Monday, July 27, 2015

ஒரு சாமானியனின் வணக்கங்கள் !


லைப்பூ நட்புகள் மற்றும் வலைச்சர நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம். வலைச்சர பொறுப்பினை என்னிடம் முன்மொழிந்த அருமை நண்பர் " குழலின்னிசை " புதுவை வேலு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.



புதுவை மாநிலத்தின் காரைக்காலை பூர்வீகமாக கொண்ட நான் வசிப்பது பிரான்சில்  என்பதை தவிர தனிப்பட்ட முறையில் என்னைபற்றி சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது !

பல்வேறு கனவுகளும் திட்டங்களுமாய் வாலிப வாழ்க்கையை தொடங்கி, பிடித்தது என்பதைவிட கிடைத்ததில் மகிழ்ச்சியுற்று, நான், குடும்பம், நட்பு சுற்றம் என்ற சிறு சுயநல வட்டத்துக்குள் வாழ்க்கையை அமைத்துகொண்டு சமுதாய கோட்பாடுகள் மற்றும் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழும் கோடானுகோடி சராசரி சாமானியர்களில் நானும் ஒருவன் !

தேதியும் ஆண்டும் நினைவில் பதியாத பால்யத்தில், ஆடிக்காற்றுடன் கருமேகம் சூழ்ந்து மழையும் பெய்த ஒரு முன்னிரவில் எனக்கு அறிமுகமான காமிக்ஸில் தொடங்கிய என் வாசிப்பு வாழ்வின் எத்தனையோ மாற்றங்களுக்கு பிறகும் தொடர்கிறது !

இதுதான் என்றில்லாமல் கண்டது அனைத்தையும் படிப்பவன் நான்...  வாலிபத்தின் தொடக்கத்தில் காதலின் பொருட்டு டீ கடைகளில் காத்து நின்ற பொழுதுகளில் கூட காதலை மறந்து வடை சுமந்த பத்திரிக்கை துண்டு சொல்லும் செய்தியில் லயித்தவன் !

மிக இளம் வயதிலேயே முத்தாரம், கல்கண்டு, சூப்பர் நியூஸ் போன்ற தமிழ் இதழ்களுக்கு துணுக்குகள்  மற்றும் சிறு கட்டுரைகள் எழுத ஆரம்பித்ததுதான் என் முதல் எழுத்து அனுபவம். பிரான்ஸ் வந்ததிலிருந்து தடைபட்டுவிட்ட துணுக்கு தோரணங்களுக்கு மாற்றாய் நான் நண்பர்களுக்கு எழுதிய  கடிதங்கள்  என் எழுத்து பசியை (?!) சில ஆண்டுகள் தீர்த்தன !  என் கிறுக்கல்களின் தகுதி எனக்கே தெரியும் என்பதால் கதைகள் எதையும் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப முயற்சித்ததில்லை... யாரும் எழுதலாம் என்ற இணையத்தின் சுதந்திரத்தால் பாவம் உங்களுக்கெல்லாம் என் கிறுக்கல்களையும் சகித்து படிக்க வேண்டிய கொடுமை !  பாவம் தமிழ் !

னிப்பட்ட விருப்புவெறுப்புகள் கோபதாபங்கள் தவிர்த்துவாழ்க்கை நமக்காக மறைத்து வைத்திருக்கும் திருப்பங்களையும், அதிசயங்களையும், அது நமக்கு அறிமுகப்படுத்தும் பல்வேறுவிதமான மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலை சார்ந்து அமையும் குணாதிசயங்களையும் படிக்க பழகினோமானால் உலகின் ஆக சிறந்த இலக்கியம் அதுதான்  என புரியும் ! ஆனால் இயற்கையின் இந்த இலக்கியம் பயில நிறைய பொறுமை அவசியம் !

வாழ்க்கை எனக்கு கற்பிக்க விரும்புவதை, எனது ஆக சிறு புத்தி அறிந்துகொண்ட கடுகளவிலிருந்தும் குறைந்த என் வாழ்வனுபவங்களை,  பகிர்ந்துகொள்ளகொள்ளவும், நமது சமூகத்தின் சிறப்பு மற்றும் சீரழிவுகளை பதிவு செய்யவுமே என் வலைப்பூ !

து என்ன சாமானியன் ?.... ஏனிந்த முகமூடி ?!...

