வலையுலகில் ஒத்த சிந்தனை ,நேசமான நட்பு பாராட்டு என்ற அன்பில் இணையும் நட்புக்கள் சிலர் .
ஒரு வட்டத்தின் ஆளுமையாக ஆட்சி செய்ய நினைக்கும் போது வரும் வெடிப்பு அல்லது பிரிவு உள்குத்து என்ற இன்னொரு முகத்தினை காட்டும் உத்தி இந்த வலையுலகின் இன்னொரு போலி முகம் என்பது சில புதிய பதிவர்கள் அறியாத விடயம்!
.அதே போல மூத்தவர்கள் சிலர் புதியவர்கள் பக்கம் கீரைக்கடைக்கு எதிர்க்கடை என்ற பார்வையில். ஏனோ,,?, வாழ்த்த அல்லது தட்டிக்கொடுக்க முன்வருவதில்லை. என்பதையும் மறுக்க முடியாது.
. நீ மட்டும் என்னோடு தொடர்ந்து வா !நான் வருவது பற்றி பின் சிந்திப்பேன் என்ற மமதையில் தோற்றவர்கள் சிலர் இந்த வலையுலகில் இருக்கின்றார்கள். .
புதிய பதிவர்களை தட்டிக்கொடுத்து புதிய சிந்தனையை உள்வாங்க சிலர் முன்வருவதில்லை .ஆனாலும் ஜாபாவாண்கள் அவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
அதுக்கா சுயத்தை இழப்பது ஏற்க முடியாது . வட்டம் தாண்டின போது தனிமரம் வலைக்கு ஏற்பட்ட வீழ்ச்சி, திரட்டியில் வாக்கு குறைந்து போனது என்றாலும் இன்றும் எப்போதும்; வட்டம்; சதுரம் ;பிரதேசம் என்ற குறுகிய வட்டத்தில் நிற்காமல் நதி போல ஓடிக்கொண்டே இருப்பதால் தான் தொடர்ந்து வலையில் இயங்க முடியும் என்பது என் அவதானிப்பு .
இது யாரையும் நோகடிக்க வேண்டி அல்ல! ஏற்கனவே நொந்து போன ஓர் இதயம் தொடர் எழுதியவன். ))))!
நாளைய பதிவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் தான் அன்றி வேறில்லை தனிமரம் வலையில் பதிவு எழுதி பணம் பெறவில்லை ஆத்ம திருப்தியில் உண்மை நேசத்தில் நேசனை நேசிக்கும் உறவுகளை வலையில் தனிமரமாக பெற்ற உறவின் பின் பொருளாதார ஈரோ உழைப்பு என்றும் தராது சந்தோஸத்தை பெற்று தனிமரம் தோப்பாக வாழ்கின்றேன்.
எனக்கு செங்கோவி, நாஞ்சில் மனோ என்றாலும் ஐயாமார்கள் புலவர் இராமானுசம்.,கந்தசாமி. ,பாலசுப்பிரமணியம் ,. ரமனி, ஜம்புலிங்கம் , துரைசெல்வராஜீ, என்றாலும் !தளிர் சுரேஸ், கில்லர்ஜீ. தமிழ்வாசி. சீனு என்று எல்லோரும் நட்பே!
தனிமரம் ஒரு வழிப்போக்கன் அதனால்தான் கூட்டாஞ்சோறும் பிடிக்கும், தென்றல் சசிகலாவும் பிடிக்கும்.
இப்படித்தான் தனிமரம் என்று ஒரு வட்டத்தை இந்த ஸ்பீக்கர் சொல்லாது![[[[.
