வணக்கம் நண்பர்களே !
நேற்று பற்பல வேலைப்பளுவினூடே சிக்கித் தவித்ததால் ஒரு விசயத்தைப் பற்றி சொல்லமுடியாமல் போய்விட்டது . தமிழ் இலக்கியத்தில் தனியிடம் பெற்றவரும் , சொற்களைப் பயன்படுத்தி , இலக்கணம் பிறழாமல் பல அற்புத பாடல்களைத் தமிழ்த்தாயிற்கு சூட்டி மகிழ்ந்தவருமான கவி காளமேகத்தைப் பற்றி நேற்றே சொல்லலாம் என்றிருந்தேன் .
வசைபாடக் காளமேகம் என்று வழங்கப்பெறும் இவர் , சொற்களால் அம்பினைத் தயார் செய்து , அவ்வம்புகளின்வழியே தன்னை வசைபாடும் எதிரிகளின் முகத்திரையை கிழித்தெறியமளவிற்கு புலமை மிக்கவர் இவர் . யமகண்டம் (உயிரை யானையின் காலில் வைத்துப் பாடும் மிக ஆபத்தான கவிதைப் போட்டி) எனும் படுபயங்கர கவி யுத்தத்தில் பங்கேற்று வெற்றிக்கொடி நாட்டியவர் ; இவர் சிலேடை பாடுவதில் மட்டும் வல்லவர் அன்றி , நகைச்சுவைத் ததும்ப பிறரை ஓட்டுவதிலும் வல்லவர். இவரின் பாடல்களில் ஒரு பாடல் எப்போதானாலும் எனக்கு மறக்காது . காரணம் வெறும் ஒன்பது எழுத்துகளை வைத்து நான்கே ஓசைகளையுடைய நான்கடிப் பாடலில் , அகப்பொருள் குறித்த ஒரு அற்புதமான பாடல் அது .
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தாதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி .
தாதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது
தித்தித்த தோதித் திதி .
என்ன ? ஒன்றும் புரியவில்லையா ? இப்பாடலின் பொருளைக் கூறிவிடுகிறேன் . பின்பு எப்படி படித்துக்காட்டினால் புரியும் என்பதையும் குறிப்பிடுகிறேன் . இப்பாடல் , தலைவனை நினைத்து தவிக்கும் தலைவியானவள் , தனக்குத் தானே கூறிக் கொள்வதாகும் . தன் காதலை அவனிடம் தெரியப்படுத்த தூது விடலாமா என்றெண்ணும் தலைவி இவ்வாறு யோசிக்கிறாள் .
கிளியைத் தூதுவிடலாம் என்றால் அதனால் பேசவியலாது ; தோழியைத் தூது அனுப்பலாம் என்றால் , அவளோ நாளை , நாளையென்றே நாட்களைப் போக்கிக் கொண்டிருக்கிறாள் . இந்நிலையில் மனமே ! நீயே என் தலைவனின் பெயரைக் கூறி , கூறி என்னைக் காத்தருள வேண்டும் . மேலே கூறிய பாடலை ்கீழ்க்கண்டவாறு பிரத்துப் படித்தால் இதன்பொருள் விளங்கலாம் .
தாதி தூதோ தீது , தத்தை தூது ஓதாது
தாதிதூது ஒத்தித்த தூதது – தாதுஒத்த
துத்தி தத்தாதே துதித்ததே தொத்தீது
தித்தது ஓதித் திதி .
துத்தி தத்தாதே துதித்ததே தொத்தீது
தித்தது ஓதித் திதி .
நம் புலவர்களின் திறன் கண்டு ஆச்சரியமாயுள்ளாதா ? இவர்போன்று எண்ணற்ற கவிகள் , உலகில் மற்ற கவிஞர்கள் எண்ணியும் பார்க்கவியலா வண்ணம் பற்பல அரிய கவிதைகளைத் தமிழில் படைத்துள்ளார்கள் . வழக்கம்போல கூட இருப்பதன் பெருஉமைத் தெரியாமல் அதனை நாம் வீணாக்கி வருகிறோம் . சரி , இன்றைய பதிவர்களைக் காணலாம் .
இன்றைய பதிவர்கள் அனைவரையும் கண்டிப்பாக நீங்கள் அறிந்திருப்பீர் ; காரணம் எல்லோரும் மிகப்பிரபலாமான பதிவர்கள் . நான் ப்ளாக் ரோலில் வைத்திருந்து , தொடர்ந்து படித்து வரும் பதிவர்கள் .
