வணக்கம் நண்பர்களே,
வலைச்சரத்தில் இரண்டாம் நாளில் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! இன்றைக்கு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் வழிகாட்டியாகவும், ஊக்கமூட்டியவர்களாகவும் இருப்பவர்களை நன்றி பெருக்கோடு நினைத்துப் பார்க்கும் நாள்.
வழிகாட்டிய வலைப்பதிவர்கள்
http://www.kadalpayanangal.com
எனக்கு சாப்பாட்டின் மீது அவ்வளவாக பற்றுதல் கிடையாது. கிடைப்பதில் ருசியாக சாப்பிட வேண்டும் அவ்வளவுதான். அதனாலே நான் இணை ஆசிரியராக பணியாற்றும் 'ஹாலிடே நியூஸ்' பத்திரிகையில் உணவுக்கான இடம் வெற்றிடமாகவே இருந்தது. சுற்றுலாவில் உணவு வேட்டை தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.
அப்போதுதான் நண்பர் சுரேஷ்குமாரும் பழக்கமாகி இருந்தார். அவர் ஒரு உணவுப் பிரியர். உணவுக்கான அவரது தேடல் பிரமிப்பானது. 'அதையே ஒரு தொடராக எழுதுங்களேன்' என்றேன். அவரும் எழுதினார். அப்போதுதான் அவரது கடல் பயணங்களைப் பற்றி கூறினார். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வலைத்தளத்தை பார்த்திருந்தார்கள். இவ்வளவு வாசகர்கள் வலைப்பூவை பார்க்கிறார்கள் என்றால் நாமும் ஏன் ஆரம்பிக்கக் கூடாது? என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
அவரால்தான் 'கூட்டாஞ்சோறு' அடுப்பில் (வலையில்) ஏறியது. வலைத்தளத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொடுத்தவரும் அவர்தான்.
அவரை சந்திக்கும் போதெல்லாம் வித்தியாசமாக ஏதாவது ஒரு உணவை உண்போம். பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் எல்லாம் எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், பெங்களூரில் ஒரு முறை அவருடன் சேர்ந்து ராஜஸ்தான் படா மீல்ஸ் சாப்பிட்டோம். அதை மறக்கவே முடியாது. உணவை மட்டுமல்ல அவரையும்தான். மிக அருமையான மனிதர்.
அறுசுவை
http://www.kadalpayanangal.com/2015/03/ubm.html
விருந்து என்று கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன கெடா விருந்து? பதில் சொல்கிறார் சுரேஷ் குமார். வகைவகையான சைடீஸை பார்க்கும் போது ராஜாக்களின் ராஜவிருந்துதான். நினைவுக்கு வருகிறது. இந்த பதிவை படித்து முடித்தவுடன், அங்கு செல்லவில்லை என்றால் நமக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.
* * * * *
மறக்க முடியா பயணம்
http://www.kadalpayanangal.com/2013/08/1.html
உலகின் பிரபலமான தீம் பார்க்கிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். நம்மால் தான் அங்கெல்லாம் போக முடியவில்லை. போய்வந்தவர்களின் அனுபவத்தையாவது கேப்போம் வாங்க..!
* * * * *
ஒரு கடினமான தேடல்
http://www.kadalpayanangal.com/2015/01/1.html
இவரின் தேடல் எப்போதுமே சிறப்பு மிக்கது தான். உறையூர் சுருட்டு வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு பிடித்தமானது என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். இவர் அது எப்படி நடந்தது என்ற காரணத்தை சொல்கிறார். அதை தயாரிக்கும் முறையையும் தெளிவாக படம் பிடித்து காட்டுகிறார். படித்துதான் பாருங்களேன்.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
http://dindiguldhanabalan.blogspot.com
இவரை அறியாத தமிழ் பதிவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கலாம். அப்படி அனைவர் மனதிலும் நிறைந்தவர். என்னுடைய பதிவுகளுக்கு முதன் முதலாக பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்தியவர். பதிவர்களின் தொழில்நுட்ப பிரச்சனைகளை தீர்த்துவைப்பவர். மனசாட்சின் கேள்விக்கு பதில் சொல்வதுபோல் நம்மை வழிநடத்துபவர்.
