07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 31, 2014

வண்ணத்திரையில் என்னைக் கவர்ந்த டாப்டென் நகைச்சுவை நாயகர்கள்...



கைச்சுவை உணர்வு என்பது ஓர் வரம். அது இயல்பிலே வர வேண்டும் . முக்கி முக்கி வரவழைத்தால் அது மொக்கையாகிவிடும். நகைச்சுவைக்கும் மொக்கைக்கும் நூலளவுதான் வித்தியாசம். நான் கூட நகைச்சுவை என்று முயற்சி செய்த நிறைய பதிவுகள் மொக்கையாகி போனபோதுதான் விபரீத முயற்சி என்கிற விஷயம் மண்டைக்குள் உரைக்க ஆரம்பித்தது.

பொதுவாக சினிமாவில் நகைச்சுவை நடிகர்களை கோமாளிபோல் காட்டுகிறார்கள். ஆனால் ரியல் லைஃப் அதற்கு நேரெதிர். பத்து நண்பர்கள் அல்லது தோழிகள் அல்லது உறவினர்கள் குழுமியிருக்கும் ஓரிடத்தில் எவன் ஜாலியாக, கலகலப்பாக, நகைச்சுவை -யுணர்வுடன் பேசுகிறானோ அவன்தான் அங்கு ஹீரோ. அங்கே புரட்சி, போராட்டம், புண்ணாக்கு என்று பொங்குபவன் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறான்.

சினிமா அறிமுகமாகாத காலக்கட்டங்களில் தெருக்கூத்து நாடகங்கள் மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது.ஒருபுறம் கோவலன் -கண்ணகி,அரிச்சந்திர மயான காண்டம் போன்ற விழிப்புணர்வை விதைக்கும் நாடகங்கள் அரங்கேற்றப் பட்டாலும் மறுபுறம் கரகாட்டம்,குறவன்-குறத்தி போன்ற கிராமிய கலை வடிவங்களும் மக்களை மகிழ்வித்து வந்தது.

அன்றைய எல்லா பொழுதுபோக்கு கலைவடிவங்களிலும் பிரதானமாக ஓர் கதாப்பாத்திரம் இடம்பெறும். அது எல்லோரையும் ரசித்து சிரிக்க வைக்கும் ' பஃபூன் ' கதாப்பாத்திரம். இது பார்வையாளர்களைப் பரவசப் படுத்துவதற்காகவே வலிய திணிக்கப்பட்ட ஒரு உப்பு சப்பில்லாத இடைச்செருகலாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு இதுவே கதையோட்டத்துடன் இணைந்தே பயணிக்கும் அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.சமகாலத்திய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடகம் என்கிற கலைவடிவம் முற்றிலுமாக அழிந்துவிட,S.V.சேகர்,கிரேசிமோகன் நாடகங்கள் மட்டும் இன்னமும் அரங்கம் நிறைய ஓடுகிறது என்றால் நகைச்சுவை என்ற ஒற்றைப் புள்ளியை சுற்றியே அமைக்கும் அவர்களின் நாடகமாக்கத் தந்திரமே இதற்குக் காரணம்.

என் பால்ய பருவங்களில் சித்திரை மாதத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் வருடம் தவறாமல் நடக்கும்.அவர்கள் பேசும் வசனமும் பாடல்களும் புரியாமல் தூக்கத்தில் சொக்கி விழும் தருணத்தில்,திடீரென்று சம்மந்தமில்லாமல் பஃபூன் காட்சி தருவார்.உறக்கத்தில் சொக்கிய அத்தனைப்பேருக்கும் அது உற்சாக டானிக்காக இருக்கும்.தூக்கம் கலைந்த உடன் திரும்பவும் அரிச்சந்திரன் குச்சியோடு சுடுகாட்டுக்கு வந்து சோகப்பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். பிற்பாடு இது திரைப்படங்களாக பரிணாம வளர்ச்சியடைந்த போது நகைச்சுவை கதாப்பாத்திரங்களின் அவசியம் இன்னும் அதிகமாயிற்று. 


பத்மஸ்ரீ கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சினிமாவில், எந்த வேடத்தில் வேண்டுமானாலும் சுலபமாக நடித்து விடலாம்.ஆனால் நகைச்சுவை வேடம் மட்டும் சிரமமானது. அதனால்தான் சென்னையில் கலைவாணருக்கு மட்டும் சிலை அமைத்திருக்கிறார்கள் என்றார். (அப்போது சிவாஜி சிலை கிடையாது)

நாடகங்களில் சோகக் காட்சியைவிட காமெடிக் காட்சி நடிப்பதே கடினம்.காமெடி வசனங்கள் சொல்லும்போது பார்வையாளர்கள் யாரும் சிரிக்கவில்லை என்றால் மேடையில் எங்களின் உள் மனதில் ஏற்படும் வலி யாருக்கும் தெரியாது என காபி வித் அனு-வில் ஒய்.ஜி.மகேந்திரன் சொன்னதாக நினைவு. 


சமகால தமிழ் சினிமா கூட காமடி நடிகர்களின் முக்கியத்துவத்தை கமர்சியல் ரீதியாக உணர்ந்துள்ளது. முதலில் அவர்களின் கால்சீட்டை உறுதி செய்த பின்புதான் ஹீரோ ஹீரோயினையே புக் செய்கிறார்கள்.

சினிமா வேரூன்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே காமடி நடிகர்களின் பங்களிப்பு தமிழ் சினிமாவில் போற்றுதலுக்குரியதாகவே இருந்து வந்திருக்கிறது. கலைவாணர் தம்பதிகள், நாகேஷ்,பாலையா,தங்கவேலு, சுருளிராஜன்,V.K.ராமசாமி என அந்தகால கருப்பு வெள்ளையில் கலக்கிய 'லெஜன்ட்ஸ்' ஏராளம்.அவர்களை இங்கே பட்டியல் போட்டு தரம்பிரிக்க மனம் ஒப்பவில்லை...

வண்ணக் காவியங்களில் கலக்கிய காமெடி நடிகர்களை மட்டும் என் ரசனைக்கு ஒப்ப  'டாப் டென்' என வரிசைப் படுத்துகிறேன்... 



10.வெண்ணிற ஆடை மூர்த்தி. 




"பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என்ற ஒற்றையோசையில் குழந்தைளையும் சிரிக்கவைத்துவிடுவார் இந்த வழக்கறிஞர்.  நான்கு தலைமுறை நடிகர்களுடன் கலைத்தொடர்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கில்மா வில்லனாக அறியப்பட்டவர். அழியாத கோலங்கள், முள்ளும் மலரும் போன்ற சில படங்களில் மலையாள பிட்டுப்பட நடிகர்களுக்கே சவால் விட்டவர். பிறகு தனக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தாய்க்குலங்கள் மத்தியில் சரிந்திருந்த தன் செல்வாக்கை செங்குத்தாக தூக்கி நிறுத்தப் படாத பாடுபட்டார். ஆனாலும் தன் இரட்டை அர்த்த வசனங்களை மட்டும் இன்னும் விடாமல் , வேலிமேல வேட்டி விழுந்தாலும் வேட்டி மேல வேலி விழுந்தாலும் டர்ர்ர்ர்ர்ர்னு கிழியப்போவது தன் வேட்டிதான் என்பதை கடைசிவரை உணராமல் இருக்கிறார். இரட்டை அர்த்த வசனங்கள்தான் இவரது பலமும் பலவீனமும். 


9.ஒய்.ஜி .மகேந்திரா..


நடிகர் திலகத்துடன் சுமார் 35 படங்கள் நடித்துள்ளார். ஆரம்பகால ரஜினி படங்களில் நடித்தபோது அவரைவிட பிசியான,அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்திருக்கிறார். S.P. முத்துராமன், ரஜினி கமலை வைத்து இயக்கிய படங்களில் ஒய்.ஜி.மகேந்திரா கட்டாயம் இருந்தாக வேண்டுமென்பதை செண்டிமெண்டாகவே வைத்திருந்திருக்கிறார். பிறகு 80 களில் கவுண்டர், ஜனகராஜ் தலைதூக்கியபோது இவருக்கு கிழிஞ்சது லம்பாடி லுங்கி.  

8. S .S.சந்திரன்..

         
லாரல் & ஹார்டி போன்ற comedy duo நம் தமிழ் சினிமாவில் யோசித்தால் உடனே கவுண்டர்-செந்தில் இணைதான் ஞாபகத்துக்கு வரும். 80 களில் பட்டையக்கிளப்பிய இந்த ஜோடி கவுண்டரின் கதாநாயகக் கனவால் பிரிந்து போனது. பிற்பாடு கவுண்டர் விட்டுச்சென்ற அவ்வெற்றிடத்தை நிரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன்.
வரும் இரட்டை அர்த்த வசனங்களில் ஜொலித்தவர். இந்த இடத்தில் இரட்டை அர்த்தம் என்பது ஆபாசத்தில் அல்ல ,அரசியலில். 80 களில் வெளிவந்த பெரும்பானமையான ராமராஜன் படங்களில் இந்த ஜோடிதான் கலக்கியிருக்கும். தவிரவும் விஜயகாந்த், டி.ராஜேந்தர், ராம நாராயணன், பாண்டியராஜனின் ஆஸ்தான காமெடியன் இவர். மீண்டும் கவுண்டர் தலையெடுத்தபோது இவர் ஓரங்கட்டப்பட்டார்..  

7.சந்தானம்..

வடிவேல் விலகிப்போனதால் இவர் காட்டில் அடைமழை. ஆனாலும் தனக்கென்று ஓர் தனி ஸ்டைல். சமகால ரசிகர்களின் நாடிப்பிடித்து பேஸ்புக், ட்வீட்டரில் ஸ்டைல் காமெடிகளில் வெளுத்து வாங்குகிறார். ஒரு படத்தில் ஜொலித்தால் அடுத்த மூன்று படத்தில் சொதப்புகிறார். டபுள் மீனிங் வசனங்கள் வேலைக்காகாது என்பதை லேட்டாகப் புரிந்திருக்கிறார். " மச்சி காதல்ங்கிறது....." என்று ஹீரோவுக்கே அவ்வப்போது அட்வைஸ் பண்ணி வெறுப்பேற்றுவார். ஆனாலும் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வளர்ந்திருக்கிறார் என்றால் இவர் வெறும் அப்பாடக்கர் கிடையாது.  ஏதோ ஓன்று இருக்கிறது இவரிடம்....

