Friday, May 4, 2007

பராக் பராக் பராக்

எந்த ஒருத்தருடைய பதிவப் படிச்சாலும் அவங்க முதல் பதிவு இல்லாட்டி கொஞ்ச முந்தைய சமயத்து பதிவுகளையும் ஒரு ஓட்டம் பார்த்துவிடுவேன். அப்படி இல்லாவிட்டால் அவர்களைப்பற்றிய அறிமுகம் என்ற தலைப்பில் எதாவது இருந்தால் வலைபதிய எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றி எழுதியதாக இருந்தால் அதனைப் படிப்பது வழக்கம்.

அப்படி பார்த்தவற்றில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
இங்கே ஒரு நட்சத்திரம் பேசுகிறது.அரங்கேற்றம்
எல்லா நதிகளும் ஊற்றாகத்தான் தோன்றுகின்றன... எல்லா மேதைகளும் குழந்தையாகத்தான் பிறக்கின்றனர்.!! கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!



வலைப்பதிவுலகத்தில் முக்கியமானவர்களில் ஒருத்தராச்சே
புதியதாக வரவங்களுக்கு இந்த அறிமுகம் உபயோகப்படும்.

நன்றி நன்றி ன்னு சொல்லிக்கிட்டே வரார் பாருங்க...எதையும் தொடங்குமுன்னர் வேண்டியவங்க நமக்கு பெரியவங்களை நினைச்சுப்பார்க்கறது நல்லது இல்லயா? அதான்.

எதையும் இவங்க ஒரு வித்தியாசமாத்தான் எழுதி இருக்காங்க..இவங்கள உதாரணம் காட்டாம இருக்க முடியல

தலைப்பு வச்ச காரணத்தைச் சொல்லி ஆரம்பிச்சுருக்கார்..

சிலர்வரும் போது என்னை மாதிரி பயந்துகிட்டே ஆரம்பிக்கறாங்க சிலர் வரும் போதே அட்டகாசமா நுழையறாங்க..உதாரணத்துக்கு அபி அப்பா , காட்டாறு , கண்மணி , அய்யனார் .படிச்சிருப்பீங்களே !!

17 comments:

  1. இந்த மாதிரி நீங்க என்னை படிச்சிருக்கமுடியாதே....ஏன்னா இது நமக்கு செகண்ட் இன்னிங்க்ஸ்...

    ReplyDelete
  2. திருநெல்வேலிக்கே அல்வா
    திருப்பதிக்கே லட்டு
    மதுரைக்கே மல்லி

    இதெல்லாம் சரிதான்.
    ஆனா...............
    என்ன இப்படி?

    'கொசுவத்திக்கே கொசுவத்தியா? :-)))))

    ReplyDelete
  3. இல்லங்க பங்காளி ...நீங்க நினைக்கிறது தப்பு...ஐ நோ ஐ நோ ...ஐ நோ...உங்க முதல் இன்னிங்ஸ் ல இசைப்பத்தி ஒரு பகுதி போட்டிருக்கீங்கஅதுல நான் நிறைய பாட்டை கேட்டிருக்கிறேன்..என்ன நினைச்சீங்க நம்மள பத்தி...

    ReplyDelete
  4. மேம்பாலத்தைப் பத்தி கொசுவத்தி சுத்தன அன்னைக்குத் தானே என் பதிவு நிறைய போனி ஆகி நிறைய நட்பு கிடைச்சுது...
    கொசுவத்தி மதிப்பே தனி தானே...

    வாழ்க்கை வரலாறு எல்லாம் படிக்க இன்னைக்கு போட்டிபோட்டு வாங்கிப் படிக்கறாங்கள்ளா...அது மாதிரி வலைப்பதிவர்களின் வரலாறு பேசப்படும் நாள் தூரத்தில் இல்லை.. :) பாத்துக்குங்க.

    ReplyDelete
  5. அணைத்துப் போகும் மனசில் உண்டு
    ஆயிரம் கவிதையடி
    நினைத்துப் பார்த்தால்
    எழுதா வரிக்குள்
    இருக்கும் மனிதமடி..!

    ReplyDelete
  6. தமிழ்நதி என்ன சொன்னீங்க??/

    ReplyDelete
  7. //தமிழ்நதி said...
    அணைத்துப் போகும் மனசில் உண்டு
    ஆயிரம் கவிதையடி
    நினைத்துப் பார்த்தால்
    எழுதா வரிக்குள்
    இருக்கும் மனிதமடி..!//


    முத்துலெட்சுமி said...
    தமிழ்நதி என்ன சொன்னீங்க??/ /

    என்னக்கா.. இதுக்கெல்லாமா கோனார் நோட்ஸ் கேப்பீங்க..