புதியவர்களுக்கு அவசியம்
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/Speed-Wisdom-6.html
வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் இந்த பதிவை படித்தால், அதன் எல்லா நுட்பங்களையும் தெரிந்து கொள்ளலாம். மிக எளிதாக புரியும்படி சொல்லியிருப்பது வியப்பை தருகிறது.
* * * * *
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி
http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/1.html
திரைப்படப் பாடல்களை வைத்து ஒரு அருமையான பதிவை தரமுடியும் என்பதற்கு இந்த பதிவு நல்ல உதாரணம். பழைய பாடல்கள் மட்டுமல்ல, புதிய பாடல்களில் கூட நல்ல கருத்துக்கள் வருகின்றன என்று நமக்கு சொல்லாமல் சொல்லும் பதிவு.
* * * * *
நெஞ்சோடு கிளத்தல்
http://dindiguldhanabalan.blogspot.com/2015/07/O-my-soul-PART-2.html
திருக்குறளை திரைபடப்பாடல்களோடு கலந்து சுகமாக தருவதில் வல்லவர் இவர். இந்த பதிவை படிக்கும் போது அது தானாகவே புரியும்.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
தேவகோட்டை கில்லர்ஜி
http://killergee.blogspot.in
நண்பர் கில்லர்ஜி தான் எனக்கு தமிழ்மணத்தில் ஒட்டுப்பட்டை இணைத்துக்கொள்ள கூறியவர். அதை ஏற்படுத்தி தந்தவர் டிடிஜி. கில்லர்ஜியின் பதிவு தனிரகம். ஒருவித நையாண்டியும் நக்கலும் அவர் பதிவில் தூக்கலாக இருக்கும். நகைசுவை பதிவுகளை அதிகமாக தரும் இந்த தேவகோட்டைக்காரர் சீரியசான பதிவை தருவதிலும் கில்லாடி 80பதை கீழே வரும் மரணதண்டனை பதிவு நிரூபிக்கும்.
இது அபுதாபி போலீஸ்
http://killergee.blogspot.in/2015/03/police-your-friend-uae.html
உலக நாடுகளில் இரண்டுவகையான போலீஸ் இருக்கிறது. ஒன்று தன் மக்களை தோழனாக நினைக்கும் போலீஸ். மற்றொன்று தன் மக்களை அடிமையாக நடத்தும் போலீஸ். துரதிர்ஷ்டமாக நமது நாட்டில் இரண்டாவது வகை போலீஸ்தான் இருக்கிறது. இங்கு போலீஸ் அரசின் அடியாள். அவர்கள் வைத்ததே சட்டம். அப்போ அபுதாபியில் எப்படி? வாங்க கில்லர்ஜியிடம் கேட்போம்.
* * * * *
வேண்டுமா.. வேண்டாமா..!
மரணதண்டனை
http://killergee.blogspot.in/2015/03/blog-post_22.html
தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இருக்கும் சமயத்தில் இவர் தூக்குத்தண்டனை வேண்டும் என்கிறார். சுதந்திரமே இல்லாமல் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதைவிட மரணமே மேல் என்றுதான் இந்த பதிவை படித்ததும் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
* * * * *
இதுதான் ஒரிஜினல் கில்லர்ஜி
வாழ்க்கை
http://killergee.blogspot.in/2015/05/blog-post_19.html
கில்லர்ஜியிடம் எப்போதும் ஒரு மெலிதான நையாண்டி இருக்கும் என்று சொன்னேனல்லவா. அது இதிலும் உண்டு. படித்துப் பாருங்கள்!