எப்போதும் புதிய சிந்தனை, புதிய அவதானிப்பு, புதிய சமையல் கலை என்று அசத்தும் என் மரியாதைக்குரிய சப்பாத்தி அக்காச்சியின் மகனுக்கும் தனிமரம் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.! அன்பான அஞ்சலின் எனக்கு அறிமுகம் தொடர் மூலம் தான்! இன்றும் என்றும் முகநூல்/ வலை என்று தொடரும் பாசமான சில நேரம் தனிமரத்தை குத்தி திருத்தும் அக்காவும் கூட !ஆனால் சப்பாத்தி ருசிபோல கை வண்ணம் நாவுறும் !செய்து பார்க்க நேரமின்னை என்பது அல்ல சோம்போறி தனிமரம்.
ஒரே மாதத்தில், ஒரே திகதியில். சரோனும் தனிமரமும் பிறந்தோம் என்ற சந்தோஷம் என்றும் மறக்க முடியாது வலைதந்த உறகளில். வாருங்க அக்காச்சியின் வலைக்கு இங்கே-http://kaagidhapookal.blogspot.fr/2015_03_01_archive.html.
அண்ணாவின் இந்த வலை என்னை இன்னும் 80 இன் பின் நம்நாட்டில் ஏற்பட்ட பாரிய அவலத்திலும் பாட்டு என்ற ஒற்றை /இரட்டை குழாய்ப்புட்டு பின் சுதந்திரம் தாய் மண்மீட்பு என்று போனவர்கள் பல கதை இன்னும் இணையத்தில் முழுமையாக வரவில்லை. என்ற சோகம் தொடர்கதை என்றாலும்!
இந்த குழாய்ப்புட்டு போல லவ்ஸ்ப்பீக்கர் நம்நாட்டின் இன்னொரு அடையாளம் இவரோ அமெரிக்கா வாசி!
இந்த பாடலை கேட்டு ரசியுங்கோ.http://paradesiatnewyork.blogspot.com/2015/06/blog-post.html.ஆனாலும் இவர் மற்றவர்கள் வலையை படிப்பாரோ நான் அறியேன்.
எப்போதும் இனவாதம் ,மதவாதம் ,மொழிவாதம், என்ற கூட்டை வெறுப்பவன் தனிமரம் .என் தொடர்களில் எல்லாம் சகோதரமொழி நங்கைகள் சேர்ந்தே வந்து போனார்கள்! அதனால் முகநூலில்இன்றும் வாங்கும் குத்துக்கள் பல என்றாலும் சில பாடல் பகிர்வு பற்றி அதிகம் என்னோடு அதிக நட்பை பாராட்டும் இந்த நானாவின் வலையை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியுடன்..!
மகாஜனங்களே இவர் தனிமரத்தின் போலி ஐடி/ பினாமி இல்லை இலியாஸ் ஒரு நட்பு மட்டுமே என்றும் [[[[[ ஓட்டகத்தார் வேறு தனிமரம் நேசன் வேறு !ஹீஈஈஈஈஈஈஈஈஈ!
இந்த தொடர் இவர் இலங்கையில் இருந்து மீண்டும் அரபுலகம் விரைவில் வந்தபின் தொடரும்.....நம்புவோம்[http://ilyas7032.blogspot.fr/2014/09/blog-post.html..
அதை வாசிதால் இங்கே ஒருத்தி கவிதையோடு ஏதோ சொல்ல வாரா !
இங்கே பலவிடயம் இன்னும் சிந்திக்க இருக்கு.http://maduraisskadl.blogspot.fr/2015/07/blog-post.html
இப்ப எல்லாம் பலர் பாடகர் மனோ பற்றி முகநூலில். ஏன் வலையிலும் அவர்கள் உண்மைகள் நண்பர் கலாய்த்த ஞாபகம் இருக்கு.
ஆனாலும் இவர் குரல் எனக்கு பிடிக்கும் இப்போது புலியில் இந்த மக்காவை ரசித்த வண்ணம் இந்தப்பதிவை வாசியுங்க வலையில் இவரும் மூத்தவர் !http://naadody.blogspot.fr/2015/02/blog-post.html .
இப்படியே நதி போல ஓடிக்கொண்டே இருக்க ஆசை !