இவர் நஸ்ரியா மார்க்கத்திலிருந்து , வைணவ மார்க்கத்திற்கு திரும்பி , தன் பா புனையும் திறமையால் வைணவக்கடவுளான ஶ்ரீரங்கப்பெருமாள் மீது மட்டும் இவர் பாடலெழுதினால் இன்னும் பத்துவருடங்களில் ஆவியாழ்வார் என்றழைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை . பெர்முடா திரைப்படத்தில் வரும் மொட்டை கெட்டப்பைப் பார்த்து அடுத்த சத்யராஜ் என்று சொல்லுமளவிற்கு நடிப்பில் அந்தந்த கேரக்டர்களுடன் ஒன்றிப்போனவர் . நடிப்புத்திறமைக்கு எடுத்துக்காட்டு எனில் சின்னஞ்சிறு இடைவெளிகளில் வந்த POET THE GREAT – லும் , பெர்முடாவிலும் இவரின் வெரைட்டி நடிப்பினைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் . கவிதையிலும் தலைப்பைக் கொண்டே கவிதை புனையும் திறன்மிக்கவர் . எதுகை , மோனை புதுக்கவிதைக்கும் தேவையென்பதை தன் கவிதைகளுடனிடையே நிருபித்து வருபவர் . குறும்பட இயக்கத்திலும் காலூன்றி , ஷங்கர் , ராஜமௌலி கூப்பிட்டாலும் நடிப்புத்துறையில் இறங் மாட்டேன் என்றிருந்த சீனிவாசனை காதல் போயின் காதல் மூலம் ஷைனிங் ஸ்டார் ஆக்கி ஒரு ஈடுஇணையற்ற மாபெரும் நடிகரை அடையாளம் கண்டுபிடித்து , இவ்வலையுலகிற்கு வழங்கியவர் . கவிஞர் மட்டுமின்றி தானே தன் பாடல்களுக்கு மெட்டமைத்து பாடக்கூடிய திறமையும் மிக்கவர் . கவிதைகளுக்கு மட்டுமின்றி தான் எழுதும் கதைகளையும் , சொல்லாடலில் சிற(ரி)க்கச் செய்பவர் . வாத்தியாரின் ISI தரச்சான்றிதழ் பெற்ற மாணவன் நான் தான் என்பதுபோல , வாத்தியாருக்கு அடுத்தபடியாக எளிய , குறு பதிவுகளின்மூலம் நம்மை வசியப்படுத்துபவர் . இப்படி கவிஞர் , இயக்குநர் , நடிகர் , பாடகர் , பதிவர் என பன்முக திறமை வாய்ந்த ஆவி அண்ணன் இப்போது எழுத்துலகை ஒதுக்கிவிட்டதற்கு என்ன காரணம் என்றுதான் புரியவில்லை ! ஏங்க அண்ணே ? இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிவு தான் எழுதவேண்டும் என்று கொள்கை விரதம் கடைபிடிக்க வேண்டுமா ? நீங்கள் பலகளங்களில் சாதித்திருந்தாலும் , எழுத்தின்மூலம் தான் எங்களை முதன்முதலில் கவர்ந்திழுத்தவர் என்பதனை மறக்க வேண்டாம் . எங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் மூன்று பதிவுகளாவது எழுதியாக வேண்டும் என்று மிரட்டிக் கேட்டுக் கொள்கிறேன் . தவறும்பட்சத்தில் ஷைனிங்ஸ்டாரின் கால்ஷிட் உங்களுக்கு கிடைக்காது என்பதையும் பெருந்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் . அண்ணனின் சில பதிவுகள் ,
ஒருவர் வலைப்பதிவு ஆரம்பித்து அதிகபட்சம் ஒருவருடங்கள் தொடர்ச்சியாக எழுதுவதே பெரும் சாதனைதான் . நானே ஆரம்ப காலகட்டங்களில் மாதத்திற்கு 10 லிருந்து 20 பதிவுகள் வரை சாதாரணமாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தேன் . ஆனால் கடைசி மூன்று மாதங்களில் மொத்தமாக சேர்த்தே 15 பதிவுகள் தான் எழுதியுள்ளேன் . என்ன காரணம் என்று யோசித்தால் மண்டை , தன் சுரப்பை நிறுத்திக் கொள்வது அல்லது சோம்பேறித்தனம் . நேரமின்மை என்பது எப்போதும் யாருக்கும் காரணமாகாது . எழுதுவதற்கான கச்சாப் பொருள் இருந்தால் எப்பேர்பட்ட பிஸியான சூழலிலும் எழுதிவிடலாம் என்பதே உண்மை . சாதாரணமாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள் , அனுபவக்கட்டுரைகள் எழுதுபவர்கள் என்றால் கச்சாப் பொருள் அதீதளவில் தேவையில்லை . வாரத்திற்கு 5 சினிமாக்கள் ரிலிசாகின்றது ; இன்னும் தெலுங்கு , மலையாளம் , இந்தி என்று களத்தில் இறங்கினால் சினிமா விமர்சகர்கள் தினமும் 3 பதிவுகள் தாராளமாய் எழுதலாம் . அனுபவக் கட்டுரைகளை எழுதபவர்களுக்கு , சும்மா உட்கார்ந்திருப்பது கூட அனுபவம் தான் . ஆனால் பிறரை சிரிக்கும் வண்ணம் நகைச்சுவை எழுதுவதற்கு ????? வலைத்தளம் ஆரம்பித்து இரு வருடங்களாக தினம் ஒரு பதிவு என்ற தன்நிலையில் துளிகூட மாறாமல் தினமும் தன் எழுத்தாண்மையால் நம்மையெல்லாம் சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் பகவான்ஜிக்கு தமிழ்வலைப்பதிவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராட்டு விழா நடத்தினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை . திடீரென கண்டங்களினிடையே இடப்பெயர்வு நடந்து நாமெல்லாம் துருவப் பகுதிகளுக்குச் சென்று , அந்நிலையில் சூரியன் உதிக்காமல் போனாலும் ஜோக்காளியின் , ஜோக்துளிகள் பதிவில் உதிக்கத் தவறாது .
இவரது சில பதிவுகள்
பதிவுலகைத் தாண்டி , எனக்கிருக்கும் மிகச்சிறந்த வெல்விஷ்ஷர் , நண்பர் , சகோதரர் என்றால் அது மலர்த்தரு கஸ்தூரி ரங்கன் அண்ணா தான் . அவர் எனக்கு போன் செய்து ‘மெக்’ என்று உரிமையுடன் அழைக்கும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும் . இருவரும் கலந்துரையாட ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது . இவரிடம் இருக்கும் கச்சாப் பொருள் எனகிருந்தால் இன்னும் 50 வருடங்களுக்குத் தேவையான பதிவுகளை இப்போது ட்ராப்ட் மோடில் வைத்திருப்பேன் . அவ்வளவு விஷயங்களுக்கு சொந்தக்காரர் . அவ்வபோது ஆங்கில இலக்கியம் குறித்த என் சந்தேகங்களுக்கு எனக்குப் புரியும் வகையில் , நேரம் ஆனாலும் நொந்துகொள்ளாது தெளிவுபடுத்துபவர் . ஒருமுறை ஷேக்ஸ்பியர் குறித்த என் சந்தேகத்திற்கு விடையளிக்கும்வண்ணம் ஒரு பதிவே எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் . இப்படி நான் எழுதவதே அவருக்கு கண்டிப்பாக பிடிக்காது . தற்புகழ்ச்சி , வெட்டி பந்தா , ஒத்தோதுவது போன்ற விஷயங்களெல்லாம் வெறுப்பவர் . ஹாலிவுட் சினிமாக்கள் , சமூகம் சார்ந்த அவலங்கள் , தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் , கல்வி குறித்த பார்வைகள் என லவித்தியாச வித்தியாசமான பதிவுகளுக்குச் சொந்தக்காரர் . ஒருமுறை , தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு வாட்ஸப் குழுமம் துவக்கலாமா மெக் ? என்று கேட்டார் . அக்கோரிக்கையை நான் இங்கு முன்வைக்கிறேன் . வலைப்பதிவர்கள் அனைத்து சோசியல் நெட்வொர்க் களிலும் இணைந்திருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாக அவர்கருதுவது போன்றே நானும் கருதுகிறேன் . உங்களின் கருத்துரைகள் கொண்டு , திரு தமிழ்வாசி அவர்களிடம் இவ்விண்ணப்பத்தை எழுப்புகிறேன் . பார்க்கலாம் , நிறைவேற்றுவாரா என்று . அண்ணனின் சில பதிவுகள் ,
