக்கிறேன்’ என்று அபயம் தந்தவர்.//
:) ஆஹா ... மிக்க மகிழ்ச்சி + நன்றி.
//வலைச்சரம் மீள் தொடுக்க காரணமாக இருந்த அத்துனைப்பேருக்கும் நன்றிகள்.//
மிக்க மகிழ்ச்சி :)
//ஐயா அவர்களின் பல பதிவுகளை போட்டி என்று இல்லாமல் படித்துள்ளேன். எத்துனைப் பதிவுகள், அத்துனையும் அருமையானவை.//
மிகவும் சந்தோஷம்தான். எனினும் என் வலைத்தளத்தினில் தற்சமயம் அகஸ்மாத்தாக ஓர் போட்டி நடைபெற்றுவருவதாலும், என் அனைத்துப் பதிவுகளையும் தாங்கள் படிக்க விருப்பம் கொண்டுள்ளவராக இருப்பதாலும், போட்டிக்கான இறுதி நாளுக்கு இன்னும் முழுமையாக ஏழுமாத கால அவகாசம் இருப்பதாலும், தாங்கள் இன்றுமுதல் முயன்றால், மிகச்சுலபமாக இந்தப் போட்டியில் பரிசினை தட்டிச்செல்ல ஓர் வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதனால் தங்கள் பின்னூட்டங்கள் என் பதிவினில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல் 2011 ஜனவரியில் நான் வெளியிட்டுள்ள என் முதல் பதிவினினிலிருந்து ஆரம்பித்து வரிசையாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தால் நல்லது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
//இனி வலைச்சரம் வசந்தத்துடன் வலம் வரும். வாழ்த்த வயதில்லையாயினும் வணங்குறேன். வாருங்கள் வலைச்சிறக்க, அழைப்பின் மகிழ்வில் மகேசுவரி.//
தங்களுடைய வலைத்தளமும் என்றாவது ஒருநாள் என்னால் வலைச்சரத்தினில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என்பதை சூசகமாக இப்போதே தெரிவித்து மகிழ்கிறேன். :) அதனால் நாளை முதல் அடுத்த 35 நாட்களுக்கும் தொடர்ந்து வருகை தாருங்கள் + கருத்தளித்து ஊக்கமும் உற்சாகமும் அளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ஆகா! ஒரே நேரத்தில் இரண்டு இனிப்பான செய்திகள்! ஒன்று வலைச்சரம் மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளது; இரண்டு - அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்பவர் கோபு சார்! பல பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்த வலைச்சரம் தடைப்பட்டது வருத்தமாகவே இருந்தது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிக்குத் தாமாகவே முன் வந்து பொறுப்பேற்றிருக்கும் கோபு சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் ஆசிரியராகயிருப்பது எவ்வளவு கடினமான செயல்? கடும் உழைப்பு தேவைப்படும் ஒரு செயலுக்குப் பொறுப்பேற்று மற்றவர்க்கு முன்மாதிரியாக செயல்படும் கோபு சாருக்குப் பாராட்டுக்கள்! வலைச்சரப் பொறுப்பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்! 31/05/15 க்குள் தெரிவிக்கப்படும் என்று சொன்ன ரகசியம் இது தானா?. எப்படியோ என்னைப் போன்ற பிரபலமாகாத பதிவர்களின் பழைய பதிவுகளுக்கு உங்கள் மூலம் விளம்பரம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! கண்டிப்பாக தினமும் வந்து கருத்து சொல்வேன். அதை விட வேறென்ன வேலை எனக்கு?
ReplyDeleteKalayarassy G Sun May 31, 03:58:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//ஆகா! ஒரே நேரத்தில் இரண்டு இனிப்பான செய்திகள்! ஒன்று வலைச்சரம் மீண்டும் செயல்படத்துவங்கியுள்ளது; இரண்டு - அதற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்பவர் கோபு சார்!//
என்னைப்பொறுத்தவரை இவை இரண்டையும்விட மிக மிக இனிப்பான செய்தி ஒன்று உண்டென்றால் அது தாங்கள் கடைசியாக எழுதியுள்ளீர்களே !
//கண்டிப்பாக தினமும் வந்து கருத்து சொல்வேன். அதை விட வேறென்ன வேலை எனக்கு?//
என்பதேயாகும் :)
மிகவும் சந்தோஷம். அலுவலகப் பணிக்கும் சென்றுகொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எழுத்துலக ஆர்வமும், பறவைக்கூர்நோக்கலும் உள்ள தங்களைப்போன்ற இல்லத்தரசிகளுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும் என்பதை அடியேன் அறிவேன். இருப்பினும் தாங்கள் ஆர்வமாக இதுபோல எழுதியிருப்பதில் எனக்கு ஓர் தனிமகிழ்ச்சியும், ஊக்கமும், உற்சாகமும், பேரெழுச்சியும் ஏற்படத்தான் செய்கிறது. மிக்க நன்றி, மேடம்.