பதிவு நீண்டு விட்டதால் இதன் தொடர்ச்சி அடுத்தப் பதிவில்....

----------------------(((((((((((((((((((()))))))))))))))---------------------- 

டுத்ததாக சில நகைச்சுவைப் பதிவுகள்...

காமெடி பதிவுகள் என்றால் பன்னிக்குட்டியை விட்டுவிட்டு சொல்லிவிடமுடியுமா...? இதுவரை நூறுதடவை இந்தப்பதிவைப் படித்திருக்கலாம். எனக்காக 101 வது தடவை படியுங்கள். சமூக விழிப்புணர்வுள்ள நகைச்சுவைப் பதிவு இது. எல்லாம் ஒரு வெளம்பரம்தான்...

Dr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள் என்ற வலைப்பூவில் அனைத்தும்  நகைச்சுவைப்  பதிவுகள் .இவர் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். அனைத்தும் அவரது துறை சம்மந்தமானப் பதிவுகள். வாய்விட்டு சிரிக்கும் பதிவுகள் நிறைய இருக்கிறது. ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வாருங்கள்  .



நானும் கொஞ்சம் டாக்டர்-நர்ஸ் சம்மந்தப்பட்ட நகைச்சுவைப் பதிவு ஓன்று போட்டேன்... எந்த ஊர் போனாலும் நம்மவர்களை எளிதில் கண்டுபிடிக்க சில வழிகள்...

Chilled Beers.. எல்லோருக்கும் தெரிந்தவர்தான்.. பதிவுகளில் அறிவுஜீவித்தனமும், நகைச்சுவையும் மிகுதியாக இருக்கும். தற்போது பதிவெழுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார் . எப்படி இருந்த அரவிந்தசாமி...

லக்கிலுக்கின் அசத்தல் பதிவு. சின்ன விசயம்தான் . ஆனால் செம சுவாரஸ்ய நடை.. நடுவுலே திடீர்னு ஜட்டியைக் காணோம்

ஜோக்காளி நானெல்லாம் பக்கம் பக்கமா நகைச்சுவைப் பதிவுகள் எழுதினாலும் பெரும்பாலும் மொக்கைதான் வாங்குவேன்.. இவர் என்னடா என்றால் இரண்டு வரியில் ஜோக் சொல்லி கலகலக்க வைக்கிறார். இவரது எல்லா ஜோக்குகளும் கருத்தாழமிக்க நகைச்சுவையுணர்வு கொண்டவை.

வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா..?கட்டவெளக்குமாறு ... இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாத்துட்டு வாங்க... ட்வீட்டர் சிகரங்கள் எல்லாம் இணைந்து ஒரு இணைய இதழை ஆரம்பித்திருக்கிறார்கள். சில மொக்கைகள் இருக்கலாம். ஆனால் மற்றவை எல்லாம் செம..செம..செம...  

மன்னிக்கவும்... நிறைய குறிப்பிடவேண்டியிருக்கிறது. இன்று சில அவசர ஆணிகள் இருந்ததால் பதிவு எழுத தாமதமாகிவிட்டது. இதன் தொடர்ச்சி நாளை வரும். உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி...


திரும்பப் படித்துப் பார்க்கக் கூட நேரமில்லை.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...

மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்...


மணிமாறன்.

மேலும் வாசிக்க...

Thursday, January 30, 2014

கபடி விளையாடலாம் வாங்க...!


சமீபத்தில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கபடி விளையாட்டின் வளர்ச்சிக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய செய்தி ஊடகத்தில் வெளியானபோது மிகுந்த உற்சாகமாக மாகவும் சந்தோசமாகவும்  இருந்தது.

அதுசரி....

"கபடி என்று ஒரு விளையாட்டு இருக்கு தெரியுமா..?"

"எது.. இந்த கில்லி படத்தில விஜய் ஒத்த ஆளா அஞ்சு பேரை தூக்கிகிட்டு வருவாரே அதுவா..? எதுத்தாப்ல உள்ளவன் விரல் இடுக்கில பிலேட வச்சி பாடி கிட்டு வர்றவன கையை கீறி விடுவானே அதானே...?

இன்னும் கொஞ்ச காலத்திற்கு அப்புறம் இப்படித்தான் பேசிப்பாங்க. ஏனெனில் கிராமப்புற மண்ணோடு ஜீவனாக கலந்திருந்த கபடி விளையாட்டு , தன் கடைசி மூச்சுக்காக இழுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், சினிமாவின் இப்படித்தான் காட்சிப்படுத்திக் கேவலப்படுத்துகிறார்கள்.

என் பள்ளிப்பருவங்களில் கோடை விடுமுறை விட்டால் போதும். எங்களுக்கு இருக்கிற ஒரே எண்டர்டைன்மெண்ட் கபடிதான். கதிரறுத்து கட்டாந்தரையாக இருக்கும் வயல்வெளிகளை கபடி மைதானமாக்கிவிடுவோம். ஊரில் உள்ள இளவட்டங்கள் எல்லாம் தனித்தனியாக அணிபிரித்து அவர்கள் ஒரு பக்கம் விளையாட, சிறுவர்கள் நாங்களெல்லாம் ஒரு அணிசேர்த்து  விளையாடுவோம்.

அந்தக் காலகட்டத்தில் எல்லா ஊரிலும் கபடி டோர்னமென்ட் நடக்கும். முதல் பரிசு 555.. இரண்டாம் பரிசு 333.. மூன்றாம் பரிசு 222.  இது மாதிரி போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் ஒட்டியிருக்கும். இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும் இந்தப்போட்டிகள் மறுநாள் காலை 9..10..என நீண்டுக்கொண்டே செல்லும்.

அப்போதெல்லாம் ஊரில் திருவிழா, தேரோட்டம், பொங்கல் பண்டிகை என்று எந்த விசேஷமாக இருந்தாலும் ஒரு கபடி போட்டி கட்டாயம் இருக்கும். எங்க ஊரு மிராசுதார் ஒருத்தர் ( வயசானவர்தான் ) இறந்துவிட்டார். அவர் கருமாதியை சிறப்பா கொண்டாட வேண்டும் என்று அன்று கபடிப் போட்டியை நடத்தினாங்க எங்க ஊர் இளவட்டங்க.. அந்த அளவுக்கு கிராமப்புறங்களில் கபடி விளையாட்டு மேல் ஈடுபாட்டோட இருப்பாங்க.

எப்போது இந்த கபடி விளையாட்டின் மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்தது  என்பதை சரியாகக் கணிக்க முடியவில்லை. 90 களின் ஆரம்பத்தில் கிராமப்புரங்களில் நடக்கும் விசேசங்களில் வீடியோ-டெக் எடுத்து விடிய விடிய நான்கு படங்கள் போட ஆரம்பித்தப் பிறகுதான் கபடி மீதிருந்த மோகம் குறைய ஆரம்பித்திருக்கும் என நினைக்கிறேன்.

தற்போதெல்லாம் ஊர்ப்பக்கம் சென்றால் முன்பு கபடி மைதானமாக இருந்த இடங்களெல்லாம் தற்போது கிரிக்கெட் மைதானமாக மாறிவிட்டது. பொடிப்பசங்க எல்லாம் கையில பேட்டோட சுத்துறாங்க. கபடிப் போட்டி தற்போது எங்கேயுமே நடப்பதில்லையாம். எங்க ஊர் பசங்க சொன்னாங்க.. கஷ்டமா இருக்கு.

கல்லூரியில் படித்த போது தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்கிடையேலான ' TIES ' எனப்படும் போட்டியில் கல்லூரி கபடி அணியை என் தலைமையில் பிரதிநிதித்து அரை இறுதி வரை சென்றிருக்கிறோம். அதன் பிறகு நமக்கும் அந்த' டச்' இல்லாமல் போய்விட்டது.

அது ஒரு கனாக்காலம்..!  போகட்டும்..!

கபடியைப் பற்றி ஒரு சில தகவல்கள் உங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்..


து தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு. இதன் வயது 4000 வருடங்களுக்கு மேல் என்று கணக்கிடப்படுகிறது. இன்னொரு முக்கியமான தகவல் அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டு கபடி. ஆனால் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று வருகிறது இந்தியா. ஒரு தடவை கூட இந்தியாவை, பங்களாதேஷ் வென்றதில்லை என்பது கூடுதல் தகவல்.

கபடி, தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப் படுகிறது. மொத்தம் 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா அசைக்க முடியாத சாம்பியனாக இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய சாதனை..! ( சும்மா.. கிரிக்கெட்..கிரிக்கெட்.. பீத்திக்காதீங்கப்பா... :-) )

கபடி விளையாட பேட், பந்து, நெட் எதுவும் தேவை இல்ல. நம்ம கட்டுடல் மேனி தான் இதற்கு மூலதனம். மற்ற விளையாட்டுகளில் கை, கால், தலை என்று உடல் உறுப்புகளுக்கு மட்டும் வேலை இருக்கும்.ஆனால் கபடியில் இவைகளோடு சேர்த்து மூச்சுப்பயிற்சியும் தேவை.

கபடி என்ற சொல் தமிழிலிருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருள். ஆனால் இது ஹிந்தி வார்த்தை எனவும் KABBADI என்றால் மூச்சை விடாமல்  நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)எனவும் கூறுவார்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப  விளையாடப் படுகிறது என்றாலும்  இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .

             கபடி        (kabbadi)             ---------------  இந்தியா ,பாகிஸ்தான்
             ஹடுடு  (hadudu)              ----------------- பங்களாதேஷ்
             டூ-டூ          (do-do)                ----------------- நேபாளம்
             குடு           (guddo)               -----------------  ஸ்ரீ லங்கா
            சடு-குடு   (chado-guddo)   -----------------   மலேசியா
            டெசிப்      (techib)                 ----------------- இந்தோனேசியா

கபடியின்  வகைகள் ;

இந்தியாவில் கபடி மூன்று முறைகளில் விளையாடப்படுகிறது.

     1 . சர்ஜீவ்னி

     2 . காமினி

     3 . அமர் (பஞ்சாப் ஸ்டைல்)


இதில் சர்ஜீவ்னி முறைதான் நம்ம தென்னிந்தியாவில் விளையாடப்படும் முறை. பஞ்சாப் பகுதியில் அமர் முறை விளையாடப்படுகிறது. இந்தியா தொடர்ந்து சாம்பியனாக இருப்பதும் இந்த அமர் முறை கபடியில்தான்.

இதைப்பற்றி ஒரு நீண்ட ஆய்வு செய்து வலைப்பூ ஆரம்பித்த புதிதில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்...

கபடி.... கபடி..... கண்டுபிடி..

ஒலிம்பிக் போட்டியில்  கபடியை சேர்க்கும்படி  நீண்ட காலமாக இந்தியாவிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி சேர்க்கப்பட்டால் நிச்சயமாக இந்தியாவிற்கு ஒரு தங்கம் நிச்சயம். யார் கண்டது... இப்படித்தான் ஹாக்கியில் முதலில் நம்மவர்கள் கலக்கினார்கள். பிறகு நம்மகிட்ட ஹாக்கி கத்துக்கிட்டவன் எல்லாம் இப்ப மெடல் வாங்குகிறான்..நமக்கு ஒரு ஐஸ்கிரீம் கப் கூட கிடைக்க மாட்டேங்கிறது. ஒருவேளை கபடியும் அப்படி ஆகலாம்.
----------------------((((((((((((((()))))))))))))-----------------

டுத்து பதிவர்கள் அறிமுகம்...

கவிஞர் மகுடேசுவரன்..  பிரபலமானக் கவிஞர்.நிறைய பேருக்கு தெரிந்த முகம்தான் . சமீபத்தில் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக வந்து பேசினார். பேஸ்புக்கில் 'வலி மிகுதல்' தொடர்பாக தொடர் எழுதிவந்தார். மிகவும் ரசித்துப் படித்தப் பதிவு அது. வலைப்பூவில் எழுதும்போது நாம் பெரும்பாலும் சந்திப்பிழைகளில்தான் கோட்டை விடுவோம். இவரது தொடர்களைப் படித்தப் பின்புதான் கொஞ்சம் சந்திப்பிழைகளைத் திருத்திக் கொண்டேன்.

வலிமிகுதல் தொடர்பாக உள்டப்பியில் நான் கேட்ட சில சந்தேகங்களை அவர் தீர்த்து வைத்திருக்கிறார். அவரது தளம் இதுதான் வலி மிகுதல் - இலக்கணத் தொடரின் மொத்தத் தொகுப்பு. கண்டிப்பாக வலைப்பூ எழுதுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு. 


சச்சினைப்பற்றி அவர் எழுதிய இன்னொரு பதிவு.  

----------------------((((((((((((((()))))))))))))-----------------

தளிர் சுரேஷ்  இவரும் தமிழ் இலக்கணம் தொடர்பாக ஓர் தொடர் எழுதிவருகிறார். தொடர்ந்து படித்து வருகிறேன்.. இவர் எப்படி தினம் ஒரு பதிவு எழுதிகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதுவும் காப்பி பேஸ்ட் இல்லாமல்..! 


----------------------((((((((((((((()))))))))))))-----------------

தோசைக்கு சீனி வாங்கி சாப்பிட்ட கதை தெரியுமா... நகைச்சுவை மிக நன்றாக வருகிறது இவருக்கு. 
 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

முழுக்க முழுக்க ஆன்மீக வலைப்பூ. மார்கழிப் பனியில் என்ற தொடர் எழுதி வருகிறார். எல்லா தகவல்களும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. 

----------------------((((((((((((((()))))))))))))-----------------

குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் அவசியம்தானா? தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் மகேஷ்..

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

என் பள்ளித்தோழன் பாலாஜி. யார்  ஃபர்ஸ்ட் ரேங்க் என்பதில் எங்களுக்குள் கடுமையானப் போட்டி நடக்கும். 8 வது வரை அவன் 1ST நான் 2ND. எட்டாவது அரையாண்டுத்தேர்வி
ல் நான் 1ST வந்தேன். அதற்குப் பிறகு அந்த இடத்தை நான் தக்க வச்சிகிட்டேன். பள்ளி முடிந்த பிறகு தொடர்பு விட்டுப் போய் விட்டது. வலைப்பூ மூலமாகத்தான் திரும்பவும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. "நடிகர்களின் நிஜ முகங்கள் " என்ற தலைப்பில் பரபரப்பாக தொடர் எழுதி வந்தான். யார் மிரட்டினார்களோ(!) தெரியவில்லை. எழுதுவதை நிறுத்திவிட்டான்.

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

ராஜ்ப்ரியன்.எல்லோரும் அறிந்தவர்தான்.   சினிமா நடிகர்-நடிகைளும் பொங்கல் வாழ்த்தும் தேவையா ?  என்று நச் கேள்வி கேட்கிறார் . கோயாபல்ஸ்சான கோபால்சாமி.வைகோவின் போர்வாள்களுக்கு சவால் விடுகிறார்.

 ----------------------((((((((((((((()))))))))))))-----------------


அருமைத்தம்பி ஸ்கூல் பையன் -ன் அனைத்துப் பதிவுகளையும் ரசித்துப் படிப்பேன். உணர்வுப்பூர்வமாக எழுதக்கூடியவர். நெஞ்சைப் பிசையும் நெகிழ்ச்சியானப் பதிவுகள் நிறைய எழுதுவார். தாத்தாவின் நினைவு நாளையொட்டி அவர் எழுதிய பதிவு, பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம் எல்லாமே அருமை. குறிப்பாக தன் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வை நகைச்சவை கலந்து சுவைபட எழுதுவார். 


 ----------------------((((((((((((((()))))))))))))-----------------

விஜயபாஸ்கர் விஜய் : திரு.சி.சு.செல்லப்பா, திரு.சுந்தர ராமசாமி தொடங்கி இன்றைய சாரு, ஜெமோ வரையான அனைத்து இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளைக் கரைத்துக் குடித்தவர். அது இவரது நிலைத்தகவல்களில் பிரதிபலிக்கும். பேஸ்புக்கில் இவர் எழுதும் ஒவ்வொரு விசயமும் அவ்வளவு சுவாரஸ்யம். பெரும்பாலும் இலக்கிய சம்மந்தமான பதிவுகளை எழுதுவார். அந்தரங்க விசயங்களையும் ஆபாசமில்லாமல் எழுதக்கூடியவர். கதை போல ஒன்று.... என்கிற தலைப்பில் குறுங்கதைகளை தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதிவந்தார். அதில் சதமும் அடித்தார். எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன். சில கதைகளைப் படித்து அசந்துபோய் அவரது உள்டப்பியில் பாராட்டியிருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு மரப்பசு என்ற வலைப்பூவை  ஆரம்பித்து அதிலும் எழுதிவருகிறார். நல்ல எழுத்தாளுமை உள்ளவர்.
                                     ----------------------((((((((((((((()))))))))))))-----------------
 
இன்னும் தொடரும்...

உங்கள் பின்னூட்ட  ஆதரவுக்கு மீண்டும் நன்றி...
 
 
அன்புடன்...
 
மணிமாறன்.                   

மேலும் வாசிக்க...

Wednesday, January 29, 2014

பதிவுலகில் என்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்சென்றவர்கள்..



திவுலகில் நான் மிகச்சிறியவன். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பதிவெழுத ஆரம்பித்தேன். அதாவது பதிவுலகில் தவழ ஆரம்பித்தேன். அதற்கு முன்பு வாசிப்பனுபவம் நிறைய இருந்தாலும், எழுதுவதற்கு வெறும் வாசகனாக இருந்தால் போதாது என்பதை உணர ஆரம்பித்த தருணம் அது.

பள்ளிப்பருவத்தில் நிறைய கதைகள் படிப்பேன். இலக்கியம் சார்த்த புதினங்கள் கூட படித்திருக்கிறேன். தெருவில், சாலையில் பொட்டலம் மடித்த பேப்பர் கிடந்தாலும் அதை அங்கேயே எடுத்து ஆர்வமாக படிக்கும் அளவுக்கு வாசிப்பு வெறி.

ஆனால் வீட்டில், நீ பெரிய டாக்டராவோணும், எஞ்சினியராவோணும் என்று கிராமச் சூழலில் வளர்ந்த என்னை படி.. படி.. என்று என் பெற்றோர் டார்ச்சர் கொடுத்ததால், வாசிப்புப் பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தேன். அடுத்த பத்து ஆண்டுகளில் வெறும் குமுதம், விகடனோடு என் வாசிப்புப் பரப்பு சுருங்கிப்போனது.

வலைப்பூ எழுத ஆரம்பித்த பொழுதான் தமிழ் இலக்கிய சூழலிருந்து நான் எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. திரும்பவும் எனக்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த கூகுள் ஆண்டவருக்கு நன்றி..

எந்த எழுத்தாளர்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. சுஜாதாவின் தீவிர வாசகன். சாரு, ஜெ.மோ .எஸ்.ரா நாவல்களையும் படிப்பேன். ஜெ.மோ வின் எழுத்து இலக்கியத்தின் உச்சம். எஸ்.ரா வாழ்வியல் நடைமுறைகளைப் பற்றி அழகாக எழுதக் கூடியவர். சாரு எதார்த்தத்தை எழுதுவார். அவர் தீர்க்கத்தரிசி .

இலக்கியவாதிகளின் சண்டையை தூரத்திலிருந்து பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ரா வை அவன் இவன் என்று திட்டித்தீர்த்த சாரு, சமீபத்திய புத்தகத் திருவிழாவில் சிரித்துப் பேசிக்கொண்டிருக் -கிறார். அதனால், அவர்களின் எழுத்தை மட்டும் ரசிப்போம்.

போகட்டும்...

ன்னதான் வாசிப்பனுபவம் இருந்தாலும் எழுத்து என்று வரும்போது ஆரம்பத்தில் தடுமாறத்தான் செய்தது. ஐந்து ஆறு வார்த்தைகளுக்கு மேல் ஒரு வாக்கியத்தைக் கோர்க்கக் கஷ்டப்படுவேன். என் ஆரம்பகாலப் பதிவு அப்படித்தான் இருக்கும். நிறைய பதிவுகளை நீக்கிவிட்டேன்.

இப்படி மனம்போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருந்த நான், ஓரளவு எழுத ஆரம்பித்தது லக்கிலுக் யுவா வின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தப் பின்புதான். என்னவொரு மொழிநடை அவருக்கு..! நீண்ட நெடிய ஊடக அனுபவங்கள் இருந்தாலும் வசப்படுத்தும் எழுத்துநடை அமைவது ஓர் வரமல்லவா..? ஒரு சாம்பிள். ரீங்காரம் ஒரு விசயமும் இல்லாமல் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதமுடியுமா என்று நான் ஆச்சர்யப்பட்ட பதிவு.

மாசி படத்தின் சினிமா விமர்சனம் எழுதியிருப்பார். அதில் கடைசியாக இப்படிக் குறிப்பிட்டிருந்தார். // விளங்காத பயல்களை பெற்ற அப்பாக்கள் சொல்வார்களே “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்”. அப்படிக்கூட போகமுடியாத படமிது :-( //  . ஒரு படம் மொக்கை என்றால் இப்படியெல்லாம் விமர்சனம் எழுதமுடியுமா என்று ஆச்சர்யப்பட்ட பதிவு.  நான் விமர்சனம் எழுதுவதற்கு உந்துதல் யுவா தான். பதிவுலகில் ஒரு ஆசானாக அவரை நினைக்கிறேன்.

 ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

அடுத்தது செங்கொவி. இவர் எனது இன்னொரு ஆசான்.. இவரது " நானா யோசிச்சேன்.." நான் சிலாகித்து படிக்கும் பதிவுகளில் ஒன்று. மிக எளிமையான வார்த்தைகளைப் போட்டு கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கில்மா கலந்து எழுதுவார். இதைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம். தற்கொலைக் குறுங்கதைகளே சக்கைப்போடு போடும்போது 'நானா யோசிச்சேன்' நிச்சயமாக பட்டையக் கிளப்பும். நான் கூட இதே மாதிரி சும்மா அடிச்சு விடுவோம்   என்று எழுத முயற்சித்தேன். ஆனால் இன்னும் நான் வளரனும் போல.

தமிழ்ஸ்ஸ்.காமில்..  தமிழில் ஒரு உலக சினிமா! –இதுவும் புத்தகமாக வெளிவரவேண்டிய படைப்பு.

ஒரு காலத்தில் தமிழ்மணத்தில் சென்னியாருக்கு கடும் போட்டி கொடுத்தவர். சினிமா, இலக்கியம், அரசியல் எல்லாம் விரல்நுனி. சமீபத்தில் இவரது மன்மத லீலைகள் மின்புத்தகமாக வெளியாகி தரவிறக்கத்தில் சாதனைப் படைத்தது. சென்ற வாரம் ஓர் நாள் நள்ளிரவில் படிக்க ஆரம்பித்தேன். ஏன்டா படிக்க ஆரம்பித்தோம் என்றாகிவிட்டது. மொத்தமாக மூன்று மணிநேரம் விழுங்கி விட்டது. அவ்வளவு சுவாரஸ்யம். படித்து முடித்துவிட்டுத்தான் படுத்தேன். இவரது பதிவுகளை தனியாகக் குறிப்பிட்டு எதுவும் சொல்லமுடியாது. அத்தனையும் படித்து ரசிக்க வேண்டிய பதிவுகளே..இருந்தாலும் ஒரு சில பதிவுகளைக் குறிப்பிடுகிறேன்.

முந்து (கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்)

 தலை தீபாவளி கொண்டாடுவது எப்படி?

சின்னத்தம்பி(18+) விமர்சனம் எழுதியிருப்பார். அதைத் தற்போது காணோம்.

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

நகைச்சுவைப் பதிவுகள் எழுத வேண்டுமென்றால் முதலில் நாம் ஜாலியான மூடுக்கு வரவேண்டும்.  நிறைய நேரங்களில் ஜாலியானப் பதிவுகள் எழுதும்போது மூட்அவுட் ஆகிவிட்டேன் என்றால் உடனே மாத்தியோசி மணி அவர்களின் வலைப்பூவிற்கு செல்வேன். எப்படித்தான் இவ்வளவு நகைச்சுவையாக எழுதுகிறார் என்று தெரியவில்லை. நான் பொறாமைப்படும் பதிவர். எல்லாமே நகைச்சுவைப் பதிவுகள் தான். சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

மன்னிக்கவும் அவர் வலைப்பூவில் ஏதோ பிரச்சனைபோல... திறக்க முடியவில்லை.

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

பிலாசபி பிரபாகரன். பதிவுலகில் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பதிவர். நிறைய பதிவுகள் ரசித்திருக்கிறேன். அதில் நெகிழவைத்த பதிவு இது.
  
மீண்டும் லியோ...!

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

திடங்கொண்டு போராடு சீனு மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர். ஆரம்பக் கட்டத்தில் வெறும் சிறுகதைகள் மட்டுமே எழுதுவார். அனைத்தும் வார இதழ்களில் பிரசுரமாகும் அளவுக்கு நேர்த்தியானது. தற்போது ஏனோ எழுதுவதில்லை. அதில் சில ...

திருவிழாக்களும் தீபிகாக்களும்...

ஸ்ரீராமனும் சீனுவும் நித்தியானந்தாவும் ... 


  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

தமிழ்வாசி பிரகாஷ் எழுதிய எதார்த்தமான பதிவு..பைக் ஸ்டாண்டு ஏன் இப்படி இருக்கு?. குமுதம் ரிப்போர்ட்டரில்  பிரசுரமானதாக நினைவு. 

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

சகோ. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி மலேசியாவிலிருந்து எழுதும் பதிவர் . நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இவரது தளம் "கடல் நுரைகளும் என் கவிதையும் ...". மலேசிய தமிழ் அச்சு ஊடகங்களில் அவ்வப்போது எழுதுவார். சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாக, அழகான மொழி நடையில் சொல்வது இவரது பலம். மற்றவர்கள் தொடத்தயங்கும் விசயத்தைத் துணிச்சலாக எழுதக்கூடியவர். நல்ல எழுத்துநடை. இலக்கிய நெடி தூக்கலாக இருக்கும்.ஆனால் ஏனோ எந்தத் திரட்டியிலேயும் இணைப்பதில்லை. அவரது சில பதிவுகள்..

மாதவிடாய்....

 எனக்கு ஒரு கண் என்றால்....!!!?

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

 மாணவன் சிம்பு .. இவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். டெர்ரர் கும்மி குழுவைச்சேர்ந்தவர். ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருந்தவர். சிங்கையில் உள்ள வானொலியில் (ஒலி 96.8) 'வானம் வசப்படும்' என்ற நிகழ்ச்சி முன்பு ஒலிப்பரப்பாகும். ஒவ்வொரு நாளும் அன்று பிறந்த உலக சாதனையாளர்களைப் பற்றி ஐந்து நிமிடத்திற்கு பேசுவார்கள். அதைச் சொல்பவரின் வாய்ஸ் மாடுலேஷன், பின்னணி இசை, சுவாரஸ்யமான விசயங்கள் எல்லாம் சேர்ந்து கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். அதைத்தொகுத்து மேலும் சில தகவல்களைச் சேர்த்து தன் எழுத்து நடையில் அற்புதமாக எழுதிவருகிறார் சிம்பு. மின்புத்தகமாகவும் வந்திருக்கிறது. தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

டி.என்.முரளிதரன் ஆரம்பத்தில் கவிதை எழுதுவதில்தான் இவர் கில்லாடி என நினைத்தேன்.. ஆனால் அறிவியல் சம்மந்தமான விசயங்களையும் தக்க உதாரணங்களோடு நிரூபிப்பதில் பலே கில்லாடி என்பதை நிறைய பதிவுகள் எழுதி நிரூபித்திருக்கிறார்.

அதில் முக்கியமானது- இன்று (செப் 22) ஒரு அதிசய நாள்  

கடந்த வருடம் பிளாக்கரில் blogspot.com / blogspot.in பிரச்சனை வந்தபோது என் வலைப்பூ .com லிருந்து .sg யாக மாறிவிட்டது. அதனால் தமிழ்மணத் திரட்டியில் இணைக்க முடியவில்லை.அப்போது அதற்கான தீர்வை பதிவாக இவர் வெளியிட்டிருந்தார். சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு இந்தப் பிரச்சனை வந்த போது இந்தப் பதிவைத்தான் அவருக்கு அனுப்பி வைத்தேன்.முன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்?   

 ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

பேஸ்புக்கில் அவளதிகாரம் என்ற தலைப்பில் கவிதையாக எழுதி கலக்குவார் வசந்த் கந்தசாமி. சிங்கப்பூர் வாசி. தனியாக வலைத்தளமும் தொடங்கியிருக்கிறார். எனக்கு கவிதை என்றாலே அலர்ஜி. ஆனால், ஏனோ இந்தக் கவிதை என்னை அவ்வளவு பாடுபடுத்திவிட்டது. ஒவ்வொரு வரியையும் அனுபவித்து ரசித்து செதுக்கியிருப்பார்.

முதல் ஸ்பரிசம் அது!

  ---------------------(((((((((((((())))))))))))))))---------------------

 

இன்னும் தொடரும்...

உங்கள் பின்னூட்ட  ஆதரவுக்கு மீண்டும் நன்றி...
 
அன்புடன்...

 மணிமாறன்.
மேலும் வாசிக்க...

Tuesday, January 28, 2014

இன்னும் இந்த அக்கப்போரு முடியலையா...?



ன் பதிவுகளின் அறிமுகம் இன்னும் முடியலன்னு சொல்லவந்தேன்...

4.நான் எழுதிய முதல் சிறுகதை..வூடு கட்டி அடி.....சிறுகதைக்கு உண்டான எந்த இலக்கணத்தையும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் எழுதி அதற்கு சிறுகதை என்ற லேபில் கொடுத்தேன். சிலர் படித்துப் பார்த்துவிட்டு இது சிறுகதை போல இருக்கிறது என்று பாராட்டினார்கள். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. இந்தப் பதிவில்தான் திடங்கொண்டு போராடு சீனுவும், சதீஷ் செல்லத்துரையும் நட்பானார்கள். ஆக்சுவலா நான் , சீனு , சதீஸ் செல்லத்துரை எல்லாம் பதிவுலகில் ஒரே செட் ( பெரிய ஷேவிங் செட்டு..!)   

அடுத்து எல்லாமே ரொம்ப ஜாலியான பதிவுகள்... இதுதான் என் இயல்பும் கூட...

5.நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு நினைவு இழந்துவிடுவார். பிறகு என்னாச்சி..? என்கிற விசயம்தான் உங்களுக்கு தெரியுமே. ஒருவேளை அப்படி நம்ம கேப்டன், கலைஞர், மன்மோகன் சிங் , சரத்குமார் இவர்களுக்கு அடிபட்டா என்ன ஆகும் என்பதை கற்பனையாக எழுதியதுதான்.. என்னாச்சி...!?!?!?!?!?.

6.ஸ்ரீசாந்த், கிரிக்கெட் பெட்டிங்கில் சிக்கி கைதாகி, இந்தியாவே பரபரப்பா பேசிக்கொண்டிருந்த சமயம். போட்டோஷாப் பயன்படுத்தி முதன்முதலில் கலாட்டூன் பதிவு ஒன்னு போட்டேன்.. பார்த்துவிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க..  என்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்த்...?

7.விஜயகாந்த் கட்சியின் ஓவ்வொரு எம்.எல்.ஏ-வும் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தத் தருணம். கேப்டனோ, தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். அப்போ சின்னக் கவுண்டர் ஆலமர பஞ்சாயத்து பாணியில் ஒரு பதிவு இட்டேன்... தாவத் தயாராகும் எம்எல்ஏ வைத் தடுப்பது எப்படி...?

8.மன்மோகன் சிங் பேச்சை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சமயம். ஆனா நம்ம ஆளு எதுவுமே பேசியிருக்க மாட்டாரு என்கிற விஷயம் நமக்கு மட்டுந்தானே தெரியும்.. அதைக் காலாய்த்து அப்போது ஒரு பதிவு போட்டேன்.  . மன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள் வியப்பு.

9. உங்களைப் பிரபலப் பதிவராகக் காட்டிக்கொவது எப்படி... கொஞ்சம் வில்லங்கமான பதிவு.. வேறு எதுவும் சொல்றதிக்கில்ல...

10."தோற்றோர் இயல்" எனும் தமிழ் சொல்லே "Tutorial" என்னும் ஆங்கில சொல்லாக மாறி இருக்கிறது.இப்படியொரு அறிய கண்டுப்பிடிப்பை அண்ணன் சீமான் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அதைக் கலாய்த்து எழுதிய பதிவு. சீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்சும்..

11.காப்பி பேஸ்டுக்கு எதிராக நான் போட்ட "கலாட்டூன்" பதிவு...வடிவேலின் புகழ்பெற்ற ஒரு காமெடியை வைத்து இப்பதிவை இட்டேன்.  நிறைய பேர் ரசித்த பதிவு இது....  பிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....!

அடுத்து மேல்மாடி சமாச்சாரம்.

இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அடுத்ததாக எல்லோராலும் வியப்பாகப் பார்க்கப் படுவது CAD-CAM சம்மந்தப்பட்ட CNC துறை. இது இயந்திரவியல் தொழில் நுட்பத்தின் உச்சம். நீங்கள் ஓட்டும் மிதிவண்டியிலிருந்து ஆகாய விமானம் வரை உள்ள அனைத்து இயந்திர அமைப்பின் பாகங்களும் தற்போது CNC MACHINE-ஆல் தான் உருவாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ROBOT தொழில்நுட்பம்.

அதை இயக்கப் பயன்படும் புரோக்ராம் செய்யும் சாப்ட்வேர் தான் MASTERCAM. 15வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரே ஒரு இடத்தில்தான் சொல்லிக் கொடுத்தார்கள். அது முடித்தாலே, சிங்கை,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளிலும் அப்போது சுலபமாக வேலை கிடைக்கும்.  அப்போது நான் சென்னையில் படித்துவிட்டு அங்கேயே வகுப்பெடுத்து பிறகு சிங்கையிலும் வகுப்பெடுத்தென். திருமணத்திற்குப் பிறகு அப்பணியைத் தொடர முடியவில்லை. அதனால்தான் வலைப்பூவில் தொடராக எழுதினேன். நான்கு பதிவுகளோடு நின்றுவிட்டது.

12. CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?

தற்போது தனியாக ஒரு வலைத்தளம் உருவாக்கி MASTERCAM, SOLIDWORKS, SOLIDCAM மூன்றையும் திரும்பவும் எழுதலாம் என்றிருக்கிறேன்.. வலைச்சர பணி முடிந்தபிறகு அவ்வேளை தொடங்கும்.. பின்ன..சும்மா எவ்வளவு நாள்தான் மொக்கைப் போடுறது..?

இத்தோடு என் பதிவுகளின் அறிமுகம் முடிந்தது... நாளை முதல் எனக்குப் பிடித்தப் பதிவர்கள் , நான் ஆசானாக நினைப்பவர்கள்,என்னை உருக வைத்தப் பதிவுகள் எல்லாவற்றையும் தொகுத்து வழங்குகிறேன்.. நன்றி..


எக்ஸ்கியுஸ்மீ எங்கே கிளம்பிட்டீங்க..  பின்னூட்டமும் ஓட்டும் போடுறீங்களா.. இல்ல நைட் கனவுல ஜில்லா படத்தை மூணு மணிநேரம் ஓட்டிக் காண்பிக்கவா...?

உங்கள் பேராதரவுக்கு நன்றி..
மேலும் வாசிக்க...

பேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்.....



பெண்கள் சிறப்புப் பதிவு ஒன்று எழுதவேண்டும் என்பதற்காக வலைப்பூவில் தொடர்ந்து எழுதி அசத்திவரும் பெண்களைப் பற்றிய பதிவு எழுதலாம் என்றிருந்தேன். ஆனால், ஏற்கனவே சிலர் வலைச்சரத்தில் அவ்வாறு எழுதியிருப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக பேஸ்புக் தமிழில் அசத்தும் பெண்களைப் பற்றி எழுதப்போகிறேன்.

முதலில் தலைப்பு "ஆண்களுக்கு நிகராக.." என்று ஆரம்பிப்பதாக இருந்தது. அது என்ன ஆண்களுக்கு நிகராக..? பெண்களுக்கு நிகராக ஆண்கள் என்று சொல்லும் அளவுக்கு நம் பெண்கள் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கும் சூழலில், அப்படிப்பட்ட தலைப்பு கொஞ்சம் அபத்தமாக இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டேன்.

பொதுவாக பெண்கள், வலைப்பூவில் எழுதுவதைவிட பேஸ்புக்கில் எழுதுவது கொஞ்சம் அபாயகரமானது. அரசியல் ரீதியான பதிவுகளுக்கு எதிர்மறையான விமர்சன அம்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிமனித தாக்குதல் நிகழலாம். வக்கிர மனம்படைத்த சிலரின் ஆபாசத் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் தாண்டி, விமர்சனங்களை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு தொடர்ந்து பேஸ்புக்கில் எழுதிவரும் பிரபல பதிவர்களைப் பற்றிய தொகுப்பு இது.

Vijaya Lakshmi..


பேஸ்புக்கில் நான் நுழைந்தபோது ஆச்சர்யப்பட்ட முதல் பெண்மணி. தீவிர கலைஞர் அபிமானி. அரசியல், சினிமா, கிரிக்கெட் , இலக்கியம் என்று எதைத்தொட்டாலும் மிக சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். புனிதமான செவிலியர் பணி நிமித்தமாக இந்தியா முழுவதும் சுற்றுபவர். அவரது பணி சம்மந்தமான சில பதிவுகள் நெகிழ்ச்சியானவை. கேப்டனை காலாய்த்து இவர் எழுதிய சில பதிவுகள் இன்றளவும் நினைத்தால் சிரிப்பை வரவழைக்கக் கூடியது. மிகுந்த நகைச்சுவையுணர்வு மிக்கவர். கலைஞர் ஆதரவு பதிவுகள் என்றாலும் வில்லங்கமான பின்னூட்டங்கள் இவர் சுவரில் இருக்காதது ஆச்சர்யம். ஒரு காலத்தில் டிமிட்ரிக்கு இணையான 'லைக்' வாங்கியவர். தற்போது நிலைத்தகவல்களை குறைத்துக் கொண்டுள்ளார்.

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Chelli Sreenivasan

சென்னைவாசி.பெங்களூருவில் வசிக்கிறார். பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது அசாத்திய பலம் நகைச்சுவை. தேவையில்லாமல் அரசியல் அறச்சீற்றமெல்லாம் அடையமாட்டார். குடும்பங்களில் நிகழும் சின்னச் சின்ன நிகழ்வை நகைச்சுவை கலந்து எழுதுவார். மற்றவர்கள் பதிவில் இடும் கமெண்டில் கூட இவரது நகைச்சுவை மிளிரும். சமீபத்தில் MASALA FM-ல் RJ வாக கலக்குகிறார்.

ஒரு சாம்பிள்:

"என்னடி சமைக்கும் போது அவ்ளோ வாசனை வந்துச்சு ..சாப்பிடும் போது ஒண்ணுமேயில்லை..?!!"

"கீழ் வீட்டு ஜன்னல் வழியா வாசனைதான் வரும்...சாப்பாடும் வருமா என்ன? சும்மா மூக்கப் பொத்திகிட்டு சாப்பிடுங்க"

"........."

ஃபாத்திமா பாபு, எஸ்.வி. சேகர், ராம்ஜி இசை மழலை, திருமதி கிரிஜா ராகவன் போன்ற மீடியா செலிப்ரிட்டிகளின் நட்பின் மூலமாக  தற்போது நாடகத்துறையில் நுழைந்துள்ளார். அடுத்து எஸ்.வி சேகருக்கு ஒரு நாடகம் எழுதுகிறாராம். இவை எல்லாமே பேஸ்புக் மூலமாக சாதித்தவை என்பது குறிப்பிடத்தக்கது .

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------

திவ்ய தர்ஷினி

லண்டன்வாசி. தீவிர மோடி ஆதரவாளர். கலைஞரை முடிந்தவரையில் கழுவி ஊத்துவார். Facebook -ல் Software Developers வேலை. இதை வைத்தே நீண்ட காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் மற்ற எந்த பேஸ்புக் பிரபலமும் இவருக்கு லைக் அல்லது கமெண்ட் இடுவதில்லை. என்னிடம் வம்பு பண்ணும் ஆறு பேரின்  பேஸ்புக் அக்கவுண்டை தூக்கப் போறேன் என்பார். சொன்ன மாதிரியே அடுத்த சிலநாட்களில் ஆறுபேரின் அக்கவுண்ட் தகவலை வெளியிடுவார். அதை கிளிக்கினால் ஆறு அக்கவுண்டும் டீஆக்டிவேட் ஆகியிருக்கும். ஆனால் அப்படி ஆறுபேர் பேஸ்புக்கிலேயே இருந்திருக்க மாட்டார்கள். நாமே ஆறு அக்கவுண்ட் கிரியேட் பண்ணி அதை டீஆக்டிவேட் பண்ண முடியாதா என்ன...?

ஆனால் அதைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால் இவர் இடும் அத்தனை நிலைத்தகவலும் நச். பெரியாரை இழிவு படுத்தும் ஒருசில நிலைத்தகவலைத் தவிர்த்து மற்றவை எல்லாம் கருத்துச் செறிவு மிக்கப்பதிவு. குறிப்பாக இலங்கைக்கு எதிரான அனைத்து நிலைத்தகவல்களும்.

"பொதுவாக கடலில் மீன் பிடித்தால் மீன்கள் தானே குறையும்.. நம் நாட்டில்தான் மீனவர்கள் குறைகிறார்கள்.."  இது போன்ற நச் ஸ்டேடஸ் அவ்வப்போது இவரிடமிருந்து வரும்.

பேஸ்புக்கில் அதிகம் பேரை பிளாக் பண்ணியது இவராகத்தான் இருக்கும்.

---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------

 Sumi Sumaa


டெல்லிவாசி. பேஸ்புக்கின் பெண் புரட்சியாளர். தீவிர திமுக அபிமானி. அத்தனையும் அதிரடியான அரசியல் ஸ்டேடஸ். கலைஞர் ஏதாவது வில்லங்க அறிக்கை விடுத்து அதன் மூலம் பேஸ்புக்கில் கழுவி ஊற்றப்படும்போது, உடன்பிறப்புகள் சார்பாக முட்டுக்கொடுப்பார். மற்றவர்கள் சுவரிலும் போய் தைரியமாக சண்டையிடுவார். தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் இரு சமூகத்தினருக்கு எதிராக அவ்வப்போது பொங்குவார். அச்சமூக சாதிவெறியர்களுடன் சரிசமமாக வாக்குவாதம் செய்வார். சில நேரங்களில் இவரைக் குறிவைத்து சிலர் ஆபாச வார்த்தைகளில் தாக்கினாலும் தூசி போல தட்டிவிட்டு செல்வார்.

அது என்னவோ தெரியவில்லை. கலைஞருக்கு ஆதரவாகக் கூட இணையத்தில் பெண் பதிவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஜெயாவைப் பாராட்டி எந்தப் பெண் பதிவரும் எழுதிப் பார்த்ததில்லை.

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Aatika Ashreen

பேஸ்புக்கின் ஷேரிங் தேவதை. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பாலோயர்ஸ். தமிழ்ப் பதிவர்களில் இதுதான் அதிக பட்சம் என்று நினைக்கிறேன். தொடந்து ஒரே ஃப்ரொபைல் பிக்சர். எல்லாமே ஷேரிங்.. எப்போதாவது சொந்தமாக ஒரு ஸ்டேடஸ் . இவர் உண்மையிலேயே தேவதையா அல்லது பேக் ஐடியா என்பது பலபேருக்கு சந்தேகம்.  சாதாரண 'குட் மார்னிங்' ஸ்டேடஸ்-க்கே 500 லைக்குக்கு மேல் அசால்டாக விழும்.( நம்ம பயபுள்ளக எல்லாம் தீயா வேலை செய்யிரானுவ போல..).சில நேரங்களில் திமுகவுக்கு ஆதரவான நிலைத்தகவலும் போடுவார்.

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Prathiba Prathi
எங்கள் மண்ணின் மைந்தரும், நக்கீரன் இதழின் இணையாசிரியருமான கோவி.லெனின் அவர்களின் மனைவி. இவரும் கலைஞர் அபிமானிதான். பேஸ்புக்கின் திமுக போர்வாள். கலைஞர் பற்றி தவறாக எங்கு ஸ்டேடஸ் போட்டிருந்தாலும் அங்கு சென்று வாக்குவாதம் செய்வார். கூடவே சில உடன்பிறப்புகளும் சேர்ந்து கொள்வார்கள். முன்பு தீவிரமாக பேஸ்புக்கில் இயங்கியவர், தற்போது உடல்நிலை சுகமில்லாத காரணத்தால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார். கட்சி பாராமல் நிறைய பேர் இவரிடம் நட்புடன் பழகுவது அதிசயமான ஒன்று. கிஷோர் கே சாமி கமெண்ட் போடும் ஒரே திமுக ஆதரவாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

 ---------------------&&&&&&&&&&&&&&&&&&&&&&&-------------------
Priya Thambi


நாகர்கோயில் வாசி. அற்புதமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். இவரது மகள் மின்னுவைப்பற்றி பேஸ்புக்கில் இவர் எழுதிய அத்தனை ஸ்டேடஸ்களும் உணர்வுப் பூர்வமானவை. நெஞ்சை நெருடுபவை.பலரால் பாராட்டப்பட்டவை. அம்மாவுக்கும் மகளுக்குமான உறவு ஒரு அழகான கவிதை. அதை நுட்பமாக , உணர்வுப்பூர்வமாக அனுகியிருப்பார். அதைத்தொகுத்து சமீபத்தில் நடந்த புத்தகத்திருவிழாவில் 'மின்னுவும் அம்மாவும்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். நான் படிக்கக் காத்திருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இணையத்தில் கிடைத்தால் படிக்கத் தவறாதீர்கள்.

இன்னும் இந்தப்பட்டியல் Vini Sharpana, Kavin Malar கவின் மலர் , Fathima Babu, சுபா வள்ளிKirthika Tharanஹன் ஸா, Tamil SelviSasi Kala..   ... என்று நீண்டுக்கொண்டே செல்லும். நேரம் கிடைத்தால் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.


நாளை முதல் மற்ற பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்த இருப்பதால் இன்று மற்றொரு பதிவாக என் பதிவுகளைப் பற்றிய அறிமுகங்கள் திரும்பவும் இருக்கும் என்பதை மிகக் கஷ்டத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது முந்தையை இரண்டு பதிவுகளுக்கும் பின்னூட்டம் மற்றும் தமிழ்மண ஓட்டு அளித்த இணைய நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அதேப்போல் இந்தப்பதிவுக்கும் ஆதரவு அளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

( வலைச்சர ஆசிரியப் பணி முடிந்த பிறகு அத்தனைப் பேருக்கும் கண்டிப்பாக திரும்ப மொய் வைக்கப்படும் என்பதை  இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்)


அன்புடன்....

மணிமாறன் ....

மேலும் வாசிக்க...

Monday, January 27, 2014

நாலு பேருக்கு நன்றி..!



ல்லூரியில் படிக்கும்போது செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்பாக திடீரென்று மூன்று வாரம் ஸ்டெடீஸ் லீவ் என்று அறிவிப்பார்கள். ஆறுமாத காலம் ஒன்றுமே படிக்காமல் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு அந்த மூன்று வாரத்துல வெட்டி சாய்க்கிற மாதிரி பெரிய பெரிய பிளான் எல்லாம் போடுவோம்.  " மாப்ள எல்லா சிலபஸையும் கவர் பண்ணிடனும்டா " இப்படித்தான் ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு புறப்படுவதற்கு முன் ஒவ்வொருத்தரும் சொல்லிவிட்டு செல்வோம்..! ஊருக்கு போய்விட்டு முதல் பக்கத்தை திறந்து வெறித்து வெறித்து பார்ப்பதிலேயே மூன்று வாரங்களும் ஓடிப்போய்விடும்.