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
அவர்கள் உண்மைகள்
http://avargal-unmaigal.blogspot.com
நியூ ஜெர்சியில் வசிக்கும் மதுரைக்காரர். ஒருமுறை நான் வெளியிட்ட பதிவிற்கு எதிர்ப்புகள் அதிகம் வந்தபோது எனக்கு சாதகமாக கருத்துரை இட்டவர். அன்றிலிருந்து இவர்மீது தனி பிரியம். இவர் தளத்தில் பின்னூட்டம் இடலாம் என்று வரும் போதெல்லாம் தீபாவளி மலரில் இருக்கும் அந்தப் பெண் 'டிஸ்டர்ப்' செய்வதால் திரும்பிவிடுவேன்.
மிகப் பெரிய சர்க்கஸ் குழு
இந்திய ராணுவம் எந்த நிலையில் இருக்கிறது?
http://avargal-unmaigal.blogspot.com/2014/08/7-indian-independence-day.html
இந்த தமிழர் இந்திய ராணுவத்தை மிகப் பெரிய சர்க்கஸ் குழு என்கிறார். அவர்கள் சர்க்கஸ் செய்யும் நாட்கள் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 என்றும் கூறுகிறார். எனக்கு இதில் மாறுபட்ட கருத்திருந்தது. அதை டிஸ்கியில் அவரே சொல்லிவிட்டார். வரும் சுதந்திர தினத்தின் முன்னோட்டமாக இந்த பதிவு.
வலைப்பதிவு நண்பர்களே, நேரமின்மை காரணமாக இன்றைய பதிவை வெளியிடுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் நாட்களில் தாமதிக்காமல் பதிவிட முயற்சிக்கிறேன்.
மீண்டும் நாளை சந்திப்போம்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று இந்தியா முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் இருக்கும் சமயத்தில் இவர் தூக்குத்தண்டனை வேண்டும் என்கிறார். சுதந்திரமே இல்லாமல் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதைவிட மரணமே மேல் என்றுதான் இந்த பதிவை படித்ததும் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
* * * * *
இதுதான் ஒரிஜினல் கில்லர்ஜி
வாழ்க்கை
http://killergee.blogspot.in/2015/05/blog-post_19.html
கில்லர்ஜியிடம் எப்போதும் ஒரு மெலிதான நையாண்டி இருக்கும் என்று சொன்னேனல்லவா. அது இதிலும் உண்டு. படித்துப் பாருங்கள்!
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
அவர்கள் உண்மைகள்
http://avargal-unmaigal.blogspot.com
நியூ ஜெர்சியில் வசிக்கும் மதுரைக்காரர். ஒருமுறை நான் வெளியிட்ட பதிவிற்கு எதிர்ப்புகள் அதிகம் வந்தபோது எனக்கு சாதகமாக கருத்துரை இட்டவர். அன்றிலிருந்து இவர்மீது தனி பிரியம். இவர் தளத்தில் பின்னூட்டம் இடலாம் என்று வரும் போதெல்லாம் தீபாவளி மலரில் இருக்கும் அந்தப் பெண் 'டிஸ்டர்ப்' செய்வதால் திரும்பிவிடுவேன்.
மிகப் பெரிய சர்க்கஸ் குழு
இந்திய ராணுவம் எந்த நிலையில் இருக்கிறது?
http://avargal-unmaigal.blogspot.com/2014/08/7-indian-independence-day.html
இந்த தமிழர் இந்திய ராணுவத்தை மிகப் பெரிய சர்க்கஸ் குழு என்கிறார். அவர்கள் சர்க்கஸ் செய்யும் நாட்கள் ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 என்றும் கூறுகிறார். எனக்கு இதில் மாறுபட்ட கருத்திருந்தது. அதை டிஸ்கியில் அவரே சொல்லிவிட்டார். வரும் சுதந்திர தினத்தின் முன்னோட்டமாக இந்த பதிவு.
* * * * *
ரோஜாவும் மீனும்
உங்களின் நண்பர்கள் யார்?
http://avargal-unmaigal.blogspot.com/2014/08/friendship.html
இதுவொரு அறிவுரை பதிவுதான். ஆனாலும் அவசியப் பதிவு. நகைச்சுவையோடு நல்ல விஷயத்தையும் 'நச்'சென்று சொல்லியிருக்கிறார் எங்க ஊருக்காரர். கட்டாயம் படிங்க..!