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணனினால் படைக்கப்பட்டு டைம்ஸ் ஆப் இந்தியா கார்ட்டூன்களின் ஆன்மாவாய் வாழ்ந்த கேலிச்சித்திர பாத்திரம் மிஸ்டர். காமன்மேன்... திருவாளர் பொதுஜனம் அல்லது சாமானியர் !... அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்கள், ஆளும்வர்க்க அதிகார அலும்புகள், சமூக அவலங்கள் என தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் மெளன சாட்சியாய் பார்த்து நிற்கும் சாதாரணன்... ஆனால் தனிமனிதனின் சக்தியையும் அறிந்த, புத்தியால் முதிர்ந்த மனிதன் !

பல்வேறு மதங்களில் தொடங்கி பலநூறு ஜாதிகளுடன் , பல மொழி கலாச்சார வேறுபாடுகளும் நிறைந்த இந்திய சமூகத்தில் சொந்த அடையாளத்துடன் எழுதுவது சில சமயங்களில் எழுத்தின் உண்மையை நீர்த்துப்போகச்செய்துவிடும் ! நியாயமானவைகள்கூட எழுதுபவனின் சமூக அடையாளத்துடன் சம்மந்தப்படுத்தப்பட்டு பிரச்சனையாக்கப்படுவது இந்த சமூக அவலங்களில் ஒன்று !


வலையுலகில் பலர் எனது இயற்பெயர் சாம் என நினைத்திருக்கிறார்கள்... எனது வலைப்பூவினை பதிந்த போது முதல் பெயராய் சாமானியனை நிரப்பினேன். இரண்டாம் பெயரும் கட்டாயம் என்றதால் சாமானியனின் சுருக்கமாய் சாம் ஆனேன் !

அன்று எதார்த்தமாய் எழுதிய சாமில் ஒரு வசதி இருப்பதை இன்று ஆச்சரியமாய் உணருகிறேன்... சாமிநாதன், சம்சுதீன், சாமுவேல் ஆகிய மும்மத பெயர்களின்  பொதுவான சுருக்கமாகவும் சாமினை கொள்ளலாம் !
என் முகமூடியின் கதை இதுதான் !

காலம் என்னும் பள்ளியின் மாணவனாகவே தொடர விரும்பும் நான் வலைப்பூ அனுபவத்திலும் சரி, எழுத்தின் முதிர்ச்சியிலும் சரி, மிகவும் சிறியவன். சாதித்தேன் என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் ஒன்றுமற்றவன்...

என் படைப்புகளில் ஏதேனும் சிறப்பு இருக்குமானால் அந்த சிறப்புக்கான பெருமையெல்லாம் என் பெற்றோர்களையே சாரும். என் வாசிப்புக்கு எந்த வகையிலும் தடை சொல்லாமல், பொருளாதாரம் இடம் கொடுக்க மறுத்த இக்கட்டான சூழ்நிலைகளில் கூட நான் கேட்ட புத்தகங்களையெல்லாம் தயங்காமல் வாங்கி கொடுத்து, என்னை ஒரு நண்பனாய் பாவித்த, பாவிக்கும் பெற்றோர்களே என் எழுத்துக்கு காரணம்.

இந்த வலைச்சர வாய்ப்பையும் உங்கள் அனைவரிடமிருந்தும் எதையேனும் கற்றுக்கொள்ளும் ஆவலிலேயே ஏற்றேன் ! எழுத்துப்பிழையோ கருத்துப்பிழையோ எதுவாகினும் தயங்காமல் சுட்டி குட்டுங்கள்...

நான் கற்க நிறைய இருக்கிறது !



திகம் வாசிக்கப்பட்ட என் பதிவுகள்...

தமிழன் என்று சொல்லடா தமிழில் பேசடா !
விடாது துரத்திய விஷ்ணுபுரம்
பாலியல் புரிதலற்று புழுத்துபோகும் சமூகம் ! 





தொடருவோம்...

பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

45 comments:

  1. சாம்,

    வலைச்சர பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இந்த ஒரு வாரம் முழுதும் உங்கள் பதிவுகளைப் படிக்க அதிக ஆர்வம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்...

      உங்களின் முதல் வருகை ஆச்சரியமான மகிழ்ச்சி ! உங்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாரம் அமையும் என நம்புகிறேன்.

      தொடருவோம்...

