குழந்தைங்க நாட்டின் நாளையத் தூண்கள் கண்கள் இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோமே ... அதற்கேற்றவாறு என்ன செய்யறோம் ஓட்ட ஓட்டமாய் வாழ்க்கை ஓடுது ஒரு கடமையாய் பிள்ளை வளர்த்தால் நாளை எப்படி நல்லா இருக்கும். அப்துல் கலாம் பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாப் போய்
குழந்தைங்க கிட்ட பேசறார்... ஒரு பொறுப்புளவர்களாக நாமும் நடந்துக்க வேண்டாமா ?
குழந்தை பிறந்த வுடன் நாம நம் இயற்கை வரங்களா கிடைத்த மருந்துகளைக் கொடுத்து வந்தோம் அது வர வர இப்ப குறையுது பாருங்க இவங்க அதைப்பத்தி எழுதி இருக்காங்க.
குழந்தை வளர்ப்பு
எந்த நாட்டில் இருந்தாலும் தாய்மொழி முக்கியமில்லையா குழந்தைங்க இப்படி வளர்ந்தா எப்படிங்க
இங்கே சில லிங்க்குகள் இருக்கு..
குழந்தைங்களுக்கான வலைப்பூக்கள் பற்றிய தகவல்கள்
வளரும் குழந்தை எதை எதை கத்துக்குதுங்கறது கவனிக்கப்படவேண்டிய விஷயம்...எனக்கு ஹிந்தி தோடா தோடாத்தான் மாலும் ...புதுப்பாட்டு வந்து மகள் பாடும் போது அர்த்தம் தெரியுமா நல்லா பாட்டா இதுன்னு மகளிடம் கேட்டுக்கிட்டு இருப்பேன்..அது பத்தி ஒரு விவாதம் பாருங்க இங்க...
குழந்தைங்க இப்படிப்பட்டப் பாட்டைப் பாடலாமா?
இவங்க பக்கத்துக்குப் போனேன் ,
நிறைய தலைப்புகளில் குழந்தைகளைப்பற்றி எழுதி இருக்காங்க...
என் பொண்ணுக்கு கடவுள் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறாள்...என் அம்மா வந்தா தினமும் கதை கேட்டுத்தான் தூங்குவா..அவ கேட்கிறா யாராச்சும் கடவுளைப் பார்த்து இருக்காங்களா? இந்த கதையெல்லாம் நிஜமா அப்படின்னு...
நான் அவளுக்கு சொல்வது என்னன்னா ""எனக்கும் சரியாத்தெரியாது அவரவர் உணர்ந்து பார்க்கவேண்டிய விஷயம் இது ...பார்த்தவர்கள் சொன்னாலும் பார்க்காதவர்கள் ஒத்துக்கிறது கஷ்டம் ... நீயாக புரிந்து கொள்ளவேண்டும் . எனக்கு தெரியாதை நான் எப்படி சொல்ல முடியும் இது ஒரு நம்பிக்கை.
என் தாத்தா அப்பா அம்மா இப்படி வழி வழியாய் சொன்னதை நான் ஓரளவுக்கு நம்புகிறேன் கட்டாயமில்லை ...நீ உணர்ந்து பார்.""
குழந்தைங்க அப்படியே பெற்றோர்வழியில் வளர்ந்தா எப்படி..
கேட்கிறார் பாருங்க...
முக்கியமான கருத்துக்கள்..
ReplyDeleteஇந்த பதிவை சேமித்து வைத்து விட்டேன். நன்றி
நன்றி சென்ஷி.பிற்காலத்துக்கு இப்போவே சேமித்து வைக்கிறீங்களா?
ReplyDelete:)))
ReplyDeleteஇம்புட்டு லிங்க் குடுத்தா என்ன பண்றது...ம்ம்ம்...ஒவ்வொன்னா படிச்சிட்டுத்தான் பின்னூட்டமெல்லாம் போடமுடியும்...
ReplyDeleteஅப்படி இல்லாம இப்படியும் பின்னூட்டம் போடலாங்கறதுகாக இந்த பின்னூட்டம்....ஹி..ஹி..
அவசரம் என்ன நிதானமா படிங்க...
ReplyDeleteசென்ஷி கூட சேமித்து வைத்ததாகத் தான் பின்னூட்டமிட்டிருக்கிறார்..
ஏதோ வந்தீங்க பாத்தீங்க நாலு பேருக்கு பதிவு போய் சேருவதற்கு ஒரு பின்னூட்டம் போட்டிங்க இதுவே சந்தோஷம்.
நல்ல தேவையான பதிவு! பொண்ணு போட்டிக்கு போறா போல இருக்கே, வாழ்த்துக்கள் வெற்றி பெற:-))
ReplyDeleteநன்றி அபி அப்பா...
ReplyDeleteபோட்டிக்கா.. இன்னும் பாட்டு முடிவெடுப்பதில் குழப்பமிருக்கிறது.
மேடம்.. குழந்தைகள் வளர்ப்பு என்பதே ஒரு கலை. வளர்ப்பு எப்படியோ அப்படியேதான் அச்சில் வரும் என்பதெல்லாம் படித்தவர்களுக்கு ஓகே.. இன்னமும் இதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்கும் நகரவாசிகளும் நிறைய இருக்கிறார்கள். இந்தச் சமயத்திலும் நாம் யோசிக்கவில்லையென்றால் பின்னாளில் நம்மைப் பற்றிக் குழந்தைகள் யோசிக்க மாட்டார்கள் என்பது உறுதி..
ReplyDeleteமறுமொழிக்கு நன்றி உண்மைத்தமிழன்.
ReplyDeleteநல்ல தொகுப்பு-ங்க, முத்துலெட்சுமி !
ReplyDeleteநன்றி!
மறுமொழிக்கு நன்றி தென்றல்..
ReplyDeleteஎன்னை அப்துல் கலாமின் பதவியில் உக்காரவச்சா நானும்தான் தினம் ரெண்டு பள்ளிக்கூடத்துக்குப் போய்
ReplyDeleteகுழந்தைகளைச் சந்தித்துப்பேசுவேன்.
இது உறுதி:-)))))
பதவிக்கு வந்தா நீங்களும் அவரைப்போல நல்லது செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு..உங்க் பேர நாமினேஷனுக்கு குடுத்துடுவோமா...
ReplyDeleteபதவி எதுக்குங்க வலைப்பதிவரெல்லாம் சேர்ந்து பதவின்னு ஒன்னு இல்லாமலே நாட்டை ஒரு வழி பண்ணிட மாட்டோம். :)
//முத்துலெட்சுமி said...
ReplyDeleteபதவிக்கு வந்தா நீங்களும் அவரைப்போல நல்லது செய்வீங்கன்னு நம்பிக்கை இருக்கு..உங்க் பேர நாமினேஷனுக்கு குடுத்துடுவோமா...
பதவி எதுக்குங்க வலைப்பதிவரெல்லாம் சேர்ந்து பதவின்னு ஒன்னு இல்லாமலே நாட்டை ஒரு வழி பண்ணிட மாட்டோம். :)//
பதவி இருந்தாதான் நல்லது செய்யணும்னு நினைச்சா அப்புறம் என்ன ஆகறது :(
என்ன பாட்டுன்னு என்ன குழப்பம்? கர்னாட்டிக்ன்னா "மாடு மேய்க்கும் கண்ணா" இல்லாட்டி ராஜாஜியின் கீர்த்தனை"குறை ஒன்ரும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" அதுவும் இல்லாட்டி கீழிருந்து ஆரம்பமாகி உச்சஸ்தாய்ல போகும் "சம்போ சிவசம்போ"
ReplyDeleteஇல்ல சினிமா பாட்டுன்னா என் சாய்ஸ் "நெஞ்சாங் கூட்டில் நீயே நிர்கிறாய்"
ஜாமாய்க்க சொல்லுங்க!! மாமாவின் ஆசி உண்டுண்னு சொல்லுங்க. அபிக்கு வேணும்னா ஐஸ் கிரீம் வாங்கி குடுத்திடலாம்!!:-))
சென்ஷி அப்படி இல்ல...சும்மா நானும் போய் அட்வைஸ் பண்ணறேன்னு போனீங்கன்னா எந்த ஸ்கூல்ல விடுவாங்க..அதுவும் கலாம் மாதிரியே பேச்சிலர் வேற நீங்க...
ReplyDeleteபதவில இருந்தாத்தானே உள்ளவிடுவாங்க..