முன்பு வலைச்சரத்திலேயே பல புது வலைப்பதிவுகளுக்கான ஆலோசனைகள் தந்து சிறில் எழுதி இருந்தார். எனக்குத் தோன்றும் சில ஆலோசனைகள்:
1. வீடு / நிலம் / வண்டி வாங்குவது / விற்பது எப்படி - என்று அனுபவம் உள்ளவர்கள் எழுதினால் நல்ல வரவேற்பைப் பெறும்.
2. +2, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்பாகத் தயாராவது, மேற்படிப்பைத் தேர்ந்தெடுத்தல் குறித்த உதவிப் பதிவு.
3. மகப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள், தீர்வுகள், வழிகாட்டல்கள் தரும் அனுபவப் பதிவு - இதில் ஒரு மகப்பேறு, குழந்தை நல மருத்துவரையும் இணைத்துக் கொள்ள முடிந்தால் மேலும் உதவியாக இருக்கும்.
4. உள்ளூர்ப் பதிவுகள் - அந்தந்த நகரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் எங்கு, என்று நடைபெறுகின்றன, உள்ளூர் செய்திகள், உள்ளூரில் என்ன திரையரங்கில் என்ன படம் போன்ற விவரங்களைத் தரும் பதிவுகள்.
5. கணினி உதவிப் பதிவு - விண்டோஸோ லினக்ஸோ எவ்வளவு முட்டாள்த்தனமான கேள்வியானாலும் தயக்கமில்லாமல் தமிழில் கேட்டு விடை பெறக்கூடியதாக ஒரு உதவிப் பதிவு.
6. உலகத் திரைப்படங்கள் குறித்த பதிவு - அவரவர் பார்த்து ரசித்த உலகத் திரைப்படங்கள் குறித்த பதிவு.
7. ஆங்கில உதவிப் பதிவு - ஆங்கிலம் குறித்த எந்த ஒரு எளிய சந்தேகத்தையும் கூச்சமின்றித் தமிழில் கேட்டுத் தெளிய ஒரு பதிவு.
உங்களுக்கு இன்னும் சில யோசனைகள் தோன்றினால் தெரியப்படுத்துங்கள்.
அன்புடன்,
ரவி.
கணினி உதவி ஆரம்பிக்கலாம்னு இருந்தேன். ஆங்கில உதவியும் நல்ல ஐடியா.
ReplyDeleteசீக்கிரமே துவங்கிரலாம்.
ரெடி ஜூட்....
கூட்டு பதிவில் 'பொறியல்' பற்றி எழுதினால் நன்று. ஐ மீன் சமையல் குறிப்புகள் பற்றி 'கூட்டு' பதிவுகள் தொடங்கப்பட வேண்டும். பதிவுலக பேச்சிலர்களுக்கு பயன்படும்.
ReplyDelete:)
//கணினி உதவிப் பதிவு//
ReplyDeleteரவி,
நம்ம வலைபதிவர் உதவிப் பக்கம் இருக்கிறது இதுக்கும் தான்...
கோவி. கண்ணன் - கூட்டு, பொறியல்உதவி நானும் நினைச்சது தான். எழுத மறந்துட்டேன் யாராச்சும் எனக்கும் ரொம்ப உதவியா இருக்கும் :)
ReplyDeleteசிறில் - satrumun வெற்றிக் கதையைத் திரும்ப இரண்டு முறைப் பார்க்கலாம்னு சொல்லுங்க ! சீக்கிரம் தொடங்க வாழ்த்துக்கள்.
பொன்ஸ் - வலைப்பதிவர் உதவிப் பக்கத்தோட focus இப்ப இருக்க மாதிரியே இருக்கிறது நல்லதுன்னு தோணுது. சிறிலோ அதற்கு முன் யாருமோ தொடங்க இருக்கும் கணினி உதவிக் குழுவுல வேணா பதிவர் உதவிக் குழு ஆட்கள் எல்லாம் ஐக்கியமாயிடலாம். கணினியில ஒரு plugஅ எங்க சொருகுறுதுங்கிறது முதற்கொண்டு எந்தக் கணினி எங்க வாங்கலாம், எது நல்ல brand, எங்க விலை குறைவுன்னு கணினி - அ முதல் ன் வரை அலச ஒரு தனிப்பதிவு தான் பொருத்தமா இருக்கும்.
//கூட்டு, பொறியல்உதவி//
ReplyDeletehttp://tamilmeal.blogspot.com/