வெல் , வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கடுத்து வலையுலகில் அதிகம் அறியப்படும் நபராக இருப்பவர் என்றால் அது கில்லர்ஜி அண்ணன் தான் . இந்தியா வந்திருக்கிறேன் என்று அவர்கூறியதும் மிகுந்த சந்தோஷமாயிருப்பினும் , இந்நிலையில் அவரைச் சந்திக்க இயலாமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் மனதினுள் ஒரு ஓரத்தில் இருக்கிறது . மேலே சொன்ன கவி காளமேகம் போல் , கில்லர்ஜியும் பதிவுலகின் காளமேகம் என்று அழைக்கலாம் . சொற்களைப் பயன்படுத்தி அட்டகாசமான பல விஷயங்களை பதிவுகளின் வழியே நமக்கு தருகிறார் . ‘என்பது ‘ என்பதை 80 என்று எழுதி தமிழ் வலையுலகில் சுருக்கெழுத்து முறையை அறிமுகிப்படுத்தியுள்ளார் . இவரின் சில பதிவுகள் ,
மைதிலி அண்ணியினைப் ( எனக்கு அண்ணி தான் ) பற்றி தெரியாதவர்கள் இருந்தால் கருத்துரையில் கொஞ்சம் கைத்தூக்குங்கள் என்றால் ஒருவரும் தூக்கமாட்டார்கள் . பின்ன! அரசியிலிலிருந்து சினிமா , சமூகம் , கல்வி , இல்லம் , பெண்மை , சமையல் , தொழில்நுட்பம் , சிறுகதை என அனைத்தையும் கலந்து கட்டி எழுதி , அனைவரையும் கவர்ந்திழுத்தால் எல்லோரும் அறியாமல் எப்படி இருப்பார்கள் ? என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு மிச்சமாக ஏதாவது ஒரு ஜானரை விட்டு வைப்பார் என்று பார்த்தால் , பதில் ம்ஹூம் ! ஒருகட்டத்தில் நான் எழுதநினைக்கும் சில விஷயங்களை பிறபதிவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்து இரண்டு மாதகாலம் பதிவுலகை விட்டே ஒதுங்கியிருந்தேன் ; அவற்றுள் குறிப்பிடித்தக்கவர்களில் இவரும் ஒருவர் . எளிமையாக , அதிமேதாவித்தனமற்ற , ரசிக்கும்படியான குறும்பெழுத்துகளுக்குச் சொந்தக்காரர் . இப்போதெல்லாம் வலையுலகை விட்டு , வெளியுலக வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருப்பது கவலையளிக்கும் விஷயம் . இருப்பினும் இதையே என் கோரிக்கையாக ஏற்று , விடுமுறை நாட்களில் கொஞ்சம் நேரமொதுக்கி , பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டினால் என் மகிழ்ச்சி நிறையாகி விடும் . இவரின் சில பதிவுகள் ,
இனிய தொகுப்பு..
ReplyDeleteஇன்றைய அறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துகள்..
அனைவருமே அறிந்த நண்பர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி. நாளை சந்திப்போம்.
ReplyDeleteT H A N K S
ReplyDeleteAnri Verillaiye..... Varthaikal.....
KILLERGEE
நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteவாட்ஸப் குழுமம் யோசிக்க வேண்டிய ஒன்று...
ReplyDelete# ஜோக் துளிகள் பதிவில் உதிக்கத் தவறாது #
ReplyDeleteஇன்று, என் 1500வது பதிவு வெளியாகி இருக்கும் நிலையில், உங்களின் ஊக்கத்தால் தொடர்கிறேன் :)
அனைவரும் நண்பர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி! காளமேகம் பாடல் விளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteநண்பர்களின் அறிமுகங்கள்..... மகிழ்ச்சி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
அனைவரும் அறிந்த நண்பர்களில் சிலரை இங்கு குறிப்பிட்டீர்கள், மகிழ்ச்சி!
ReplyDelete!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteதங்கள் பணித் தொடரட்டும்,
நன்றி.
நான் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்கள் இவர்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.