நண்பர்களே! நல்வணக்கம்!
இந்த வார வலைச்சரம் ஆசிரியப் பணியை கவிதை மழையால் பதிவர்களின் மனதை குளிர்வித்த கவிஞர் கி.பாரதிதாசன் மிகவும் திறம்பட, வலைச்சரத்தை ஆடுகளமாக கொண்டு அவர் தேடும் தேன் தமிழை நமக்கெல்லாம் இனிக்க தந்து விடை பெறுகிறார்.
கவிஞருக்கு வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.
வலைச்சரத்தில் அவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!
கவிஞர் கி.பாரதிதாசன் உங்களிடமிருந்து,
385 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,
87 - தமிழ் மணம் வாக்குகளையும்,
1985- க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் இதுவரையில் பெற்றுள்ளார்.
அவரது அருந்தமிழ் பணியை நமக்கெல்லாம் கவிதை வடிவில் நல்கிய கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களை, நன்றி பாராட்டி, வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு' மகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு, வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க.... நண்பர் S.P. செந்திகுமார் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக அவரை "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
ஒரு எழுத்தாளருக்கு, வலிமை நிறைந்த ஆயுதம் எது? என்று பார்ப்போமேயாயின், நிச்சயம்! அது அவரது திற"மை" நிறைந்த..... எழுதுகோலாகத் தான் இருக்கும்.
அத்தகைய அறிய சிறப்பினை பெற்ற இவர் பத்திரிகைத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.
இவர், யாத்ரிகன், கலாதேவி, கண்மணி ப்ரியங்கா போன்ற பெயர்களில்
பல பத்திரிகைகளில், கட்டுரைகள் எழுதிவருகிறார். தற்போது 'ஹாலிடே நியூஸ்' சுற்றுலா மாத இதழின் இணை ஆசிரியராகவும், 'அக்ரி டாக்டர்' விவசாய நாளிதழுக்கு செய்தி ஆசிரியராகவும், தந்தியில் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
பல பத்திரிகைகளில், கட்டுரைகள் எழுதிவருகிறார். தற்போது 'ஹாலிடே நியூஸ்' சுற்றுலா மாத இதழின் இணை ஆசிரியராகவும், 'அக்ரி டாக்டர்' விவசாய நாளிதழுக்கு செய்தி ஆசிரியராகவும், தந்தியில் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.
கூட்டாஞ்சோறு வலைப்பூவின் மூலம் கடந்த 9 மாதங்களாக நம் அனைவரையும் சந்தித்து பயனுள்ள பதிவுகளை நமக்கெல்லாம் நாளும் தந்து வரும் இவரது கை வண்ணத்தில் வலம் வரும் வலைச்சரம் வாரத்தை வாசித்து மகிழ்வோம் வாருங்கள்.
'கூட்டாஞ்சோறு' வலைப்பூ - S.P.செந்தில்குமார் அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நல்வாழ்த்துகள் கவிஞர் கி.பாரதிதாசன்
நல்வாழ்த்துகள் S.P.செந்தில்குமார்
நட்புடன்,
புதுவை வேலு
புதுவை வேலு
test ok
ReplyDeleteசிறப்பாக பணியாற்றிய பாரதிதாசனுக்கு வாழ்த்துக்கள்.செந்தில் சார் வருக வருக பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteபனி தேசத்து (France) நனி மரம் இந்த தனிமரம் என்பதை அறிந்தேன்! மகிழ்ச்சி!
Deleteநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கவிஞருக்கு நன்றி புதிய ஆசிரியர் நண்பர் S.P செந்தல்குமார் அவர்களை சிவப்பு கம்பள விரிப்புடன் வரவேற்கிறேன் அசத்துங்கள்.
ReplyDeleteசிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு தாம்பூலம் தந்த தேவக்கோட்டை அபுதாபி நண்பருக்கு நன்றி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
கவிதை மழை பொழிந்து ஆசிரியர் பொறுப்பை வித்தியாசமாகச் செய்து அசத்திய கவிஞர் அவர்களுக்குப் பாராட்டுக்கள். பொறுப்பேற்கும் திரு செந்தில்குமார் அவர்களை வரவேற்று வாழ்த்து கூறுகிறேன்!
