Saturday, August 29, 2015

ஓடும் நதிமேல் ஒரு பாட்டு !!!

வலையில்  பின்னூட்டம்கள் தான் பல பதிவுகளை .பலவிடயத்தை பொதுவெளியில் சிந்திக்க வைக்கவும் இன்னொரு சிறப்பாக மற்றவர்கள் பதிவு எழுதவும் வழிகாட்டும் வாய்கால் என்றால் மிகையிலை.!!


வலையில் பின்னூட்டம்  வாசிக்க என்றே பல பதிவர்கள் இருப்பதை இன்றைய புதிய பதிவர்கள் அறிய வேண்டிய இன்னொரு உலகம்.!

 ஆனால் பின்னூட்டப்போர் என்றால்  நிரூபன் பதிவாளரின் நாற்று வலையில்  பார்க்கலாம்! பின்னூட்ட உறவு முறையை செங்கோவி வலையில் ,பின்னூட்ட கமடியை  பன்னிக்குட்டியார் வலையில், கவிதைப்போட்டியை ஹேமாவின் தளத்தில்,. என்று பல தளங்களில் இந்த பின்னூட்டம் ஒரு சுவாரசியம் தரும் விடயம்!நிரூபன் பின்னூட்டம் மூடியதும் செங்கோவி வலையில் தனிமரம்  பொங்கிய வரலாறு எல்லாம் செங்கோவி தளத்தில் இன்னும் வாழுது ஆனால் இப்ப செங்கோவி பதிவுலகில் கொஞ்சம் ஒதுங்கியிருக்கின்றார்!

 ஆனால் இவர்களின் தளங்கள் எப்போதும் வடிகட்டுதல்/மட்டுறுத்தல்/ஆசிரியர் ஓப்புதல் பார்த்த பின் வெளியிடப்படும் என்ற தனிக்கை இல்லாத சந்தோஸம் இன்னும் நீங்காத நினைவைத்தருகின்றது .

சிலரின் தளத்தில் பின்னூட்டம் இட்டு அது வெளியிடப் பட்டதா,,?, இல்லையா ?,என்பதை ஆராய பலருக்கு நேரச்சிக்கல் இருப்பது புரியாமல் சிலர் இப்படி மொடரேசன் வைத்து அவர்கள் காணும் அழகு என்ன ,,?,

தனிக்கையால் இழந்தவை அதிகம்  என் தாய் நாட்டில்  என்றும் வேண்டும்   ஊடக சுதந்திரம் என்ற என் கொள்கை சில அதிகாரிகளை பகைத்து கட்டிய கழுத்துப்பட்டியை இறக்கிவிட்டு வந்தகடந்த காலம் வரலாறு என்ற போதும்! வாழும் ஐரோப்பிய சுதந்திர தேசத்தில் வாழ்பவன் தனிமரம் நேசன் அதனால் தான் என் வலையும் பின்னூட்ட வசதிக்கு எப்போதும் திறந்தே விட்டு இருக்கின்றேன்.!!

 யார் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் வலையுலகில் சுதந்திர பின்னூட்டம்  சுதந்திரமாக மின்னும் வரை  தமிழ் வலையின் வளர்ச்சி என்பது மந்த கதியே!பிரெஞ்சு வலைக்கூடம் அதை தாண்டி ஓடுது!

 இந்த  பின்னூட்ட மூக்குடை வேதனையில்   சில வலைகளுக்கு இன்றும் வாசகனாக போகாது என் பின்னூட்டத்தை பதிவு செய்யாமல் இருக்கின்றேன் !இது கோபம் அல்ல சிலர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்ற ஆதங்கமே!மனசு இருந்தும் !

 நாம் எழுதும் பதிவு எத்தனை பேரைச்சென்றடையுது அதில் ஏதாவது வன்முறையான விடயம் அல்லது  அந்த பகிர்வு எப்படி வலையுலகில் எதிர்வினையாற்றும் என்பதை அறியாமல் தைரியம் இல்லாமல் யாரும் பொதுவெளியான வலையுலகில்எழுத  வருவதில்லை.!

 முன்னர் சில விசமிகளின் வைரஸ் விடயம் பரவியதால் மட்டுறுத்தல்/வடிகட்டல்/ஆசிரியர் ஓப்புதலின் பின் வெளியிடப்படும் என்ற நிலை இருந்தது, அல்லது ஆபாசதள விளம்பரம் என்ற நிலை இருந்தது.!

 ஆனால் இப்போது வலையுலகு மந்த கதியில் இருக்கும் நிலையில் ஓடும் நதியை பூட்டிவைத்து என்ன வளர்ச்சி காணப்போறோம்.?,, சிந்திப்போமா உறவுகளே ,,

யாரையும் பொதுவெளியில் வம்பு இழுக்கவும் ;செம்பு தூக்கவும்; வைக்கும் எண்ணம் இல்லை .இந்த தனிமரம் ஏற்கனவே தண்ணி தெளித்துவிட்ட ஒரு வழிப்போக்கன்.