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
http://oomaikkanavugal.blogspot.com
எனது பதிவை மட்டுமல்ல, என் எழுத்தையும் ரசித்த நண்பர் இவர். இவரின் பின்னூட்டம் மீண்டும் மீண்டும் என்னை எழுத தூண்டியது உண்மை. இவர் பதிவுகளில் தமிழ் விளையாடும். பள்ளியில் இலக்கியப்படிப்பை சரியாக படிக்காத என் போன்றோருக்கு தமிழின் மீது பெரும் ஏக்கத்தை தந்து செல்வது இவரின் பதிவுகள்தான். இலக்கியத்தில் தமிழ் எத்தனை செழிப்பாக இருந்தது என்பதை இவர் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இலக்கிய அழகு
http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_9.html
ஒரு பெண்ணை எப்படியெல்லாம் இலக்கியம் வர்ணித்திருக்கிறது என்பதற்கு இந்த பதிவு நல்ல எடுத்துக்காட்டு. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத நிலையை அன்றைய புலவர்கள் சாதரணமாக சொல்லிப் போயிருக்கிறார்கள் என்பது அழகோ அழகு.
* * * * *
நிறுத்த காமவாயில்
http://oomaikkanavugal.blogspot.com/2015/03/blog-post_28.html
இன்று திருமணத்திற்கு பத்துப் பொருத்தம், பதினாறு பொருத்தம் என்று பார்க்கிறார்கள். சங்ககாலத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பார்த்திருக்கிறார்கள். அது எப்படி இருக்கும் என்பதை சுவைபட இந்த பதிவில் கூறியிருக்கிறார், நண்பர் ஜோசப் விஜு. படித்துப் பாருங்கள்.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
வலைப்பதிவு நண்பர்களே, நேரமின்மை காரணமாக இன்றைய பதிவை வெளியிடுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டது. தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள். வரும் நாட்களில் தாமதிக்காமல் பதிவிட முயற்சிக்கிறேன்.
மீண்டும் நாளை சந்திப்போம்!
அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார்
நன்றி... நன்றி...
ReplyDeleteஅனைத்தும் நம் இனிய நண்பர்கள்...
அனைவருக்கும் வாழ்த்துகள்...
வாருங்கள் நண்பரே,
Deleteதங்களின் முதல் வருகை வழக்கம் போல் மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றி நண்பரே!
தங்களுக்கு வழி காட்டிய பதிவர்களைச் சிறப்பித்து...
ReplyDeleteஅறிமுகப் படுத்திய விதம் சபாஷ் போட வைக்கின்றது...!
சபாஷ்!!!
!
தங்களின் பின்னூட்டத்துக்கும் ஒரு சபாஷ் நண்பரே!
Deleteஅனைவரும் நண்பர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் நன்றி நண்பரே!
Deleteவணக்கம் நண்பரே என்னை இவ்வளவு உயரம் தூக்கி இருக்க கூடாது மனம் கூசுகிறது நண்பரே காரணம் தங்களைப் போன்ற ஜாம்பவான்கள் இப்படியெல்லாம் எழுதினால் கத்துக்குட்டி என்ன செய்யும் நன்றி என்ற வார்த்தையைத் தவிற வேறென்ன சொல்ல முடியும் எனது மரண தண்டனை பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு சிறப்பு நன்றி நான் மிகவும் நேசித்து எழுதியது ஏனைய நண்பர்களுக்கும் எமது வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
தமிழ் மணம் கூடுதல் ஒன்று.
ஜாம்பவான் என்று சொல்லும் அளவுக்கு நான் பெரியவனில்லை, நண்பரே. தங்களைப் பற்றி சொல்ல வேண்டிய சங்கதிகளைத் தான் சொன்னேன். நன்றி!
