Wednesday, July 22, 2015

இன்றைய பதிவர்களும் பதிவுகளும் !!!

அனைவருக்கும் வணக்கம் ,

கண்மணி அன்போடு, A Butterfly and Bio – Technology  எனும் தளங்களில் எழுதிவரும் கண்மனி அக்காவினைப் பற்றித் தனியாய் சொல்லவேண்டியதில்லை. செம நக்கலான, ஜாலியான, ஹாஸ்யமான, விறுவிறுப்பான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். எளிமையான பதிவுகளை , இவர் எழுத்தின் மூலம் சிறப்பாக மாற்றித் தருவது தான் இவரது சிறப்பு. நேற்று தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் ஷைனிங்ஸ்டார் சீனு ஆகிய இரண்டுபேரிடமும், எதுனா புது ப்ளாக் இருந்தா லிங்க் கொடுங்கணா என்று தனித்தனியே வினவிய போது இருவரும் சேர்ந்தார்போல் இவரின் வலைத்தள முகவரியைக் கொடுத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். குறிப்பாக சைனிங்ஸ்டார் எப்பேர்பட்ட ரசிகசிகாமணிகளைத் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதை நாடறியும்; ஆனால் அவரே கண்மணி அன்போடு வலைத்தளத்தின் ரசிகர் என்பதை நேற்று தான் நான்றிந்தேன் . இவ்வளவு நாள் ஒரு நல்ல பதிவரை மிஸ் செய்துவிட்டோமே என்ற வருத்தம் இவரின் பதிவுகளைப் படிக்கும் போது உண்டானது. இனிமேல் என்ன வேலை? மொத்த பதிவுகளையும் படித்துமுடித்துவிட வேண்டியதுதான் . இவரின் சில பதிவுகள் ,


மனித மனம் என்றும் அருகில் இருப்பதை கண்டு ஏற்றுக்கொள்ளாது என்பார்கள். எடுத்துக்காட்டாக நாம் ஒரு கோவிலுக்குச் சென்றே ஆகவேண்டும் எனப் பல வருடங்கள் யோசித்துக்கொண்டும் ப்ளான் போட்டுக்கொண்டும் இருப்போம்; அந்த கோயிலுக்கும் செல்வோம். அப்போது அந்த கோவிலைச்சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்வோர் மீது நமக்கு சிறு பொறாமை உருவாகும். இப்படிப் பக்கத்திலேயே நாமும் இருந்தால் தினந்தினம் சென்றுவரலாமே என்று நமக்குள் தோன்றும். ஆனால் உண்மையில் அக்கோயிலுக்கு அருகிலிப்பவர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் நம்மைப் போன்ற ஆர்வத்துடன் அக்கோவிலுக்கு வரமாட்டார்கள். இதேபோல் தான் சுற்றுலாத்தலங்கள், ஏன் காதலிகள் கூட. ஆரம்பத்தில் அவள் மடியிலேயே கிடக்க விரும்பும் மனது, போகப்போக நாம்ம விட்டுக்குச் செல்லக்கூட போகமுடியாதளவிற்கு அலுப்பு தட்டிவிடும்.  இப்போது மேட்டர் என்னவென்றால்  சுருதி  எனும் தளத்தில் எழுதிவரும் சுதாகர் அண்ணன் , ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார் . ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் தமிழ் சார்ந்த இலக்கிய கட்டுரைகள், இலங்கையின் அரசியல் நிலை , ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் நிலை என்று அசாத்தியமான பதிவுகளை தம் எழுத்தில் வடித்து நம்முன் காட்சிக்குத் தருகிறார் . இவரின் சில பதிவுகள் ,


அடுத்து, பொக்கிசம் எனும் தளத்தில் எழுதிவரும் லோகு என்பவர், சினிமா மட்டுமின்றி, சமையல், சீரியல் என அனைத்தையும் கலந்துகட்டி எழுதிவருகிறார். இவரின் கொரிய சீரியல்கள் – ஒரு மதிப்பீடு  பதிவு, தமிழ் சீரியல்களுக்கும் கொரிய சீரியல்களுக்கும் இருக்கும் வேற்றுமை, ஒற்றுமைகளை அட்டகாசமாக அலசி ஆரா(கலா)ய்கிறது. இவரின் அசைவப்பிரியர்களுக்கான சில டிப்ஸ், அசைவ உணவினைப் பற்றியும் , அதனால் உண்டாகும் நன்மை-தீமைகளைப் பற்றியும் எளிமையாக எடுத்தியம்புகிறது . தளத்தின் பெயராலேயே பிச்சைக்காரன் என்று அழைக்கப்படும் பிச்சைக்காரன் ,

 தன் தளத்தில் அரசியல் , சமூகம் , சினிமா , இசை , சிறுகதை என அனைத்தையும் கோர்த்து அழகாக எழுதிவருகிறார் . இவரின் சில பதிவுகள்


வத்திக்குச்சி  எனும் தளத்தில், வித்தியாச, வித்தாயசமான  சிந்தனைகளின் வெளிப்பாடுகளை நன்கு காணலாம். பெரும்பாலும் ஹாஸ்யமான பதிவுகள் தான் இவரது ஸ்பெசல். இவரின் தளத்தில் சீரியஸான எழுத்துகளையும் அவ்வப்போது பார்க்கலாம். ஓ.கே கண்மனி திரைப்படத்தை  மற்ற இயக்குநர்கள் எஎடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஓ.கே கண்மணி – இயக்குநர்கள் மாறினால்  எனும் பதிவில் எழுதி நம் வயிற்றை புண்ணாக்கியுள்ளார் .இவரின் சில பதிவுகள் .


மீண்டும் நாளைச் சந்திப்போம் ,
நன்றி ,
அன்புடன்
மெக்னேஷ் திருமுருகன் 



10 comments:

  1. சுதாகரன் செல்லதுரை தளம் புதிது... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. புதிய பகிர்வுகள் அனைத்துமே. நன்றி :)

    ReplyDelete
  3. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகங்கள் பலர் எனக்கு புதியவர்கள்! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  6. புதியவர்கள் பலர்....அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    ReplyDelete
  8. ரொம்ப மாதங்களே ஆகிவிட்டது வலைப்பக்கம் வந்து.... இன்று புதியவர்களைப் படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மெக்னேஷ் அவர்களே 

    ReplyDelete