 ஆனாலும் சொல்ல வேண்டிய கருத்தினை எந்தக்கட்சி என்றாலும் சொல்லத்தயங்காத ஒரு எழுத்தாணி மட்டுமே!

 இன்னும் பேசலாம் இந்த வலையில் எங்கோ ஒரு மூலையில் என் மனசு பேசிக்கொண்டே இருக்கும்...!வாழ்த்தும் பாராட்டும் வேண்டி அலைந்து , திரிந்த காலம் போய் ஐயாசாமி இதுவே போதும் என்று வாழும் ஒரு சாமானிய தந்தை இப்போது தனிமரம் தோப்பு!

 வாங்க துரோகி என்று இவர் யாரைச்சொல்லுகின்றார் என்று பார்க்க முன்
[
விமர்சனம் பற்றிய வலைபக்க முகத்தினை கிழிக்கும் இதைப்பார்ப்போம்[[http://vishcornelius.blogspot.com/2015/01/blog-post_16.html. .

அவரின் பார்வை ரசித்து சாப்பிட என்ன கிடைக்கும் ஒருக்கு பரோட்டா எப்படிச் செய்வது என்ற ஆவலா இங்கே வாங்க வீசலாம்[[http://saratharecipe.blogspot.fr/2015/08/parotta.html. .

வீசுவது கல் என்றால் அதுவும் உதவும் ஒரு சிலைவடிக்க ! ஆனால் ஆடோவில் ஏறும் போது சொல்வது அண்ணா கொஞ்சம் வேகமாக போக வேண்டும் என்றுதான் ஆனாலும் இந்த கலைநாயகன் எப்போதும் விமர்சனம் கடந்தவர் ஒரு வீடு இருவாசல் போல ஒரு இயக்குனர் இரு ஹீரோ வாழ்வில் தெய்வம் எனலாம்[[http://balaamagi.blogspot.com/2014/12/blog-post_24.html.

என்னடா தெய்வம் என்று சொல்லுகின்றாயா இன்று சனி பிறக்கும் நேரம் அதிகாலையில் ஐய்யப்பனிடம் போக வேண்டும்! ஆனால் பணி இருக்கு அதுக்கா மனதை வானொலியோடு இணைத்துவிட்டு பாடல் கேட்போம் இங்கே-http://www.svrpamini.com/.

 பாடல் வருமா?, வாராதா?, என்று இப்ப எல்லாம் எந்த இணைய வானொலியோடும் சண்டை போடுவதில்லை. அங்கே பாட்டு கேட்டு  முகநூலில் வரும் டென்ஷன் அதனால் நம்வீட்டில் அடிக்கடி பதிவு எழுத தனிமரம் ஒன்றும் பொக்கிஷம் சேமித்து வைத்து இருக்கும் பணக்காரன் அல்ல !ஆனாலும் பல பாடல் பதிவு எழுத ஆசை ஆனாலும் சிவகாசிக்காரன் போல இப்ப பொங்க முடியாது.!!http://www.sivakasikaran.com/2009/08/blog-post.html.


என்றாலும் இலங்கை எதிர்க்கட்சிக்கு பாரிசில்  இருந்து ஒரு கடிதம் எழுத ஆசை !ஆனாலும்  தனிமரம் தோப்பாக இருப்பதலால் இப்ப இந்த  நேயர் கடிதம் வானொலியில் வாசிக்க ஆசை என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் தனிமரமும் சென்னைப்பக்கம்  அடிக்கடி தரை தட்டும் ஒரு அப்பாவி[[[[ http://kanavudesam.com/myblog/?p=3928!

கப்பலில் இடம் இல்லை இன்னும் காத்து இரு அடுத்த பயணம் நீதான் என்று ஒரு வழிகாட்டி தனிமரத்தை தடுத்த காலம் இன்னும் தொடர் எழுதவில்லை .ஆனால் இங்கே இவர்  எழுதியதை வாசிக்கலாம் தனிக்கை இல்லாத நிலையில்[[[ http://putthan.blogspot.fr/2014/09/blog-post.html!

ஆனாலும் தொலைபேசியைவிட இப்ப எல்லாம் அதிகம் கைபேசியில் தான் அதிகம் இங்கே காதில் வழியுது[[ வளியுது என்று சொன்னாலும் இந்த அக்காச்சியின் ராங் நம்பர் அழகுதான் ஆனாலும் அக்காச்சிக்கு இந்த தனிமரம் அறியாத வாசகன் போலும்[[



ஹாலோ நீங்க யாரு[[[http://www.ahilas.com/2013/05/blog-post_9.htm! எழுத வெளிக்கிட்டாள் எல்லாம் மறந்து போகும்!

 ஏனோ காதில்  இசை என்னை தாலாட்டுது!

