வீட்டுல யாராச்சும் நம்பள நம்பி ஒரு வேலை குடுத்தா இந்தா அந்தான்னு நேரம் சொல்லி பாதி முடிச்சு முடிக்காம காரணம் சொன்னாலும் வெளிய யாராச்சும் வேலை குடுத்தாங்கன்னு வைங்க தலையால செய்து முடிச்சுட்டுத்தான் மறுவேலையே.
என் பதிவு பக்கமே ஒரு வாரமா போகல..அங்க இருந்த 13 ங்கற க்ரேடு இறங்கி 12 க்கு வந்துடுச்சு.
இது வலைச்சரத்தின் 50 வது பதிவு. இந்த முயற்சியால் நேரம் குறைவாக இருப்பவர்கள் வித்தியாசமான பதிவுகளைப் படிக்க முடியும். வலைச்சரம் மேலும் நல்ல வளர்ச்சி அடைந்து பலருக்கும் உதவியாக இருக்க என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இன்றைக்கான பதிவுகள் .....
நான் டைப் கத்துக்கப்போன க்ளாஸ் ஒட்டினாற்போல ஒரு வீட்டு சமையலறை...பசி நேரத்தில அங்கிருந்து வரும் தாளிக்கும் வாசனை இருக்கே ...இங்க ஒருத்தங்க தாளிக்கும் ஓசை கேட்குதா உங்களுக்கு... அருமையான குறிப்புகள் இருக்கு.
சினிமாவில் மட்டும் தான் ஹீரோ இல்லாட்டி ஹீரோயின் அரசாங்கமே ஆனாலும் அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் தைரியம் பெற்றவர்களாக இருப்பதை பார்த்திருக்கோம்..இனி நீங்களும் ஒரு ஹீரோ ஹீரோயின் தான் தட்டிக் கேளுங்கள் ... நாட்டுக்கு நல்லது செய்ய உங்களால் கூட முடியும் தெரியுமா உங்களுக்கு
சந்தோஷமோ சோகமோ பாட்டிருந்தா துணைக்காச்சு...அதுவும் நம்ம தமிழ் சினிமா பாட்டுகள் இருக்கே அவங்கவங்க சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி பாட்டுகள் குவிஞ்சு கிடக்கிற ஒரு பெட்டகம். அதுல இருந்து என்ன வேணும் கேளுங்க இங்க போய்.. உங்களுக்கான இலவச இசைச்சேவை நடக்கிறது .
கதம்பமாலை தளத்துக்கு சென்றிருக்கிறீர்களா ? நீங்கள் படித்த ப்ளாக் பற்றி பரிந்துரையுங்கள் ...பரிந்துரைக்கப்பட்ட தளங்களையும் படித்து மகிழுங்கள்.
இத்துடன் என் வலைச்சர அறிமுகங்கள் முடிகிறது வாய்ப்பளித்த சிந்தாநதி அவர்களுக்கும் இது வரை பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும்...வந்து படித்த மற்றவர்களுக்கும் நன்றி..நன்றி.
மீ த பஸ்ட்
ReplyDeleteஇப்படிக்கு
மைபிரண்ட்
இப்ப நன்றி யாருக்கு சொல்லணும்...
ReplyDeletehi அபி அப்பா,
நன்றி மைபிரண்ட். :)
மைபிரண்டுக்கே சொல்லிடுங்க! அவங்க தான் தான் எப்பவும் முதலாவதா இருக்க ஆசைப்படுவாங்க:-) நம்ம தங்கச்சி தானே:-))
ReplyDeleteஎன்னது கமெந்த் மாடரேஷன் இல்லியா?
ReplyDeleteநீங்க ஏன் ஆலமரம் பதிவு படிக்கலை:-((
ReplyDelete//இத்துடன் என் வலைச்சர அறிமுகங்கள் முடிகிறது வாய்ப்பளித்த சிந்தாநதி அவர்களுக்கும் இது வரை பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும்...வந்து படித்த மற்றவர்களுக்கும் நன்றி..நன்றி. //
ReplyDelete:(
senshe
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்:-))
ReplyDeleteவலைச்சரத்தில் கமெண்ட் மாடரேஷன் இல்லைதான்.
ReplyDeleteஆலமரம் படிச்சேன் ..பின்னூட்டமிடலயோ..?!
அதிகப்படி வேலை இல்லயா அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.
சென்ஷி கவலைப்படாதீங்க...
ReplyDeleteஅடுத்த வாரமும் உங்களூக்கு இங்கே தான் பின்னூட்டமிடும் வேலை காத்திருக்கிறது.நேரம் ஒதுக்கிவைக்கவும்.
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteசென்ஷி கவலைப்படாதீங்க...
அடுத்த வாரமும் உங்களூக்கு இங்கே தான் பின்னூட்டமிடும் வேலை காத்திருக்கிறது.நேரம் ஒதுக்கிவைக்கவும்./
:))
senshe
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனது வலைப்பதிவைப் பரிந்துரைத்தற்கு மிக்க நன்றிகள் ;-)
50வது பதிவா? சும்மா பின்னிட்டீங்க போங்க.
ReplyDeleteஆமாம், இந்தப் பக்கத்துலே என்னமோ ஒரு சட்டத்தகடு சுத்துதே. முதல்லே நினைச்சேன்,
அது pizza கட்டர். இப்பப் பார்த்தா.......... பின்னூட்டமிடாதவங்களை கட் பண்ணுறதோன்னு
தோணுது (-:
சரி. நீங்கபோய் பொழைப்பைப் பாருங்க. அது என்னங்க கிரேடு 13 லே இருந்து 12? முன்னேறிப்
போலையா?
நன்றி :)
ReplyDelete@சென்ஷி இப்படித்தான் சிரித்தமுகத்தோட இருக்கணும்.
ReplyDelete@கானாபிரபா மறுமொழிக்கு நன்றி...
துளசி ஒருவாரமா எழுதலன்னா வர கூட்டமும் கம்மியாகும் அப்பறம் க்ராப் இறங்கிடும் க்ரேடும் இறங்கிடும்..
ReplyDeleteசும்மா சொன்னேன்..அத யார் பார்க்கறா...எப்படியோ அங்க வரவங்கள் எல்லாமிங்கயும் வந்து பின்னூட்டம் போட்டு இருக்கீங்களே அப்பறம் என்ன கவலை.
------
மறுமொழிக்கு நன்றி பாலா