இங்கே இவர் சிந்தனை விசித்திரம் பெயரைப்போல சகோ !
இனி புதியவர் அல்ல நீங்க பலரின் வலையை நேரம் கிடைக்கும் போது வாசித்து .பின்னூட்டம் இட்டு. முகம் காட்டுங்க நல்ல எதிர்காலம் கிடைக்கும் , உங்க வலையை கொஞ்சம் பின்னூட்ட விடயங்கள் சீர்செய்யுங்க ஏதோ குறை இருப்பது போல என் உணர்வு அண்ணாச்சி டிடியை கேட்டு .செய்யுங்க! தனிமரம் தொழில்நுட்பம் அறியாத பாமரன் . ஆனாலும் பலதை வாசிக்கும் வாசகன் .
வாழ்த்துக்களுடன்!http://karurboobageethan.blogspot.fr/2015/08/blog-post_17.html
ஆனாலும் நாளைய பொருளாதார தேடல் நம்மை இணையத்தில் தொடர்ந்து இருக்க நிலா விடாது !
என்றாலும் என் வாசிப்பு வானம் தொடரும்!
யாரையும் மனம் நோகடித்தால் !
திட்டி தீருங்கள்.....
திட்டுக்கள் இன்னும் வாழ வழி செய்யுமாம்!
புலரும் பொழுது இனிதாக தோரணம் கட்டும் ஆசையுடன்!
ஏதிலி தனிமரம் நேசன்.
இவ்வலைச்சரத்தில் பல ஜாம்பவா
ReplyDeleteவலைப்பதிவர்கள் ஆட்சிசெய்த நிலையில் சாதாரணமானவன் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆனந்த கண்ணீரை வரவைக்கிறது ஐயா!! என் மனதில் உருவாகிய எண்ணங்களை எத்தனை டயரியில் எழுத! அதனால்தான் இணையத்தில் வலைப்பூல் எழுத ஆரம்பித்தேன்!! கையடக்க கைபேசியில் ஆரம்பித்தால் சிறு சிறு குறைகள் இருக்கும்! கூடிய விரைவில் நிவர்த்திக்கின்றேன்
மீண்டும் ஆனந்த நன்றிகள் தனிமரம் ஐயா!!
அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!
நன்றி கரூர்பூபகீதன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteதனி மரம் தானே - தவிர
ReplyDeleteதனித்த மரம் அல்லவே!..
கனி பழுத்த மரம்..
கண் பனித்த மரம்!..
ஆதங்கம் எதற்கு?..
மாதங்கம் நீர் எனக்கு!..
அனைத்து தளங்களும் அன்புக்குரியன.. ஆயினும், வந்தாரின் வருகைக்கு முகங்காட்டாத தளங்களுக்குச் செல்வதில்லை...
கிடைப்பது சிறிது நேரமே.. - உணவு சமைத்து - உடை உலர்த்தி - உறக்கத்தையும் துறந்து தளங்களில் உலவிக் கொண்டிருக்கின்றேன்..
குறை தவிர்த்து - குணம் கொள்க!..
புலரும் பொழுதில் இனிய தோரணம்!..
தென்றலில் ஆடும் புதிய தோரணம்!..
நான் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கின்றேன்..
தனி மரம் எனக் குறிப்பதில் மகிழ்வில்லை என்று..
ஆயினும் -
தனிமரம் வாழ்க!.. தனித்துவம் வாழ்க!..
நன்றி ஐயா அன்பான பாசமான உணர்வை பகிரும் உங்களின் உயர்ந்த குணத்துக்கு.
Deleteவாழ்த்துக்கள் வலைச்சரம்
ReplyDeleteநன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteயாரையும் மனம் நோகடித்தால் !
ReplyDeleteதிட்டி தீருங்கள்.....
திட்டுக்கள் இன்னும் வாழ வழி செய்யுமாம்!