ஹாஸ்டலுக்கு திரும்பி வந்தவுடன்  ரூம்மேட்டிடம் மெதுவாக.." மச்சி எல்லா சிலபசையும் முடிச்சிட்டியா..'' என்று கேட்டால் , " எங்கேடா.. ஊர்ல எங்க சொந்தகாரங்க காதுகுத்து.அதிலேயே நேரம் போச்சுடா.." என்பான். இன்னொருத்தனை கேட்டால், "புத்தகத்தை அப்பத்தான்டா திறப்பேன்.. உடனே எங்கப்பன் கடைக்கு போ... வயலுக்கு போ.. இப்படி ஏதாச்சும் வேலை சொல்லிடுவாருடா மச்சி. ச்சே.. இந்த அப்பன்களே இப்படித்தாண்டா " என்று அப்பா மேல பழியைப் போடுவான். இப்படியே விசாரித்து பார்த்தால், கடைசில ஒருத்தன் கூட படிச்சிருக்க மாட்டான். அப்போ ஒரு சந்தோசம் வரும் பாருங்க. அப்படியே எல்லோரையும் ரெண்டு கையாலையும் அணைத்துக்கொண்டு "நண்பேண்டா..."னு சொல்லணும் போல இருக்கும். நாம நாசமா போறதைப் பற்றிக்கூட கவலையில்லை. ஆனா, நம்மோட சேர்ந்து நாலுபேர் நாசமா போறத நினைச்சி அடையிற அல்ப சந்தோசம் இருக்கு பாருங்க.. அது அனுபவிச்சாதான் புரியும்.

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன்னா, எதை வேண்டுமானாலும் பிளான் பண்ணி பண்ணலாம்.ஆனால், இந்தப் படிக்கிற விசயத்தில் மட்டும் பிளான் பண்ணவே கூடாது. அதுவா தானா நடக்கணும். படிக்கிற விஷயம் மட்டுமில்லைங்க. எழுதுற விஷயமும் கூட.

இரண்டு வாரத்துக்கு முன்பு சீனா அய்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. நான் உடனே ஒத்துக்கொள்ளாமல்," கருத்தாழமிக்க பதிவுகளை தொகுத்து வழங்க வேண்டும் ஐயா. செறிவு மிகுந்த, அறம் நிறைந்த இலக்கிய கட்டுரைகளை எழுதவேண்டும்.ஆதலால் எனக்கு ஒருவார கால இடைவெளி வேண்டும் ஐயா" என்ற ரீதியில் பதில் அனுப்பினேன். அவரும் போய்த்தொலை என்று ஒருவாரம் கழித்து அனுமதி அளித்தார். நானும் எழுதி நிமிர்த்தி விடுவது போல கம்ப்யூட்டர்  முன்னால் உட்காருவேன்..

அப்போது பார்த்து என் பையன் " அப்பா..லண்டன் பிரிட்ஜ் ஃபாலிங் டவுன் போடு.." என்று என் மேலே ஏறி உட்காருவான்.

" டேய்.. அப்பா ரொம்ப பிசியா இருக்கேண்டா.. அம்மாகிட்ட போய் டிவில போடச் சொல்லுடா.."

" அதெல்லாம் முடியாது. இவ்ளோ நாளு இதுலதான போட்ட.. இப்போ இதிலேயே போடு.."

அவ்வளவுதான். மொத்த நர்சரி ரைம்ஸ் முடியறதுக்குள்ள அவன் தூங்குகிறானோ இல்லையோ, நான் குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். ஆபிசுக்கு வந்தால், அடுத்த வாரம் சைனீஸ் நியூ இயர் லீவ் வருது. அதனால ஓவர் டைம் பார்த்தாவது வேலை முடிக்கணும்னு மேனேஜர் சொல்லிவிட்டு போய்ட்டார். கடைசியில், ஒருவார இடைவெளியில் நான்கே நான்கு வரிகள்தான் எழுதியிருந்தேன். அதனால் வலைச்சரத்திற்காக எதுவுமே தயார் செய்யவில்லை. என் மனம் போன போக்கில் எழுதுகிறேன். உங்கள் பொன்னான ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன்..

வெளிநாடுகளில் இணைய வேகம் அதிகம். ஆனால், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து தொடர்ந்து நான்கு மணிநேரம் ஓய்வு கிடைப்பதரிது. அதிலும் குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு தூக்கத்தை தியாகம் செய்தால் மட்டுமே இணையத்தில் உலாவ முடியும்.

போகட்டும்..

முதலில் சிலருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம்.

நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது என்னை முதன்முதலில் discourage செய்தது என் மனைவிதான். என் ஆரம்பகால பதிவுகளைப் படித்துப் பார்த்துவிட்டு காறித்துப்பாத குறையாக, "இன்னும் ஒரே மாதத்தில் பிளாக்கை மூடிவிட்டு போய் விடுவீங்க பாருங்க" என்று பந்தயம் கட்டினாள்.(ஆனால் சமீபத்தில் சிங்கை கலவரம் பற்றி எழுதியபோது பல ஆங்கில ஊடகங்களில் வெளியான தகவல்களை தொகுத்து எனக்களித்ததும் அவள்தான்). கிட்டத்தட்ட இழுத்து மூடும் சூழல்தான். நிறைய பேரின் பதிவுகளைப் படித்து கமெண்ட் போட்டிருந்தாலும் என் பதிவுகளுக்கு கமெண்ட், ஹிட்ஸ், ஃபாலோயர் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

இந்நிலையில், என் பதிவுக்கு முதல் பின்னூட்டம் அளித்த பன்னிக்குட்டிக்கு நன்றி. பேஸ்புக்கில் எழுதுவதற்கு 'லைக்' எப்படி உற்சாக டானிக்கோ அதேப்போல் வலைப்பூ எழுதுவதற்கு ஹிட்ஸ். சினிமா சம்மந்தப்பட்ட பதிவு எழுதினால்தான் ஹிட்ஸ் அதிகமாகக் கிடைக்கும் என்கிற சூட்சமம் தாமதமாகத்தான் தெரிந்தது எனக்கு.

T.ராஜேந்தரைப்பற்றி முதன்முதலில் ஒரு சினிமா பதிவு எழுதினேன். முதன்முதலில் தமிழ் மணத்தில் இணைத்த பதிவும் அதுதான். அதைத் தனது 'படித்ததில் பிடித்தது' பகுதியில் பிலாசபி பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். தவிரவும், தனது புதிய பதிவர்கள் பகுதியில் என் வலைப்பூவைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதன் பிறகுதான் பிரபல பதிவர்களின் பார்வை கிடைத்தது. அவருக்கும் நன்றி..

மற்றும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வரும் மற்ற வலைப்பூ நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. (அவர்களைப் பற்றி தனித்தனியாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் தெரிவிக்கிறேன்)

பின்னூட்டம் என்றபோது ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. ஒரு பதிவு எப்பொழுது பதிவு ஆகிறது...?

குழப்பமாக இருக்கிறதா..? தெளிவாகச் சொல்கிறேன். ஒரு பதிவு எப்பொழுது முழுமையடைகிறது..? 

பாக்யராஜ் பாணியில் சொல்லவேண்டுமானால், ஒரு பதிவை எழுதி பப்ளிஷ் செய்யும் போது அது 25 சதவிகித பதிவாகத்தான் இருக்கிறது. அப்பதிவை தமிழ்மணம், இண்ட்லி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்து மற்றவர்களின் பார்வைகளுக்காக வைக்கும்போது 50 சதவிகித பதிவாகிறது. பிற்பாடு, அப்பதிவின் தலைப்பு, சொல்லப்பட்ட விசயத்தைப் பொறுத்து சுமார் 200 ஹிட்ஸ்களுக்கு மேல் கிடைக்கும்பொழுது அது 75 சதவிகித பதிவாக மாறுகிறது. அதற்கு  பின்னூட்டம் அல்லது மறுமொழி என்கிற விஷயம் கிடைக்கும் போதுதான் அது 100 சதவிகித பதிவாக முழுமையடைகிறது.

இப்ப சொல்லுங்க... பின்னூட்டம் இல்லாத பதிவு, ரோஜா இல்லாத நேரு போல... சசிகலா இல்லாத ஜெயலலிதா போல.. அண்ணியார் இல்லாத கேப்டன் போல.. மஞ்சள்துண்டு இல்லாத கலைஞர் போல.. விக் இல்லாத பவர்ஸ்டார் போல... பவர்கட் இல்லாத தமிழகம் போல... இல்லையா...?

அதனால் எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி..

பதிவுலகத்தில் எனக்கு மிக ஆச்சர்யமான ஒரு விஷயம் திண்டுக்கல் தனபாலன். எந்தப் பதிவு போனாலும் அவர் பின்னூட்டம் அங்கே இருக்கிறது. ஏதாவது புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று தேடினால் இவர் எல்லா இடத்திலேயும் ஏற்கனவே துண்டைப் போட்டு இடம்பிடித்து வைத்திருக்கிறார். முன்பு மனசாட்சி முத்தரசு, வரலாற்று சுவடுகள் , தளிர் சுரேஷ் போன்றோர் திண்டுக்கல்லாருக்கு போட்டியாக இருப்பார்கள். தற்போது அவர்கள் சிறிது ஓய்வெடுக்கிறார்கள் போல.. ஆனால் நிலைத்து நின்று ஆடும் இந்தப் பதிவுலக டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள். 

போதும் இத்தோட முடிச்சிக்கிறேன்...

டுத்து என் பதிவுகளைப் பற்றிய அறிமுகம்.

என் பதிவுகளில் சிறந்தப் பதிவுகள் என்று வகைப்படுத்தினால், எதுவுமே என்னளவில் முழுத் திருப்தி ஏற்படுத்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. போன வாரம் ரசித்து எழுதிய பதிவு இந்த வாரம் திரும்பப் படித்தால் பிடிக்க மாட்டேங்கிறது. இன்னும் வளரவேண்டும் என்று உள்மனது சொல்கிறது. ஆதலால் மற்றவர்கள் பாரட்டியபதிவு, பின்னூட்டம் அதிகம் கிடைத்தப் பதிவு என்கிற வகையில் தொகுக்கிறேன்.

