வலைப்பதிவெல்லாம் எழுதறது வெட்டி. வேலையத்தவங்க தான் அதை செய்யறாங்க. அதனால எந்த பயனும் இல்லைனு சிலர் நினைக்கலாம். ஆனா வலைப்பதிவ படிச்சி ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை குறித்த என் கண்ணோட்டம் மாறியது. பலருக்கும் அந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் அதை பலர் தவறவிட்டிருப்பார்கள் என்ற காரணத்தால் இங்கு குறிப்பிடுகிறேன்.
என்னடா ஒரே பில்ட் அப் கொடுக்கறானு பாக்கறீங்களா? விஷயம் இருக்கு. இந்த வார்த்தையை படித்தால் எந்த பதிவை பற்றி சொல்ல போகிறேன் என்று புரிந்துவிடும் - "திருநங்கைகள்".
ஆமாம் லிவிங் ஸ்மைல் வித்யா அக்காவை பத்தி தான் சொல்ல போறேன். என்னடா அது பேரு லிவிங் ஸ்மைல்னு இருக்குனு யோசிக்கறீங்களா?
அதுக்கு அழகா இந்த பதிவுல பதில் சொல்லியிருக்காங்க. ஏன் லிவிங் ஸ்மைல்
அடுத்து அது என்ன திருநங்கை. புதுசா இருக்குனு பாக்கறீங்களா? அதுக்கும் பதில் இருக்கு... இதை படிங்க அலி, அரவாணி, திருநங்கை
திருநங்கைகள் குறித்து நம் மனதில் தவறான ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது எதுனு பார்க்கும் போது, பெரும்பாலும் சினிமா தான். அதை ரொம்ப அழகா இந்த பதிவுல தோல் உரிச்சி காட்டியிருக்காங்க. தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்
அடுத்து இந்த தொடரின் மூலம் பாலின சிறுபாண்மையினரை பற்றி எழுத ஆரம்பிச்சாங்க. ஆனால் தொடற முடியாமல் விட்டுவிட்டார்கள். வித்யாக்கா இந்த பதிவை படிச்சா, இந்த தொடற எழுத முயலுங்களேன். ப்ளீஸ்...
இந்த பதிவ படிச்சதுக்கப்பறம் உங்க மனசு கண்டிப்பா பாரமாகும்... சாதனையா தேவை
இது தேன்கூடு போட்டில பரிசு வாங்கிய கவிதை... கண்டிப்பாக மரணம் மட்டுமா மரணம்னு சிந்திக்க வைத்தது
இது அவர் சந்தோஷமாக எழுதியது... ஒரளவு மனிதாபிமானம் இன்னும் மக்களிடையே இருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கும் பதிவு
நம்புங்கள் நான் வசிப்பது தமிழ்நாட்டில்
கடைசியா சாதனை திருநங்கைகள்
அருமையாக தொகுத்திருக்கீங்க...!!!
ReplyDeleteசென்ற ஞாயிற்றுக்கிழமை கோவையில அவங்களோடதான் லஞ்ச் தெரியுமா!!! :)))
வாழ்த்துக்கள் ஸ்மைல்ஸ் !!!
// செந்தழல் ரவி said...
ReplyDeleteஅருமையாக தொகுத்திருக்கீங்க...!!!
//
மிக்க நன்றி ரவி அண்ணா!!!
//
சென்ற ஞாயிற்றுக்கிழமை கோவையில அவங்களோடதான் லஞ்ச் தெரியுமா!!! :)))
வாழ்த்துக்கள் ஸ்மைல்ஸ் !!! //
இந்தியால எல்லாம் அடிக்கடி பார்த்து பேசிக்கறீங்க... நடத்துங்க நடத்துங்க...
கேப்பங்கஞ்சி வித் கவிதா
ReplyDelete