      Delete
  2. வாருங்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    வலைச்சரம் தங்களால் பொலிவு பெறட்டும்
    தம 1

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் நன்றி அய்யா

      Delete
  3. தங்கள் ஆசிரியப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சாமானியன் சாம் அவர்களே வருக. தங்களின் அறிமுகம் அருமை. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. நிச்சயம் தொடருவோம்.

      Delete
  5. வாழ்த்துகள் .சரித்திரத்தில் சாமான்யர்களின் பங்கும் இருக்கிறது ஆனால் அது வெளியில் தெரிவதில்லை

    ReplyDelete
    Replies


    1. ஆமாம் ! சாமானியர்கள் ஒன்று சேரும் பொழுதில்தான் சரித்திரம் எழுதப்படுகிறது !

      வாழ்த்துக்கு நன்றி நண்பரே

      Delete
  6. வாங்க சாமானியன்! உங்கள் எழுத்தில் இந்த வாரம் வலைச்சர மாலை! நீங்கள் சாமனியன் என்று சொல்லிக் கொண்டாலும்....நீங்கள் சாமானியன் அல்ல....வலைச்சரத்தில் உங்கள் எழுத்து முத்துக்களைக் கோர்க்க வாழ்த்துகள்!

    தொடர்கின்றோம்...நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஆசான் அவர்களின் வாழ்த்துப்படியே இந்த வாரம் அமையட்டும் ! தொடருவோம்.

      Delete
  7. எதார்த்தம் ஏர் பிடித்து உழுது
    தமிழ் பயிர் செழித்து வளர
    அமிழ்தாய் அன்னைத் தமிழை சிறப்பித்து
    நம் மண்ணை வாழ்விக்க வருக! வருக!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      உளமார்ந்த வாழ்த்து பாவுக்கு நன்றிகள் பல

      Delete
  8. // பிடித்தது என்பதைவிட கிடைத்ததில் மகிழ்ச்சியுற்று // இது ஒன்றே போதும்... முகமூடியின் கதையுடன் சுய அறிமுகம் நன்று... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி வலைசித்தர் அவர்களே...

      பிடித்ததுக்கும் கிடைத்ததற்கும் இடைபட்டதுதானே வாழ்க்கை ?!

      Delete
  9. வணக்கம் சாமானியரே ! சுய அறிமுகம் நன்று ! தங்கள் பணி சிறக்க என் வாழத்துக்கள் ...! தொடர்கிறேன் ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... தொடருவோம் !

      Delete
  10. Replies
    1. நன்றி சகோ... தொடருவோம் !

      Delete
  11. வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  12. சிறப்பான அறிமுகம்! உங்கள் பெயர் சாம் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்! அறிமுகம் சிறப்பு! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரத்தை மிக சிறப்பாக நடத்திய உங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே !

      Delete
  13. Replies
    1. வாருங்கள் விஸ்வா...

      உங்கள் வருகை இன்ப அதிர்ச்சி ! நாளை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் !!

      நன்றி நண்பரே

      Delete
  14. கலக்குங்க ஆம் ஆத்மி :)

    ReplyDelete
    Replies
    1. ஜீ... ஆம் ஆத்மியா ? பரிசா துடைப்பத்தை அனுப்பிடாதீங்க ! :) :)

      நன்றிஜீ

      Delete
  15. வணக்கம் அண்ணா!

    சாமிநாதனை யாரும் சாம் என்று அழைப்பதில்லை. அவன் ‘சாமா‘ தான்

    சம்சுதீன் கூட சம்சு தான்.

    ஆகவே நீங்கள் சாமுவேலாக இல்லை என்று சொன்னாலும் கூட எனக்கு நீங்கள் சாம் தான்.

    ஆசிரியனாய் இருந்து அனுபவம் பெற்றவன், ஆசிரியப்பணிக்கு வருமுங்களின் கற்பித்தலில் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாய் இரு்க்கிறேன்.

    அதுதானே எப்போதும் சுகமானது.

    தொடர்கிறேன்.

    நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே...

      ஆஹா... ஆஹாஹா....

      சாமா, சம்சு என என வீசி வந்த வேகத்துல என்னை " டக் அவுட் " பண்ணிட்டீங்களே !

      " கற்றுக்கொள்ள ஆர்வமாய் இரு்க்கிறேன். "

      அப்ப நான் இப்பவே கோனார் கையேட்டை தேடனும் ! ஹும் !