Deleteஅறிமுக வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துகள்....பலரை எனக்கு தெரியவைத்தமைக்கு நன்றி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteஇன்று அறிமுகமாகும் அனைவருமே எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர்கள். தொழில் நுட்ப பிரச்சினை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர் திண்டுக்கல் தனபாலன் சார் தான். கில்லர்ஜியும் எனக்கு நன்கு தெரிந்தவர். மதுரை தமிழன் பிரபலமான பதிவர். ஊமைக்கனவுகள் எழுத்துக்கு நான் பரம ரசிகை. எல்லோருக்கும் என் பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்களின் கருத்து அனைத்தும் உண்மையே! பிரபலமானவர்கள் என்பதற்காக நமக்கு பிடித்தவர்களை விட்டுவிட முடியுமா? நான் முதலில் இவர்களை பற்றி கூற வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால், இவர்களை நினைக்காமல் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது. தங்களின் தொடர் வருகைக்கு நன்றி சகோ!
Deleteவழிகாட்டி ஊக்கமூட்டிய நண்பர்களை சிறப்பித்தது அருமை..
ReplyDeleteஇனியதொரு தொகுப்பு.. வாழ்க நலம்..
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
Deleteகூட்டாஞ்ச்சோறு சமைப்பதற்காக உலை கொதிக்க சற்று தாமதம் ஆனாலும்,, பசியோடு இருக்கும் நேரம் பார்த்து, விருந்தோம்பி இருப்பது!
ReplyDeleteஆஹா ஆனந்தம் நண்பரே!
அறு சுவை உணவோடு உண்டு மகிந்தோம். நன்றி!
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நன்றி!
த ம 5
நட்புடன்,
புதுவை வேலு
தங்களின் பின்னூட்டம் மிகுந்த உற்சாகம் அளிக்கிறது நண்பரே!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . அனைவரும் என் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களே பெரிதும் விரும்பி வாசிக்கும் தளங்கள்
Deleteநன்றி ! அறிமுகத்திற்கு. தங்கள் உற்சாகத் துடன் செயல் படுவது கண்டு மகிழ்ச்சியே மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ...!
தங்களின் தொடர் பின்னூட்டம் மேலும் எனக்கு உற்சாகம் தருகிறது. நன்றி சகோ!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவழிகாட்டிய வலைப்பதிவர்கள் வரிசையில் அனைவருக்கும் வழிகாட்டும் வலைச்சித்தர், மலைக்கோட்டை நண்பர் விரைவிலேயே இலட்சாதிபதியாகக் கூடிய இலட்சியவாதி... கனவை நனவாக்குபவர், மீசைக்கார தேவகோட்டையார், கடல் பயணங்களில் (உணவுடன்) பயன்கள், அவர்களெல்லாம் உண்மையானவர்கள் என்று வலையுலகுக்குக் காட்டியது கண்டு மகிழ்ச்சி.
நன்றி.
த.ம.5.
அனைவரும் இனிமையானவர்கள். அவர்களை கவிதையாக தொடுத்த அய்யாவுக்கு நன்றி!
Deleteநல்ல அரிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!
Deleteஆஹா! வந்தது தாமதம்..ஆனால் எல்லாருமே நம்ம நண்பர்கள்! அனைவரையும் தொடர்ந்து வருகின்றோம்...அனைவருக்கும் வாழ்த்துகள்....நன்றி நண்பரே!
ReplyDeleteஅந்தக் கொடுவா மீசைக்காரர்தான் கொஞ்சம் பயமுறுத்துகிறார்....ஹஹஹ
ஆமாம், அந்த மீசைக்காரரை நினைத்தால்தான் எனக்கும் பயமாக இருக்கிறது. ஆனாலும் உரிமையுடன் கூடிய இனிய நண்பர்! தாங்கள் மட்டுமென்ன குறைந்தவரா! வருகைக்கு நன்றி நண்பர்களே!
Deleteசப்பாத்திக்கு முருங்கைக்காய் வாங்க போனேன் அதற்க்குள் பொரணியா ? ம்ம்
Deleteஆமாம் இனிய நண்பர் மீசைக்காரர்.....அடடா இப்ப உங்களுக்கு அழுகைச் சத்தம் கேக்குதுல்ல? "என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்கனு" அவரு அழுற சத்தம்...ஹஹஹ
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே!