ReplyDeleteமனதில் ஊஞ்சலாடும் பாராட்டு நன்றி சகோதரி!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
கவிதை மூலம் நம்மையெல்லாம் ஒரு வார காலமாக கட்டிப்போட்டு வலைச்சர ஆசிரியர் பணியினை திறம்பட செய்த கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
ReplyDeleteநாளை வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்க இருக்கிற திரு S.P.செந்தில்குமார் அவர்களை வருக வருக என வரவேற்று, அவர் தம் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
வாருங்கள் அய்யா!
Deleteதங்களது பாராட்டும், வரவேற்பும் தமிழரின் தனிச்சிறப்பு! நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்தி வரவேற்கிறேன்! முத்திரை பதிக்கும் மதுரைத் தமிழே வருக!
ReplyDeleteS.P. செந்தில்குமார் அவர்களே சிறப்பினைத் தருக!
விடைபெறும், பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் கவிஞர்.கி பாரதிதாசனார்க்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை மழையில் எங்களை ஆழ்த்திய பாரதிதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. எனக்குக் கவிதை எழுதத் தெரிந்திருந்தால் கவிதை நடையிலேயே அவருக்கு நன்றி கூறியிருப்பேன்.
ReplyDeleteஎஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நல்வரவு.
அன்புக்கு இல்லாத அழகும் உண்டோ அகிலத்தில் முனைவர் அய்யா அவர்களே!
Deleteதங்களது எழுத்தின் வலிமையை விக்கிப்பீடியாவே கண்டு விக்கித்து நிற்கும்.
எவரெஸ்ட் உச்சம் உமது எழுத்து! கவிதையையும் கடந்து நிற்கும் அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த ஆசானுக்கு வணக்கங்கள்...
ReplyDeleteஇனிய நண்பர் S.P. செந்தில்குமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...
நன்றி வார்த்தைச் சித்தரே!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
ReplyDeleteபாராட்டுகளும் வாழ்த்துகளும் ( பாரதிதாசன்/ செந்தில்குமார்) இருவருக்கும் சென்று சேரட்டும்!
Deleteநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள திருவாளர்களுக்கு,
ReplyDeleteவலைச்சரத்தில் பொறுப்பாகவும் சிறப்பாகவும் பணியாற்றிய அய்யா பாரதிதாசனுக்கும்.. பொறுப்பேற்று சிறப்பிக்க இருக்கும் S.P.செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி வரவேற்கின்றோம்.
நன்றி.
த.ம.6
வாழ்த்து சொல்லி வரவேற்றமைக்கு மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் அய்யா!
Deleteநட்புடன்,
புதுவை வேலு
பாரதிதாசன் ஐயாவா போன வாரம்... எனக்கு அலுவலகத்தில் பணி அதிகம்... வலைப்பக்கம் வரவில்லை... அவரின் பகிர்வுகளை எல்லாம் படிக்க வேண்டும்...
ReplyDeleteஇந்த வாரம் கலக்க இருக்கும் திரு.செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் பரிவை சே.குமார் அவர்களே!
Deleteவலைப்பக்கம் வரமுடியாத அளவிற்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகம் இருந்தும் நண்பர் செந்தில்குமார் அவர்கள் நம்மை காண்பதற்கு வலைச்சரத்தை சிறப்பிக்க ஆசிரியராக பொறுப்பேற்று உள்ளார் என்பதை எண்ணும்போது நெஞ்சம் என்னும் மாடத்தில் இந்த மதுரை மாடத்து மணி விளக்கு என்றும் ஒளி வீசி திகழும். வாரம் முழுவதும் தொடர்ந்து சிறப்பிக்க வாருங்கள் நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள் கவிஞரே!
ReplyDeleteவாங்க நண்பர் செந்தில் அவர்களே! கலக்குங்கள் வலைச்சரத்தை....தொடர்கின்றோம்...
வாருங்கள் ஆசானே!
ReplyDeleteகூடி வந்து கூட்டாஞ்சோறு உண்ணலாம்.
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வலைச்சர ஆசிரியப் பணிமுடித்துச் செல்லும் எங்கள் ஆசான் கவிஞர் ஐயா
ReplyDeleteதிரு கி. பாரதிதாசன் அவர்களுக்கு !
