வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 7-ம் நாள்
---------------------------------------------------------
ஏழாம் நாள்
வலைச்சரத்தில் இன்று என் ஏழாவதும் கடைசி நாளுமாகும் இது வரை
பதிவர்களில் பலரை வகைப்படுத்தி அறிமுகம் செய்து வந்தேன் இன்று அறிமுகமாகும்
பதிவர்களை நான் வகைப் படுத்தவில்லை.
முதலில் சமுத்ரா வார்த்தைகளில் இருந்து மௌனத்துக்கு என்னும்
தளத்தில் எழுதி வரும் மது ஸ்ரீதர் அசாத்திய திறமையும் ஞானமும் உள்ளவர். அவரும்
பெங்களூர் வாசி. ஒரு முறை அவரை என் வீட்டுக்கு வரவழைத்தேன் அவரது எழுத்தையும்
பொருள் மிகுந்த கருத்துக்களையும் வாசித்திருந்த நான் ஒரு பௌதிக பேராசிரியரை
நடுத்தர வயதில் குறுந்தாடியுடன் கூடிய ஒரு நபரை சந்திப்பேன் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன் ஆனால் கண்களில் மினுக்கும் ஒரு வாலிபரைச் சித்தரித்துப் பார்க்கவே
இல்லை முதலில் கொஞ்சம் சங்கோஜமாகப் பேசியவர் விஷய ஞானம் மிக்கவர். அது என்னவோ
தெரியவில்லை. நான் அறியும் பல பதிவர்களுக்கு சங்கீத ஞானமும் இருக்கிறது சமுத்ராவின்
எழுத்துக்கள் அணு, அண்டம் அறிவியல் என்று என்னை பயமுறுத்தியது என்னைப்
போன்றவர்களுக்காகவே கலிடாஸ்கோப் என்னும் தலைப்பிலும் ஜனரஞ்சகமாக எழுதி வந்தார்.
அவர் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் அதன் சுட்டியே நான் இப்போது கொடுப்பது “நைவேத்தியம்”படித்துப் பாருங்கள்
ரசிப்பீர்கள்.
இன்றைய அறிமுகத்தில் அடுத்தவர் வாசன் என்பவர். எரிதழல் என்னும்
வலைப்பூவில் அனல் பறக்க எழுதி வருபவர். ஒரு முறை சென்னைக்கு நான் சென்றிருந்தபோது
சிரமம் பார்க்காமல் என்னை வந்து சந்தித்து இருக்கிறார்.அவ்வப்போது பதிவுகள் எழுதி
வருகிறார் இவரது ஓரிரு பதிவுகள் படித்தால் போதாது ஒரு சாதாரண மனிதனின் உள்ளக்
கிடக்கைகளை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் வெளியிடுவார் இந்த ஓப்பன்னெஸ் எனக்கு
மிகவும் பிடிக்கும் மாதிரிக்கு ஒரு பதிவு டாஸ்மாக்
பற்றியது தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் எழுதும் இவர் அவசியம் படிக்கப்பட வேண்டும்
அடுத்த அறிமுகம் அமுதவன். சொந்த ஊர்ர் திருச்சி. தற்சமயம் பெங்களூர் வாசி. நான் பூர்வ ஜெம கடன் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் . அதில் பின்னூட்டம் எழுதியதன் மூலம் நான் அறிய வந்தேன் இவருக்கு திரைப்பட மற்றும் எழுத்துலக பிரபலங்கள் பலரும் அறிமுகம் இவர் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்தபோது அவர் எழுதிய பல பதிவுகளைப் படித்துள்ளேன் பெரும்பாலும் இசையைப் பற்றி அதுவும் தமிழ்த் திரை இசையைப் பற்றி எழுதியது கண்டிருக்கிறேன் எனக்கு தமிழ்த் திரை இசையில் ஞானம் குறைவு என்பதாலும் இவர் அதுபற்றி விளக்கமாகப் பதிவிடுவதாலும் அடிக்கடி நான் இவர் தளத்துக்குப்போவதில்லை. இருந்தாலும் தமிழ்ப் பதிவுலக வாசகர்களுக்கு தமிழ்த் திரை இசை பற்றியும் திரையுலக நட்சத்திரங்கள் பற்றியும் இவர் பதிவுகள் மூலம் அறியலாம் அமுதவன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். இவர் எழுதி இருந்த பெண்கள் விரும்பும் பாடல்களின் சுட்டி உங்களுக்காக. .