//பல பதிவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்த வலைச்சரம் தடைப்பட்டது வருத்தமாகவே இருந்தது. அதனை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிக்குத் தாமாகவே முன் வந்து பொறுப்பேற்றிருக்கும் கோபு சாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் ஆசிரியராகயிருப்பது எவ்வளவு கடினமான செயல்? கடும் உழைப்பு தேவைப்படும் ஒரு செயலுக்குப் பொறுப்பேற்று மற்றவர்க்கு முன்மாதிரியாக செயல்படும் கோபு சாருக்குப் பாராட்டுக்கள்! வலைச்சரப் பொறுப்பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள்!//
ஏதோ ஒரு சவாலாக இதனை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன். எப்படியும் வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபுறம் என் மனதில் ஆழமாக உள்ளது. இருப்பினும் தொடர் மின்சார விநியோகம், என் உடல்நிலை, என் கணினி உடல்நிலை, இண்டர் நெட் கனெக்ஷன் போன்றவைகளும், உங்களைப்போன்ற நலம் விரும்பிகளின் வருகையும் ஆதரவுகளும் என்னுடன் தொடர்ந்து ஒத்துழைத்தால் நல்லது. பார்ப்போம். நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கட்டும்.
//31/05/15 க்குள் தெரிவிக்கப்படும் என்று சொன்ன ரகசியம் இது தானா?.//
ஆம். அந்த தங்கமலை இரகசியம் இதுவேதான் ! :)
//எப்படியோ என்னைப் போன்ற பிரபலமாகாத பதிவர்களின் பழைய பதிவுகளுக்கு உங்கள் மூலம் விளம்பரம் கிடைக்கிறதென்றால் சும்மாவா?//
சும்மா ஏதாவது சொல்லாதீங்கோ. :) என்னைப்பொறுத்தவரை இன்றைய தேதியில் தாங்கள் ஓர் மிகப்பிரபலமான, மிகச்சிறந்த பதிவரும் படைப்பாளியாகும். :)
//மீண்டும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! கண்டிப்பாக தினமும் வந்து கருத்து சொல்வேன். அதை விட வேறென்ன வேலை எனக்கு?//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
என்றும் நன்றியுடன் கோபு
வலைச்சரத்தை மீன்டும் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் திகழ வைக்க நீங்கள் வந்து வீட்டீர்கள். நிச்சயம் ஆரம்பத்திலிருந்தே இனி ஒவ்வொரு நாளும் அசத்தலாகவும் அமர்க்களமாகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனோ சாமிநாதன் Sun May 31, 04:05:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வலைச்சரத்தை மீண்டும் பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் திகழ வைக்க நீங்கள் வந்து வீட்டீர்கள்.//
மிகவும் சந்தோஷம், மேடம். ஏதோவொரு சிறிய புதிய முயற்சி செய்யலாம் என்ற ஆவல் மட்டுமே.
//நிச்சயம் ஆரம்பத்திலிருந்தே இனி ஒவ்வொரு நாளும் அசத்தலாகவும் அமர்க்களமாகவும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை.//
தினமும் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே, நம் சிறந்த பதிவர்களில் சிலரை மட்டுமே சற்றே நிறைவாக அடையாளப்படுத்தி சிறப்பிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.
மும்முறை வலைச்சர ஆசிரியராகப் பதவி வகித்து, ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு, நவரத்தினங்கள் போன்ற தலைப்புகள் கொடுத்து, மிகச்சிறந்த பதிவர்களாகத் தேர்ந்தெடுத்து, அறிமுகங்கள் செய்து அசத்தியுள்ள தங்களைப்போலெல்லாம் என்னால் செய்வது மிகவும் கஷ்டமே.
//உங்களுக்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
வை.கோ. ஐயாவின் கருத்துரைகளை பல பதிவுகளின் பின்னூட்டத்தில் பார்த்திருக்கிறேன். மிகத் தெளிவான விமர்சனமாக அது இருக்கும். அதனாலே அவர் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் வலைச்சரத்தின் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் மறுமலர்ச்சியுடன் வரும் வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம 10
S.P. Senthil Kumar Sun May 31, 04:51:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வை.கோ. ஐயாவின் கருத்துரைகளை பல பதிவுகளின் பின்னூட்டத்தில் பார்த்திருக்கிறேன். மிகத் தெளிவான விமர்சனமாக அது இருக்கும். அதனாலே அவர் மீது மிக்க மதிப்பும் மரியாதையும் உண்டு.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நேரம் இன்மையால், இன்றுதான் தங்கள் தளத்தினில் வந்து என்னால் கொஞ்சம் எட்டிப்பார்க்க இயன்றது. இப்போதைக்கு FOLLOWER ஆகியுள்ளேன். :)
//அவர் வலைச்சரத்தின் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் மறுமலர்ச்சியுடன் வரும் வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். WELCOME !