நல்ல கருத்தோடு அறிமுகங்களும் சிறப்புங்க.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteமனம் விட்டுப் பேசும் போதுதான் பல உண்மைகள் புரிய வரும் குறிப்பாக
ReplyDeleteஅம்பாளடியாளும் இப்போதெல்லாம் அதிகம் யாருடைய வலைத் தளப்
பக்கமும் போவதில்லை அது எவ்வளவு தூரம் என்னுடைய வலைத்தள
நட்புகளின் மனதைப் பாத்தித்து இருக்கும் என்று இப்போது உணர முடிகிறது
சகோதரா ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலைதான் காரணம் சகோதரா நான்
உங்களிடம் மனிப்புக் கேட்கின்றேன் நீங்கள் தனி மரம் கிடையாது நாமும்
உங்களோடு தான் இருக்கின்றோம் எப்போதும் இருப்போம் ஏனைய சொந்தங்களும்
இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் அம்பாளடியாள் வெகு விரைவில் அனைவரது
தளத்திற்கும் எப்போதும் போல் வருவாள் கருத்துரைப்பாள் என்பதனை மறக்க
வேண்டாம் !இன்று அறிமுகமான சொந்தங்கள் அனைவருக்கும் அன்புச் சகோதரன்
உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.அம்பாளடியாள் நேரச்சிக்கல் தனிப்பட்ட பொருளாதார தேடல் பலரை வலைப்பக்கம் பிரிக்கின்றது இதில் மன்னிப்பு எதற்கு என் நிலையும் அவசர உலகில் ஓட வேண்டிய நிலையே. அன்பு எப்போதும் தேடவைக்கும் வலை உறவுகளை.
Deleteநடைமுறை நிகழ்வுகளை சுட்டிக்காட்டியபடி தொடரும் அறிமுகங்கள் அருமை தம்பி! அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி அக்காச்சி கீதா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteஉளவியல்ரீதியாக அமைந்துள்ள சிறப்பான பதிவு. இதற்கும் ஒரு துணிவு வேண்டும். பாராட்டுக்கள். புதிய பதிவர்களின் தளங்களைக் கண்டேன். நாளை சந்திப்போம்.
ReplyDeleteநன்றி ஜம்புலிங்கம் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteதனிமரம்! அது உங்கள் வலையின் பெயராய் இருக்கலாம் ஆனால் தனிமரத்திற்கும் கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள், அதன் கொட்டைகள் (உங்கள் பதிவுகள் எல்லாம்..) என்று இருக்கத்தானே செய்கின்றது!!!! அதில் வந்து அமர்ந்து இளைப்பாறி, சுவைத்து மகிழ்ந்து, தனிமரத்துடன் நேசனிடம் நேசமுடன் உரையாடியும், நாங்கள் வந்தமர்ந்த நினைவுகளை விட்டு மீண்டும் வருவோம் என்று சொல்லிச் செல்லும் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்க தனிமரம் தனிமரமல்ல ஒரு வலைத் தோட்டம்!
ReplyDeleteஅறிமுகங்களில் முதல் இருவரைத் தவிர மற்றவர்களை அறிந்தது தற்போது. அனைவருக்கும் வாழ்த்துகள்...
நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.உங்களின் அன்பான ஆதரவுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.
Deleteதிட்டத் தோன்றவில்லை நண்பா ஆகவே வாழ்த்துகிறேன் இன்றைய அறிமுகங்களுக்கும் எமது வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி மீசைக்கார நண்பா வருகைக்கும் கருத்துரைக்கும்.
ReplyDeleteஉளம் திறந்து கொட்டிய உணர்வுப் பதிவு நேசன்!
ReplyDeleteநட்புகள் மறந்தோ வெறுத்து விலகியோ போகின்றவர்கள் அல்ல.
எல்லோருக்கும் முக்கிய பிரச்சனை நேரக்குறைபாடுதான்!...