அடுத்ததாக காரிகன்
இவரும் அநேகமாக இசையைப் பற்றியே எழுதுகிறார் எனக்குச் சில நேரங்களில்
இத்தனைப் பாட்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டுமெனில் திரையிசைப் பாடல்களில்
இவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு வியக்க வைக்கும் ஒரு முறை வாழ்வியலில்
திரையிசைப்பாடல்கள் என்னும் பதிவினைப் பார்த்துக் கருத்துக்கூற காரிகனை
அழைத்திருந்தேன் நான் கோர்த்த பாடல்களில் ஒன்றிரண்டு அவருக்குப் பிடிக்கவில்லை
போலும் பின்னூட்டம் எழுதாமல் மெயிலிலோ இல்லை அவரது பின்னூட்டத்தில் மறுமொழியாகவோ
எழுதி இருந்தார் சரியாக நினைவில்லை இசை விரும்பிகளுக்காக
இதோ ஒரு சுட்டி
ன் வலைச்சர அறிமுகங்களில் கடைசியாக பரிவை.செ குமார் நான்
எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்புக்கு சிறிதும் எதிர்பாரா வகையில் இவர்
விமரிசனம் எழுதி இருந்தார். நண்பர் கில்லர்ஜீ அவருக்கு அந்த நூலைப் படித்துப்
பார்க்க கொடுத்திருந்தாராம் என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருவார் . நானும் அவர்
தளத்துக்குச் செல்வதுண்டு அவரை அறிமுகப் படுத்தும் பதிவாக அவர் என் நூலுக்கு எழுதி
இருந்த
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பற்றியும் என்
பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் . எல்லாம் ஒரு சுய தம்பட்டம்தான்
இந்த ஒரு வாரகாலப் பதிவுகளில் உங்களை எல்லாம் திருப்தி செய்திருபேன் என்று
நம்புகிறேன் SO LONG BYE,,,,!
சமுத்ரா வார்த்தைகள் சமுத்திரம் போல... பல விந்தைகள் உண்டு...
ReplyDeleteஎரிதழல் - தலைப்பை போலவே... இசைப் பிரியர்கள் அமுதவன் ஐயா அவர்களுக்கும் காரிகன் ஐயா அவர்களுக்கும், இனிய நண்பர் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
இன்றைய பல்சுவை பதிவர்களோடு இந்த வாரம் முழுவதும் ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துகள் ஐயா... நன்றி...
Delete@ திண்டுக்கல் தனபாலன்
Deleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி டிடி என் ஆசிரியப் பணியைப் பாராட்டியதற்கு நன்றி
வலைச்சர ஆசிரியர் பதவியை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்குப் பாராட்டுகிறேன்.
ReplyDelete@ டாக்டர் கந்தசாமி
Deleteபாராட்டுக்கு நன்றி ஐயா
வணக்கம் ஐயா.
ReplyDeleteதங்கள் மூலம் வலைச்சரத்தில் அறிமுகம்....
ரொம்ப நன்றி ஐயா...
எத்தனை முறை அறிமுகமானாலும் வலைச்சர அறிமுகம் என்பது சந்தோஷமே...
இரண்டு மாதமாக விடுமுறை... வலைப்பக்கம் வரவில்லை..
இப்போ அபுதாபிக்கு வந்தாச்சு... இனி தங்கள் தளம் தொடர்ந்து வருவேன்.
நன்றி ஐயா...
@ பரிவை சே. குமார்
Deleteஉங்கள் கருத்துக்கள் மகிழ்ச்சி தருகிறது. மீண்டும் பதிவுலகில் பவனி வர வாழ்த்துக்கள்.
இன்றைய பதிவில் சிலரை நான் அறியேன்!
ReplyDelete@ புலவர் இராமாநுசம்
Deleteஇப்போது அறிந்திருப்பீர்கள் அல்லவா.?வஎஉகைக்கு நன்றி ஐயா
வாழ்த்துக்கள் அய்யா! மிக சிறப்பான பணி!
ReplyDelete@ மைதிலி கஸ்தூரி ரெங்கன்
Deleteவாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்
தெரிந்த, அறிந்த பதிவர்கள். சிறப்பாக முடித்தீர்கள் இந்த வாரத்தை.
ReplyDelete@ ஸ்ரீராம்
Deleteபாராட்டுக்கு நன்றி ஸ்ரீ.
வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்து முடித்தமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த வாரத்தில் சில பதிவர்களை புதிதாய் தெரிந்து கொண்டேன்.