      நன்றி

      Delete
  16. அன்புள்ள அய்யா,

    அறிமுகமே அசத்தல்! வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் சிறக்க வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

      உங்கள் வருகை வாரம் முழுவதும் தொடர வேண்டுகிறேன்...

      Delete
  17. விறுவிறுப்பான சுய அறிமுகத்தோடு ஆரம்பம்...

    இதே சுவை நாளையும் தொடரட்டும், இறை நாட்டப்படி!

    +12

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகையால் மகிழ்ந்தேன்...

      நாளையும் தொடருவோம்... இறைவன் நாடினால் !

      நன்றி

      Delete
  18. அண்ணா! வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுக்கு டெடிகேட் பண்றேன் http://makizhnirai.blogspot.com/2015/07/samaniyan-sam.html. பார்த்துட்டு சொல்லுங்க:)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி...

      மிகப்பெரிய அங்கீகாரம் நீங்கள் எனக்களித்தது ! என்ன தவம் செய்தேன் நான் ?

      Delete
  19. வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  20. நன்றி சகோதரி

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் நண்பரே/சாமிநாதன், சம்சுதீன், சாமுவேல் ஆகிய மும்மத பெயர்களின் பொதுவான சுருக்கமாகவும் சாமினை கொள்ளலாம் !/இந்த விளக்கம் பெயர் சூட்டும் போதே தோன்றியதா இல்லை பெயர் சூட்டிக் கொண்டதன் பின் தோன்றிய விளக்கமா.?

    ReplyDelete
    Replies
    1. அய்யா...

      உங்களை வணங்கி ஆசி கேட்கும் வயதிலுள்ளவன் நான்... மிக்க நன்றி அய்யா.

      விரும்பிய புனைப்பெயர் சாமானியன் தான் ! பிறகு என்பதை விடவும் வலைப்பூ அறிமுகம் எழுதிய போதுதான் அந்த விளக்கம் தோன்றியது !

      நன்றி அய்யா

      Delete
  22. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் சாம்! தாங்களும் காரைக்காலைச் சேர்ந்தவர் என்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி. என் ஊரும் அதுவே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      நண்பர் புதுவை வேலு ஒரு முறை உங்கள் தளத்தை பற்றி குறிப்பிட்டார்... நேரமின்மையால் தொடர முடியவில்லை, இனி தொடருவோம் !

      ஆமாம்... எனது பூர்வீகம் காரைக்கால்... ஆரம்ப கல்வி கற்றது நிர்மலா ராணி மற்றும் தூய மரியன்னை பள்ளிகளில் !

      நன்றி

      Delete
  23. நண்பர் சாமானியனுக்கு, உங்களைப் பிறரதுபதிவுகளின் பின்னூட்டங்களில் கண்டதுண்டு. நீங்கள் என் தளத்துக்கோ நான் உங்கள் தளத்துக்கோ வந்த சுவடு ஏதும் இல்லை. வலைச்சரத்தில் என்னை அடையாளப் படுத்தி உள்ளீர்கள். உங்கள் தளம் வந்து பதிவுகளை வாசிக்க முற்பட்டால் வாசிப்பது கடினமாயிருக்கிறது. கணினியின் முழு அகலத்தையும் மீறிப் பதிவினை வாசிக்க கர்ஸரை அங்கும் இங்கும் நகர்த்தி படிக்க வேண்டியிருக்கிறது. வலையுலகில் இருப்பவர்கள் மிக நல்லவர்கள். இதைத் தெரிவித்தால் உங்கள் மனம் நோகும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. இலலை இந்த நிலை எனக்கு மட்டும்தானா.புரியவில்லையே. கவனிக்கிறீர்களா.?

    ReplyDelete
  24. அய்யா...

    என் வலைப்பூ வளர்ச்சிக்கும், வசதிக்கும் பலர் தொடர்ந்து ஆலோசனை வழங்கிகொண்டிருக்கிறார்கள்... நானும் உடனடியாக ஏற்று திருத்தியும் வருகிறேன்...

    இந்த சிரமத்தை யாரும் குறிப்பிடவில்லை... நான் வலைச்சரபணி முடிக்கும்வரை பொறுங்கள்... சரி செய்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்...

    நன்றி அய்யா

    ReplyDelete