என் பங்கில்அப்படிக் கண்விழித்தேனும் நட்புகளின் பதிவுகளுக்குப்
போய்ப் பார்த்தாலும் எல்லோர் வலைகளுக்கும் முழுமையாகப்
போக முடியாது போவது பெரும் கவலைக்குரிய விடயமே..
அங்கும் போய் அவர்கள் பதிவில் என்ன கூறியிருக்கின்றார்கள்
என உள்வாங்காமல் ஏனோதானோ என்று கருத்திட மனம் ஒப்புவதில்லை!..
என் நிலையும் தற்போதைய சூழலில் மிகவும் நெருக்கடியானதே!.
எங்கள் ”அஞ்சு” உட்பட அருமையான பதிவர்கள் அறிமுகம் இன்று!
அவர்கள் அனைவருக்கும் உங்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
நேரச்சிக்கல் நானும் அறிவேன் அக்காச்சி
Deleteநேரில் பொதுவில் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
இனிய வாழ்த்துக்கள் இங்கு அறிமுகமானோர் அனைவருக்கும். எல்லோருடைய பதிவையும் படித்து எல்லோருக்கும் பதிலளித்து நானும் பதிவெழுத ஆசைதான் ... ஆனால் பல்வேறு கடமைகளுக்கிடையில் முடியாமல் போகிறது ....
ReplyDeleteநன்றி எழில் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteஎன்னால் யாரையும் திட்ட முடியாது, பலரும் என்னை வேண்டுமானால் திட்டுங்கள். எனக்கும் பலரது வல்த்தளங்களுக்கும் செல்ல விருப்பம்தான் ஓரோர் சமயம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல் படுகிறேனோ என்றும் தோன்றுவதுண்டு. இருந்தும் என்னை நான் மாற்றிக் கொள்ள விருப்பமில்லை. தளங்களுக்குப் போனால் என் தனிப்பட்ட குணத்தால் எதையாவது எழுதுகிறேன் பலரும் விரும்புவதில்லை என்று தெரியும் போது ஒதுங்கி விடுகிறேன் எல்லாதளங்களுக்கும் சென்றால் சென்ற சுவட்டைப் பதிக்காமல் இருக்க முடியாது. எனக்கும் நேரப் பிரச்சனை உண்டு. தனிமரம்பால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதை சரியாக இதுவரை வெளிப்படுத்தவில்லை என்றும் தெரியும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு! நேரப்பிரச்சனை பொதுவான விடயம் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல!இன்னும் நீங்கள் என் மலையகத்தில் முகம் தொலைந்தவனுக்கு இட்ட முதல் பின்னூட்டம் ஈர்ப்பாக அப்படியே இருக்கு மனசில் ஐயா.
Deleteமிக்க நன்றி தம்பி ..ம்ம் ஷாரனுக்கும் உங்களுக்கும் ஒரேநாளில் பெர்த்டே நான் எப்பவும் மறக்க மாட்டேன் .ஒரு காலத்தில் உங்க வலைப்பூவில் எவ்ளோ கலாட்டா செய்வோம் ஹேம்ஸ் ரெவரி யோகா அண்ணா, கலாதென்றல் அக்கா ,அதிரா .ம்ம் அந்த நாட்கள் மறக்க முடியாது ..
ReplyDeleteஅது ஒரு கனாக்காலம் போல அக்காச்சி அப்ப இருந்த சூழல் இப்ப நம் யாரிடமும் இல்லை பல புறச்சுழல் பிரித்து விட்டது நாம் வாத்துக்கூட்டம் தானே வாத்து இப்பவும் நினைவில் .நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteநிறைய புதியவர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்...
ReplyDeleteநன்றி!~
நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அறிந்திராத வலைப்பதிவர்களை அறிந்திடச் செய்ததற்கு மிக்க நன்றி.
த.ம.7
Deleteநன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டு பதிவை முன்னிலை செய்ததுக்கும்.
Delete