பெண்ணரிய பேறில்லை என்னும் உண்மை
............பெருமையுறச் சொல்கின்ற வெண்பாக் கொத்தில்
மண்கமழ மலர்தூவி வைத்தார்ப் போன்று
............வலைச்சரத்தில் மகிழ்ந்தளித்தீர் மாட்சி பொங்கப்
பண்ணிறைந்த பாதொடுத்துப் படைத்த தெல்லாம்
............பார்முழுதும் வீசிவரத் தென்றல் போன்று
எண்ணரிய சிந்தனைகள் என்னுள் வீசும்
............எழுதிவிட வழியின்றிக் கண்கள் பேசும் !
ஒருவாரம் எல்லோர்க்கும் ஓதும் நாளாய்
..........ஒண்டமிழில் உரைத்திட்ட பாக்கள் எல்லாம்
திருவாச கம்போலத் தேனாய்த் தந்தும்
..........தித்திக்க வைத்தெம்மை விடைபெற் றாலும்
விருப்போடு உவந்தளித்த வலைப்பூச் சொந்தம்
..........விழிமுட்டி நீர்கசியும் வாழ்த்துச் சொல்லி
குருவாகத் தொழுகின்ற கோவே உங்கள்
..........குளிர்தமிழில் மகிழ்ந்துள்ளம் கொள்வோம் மேன்மை !
காடுள்ளே மலர்கந்தம் வீணாய்ப் போகக்
........கட்டியதை வாழ்மனையில் சேர்த்தார்ப் போன்று
ஏடுள்ளே இருக்கின்ற எழுத்தை எல்லாம்
.........எழில்தமிழில் பாட்டாக்கி எம்முள் சேர்த்தீர்
ஓடுள்ளே மறைந்துள்ள முத்தை எல்லாம்
.........உலகறியச் சிப்பியதை உடைத்தார்ப் போன்று
நாடுள்ளே நன்மக்கள் வாழும் வாழ்வின்
........நடைமுறைகள் கடைந்துபாக்கள் நாளும் சொன்னீர் !
இனிய பாக்களுடன் யாப்பிலக்கணங்களும் கற்றுத் தந்து இனிதே ஒருவார வலைச்சர ஆசிரியப் பணியினை நிறைவு செய்து விடைபெறும் எம் குரு கவிஞர் ஐயா கி,பாரதிதாசன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
இவ்வார ஆசிரியப் பணி ஏற்கும் திரு S.P செந்திகுமார் அவர்களுக்கு !
மதுரை மண்ணின் மகத்துவங்கள்
..........மனதில் நிறைந்த செந்திகுமார்
புதுமைத் தமிழில் வலைப்பூவைப்
.........பூத்துக் குலுங்கச் செய்திடுவார்
மதுவைக் குடித்து மகிழ்ந்திருக்கும்
........வண்டின் மனத்தைப் போல்நாங்கள்
இதுநாள் வரையில் கொள்'இன்பம்
.......... இன்னும் தொடர வைத்திடுவார் !
வாரும் மதுரை மாமனிதா
...........வாரப் பொறுப்பை ஏற்றவுடன்
ஏரும் மண்ணில் கவி'எழுதி
..........ஏழை வாழ்வை நிறைத்தார்ப்போல்
தாரும் இனிய அறிமுகங்கள்
...........தங்கத் தமிழில் முடிசூடி
பேரும் புகழும் கொள்வலையின்
..........பெருமை பொங்கத் தினம்பாடி !
தங்கள் இனிய பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ் மரபு அறிந்த, மரபு போற்றும் கவிஞர், தங்களுக்கு வலைச்சரத்தின் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
Deleteநன்றி மரபுக்கவியின் நல் மாணாக்கரே
சீராளும் உமது பண்பு பாராளும் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் !
Deleteபாராளும் பண்பைப் பகிர்ந்திட்ட பாவலரின்
சீராளும் கற்கை சிறப்பிக்கும் - ஊராளும்
நற்கவிகள் உள்ளம் நிறைந்திருக்கும் என்னுயிரின்
அற்றைக் கனவுகளில் ஆழ்ந்து !
மிக்க நன்றி ஐயா !