ஏதிலிக்கும் என்றும் இருக்கும்
ஏன் தொலைத்தேன்!
ஏன் நான் இப்படி?,
ஏற்றி வைப்பேன் ஒரு தீபம்!
ஏனா இன்று சனிக்கிழமை.
ஏனோ இந்த தோஷம்,,?,
எருமைமையை வெற்றி கொண்ட
என் ஐய்யப்பன் கதை நீ அறிவியா,,?,
ஏண்டா லேட் ,,?,குருவே இன்று வேலை அதிகம்!
ஏண்டா இன்னும் திருந்தமாட்டாயா!
ஏய் மரமா நீ !!
ஏண்டா குருவாயூரப்பா!
ஏன் குருவே  ஏன் தக்காளி வீசி!!
ஏற்றும் தீபம் நல்லதாக இருக்கட்டும்.
ஏன்னா சினேஹா ரசிகன் இவன்[[[[[
ஏறிய வேண்டாம் கல்
ஏற்றி வைப்போம் ஒரு தீபம் !
ஏனோ கலியாணமும்
ஏதோ காரணம் சொல்லி  நிறைவேறாமல்

ஏதோ கண்ணோரம் விழிசிந்தும்
ஏதிலிச்சிக்களையும்
 ஏனோ நானும்  குரு என்று கடந்து போகின்றேன்!
ஏதிலி யாரையும் சபிக்கவில்லை!
ஏவரும் எதுக்காவும் நல்லா வாழ/ பிரார்த்திக்க
எல்லாம் ஒரு மனசு
 ஏனோ பலருக்கு இல்லை!
 ஏதிலி பிரார்திக்கின்றேன்
ஏழைகளுக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று!!











23 comments:

  1. வணக்கம் சகோ! பின்னுட்டத்தைபற்றி அழகாக (ஆதங்க) அது எவ்வளவு அவசியம் என்பதையும் புரிந்து கொன்டேன் நன்றி!! தங்கள் எழுத்துநடை அழகு அருமை ரசனை!! அறிமுகங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றி!!

    அன்புடன் கருர்பூபகீதன்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ முதல் வருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துக்கும்.

      Delete
  2. வணக்கம் நண்பா இன்றைய அறிமுகங்களும் அசத்தல்
    தங்களின் பின்னூட்டம் குறித்த சிந்தனை கொஞ்சம் யோசிக்க வைத்தது
    நன்றி கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜீ ,வருகைக்கும், கருத்துரைக்கும்,

      Delete
  3. ஏதேதோ சிந்தனைகள்..

    ஆனாலும் - இன்றும் அருமையான அறிமுகங்கள்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அசத்தல் அறிமுகங்கள்...
    அருமையான பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார் சார் வலைச்சரம் வருகைக்கும் கருத்துரைக்கும்!

      Delete
  6. அறிமுகத்திற்கு நன்றி! பின்னூட்டங்களை விரும்பி படிப்பவன் நான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதற்கு பதிலும் அளிப்பேன். அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  7. ஓடும் நதிமேல் ஒரு பாட்டு.... சிறப்புங்க.
    அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிகலா தொடர் வருகைக்கும் உற்சாகமான பின்னூட்டத்துக்கும்.

      Delete
  8. வணக்கம்,
    சிந்திக்க வைக்கிறது,,,,,,,
    என் தளம் தங்கள் நினைவில் இருந்ததற்கு நன்றிகள் பல,,,
    அறிமுகங்கள் எமக்கு புதுமுகங்கள்,,,,,,, விசு அவர்கள் தளம் தவிர்த்து, மற்றவர்களின் தளங்களை இனி தான் படிக்கனும். தங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நினைவில் பலர் ஆனாலும் நேரச்சிக்கள் நன்றி சகோதரி வருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துக்கும்.

      Delete
  9. ஓடும் நதிமேலும் பாடிய பாட்டு
    உள்ளம் தொட்டது சகோ!

    சிந்திக்க வைக்கும் பதிவுடன் சிறந்த அறிமுகங்கள் இன்று!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஓடுவோம் வலை போல வாழ்க்கையும்
      ஓதும் வேதம் பல !
      ஓருவன் தனிமரத்தின் நன்றிகள் !

      Delete
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நலமா ?,வலைச்சித்தரே! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. புதிய அறிமுகங்கள் அனைத்து சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      Delete
  12. பின்னூட்டங்கள் குறித்த தங்கள் சிந்தனை நல்லதே. ஆனால் சில சமயங்களில் சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் வருகின்றனவே ...திட்டியபடியும், வருகின்றனவே என்ன செய்ய தனிமரம் நேசன்....ஆனாலும் சிந்திக்க வைத்தது உங்கள் கருத்து...

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தேவையில்லை என்று கணக்கு எடுக்காமல் போனால் அவர்களே ஓய்ந்து போவார்கள். பருப்பு அவியாது என்று புரிந்து போகும். நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete