பதிவு படிக்கலியோ... பதிவு
வலைச்சரம் எனும் புதிய முயற்சியை ஆரம்பித்து அழகாகச் செய்து வரும் சிந்தாநதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முதலில் அவர் எனக்கு வலைச்சரம்பற்றி சொல்லியபோது ஆர்வம் பற்றிக்கொண்டது. இப்ப யோசிச்சாத்தான் கொஞ்சம் இடிக்குது, அதுவும் பொன்ஸின் முந்தைய பதிவுகளப் பாத்ததும் சிகாகோ குளிருலயும் 'குப்'புன்னு வேர்த்திடுச்சு.
கொஞ்ச நாளாக பதிவுகள் படிப்பதை குறைத்துவிட்டேன். சில புதிய முயற்சிகளில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவதால் வந்த தற்காலிகத் தடை இது. இந்த வார வலைச்சரம் சரியா வரலன்னா கோவிச்சுக்காதீங்க. I will try my best.
முதல் பதிவ என் விருப்பம்போல பயன்படுத்தச் சொல்லிட்டார் பேராசிரியர் (நான் ஆசிரியர்னா சிந்தாநதி பேராசிரியர்தானே?) அதனால. கொஞ்சம் புகுந்து ஆடட்டுமா?
ஏதோ ஒரு தமிழ் பதிவு கன்ணில்பட, எழுதலாமேன்னு ஆர்வம் வந்துச்சு. சில பதிவுகளப் படிச்சா 'அட நாமும் எழுதலாமே'ன்னு ஆர்வம் வரும். சிலதுகளப் படிச்சா 'அட நாம என்னடா எழுதுறோம்னு' தோணும். அலுவல்களை விரைவாக முடிப்பது என் வழக்கம். (இதுனால தரம் கொறஞ்சா எனக்கென்ன? :) மீதமிருக்கும் நேரத்த எங்க ஊர் 'முட்டம்'பற்றி எழுத ஆரம்பித்தேன். அங்க ஆரம்பிச்சு சற்றுமுன் வரைக்கும் ஓயல (ஆகா.. டபுள் மீனிங்கா?)
வலைப்பதிவுகள் அருமையான ஊடகம். மாற்று ஊடகம். ஒரு படைப்ப பத்திரிகைக்கு அனுப்பிட்டு காத்திருப்பதுபோலல்லாமல், நம்ம படைப்புக்களையெல்லாம் (நல்லாயிருக்கிறதையும் நல்லாயில்லாதத்தையும்) ஒரு இடத்துலபோட்டு அத நாலுபேர் பாத்து படிச்சு வாழ்த்தி, இல்ல திட்டி (சில நேரம் காறித் துப்பி) உடனடி மறுமொழி கிடைக்குது பாருங்க. இந்த வசதி எதுலயும் கிடைக்காது.
இன்னொண்ணு, எதப்பத்தி வேணும்னா எழுதலாம். இதுதான் பதிவுகளின் பலமும், பலவீனமும்னு நினைக்கிறேன். யார் வேணும்னாலும், எதப்பத்தி வேணும்னாலும் எழுதலாம். சுதந்திரம் நெருப்புமாதிரி, விளக்கும் ஏத்தலாம் ஊரையும் எரிக்கலாம்.
தமிழ் வலைப்பதிவுகள் அசுரத்தனமா வளர்ந்திருக்குது எனலாம். நான் டிசம்பபர் 2005ல் வரும்போதே பலரும் கலக்கிட்டிருந்தாங்க. இப்ப இன்னும் பெரிதாகிகிட்டேயிருக்குது. இதுவே வலைப்பதிவுகளின் சக்தியைக் காமிக்குதில்லையா?
நிச்சயமாக நாம் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதி ஐயமே இல்லை. எத்தனைவகையான பதிவுகள்? பத்திரிகையுலகம் காணாத அளவுக்கு வித்தியாசம் நம்மால் தரமுடிகிறது. சொல்லப்போனால் ஒரு பத்திரிகையால் இதுபோல ஒரு ஒருங்கிணைப்பை செய்ய இயலாது. பூங்காவைப்போல 5 முதல் 10 வெவ்வேறு வகையிலான பத்திரிகை வடிவங்களைத் தர முடிகிற அளவுக்கு பதிவுகள் இருக்கின்றன என்பதில் ஐயமே இல்லை.
சில விஷயங்கள் நெருடலாகத்தான் இருக்கின்றன.
வலைப்பதிவுன்னாலே ஒழுங்குபடுத்தப் படாத ஊடகம் என்றுதான் நினைக்கிறோம், ஆனால் இன்றைக்கு உலகளவில் வலைப்பதிவுகள் பல உயரங்களை எட்டியிருக்கின்றன. பத்திரிகைகள், செய்தியாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள் என எல்லாவிதமான எழுத்துக்களும் பரவலாக, உடனுக்குடன் வெளியில் வர உலகளவில் பதிவுகள் ஊடகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தமிழ் பதிவுகளால் சில எல்லைகளைத் தாண்டிவிட முடியவில்லை என்பதை வருத்தத்துடனே பதிக்கவேண்டியுள்ளது.
உலகளவில் பதிவுகள் சாதாரண மக்களால் பாப்புலர் ஆக்கப்பட்டு இப்போது பெயர்போன பத்திரிகையாளர்களும், இன்னும் முக்கியமானவர்களும் உள்ளே வந்துள்ளனர். ஆனால் தமிழ் பதிவுலகுக்கு வந்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் (சிலர்) விட்டால் போதும்னு ஓடிட்டாங்க. வலைப்பதிவுகளில் எனென்னெ விஷயங்கள் பெரிதாய் விவாதிக்கப்படுகின்றனவோ அவைகளில் அதிகம் பிடிப்புள்ள எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்தான் இவர்கள். ஆனாலும் இவங்க ஓடிப்போக காரணம் என்ன? யோசிக்கவேண்டியுள்ளது.
நம் வளர்ச்சி எண்ணிக்கையளவிலேயே நின்றுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. ஊடகத்தைப் புரிந்தவர்கள் உள்ளே வரும்போதுதான் நம்மால் முக்கியமான அடுத்த கட்டங்களுக்கு விரைந்து செல்ல இயலும் என நினைக்கிறேன். அடுத்த கட்டம்னா? பொது ஊடகமாக பதிவுகளை உருவாக்குவதுதான் அடுத்தகட்டமாக இருக்கும். பதிவர்களும் இன்னும் சிலரும் மட்டுமே என சிறிய குழுவுக்காகவே என அல்லாமல் இணையத்தில் உலவும் எல்லாத் தமிழர்களும் படித்து பயன்பெறும்வகையில் பதிவுகள் பன்முகப் படவேண்டும், பயனுள்ளதாக ஆகவேண்டும். இதில் பன்முகம் நமக்கு நிறையவே கிடைத்திருக்கிறது.
பதிவுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் குழுப் பதிவுகள் பெரும் பங்குவகிக்கின்றன. குழுவாகச் சேர்ந்து செயல்படும்போது பலதும் சாத்தியமாகிறது. சற்றுமுன் குழு துவங்கி 20 நாட்களிலேயே 300க்கும் மேலான பதிவுகளை தந்துள்ளது. இது தனி ஆளாய் சாத்தியமில்லாதது. (சற்றுமுன் அதிகமாக தலைப்புச் செய்திகளைத் தருவதாலும் இது எளிதில் சாத்தியமாகிறது.)
குழு பதிவுகளின் வெற்றிக்கு முக்கியமாக நான் கருதுவது, ஒருங்கிணைப்பு அவசியம். தொடர் தகவல் பரிமாற்றம் நிகழவேண்டும். உறுப்பினரின் தனி பதிவை பாதிக்காதவகையில் இருக்கவேண்டும். குழுவில் இணைபவர்கள் குழுவின் நோக்கத்தில் ஈடுபாடுள்ளவர்களாயிருத்தல்வேண்டும். குழு கொஞ்சம் பெரிதாயிருத்தல் நல்லது.
என் மனதில் இருக்கும் புதிய குழுக்களுக்கான யோசனைகள், யார் வேண்டுமானாலும் துவங்கலாம். No copyrights reserved.
திரைப் பார்வை - சினிமா/சினிமா இசை விமர்சனத்திற்கான குழு. ஒரே படம் பல பார்வைகளில் விமர்சிக்கப்படலாம். இந்தக் குழுவின் பதிவை பார்த்துவிட்டு சினிமா பாக்கவா வேண்டாமா என முடிவு செய்ய முடியவேண்டும். விகடன்போல குழுவின் மொத்த உறுப்பினர்களும் சேர்ந்து மதிப்பிட முயலலாம்.
வரி விளம்பரம் - சற்றுமுன் Breaking news தளத்துக்கு முன்பு இந்த ஐடியாவைத்தான் மும்முரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். அதாவது மக்கள் பொருட்களை, சேவையை வாங்க விற்க ஏற்றதாய் வரி விளம்பரங்களை வழங்கும் பதிவு.
புத்தக விமர்சனம் - திரை விமர்சனம் போல.
தமிழ் இலக்கியம் - தமிழ் சங்கம் இப்போது குறள் கவிதைகளை வழங்குவதுபோல மற்ற இலக்கியங்களில் ஏதேனும் ஒன்றை விளக்குவது. இப்படி பலதும் போடலாம், அகநானூறு புறநானூறு etc. etc.
மத நல்லிணக்கம் - நம்மால ஒரே தளத்தில் தத்தம் மதங்களின் நல்ல பண்புகளை உயர்த்திப் பேசும் பதிவுகளை இட முடியும் எனக் காண்பிக்க. நமக்கு நாமே சேறடித்துக் கொள்ளும் பழக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டுப்போக. ஆன்மீகப் பதிவெழுதுபவர்கள் யோசிக்கலாம் (I am ready) ஒரே பக்கத்தில் பல்வேறு மதங்களின் ஆன்மீகப் பார்வைகள். எண்ணிப்பாக்கவே ஆனந்தமாயிருக்குது.
திருக்குறள் குழுமம் - தமிழ்சங்கம் ஒரு குறளுக்கு ஒரு கதை என எழுதுகிறது. இது முடிய ஆண்டுகள் ஆகலாம். ஆனால் சில பதிவர்கள் கூடி வெறும் குறள்களை அதிகாரத்துக்கு ஒரு பதிவு என எழுதி (குறைந்த பட்ச தெளிவுரையுடன்) குறிச் சொற்களுடன் சேர்த்து பதிக்கலாம். Easy browsing.
ஒன்றாய் செயல்பட்டாலேயல்லாமல் அடுத்த நிலைக்கு நாம் செல்ல இயலாது. வெறுமனே சண்டைபோட்டுக்கொள்ளவும், சாட்டிங்போல பேசிக்கொள்ளவும் மட்டுமே பதிவுகள் என்பதை மாற்றி (இதுவெல்லாமும் கொஞ்சம் தேவைதான்) அடுத்த நிலைக்குச் செல்ல முயலுவோம். இப்படிச் செய்ய நினைப்பவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் வேண்டாத எழுத்துக்களை விலக்கிவைக்க இயல்கிறது. சில நல்ல கருத்துக்கள் தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களால் அடித்துச் செல்லப்படுகின்றன. பூக்களைப் பறிக்க அரிவாளோடு அலைபவர்கள் பலர்.
உலகையே மாற்றும் வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கிறது, ஆனால் நம்மை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு நிச்சயம் உண்டு. ஒன்றுபடுவோம் செயலக்குவோம்.
என்னடா பதிவுகள அறிமுகப்படுத்தலியான்னு கேக்குறீங்களா.
அடுத்த பதிவுல ஆரம்பிக்கலாமா?
|
|
நன்றி அலெக்ஸ். அடிச்சு ஆடுங்க..நல்லா வரும்...
ReplyDeleteஉங்க ஆலோசனையில் ஒன்று திரைப் பார்வை. இது தான் எனது அடுத்த முயற்சியே. ஏற்கனவே துண்டு போட்டு வச்சிருக்கேன். இதை திரைப்பட ஒளிப்பட துண்டுகள், திரை விமர்சனம் போன்றவற்றுக்கான கூட்டுப் பதிவாக ஆக்கதான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
http://tamilscreen.blogspot.com/
நல்ல ஆரம்பம் சிறில்
ReplyDeleteஎனக்கும் உங்களைப்போல் எண்ணம் உண்டு..
//நிச்சயமாக நாம் ஒரு மாற்று ஊடகத்தை செவ்வனே உருவாக்கியிருக்கிறோம் என்பதி ஐயமே இல்லை. எத்தனைவகையான பதிவுகள்? பத்திரிகையுலகம் காணாத அளவுக்கு வித்தியாசம் நம்மால் தரமுடிகிறது. //
சத்தியமாக..
சென்ஷி
படிச்சிட்டு வரேன் சிரில்.....
ReplyDelete//"பதிவு படிக்கலியோ... பதிவு" //
ReplyDeleteஹா ஹா ஹா
கடைசியில காய்கறி வியாபாரம் போல ஆகிடுச்சு பதிவுகள்...:)
வித்தியாசமான யோசனைகள் சிறில்.. சற்றுமுன்னில் சேர எனக்கும் ஒரு வரவேற்பு வந்தது. (நீங்கள் தான் அனுப்பி இருப்பீர்கள் :) ) "இன்னுமொரு குழுப்பதிவா!" என்று நான் தயங்கி விட்டுவிட்டேன். அதன் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் உயரங்கள் எட்ட என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteமதநல்லிணக்கத்தைப் பற்றிய உங்கள் பதிவு யோசனை, வெகு அற்புதம் ! ஆனால், சாத்தியமா?
thamiz illkkiyam yosanai enakku romba pidichchirukku
ReplyDeleteதிருக்குறள் குழுமம் தவிர மிச்சத ஒத்துக்கிறேன். எங்கெங்கு காணினும் திருக்குறளடானு வானொலி, தொலைக்காட்சி, இணையம்னு மண்டை காயுது. ஏற்கனவே தேவைக்கு மேல திருக்குறள் உரை இணையத்தில் இருக்குது. திரும்பவும் இதை கதை எழுதி விளக்கிறதோட நவீன காலத் தேவைகளுக்கு தமிழ ஈடு கொடுக்க செய்யணும். உலகின் அறிவியல் நடப்புகளை நல்ல தமிழ்ல தர்ற மாதிரி ஒரு கூட்டுப் பதிவு வைச்சா, நான் வர்றேன்.
ReplyDeleteதிரைப்பார்வைக்கு நான் ரெடி :)
ReplyDeleteமுழுக்க முழுக்க விமர்சனங்கள். எல்லாவிதமான சினிமா பார்வைகள். ஹாலிவுட், கோலிவுட், டாலிவுட், மாலிவுட், அனைத்தும் இருக்கணும்.
பிறமொழிப் படங்களுக்கு என்று கரிசல் சன்னாசி வலைப்பதிவு வைத்திருந்தார்: cinema.weblogs.us: "கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்"
நன்றி சிந்தாநதி, நன்றி சென்ஷி.
ReplyDeleteபடிச்சுட்டு நிச்சயம் வாங்க ராதா.
/ஹா ஹா ஹா
ReplyDeleteகடைசியில காய்கறி வியாபாரம் போல ஆகிடுச்சு பதிவுகள்...:) //
கடைசில இல்ல தலைவா.. மொதல்லேந்தே..
:))
/மதநல்லிணக்கத்தைப் பற்றிய உங்கள் பதிவு யோசனை, வெகு அற்புதம் ! ஆனால், சாத்தியமா? //
ReplyDeleteநாமதான் சாத்தியப் படுத்தணும். சீக்கிரமே செய்யலாம். பாப்போம்.
பொன்ஸ்,
சற்றுமுன்ல உங்களுக்கு போட்ட துண்டு அப்படியே இருக்குது. டக்குன்னு ஒரு மெயில் அனுப்புங்க, சேந்துக்கலாம்.
:)
பகீ,
ReplyDeleteசெய்யுங்க. சில நண்பர்களை சேர்த்துகிட்டு.
ரவி,
ReplyDeleteபாஸ்டன் பாலாகிட்ட நான் சொல்லும்போது இதத்தான் சொன்னார். நான் தேடுனவரைக்கும் யுனிகோட்ல திருக்குறளும் தெளிவுரையும் இல்ல. பதிவுலகம் சீர்யசா ஏதாச்சும் செய்யணும், அப்ப எளிதான், சீரியசான ஒரு வேல இதுவாத்தான் இருக்கணும்.
முன்னால செய்யுள்னாலே ஓடிப்போன எனக்கு இப்ப குறள் படிக்க நிறைய ஆர்வம் வருது. பதிவுகளை படிப்பவர்களுக்கும் அந்த ஆர்வத்த தூண்டுறது நல்லதுன்னு நினைக்கிறேன்.
டெக்னிக்கல் பதி அருமையான யோசனை.
பிடிங்க ஆட்கள..
பாபா.. போட்டிரலாம்..
ReplyDelete:)