வலைச்சரம் மீண்டும்
ReplyDeleteபுத்துணர்ச்சியுடனும் புதுப்பொலிவுடனும்
நடைபோட எனது வாழ்த்துகள்!
Yarlpavanan Kasirajalingam Sun May 31, 06:07:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//வலைச்சரம் மீண்டும் புத்துணர்ச்சியுடனும் புதுப்பொலிவுடனும் நடைபோட எனது வாழ்த்துகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், நம் வலைச்சரம் இனிதே நடைபோட, வாழ்த்தியுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
"எப்படியும் வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபுறம் என் மனதில் ஆழமாக உள்ளது" உள்ளத்தனையது உயர்வு! நிச்சயமாக அசத்திவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஆழமாக உள்ளது. விரிவான பதிலுக்கும் என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் மீண்டும் என் அன்பான நன்றி சார்!
ReplyDeleteKalayarassy G Sun May 31, 07:01:00 PM
Deleteவாங்கோ, தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி. :)
**"எப்படியும் வெற்றிகரமாக முடித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒருபுறம் என் மனதில் ஆழமாக உள்ளது"**
//உள்ளத்தனையது உயர்வு! நிச்சயமாக அசத்திவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கும் ஆழமாக உள்ளது. விரிவான பதிலுக்கும் என் எழுத்துக்கு ஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும் மீண்டும் என் அன்பான நன்றி சார்!//
தன்னம்பிக்கையளிக்கும் தங்கமான கருத்துகள் தங்கநிறப் பறவையிடமிருந்து வந்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்தோஷம் + நன்றியோ நன்றிகள், மேடம்.
என்றும் நன்றியுடன் கோபு
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட என்னை, நேற்று 31.05.2015 அன்று மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு, வெகுவாக பாராட்டி சிறப்பித்துள்ள அன்புள்ளங்களான
ReplyDeleteதிருமதிகள்:
1) விஜி (விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்) அவர்கள்
2) பூந்தளிர் சிவகாமி அவர்கள்
3) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
4) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
5) மனோ சுவாமிநாதன் அவர்கள்
6) கீதா சாம்பசிவம் அவர்கள்
7) ஆசியா உமர் அவர்கள்
8) ஆதி வெங்கட் (கோவை2தில்லி) அவர்கள்
9) கோவைக்கவி வேதா. இலங்கா திலகம் அவர்கள்
ஆகியோருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்
>>>>>
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட என்னை, நேற்று 31.05.2015 அன்று மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு, வெகுவாக பாராட்டி சிறப்பித்துள்ள அன்புள்ளங்களான
ReplyDeleteதிருவாளர்கள்:
01) அன்பின் சீனா ஐயா அவர்கள்
02) முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
03) செல்லப்பா யக்ஞசாமி ஐயா அவர்கள்
04) சென்னை பித்தன் ஐயா அவர்கள்
05) துரை செல்வராஜு அவர்கள்
06) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
07) ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள்
08) S. ரமணி அவர்கள்
09) ஸ்ரீராம் அவர்கள்
10) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
11) மதுமதி அவர்கள்
12) கரந்தை ஜெயகுமார் அவர்கள்
13) வெட்டிப்பேச்சு வேதாந்தி அவர்கள்
14) பால கணேஷ் அவர்கள்
ஆகியோருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
வலைச்சர ஆசிரியருக்கு நல் வரவு.
Delete@பூந்தளிர்
Delete:) மிக்க நன்றி, பூந்தளிர் :)
இனிய வாழ்த்துகள் கோபு சார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கேற்ப தங்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்பளித்துள்ள சீனா ஐயாவுக்கு நன்றி. அவர் வேண்டுகோளுக்கு இசைந்துள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இனி வலைச்சரம் களைகட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இப்படியொரு சிறப்பான முன்முயற்சியை எடுக்கத் தூண்டிய தமிழ் இளங்கோ ஐயாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
ReplyDeleteகீத மஞ்சரி Mon Jun 01, 11:24:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இனிய வாழ்த்துகள் கோபு சார். ’இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்ற குறளுக்கேற்ப தங்களைத் தேர்ந்தெடுத்து பொறுப்பளித்துள்ள சீனா ஐயாவுக்கு நன்றி. அவர் வேண்டுகோளுக்கு இசைந்துள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இனி வலைச்சரம் களைகட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இப்படியொரு சிறப்பான முன்முயற்சியை எடுக்கத் தூண்டிய தமிழ் இளங்கோ ஐயாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உற்சாகமூட்டிடும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம் :)
பிரியமுள்ள கோபு