@ வெங்கட் நாகராஜ்
Deleteசிலபதிவர்கள் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி தருகிறது பாராட்டுக்களுக்கு நன்றி
முற்றிலும் மாறுபட்ட பார்வையால்
ReplyDeleteசுற்றிலும் பல்வேறு பட்ட பதிவாளர்களை இனங்கண்டு,
வற்றாத "தமிழ்" எழுத்து அருவியாய் வலம்வந்து
போற்றும்படி வலைச் சரத்தை சிறப்பித்தீரே!
G.M.B அய்யாவே பாராட்டுகிறோம்!!!
உமது பணியை!
நன்றி! என்னும் நாமம் சொல்லி!
த ம
நட்புடன்,
புதுவை வேலு
kuzhalinnisai.blogspot.com
@ யாதவன் நம்பி
Deleteஎன்னை இந்த வாரம் ஆசிரியராக அடையாளம் காட்டியதற்கு நன்றி ஐயா. வரும் வாரம் யார் பொறுப்பேற்கிறார்கள் என்று அறிய ஆவல் தொடர்ந்து ஊக்கம் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி.
இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிய செம்மையாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete@ வே.நடனசபாபதி
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
ஜி எம் பி சார்,
ReplyDeleteஎன்னையும் நினைவில் வைத்து அறிமுகம் செய்ததற்காக மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த வாழ்வியலில் பாடல்கள் பதிவை இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன்.
@ காரிகன்
Deleteஉங்களுக்கு அந்தசிரமம் வேண்டாமந்தப் பதிவின் சுட்டி இதோ
http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post_03.html நன்றி
வலைச்சரத்தில் வெற்றிகரமான 7 – ஆம் நாள். இன்று அறிமுகமான வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அறிமுகம் செய்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த ஒருவார ஆசிரியர் பொறுப்பு பணி பறறிய தங்களது அனுபவத்தினை, தங்கள் வலைத்தளத்தில் எதிர் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
த.ம.6
@ தி.தமிழ் இளங்கோ
Deleteநான் நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
இன்றைய அறிமுகங்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்றதுண்டு! இந்தவாரம் முழுக்க சிறப்பான முறையில் வலைச்சரத்தினை தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete@ தளிர் சுரேஷ்
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
அன்பின் ஐயா..
ReplyDeleteஇந்த வாரம் முழுதும் - வலைச் சரத்தினை தொகுத்து வழங்கிய விதம் அருமை..
புதிய தளங்கள் பலவும் அடையாளங்காட்டப்பட்டன. சிறப்பான பணி!..
மனமார்ந்த வணக்கங்களுடன்,
துரை செல்வராஜூ.,
@ துரை செல்வராஜு
Deleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா
ஐயா வணக்கம்.
ReplyDeleteதங்களின் ஆசிரியப் பணிக்கு வாழ்த்துகளும், நிறைவுற அழகாகச் செய்தமைக்கு வாழ்த்துகளும்.
நன்றி.
@ ஊமைக்கனவுகள்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
Aya indriya arimugam pathivargal ovu oruvarum aalntha anupathudan eluthe irukaga. nandri aya. payanagal thodaratum. . .
ReplyDelete@ மை மொபைல் ஸ்டூடியோஸ்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் இனிதே பணியாற்றினீர்கள் ஐயா! வாழ்த்துக்கள்.
ReplyDelete@ தனிமரம்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வணக்கம் ஐயா! அறிமுகங்களுக்கும் தாங்கள் சிறப்பான பணிக்கும் என்மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
ReplyDelete@ இனியா
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
காரிகன் தளம் அறிவோம் சென்றிருக்கின்றோம்...மிகவும் வியக்க வைப்பவர். எப்படி இப்படிப் பாடல்களை அழகுற நினைவு வைத்துக் கொண்டு பல தகவல்கள் அளித்து அலசி ஆராய்ந்து பிரித்துப் போடுகிறார் என்று...நாங்களும் கேட்டாலும் இவ்வளவு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதில்லை....அமெரிகாவில் கிழக்குக் கடற்கரையோரம் வசிக்கும் பரதேசி எனப்படும் திரு அல்ஃப்ரெட் கூட இசை பற்றி அதன் நுணுக்கண்களைப் பற்றி குறிப்பாக இளையராஜா இசை...எழுதுவார் அவ்வப்போது....
ReplyDeleteஇன்றைய பதிவர்கள் அடையாளத்தில் பிறரை அறிந்திருந்தாலும் தளம் சென்றதில்லை....அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்
ஆசிரியப் பணியைச் செவ்வனே செய்து வலைச்சரத்தை மணக்க வைத்து விட்டீர்கள் சார். இனியும் மணக்கும் என்று நம்புகின்றோம்..
வாழ்த்துகள் சார்...