    நீங்க ஒரு பதிவுக்கு லிங்க் கொடுத்தா அது 1000 பதிவுக்கு லிங்க் கொடுத்தாமாதிரி... :) (நான் 50 பதிவுதான் எழுதியிருக்கேன்)

    அதப்பத்தி மேட்டர் எழுதித்தான் மத்தவங்க புரிஞ்சுக்கனும்ங்கற அவசியம் இல்ல.

    என்னங்க தமிழ் நதி சரிதானே :)

    சென்ஷி

    ReplyDelete
  8. அரங்கேற்ற பதிவர் அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  9. முத்துலஷ்மி கான மயிலாட கண்டீருந்த வான் கோழி மாதிரிதான் நானெல்லாம். நம்மளையெல்லாம் கணக்குல சேர்க்கறீங்களே.
    வலைசர வாரத்திற்கு வாழ்த்துக்கள் .முன்னமே சொன்னேன் எப்படியோ [ஏனோ] காணவில்லை.

    ReplyDelete
  10. மறுமொழிக்கு நன்றி பத்மா...

    கண்மணி உங்க பதிவுல ஒருதடவை எனக்கு வாழ்த்து சொன்னீங்க...அத இங்க போட்டதா நினைச்சிட்டீங்களா..
    பரவால்ல ரெண்டு தடவை வாழ்த்தி இருக்கீங்க ரொம்ப நன்றி.

    ReplyDelete
  11. லட்சுமி

    ரெண்டு நாளா வர முடியலை...

    நான் எல்லாம் அறிமுகப்பதிவே போடலை..நேரா நுழஞ்சிட்டேன்..:-))

    ReplyDelete
  12. நீங்க கில்லாடிதான்..ஒத்துக்கறேன் லட்சுமி...

    ஆமா...எப்டி அந்த பதிவெல்லாம் கண்டுபிடிச்சீங்க...

    நீங்க பார்த்தது சைடு பதிவு...மெயின் பதிவு ஒன்னு இருக்கு...ஹி..ஹி...

    ReplyDelete
  13. புரியலையா... புதியவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள். அறிமுகப்படுத்துகிறீர்கள். படிச்சு பிடிச்சிருந்தா பின்னூட்டமிடுகிறீர்கள். நீங்கள் எழுதினாலும் எழுதாவிட்டாலும் உங்களுக்குள் நல்ல மனது இருக்கிறது என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறேனாம்.:)

    சென்ஷி! ஒரு கதை சொன்னா பலவித உரையா இருக்கே :)

    ReplyDelete
  14. மங்கை நான் முதன் முதலா உங்களோட தில்லி தமிழர்கள் பற்றிய பதிவு தான் படித்தேன் .அதுலயே உங்களப்பத்தி எனக்கு அறிமுகம் கிடைத்ததாக உணர்ந்தேன்.அதுனால அறிமுகப்பதிவைத் தேடல.

    ReplyDelete
  15. @ பங்காளி அது எப்படின்னா...

    நான் பொழுது போகாதப்போ...அப்படியே இந்த தமிழ் மணம் பகுதியின் பதிவுகள் பகுதிக்கு போய் முழுப்பட்டியல் இருக்கே அங்க ஒரு ரவுண்டுபோய் தலைப்பு பாத்து அந்த பதிவுகளுக்கும் போய் படிப்பது ...அப்படி பார்த்தேன்.அப்பறம் ஒற்றுமை புரிந்தது..இந்த பணத்தை பத்தி எழுதுன பதிவு எல்லாம் படிக்கறது கஷ்டம்...அது படிக்கல...பாட்டுன்னா உயிர் .

    ReplyDelete
  16. தமிழ்நதி அய்யோ புல்லரிக்குது போங்க...

    அந்த காலத்துல எழுதுனவங்களே உரையும் எழுதிக்கொடுத்துட்டுபோயிருக்கனும்..இன்னைக்கு அவங்கவங்க இஷ்டத்துக்கு அர்த்தம் பண்ணிக்கிட்டு விவாதம் பண்ணறாங்க...

    பாத்தீங்களா சென்ஷி தனியா ஒரு உரை போட்டிருக்கார்...அதான் உங்ககிட்டயே கேட்டேன் என்ன விஷயம்ன்னு...தெளிவா புரிஞ்சுக்கணும் இல்லயா...

    சென்ஷி அடிச்சு உடறப்பா ....

    ReplyDelete
  17. நான் எளுதினத்ல உருப்படியான ஒரு தொடர் இதுன்னு நினைக்கிறேன். நேரம் கிடைச்சா படிச்சிப்பாருங்க...

    http://sadhayam.blogspot.com/2006/10/10.html

    ReplyDelete