Sunday, September 2, 2012

மனிதனும் மரணமும்


வலைச்சரம் ஆறாவது நாள்

உறவுகளுக்கு வணக்கம் உற்சாகமாக என்னுடன் இந்த பயணத்தை மேற்கொண்டு வரும் உங்கள் அனைவரையும் இன்று மரணத்திற்கு அழைத்து செல்லுகிறேன் ...!!?

என்னடா இப்படி சொல்லுகிறாளே என்று மனதிற்குள் பயத்தின் ரேகை படருகிறதா ? ம் அதை என்னால் உணர முடிகிறது வாங்க அந்த பயத்தை அகற்றுகிறேன் .

மரணம் இன்னும் நம்மால் உணரமுடியாத ஒரு மாயை ஒரு இருட்டை போல இருக்கும் ,அதிகமாக வலியை  தரக்கூடியது ,ஆபத்தானது இப்படிதான் நாம் மரணத்தை பற்றி சிந்திக்கிறோம் ......

ஆனால் மரணம் அற்புதமான ஒரு அனுபவம் அதை நாம் விரும்பியோ விரும்பாமலோ தினமும் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம் அதுதான் உறக்கம் .

பகலில் அனைத்தையும் நம்மால் திட்டமிட முடிகிறது ஆனால் இரவில் நம்ம ஆட்கொள்ளும் உறக்கம் திட்டமிடாமல் நம்மை தழுவுகிறது .இது மரணத்திற்கான ஒத்திகை .


இருள் சூழ்ந்த நிமிடங்களில் நம்மை முற்றிலும் நம்மால் அடையாளம் காண முடிகிறது நாம் நாமாக இருக்கிறோம். எல்லாவற்றையும் உதறிவிட முடிகிறது .இருள் ஒரு வரம் அதற்குள் நாம் ஐக்கியமாகிவிடுகிறோம் அது நம்மை முழுதாய் ஏற்றுக்கொண்டு நம்மை தாலாட்டுகிறது .

ஒரு நபர் இறந்து விட்டார் என்றால் உடனே நாம் என்ன சொல்லுவோம் " சே இன்னும் கொஞ்ச நாள் கழித்து இறந்திருக்கலாம் " என்று .இந்த கொஞ்ச நாள் என்பது அவர் மீது கொண்ட அனுதாபம் இல்லை .நாம் மரணத்தை ஏற்றுகொள்ள கேட்கும் அவகாசம். அந்த அவகாசதிற்குள் நம்மால் மரணத்தை ஜீரணிக்க முடிகிறது .

நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள் வலியுடன் இருக்கும் ஒருவரை பார்க்கும் போது
அவரை மரணம் அழைத்து கொண்டால் பரவாயில்லை என்று நினைக்கிறோம் அப்போது நமக்கு அவர் மீது ஏற்படுவதும் பரிதாபம் இல்லை மரணத்தை ஏற்க்க நாம் தயாராகி விட்டோம் என்று அர்த்தம் .

ஆகவே அந்த அற்புத மரணத்தை நாம் தினமும் அனுபவித்து மகிழ்கிறோம் அதை கண்டு பயப்பட வேண்டாம் அதை இலகுவாக ஏற்க துணிவோம் .


புதிய தளங்கள் உங்கள் பார்வைக்கு

தோன்  நதி அமைதியாக  ஓடி கொண்டு இருக்கிறது 

துரை டேனியல் 

வலைசெய்திகள் 

தேன் சிட்டு 

கொங்கு தென்றல்

அரசியல் வாதி 

சக்தி கல்வி நிலையம் 



ஆசியர் என்பவர் தேர்ந்த மன நல மருத்துவனை போல மாணவனை அணுக வேண்டும் நாம் கடந்து வந்த ஆசிரியர்களிடம் நாம் கற்று கொண்டவை ஏராளம் .
காட்சிக்கு எளியவனாய்
காவியம் போற்றும் தலைவனாய்
புன்னகை பரிசளிபவனாய்
புத்துணர்வு தருபவனாய்
ஒரு ஆசானாய் ,தோழனாய்
வேண்டும் ஒரு ஆசிரியர் ........

இப்போது கிடைப்பது அரிதுதான் ஆனாலும் இந்த பணியை செவ்வனே செய்து முடித்த திருப்தியை உங்கள் கருத்து மூலம் அறிந்து கொண்டேன் .

இத்துடன் இந்த உறவு முடிந்துவிடாமல் எழுத்தின் மூலம் பல நல்ல ஆக்கங்களை கொடுப்போம் என்ற என்ற நம்பிக்கையுடன் என்னை இந்த பணியை மேற்கொள்ள  அழைத்த  திரு சீனா ஐயா  அவர்களுக்கும்  தோழமைகளுக்கும் என் நன்றியை கூறி விடை  பெறுகிறேன்

இவள்
உங்கள்
தோழி

கோவை மு சரளா


7 comments:

  1. அவ்ளோ தானா...கிளம்பிட்டிங்களா..இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்....
    இனிதாய் ஆசிரியர் பணியை திறம்பட நடத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நான் தான் லேட் ஆ - ஆகா வடை போச்சே - சரி எப்படியோ, ஆறு நாட்கள்.... வலை ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக நடத்தி விடைபெறுகிறீர்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள்... நன்றி...

    ReplyDelete
  4. நன்றி தோழி. உங்களின் அறிமுகம்தான் என் வலைத்தளத்திற்கு நிறைய பார்வையாளர்களை அழைத்து வந்தது. தொடர்ந்து நல்ல வழிகாட்டியாய் இருங்கள். உங்களைப்பின்பற்றுவதில் எனக்கும் பெருமையே.

    ReplyDelete
  5. பல புதுமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  6. நண்பர் சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மரியாதைக்குரிய அம்மையார் கோவை சரளா அம்மையாருக்கு வணக்கம் நிறைந்த நன்றிகள் பல! எனது வலைப்பூ அறிமுகம் செய்து அதன் விளைவாக திரு திண்டுக்கல் பாலு அவர்கள் வருகையால் மிகவும் மனதால் மகிழ்ந்து உள்ளப்பூர்வமான திருப்தி! ஆமாங்க,தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிங்க!! எவ்வளவோ பதிவிட ஆசைகள் ஆனால் எனது பணி நிமித்தமாக கால தாமதாகிறதுங்க! இருப்பினும் முயற்சி செய்கிறேனுங்க......என parames driver - Thalavady

    ReplyDelete