Deleteஅறிமுகப் பதிவர்கள் அனைவரையும் அறிவேன் முறையான அறிமுகம் !மொழி நடையும்
ReplyDeleteசொல்லும் முறையும் அழகு! தொடர்வேன்!
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!
Deleteஅருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி அய்யா!
Deleteஊக்கமூட்டவர்களை நன்றியோடு நினைவுகூரும் உங்களது பாணியை ரசித்தேன். பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி அய்யா! நாளை சந்திப்போம்!
Deleteellarum therintha pathivarkal.
ReplyDeletethokuththu eluthiya vitham arumai sir.
நன்றி மகேஷ்!
Deleteதாமதமாக வந்தாலும் தரமான பதிவுகளுடன் தான் வந்திருக்கிங்க சகோ.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் சுரேஷ் குமார் மட்டும் எனக்கு புதியவர். மற்ற அனைவரும் தெரிந்த பதிவர்களே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது வணக்கம்.
நீங்கள் வெளியூர் சென்றால் அங்கு என்னவகையான உணவு கிடைக்கும்? அதன் சிறப்பென்ன போன்ற விவரங்களை இவர் தளத்தில் பெறலாம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
வணக்கம் சகோ,
ReplyDeleteஆஹா அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்,
இன்றைய அறிமுகங்கள் அனைவரும் எம் மதிப்பிற்குரியவர்கள்,
ஊமைக்கனவுகளிடம் இலக்கிய-இலக்கணத்தில் நிறைய கற்க வேண்டியது இருக்கிறது.
தங்களின் தொகுப்பு அருமை,
வாழ்த்துக்கள்.
நன்றி.
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!
Deleteநல்லதொரு தொகுப்பு. வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
Deleteவணக்கம் நண்பரே...
ReplyDeleteகுடும்ப அலுவல் காரணமாக வலைச்சர வருகை தாமதம் !
தங்களின் வலைச்சர பணிக்கு மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகள்... மிக அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள்... ( லே அவுட்டில் பத்திரிக்கை அனுபவம் தந்த ரசணை மிளிர்கிறது )
அறிமுகமான நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
அசத்துங்கள் !!!
நன்றி
சாமானியன்
தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி நண்பரே!
Deleteவணக்கம் நண்பரே!
ReplyDelete“எனது பதிவை மட்டுமல்ல, என் எழுத்தையும் ரசித்த நண்பர் இவர்“
என்பதில் சிறு காலப்பிழை இருக்கிறது.‘ரசிக்கும்’ என்றிருக்க வேண்டும்.
இணையத்தில் நான் ரசித்துப் படிக்கும் வெகுசில எழுத்துகளில் உங்கள் எழுத்திற்கு முக்கியப் பங்குண்டு.
உங்கள் வாசிப்பு ஒருபுறமும் உங்கள் கள அனுபவங்கள் மறுபுறமும் உங்கள் எழுத்தினைக் கூர்படுத்துகின்ற என நினைப்பேன்.
பல்துறைபுலமையும் அதை எழுத்தில் செறித்தலும் எல்லார்க்கும் கூடுவதில்லை. இது ஒரு வரமே.
உங்கள் எழுத்துகளில் விழுந்து கிடக்கும் பலவாயிரம் பேருள் என்னைப் பொருட்படுத்தி இங்கு அறிமுகப் படுத்தியமைக்கு நெஞ்சு நிறைந்த நன்றிகள்.
என்னோடு அறிமுகப்படுத்தப்பட் ட வலையுலக ஜாம்பவான்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்.
நன்றி.
தங்கள் பின்னூட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி நண்பரே! மனம் நிறைந்த பாராட்டுக்கும் மீண்டும் நன்றி நண்பரே!
Deleteசுரேஷ் குமார் தவிர்த்து அனைவரும் பரிச்சயமானோரே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!
Deleteமின் இணைப்பில் கோளாறு இருந்ததால் இரண்டு நாட்களாக வலைச்சரத்திற்கு வர இயலவில்லை. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
Delete