1.2013 ஆம் வருடம் நான் எழுதிய பதிவுகளில் ஓரளவு திருப்தியளித்த பதிவு சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...  சிங்கையில் சில மாதங்கள் வேலைபார்த்துவிட்டு சிங்கப்பூருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தூதர் போல ஒரு பேஸ்புக் பிரபல பதிவர் சிங்கையைப் பற்றி அடிக்கடி பேஸ்புக்-ல் பதிவார். சிங்கை கலவரம் நடந்தபொழுது "அய்யய்யோ சிங்கப்பூரில் கலவரம்.. எல்லா இந்தியர்களையும் வெளியேற்றப் போறாங்க... இனி இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலையே கிடைக்காது.. இனி அவ்வளவுதான்..  என்கிற ரீதியில் ஸ்டேடஸ் போட்டு எல்லோரையும் பீதிக்குள்ளாக்கியிருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் கலவர நேரத்தில் அங்கிருந்த சில நண்பர்களிடம் விசாரித்தும், ஊடகங்களை அலசியும் இந்தப் பதிவு போட்டேன்.

2.என்னை பதிவுலகில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதிவு. சமீபத்தில் விகடன் இணைய தளத்தில் இந்தப் பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருந்தார்கள்,என் தளமும் பெயரும் குறிப்பிடாமல். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.காப்பி பேஸ்ட் செய்யம் அளவுக்காவது என் பதிவு இருக்கிறது என்ற சந்தோசம் போதும். சமகால சினிமா ரசிகர்கள் நிறைய பேருக்கு T.ராஜேந்தரைப் பற்றி அவ்வளவாக தெரியாது. வெறும் வீராசாமி படத்தை மட்டும் வைத்து அவரை எடை போடுகிறார்கள். அவர் 80-90 களில் தமிழ்த்திரையில் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றிய பதிவுதான் தமிழ் திரையுலகின் அஷ்டாவதானி T.ராஜேந்தர் ஒரு சகாப்தம்.... . பதிவு எழுதவந்த புதிதில் எழுதியது. ஏதோ ஓரளவு எனக்குத் தெரிந்த மொழியில் அப்போது எழுதினேன் .

3.திருவாரூர் என்றால் கலைஞரை தவிர்த்துவிட்டு எழுதிவிடமுடியுமா...?  நான் வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்லும்போது குடும்பத்துடன் ஒரு 'சமத்துவ ட்ரிப்' அடிப்பேன். எங்களது குடும்பத்துடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, அப்படியே நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச் என்று  ஒரு வட்டப்பாதையில் சுற்றிவிட்டு வருவோம். எட்டுக்குடிக்கு முன்பாக இருக்கிறது திருக்குவளை. கலைஞர் பிறந்த இடம். மற்றவர்களுக்கு அதெல்லாம் கோயில் என்றால் எனக்கு கலைஞர் வீடு கோயில் (யப்பா...இது வலைச்சரம் இங்க வம்புக்கு வராதீங்க... எதுவா இருந்தாலும் என் தளத்தில் பொங்கல் வையுங்க). அதைப்பற்றி ஒரு பதிவு தான் கலைஞரின் 'குடியிருந்த கோயில் '.  அங்கு ஒரு காவலாளி இருப்பார். அவரிடம் கேட்டால், " இதோ இப்ப மூணு மாசத்துக்கு முன்னதான் தலைவர் வந்துவிட்டு போனார்... இதோ இங்கதான் உட்கார்ந்திருந்தார் என்பார். உடனே அங்கே நின்று ஒரு போட்டோ எடுத்து பிறவிப்பலனை(!) அடைவேன்.. 

மன்னிக்கவும்...இது இன்னும் முடியவில்லை.நிறையப் பதிவுகளைக் குறிப்பிடவேண்டும் ... பதிவு மிகப் பெரிதாகிவிட்டது. அடுத்தடுத்தப் பதிவுகளில் அதைப்பற்றி எழுதுகிறேன்..

(அப்புறம் ஒரு விஷயம்... அப்படியே என் வலைப்பூ போனோமா.. படித்தோமா.. வந்தோமானு இருக்கக் கூடாது. சைடுல "பதிவுலக நண்பர்கள்" என்று ஒரு பகுதி இருக்கு.. அப்படியே அதில உங்களையும் இணைத்துக் கொள்ளுங்க... இல்லேனா நைட் தூங்கும் போது கனவுல வந்து கத்திய காட்டி மிரட்டுவேன் ஆமா .. :-)))))
 
வழக்கம் போல உங்கள் பின்னூட்ட ஆதரவை அளிக்க வேண்டுகிறேன்..

அன்புடன்

மணிமாறன்..

   
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் அடியேனின் அறிமுகம்...



ணைய நட்புகளுக்கு வணக்கமுங்க ...!

'யாருடா இவன் கோமாளி' என்று மங்கிகேப் போட்ட விக்ரம்பிரபுவைப் பார்த்து வம்சி கிருஷ்ணா கேட்கிற மாதிரி கேட்டுடாதிங்க.. நானும் இந்தப் பதிவுலகத்தில் இரண்டு வருசமாக கூட்டிப் பெருக்கிகிட்டு இருக்கேன்.

அடியேன் மணிமாறன்..... திருவாரூர்காரன்.

எனக்கு பாலூட்டியதும் கடைசியில் பாலூற்றப்போவதும் அதே மண்தான். முதலில் என் தாய் மண்ணுக்கு வணக்கம்...  தற்போது சிங்கையில் வசிக்கிறேன். வெளிநாட்டில் வசித்தாலும் இந்தியன் என்கிற அடையாளத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்கிற வைராக்கியத்தில் இருப்பவன். முதலில் இந்தியன்.. அப்பாலதான் தமிழன் என்ற கொள்கையுடையவன்.

" படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

இது வெகு சமீபத்தில் வலைப்பூ எழுத்தாளர்களைப் பற்றி சமகால இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் அவர்கள் சிலாகித்து சொன்னது. இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொண்டு... 

திரும்பவும் என்னை அறிந்தவர்கள், அறிந்தும் அறியாமல் இருப்பவர்கள், முதல் முறையாக அறிபவர்கள் எல்லோருக்கும் வணக்கமுங்க...!

ண்மையிலேயே வலைப்பூ ஒரு மகா சமுத்திரம்ங்க. ஆரம்பத்தில், சிறிய குட்டை என்று நினைத்து குதித்து விட்டேன். பிறகுதான் புரிந்தது, பல திமிங்கிலங்கள், சுறாக்கள் சுழன்று அடிக்கும் இந்த வலைப்பூ கடலில் நான் ஒரு மீன் குஞ்சு என்று. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் பழகிகிட்டு இருக்கேன்.

கரையேறிவிடலாமா என்று நிறைய தடவை நினைத்ததுண்டு. திமிங்கிலங்கள், சுறாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் குஞ்சுகளாக நீச்சல் பழகியதுதானே.. நாமும் நீந்திப் பார்க்கலாம் என்று இரண்டு வருடமாக நீந்திக்கொண்டிருக்கிறேன்... ஆனால் இலக்கு என்று எதுவுமில்லை.

எனக்கு ஊசி என்றாலே பயம். யாரோ கத்தியை எடுத்து குத்துற மாதிரி ஒரு ஃபீலிங். என்ன.. ஊசி பார்ப்பதற்கு சின்னதாக இருக்கிறதே தவிர அதுவும் ஒரு கத்திதானே...! டாக்டர் எனக்கு ஊசி போடப் போகிறார் எனத் தெரிந்தாலே போதும்.கையை விறைப்பா வச்சிப்பேன். அவரு பார்த்துவிட்டு " தம்பி கையை லூசுல விடுப்பா.. அப்பத்தான் ஊசிப்போட முடியும்" என்பார். அவரு ஊசிய கிட்ட எடுத்துட்டு வந்த உடனே திரும்பவும் விறைப்பா வச்சிப்பேன். அவர் டென்சனாகி " இப்ப லூஸ்ல விடப்போறியா இல்ல படுக்க வச்சி பின்னாடி குத்தவா.." என்று டென்சனாகி கத்துற நிலைமைக்கு வந்துவிடுவார். இப்ப எதுக்கு இது என கேட்கிறீங்களா...?

என் பதிவுகளைப் பற்றி சொல்லத்தான். திடீர் என்று  இரண்டு பதிவுகள் ரொம்ப விறைப்பா போடுவேன். கடுமையான அறச்சீற்றம் எல்லாம் இருக்கும். இவ்வளவு சீரியஸ்னஸ் நமக்கு ஆகாதே.. அது நம்ம இயல்பு இல்லையே என்று இரண்டு பதிவுகள் ஜாலியாக போடுவேன்..திரும்பவும் விறைப்பு.. பிறகு ஜாலி...  இப்படியே இருநூறு பதிவுகள் தாண்டிவிட்டேன். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு( அப்படி யாராவது இருக்காங்களா..?) என் இயல்பு என்னவென்று குழப்பமாக இருக்கும்.. ஆனால் நான் ரொம்ப ஜாலியான ஆளு...

ஆகட்டும்...

டந்த வாரம் சீனா அய்யாவிடமிருந்து மெயில் வந்தது. நம்பவே முடியவில்லை. ஏப்ரல் 1 க்கு இன்னும் முழுசா மூணு மாசம் இருக்கே. அதுக்குள்ளே எப்படி என்று குழம்பி விட்டேன். இல்லை, தமிழ்புத்தாண்டு மாதிரி வருசத்துக்கு இரண்டு தடவை வருகிறதா.?  பிறகு நிதானமாக படித்துப் பார்த்தபோதுதான் அது உண்மை என்று புரிய ஆரம்பித்தது.

தமிழ்மணத்தில் முன்பெல்லாம் வாரம் ஒரு பதிவரை அறிமுகம் செய்வார்கள். சிலருக்கு இரண்டு தடவை கூட அறிமுகம் கிடைத்திருக்கிறது. நிறைய பதிவர்கள் பிரபலமானது அப்படித்தான். அடியேனுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று இலவு காத்த கிளி போல காத்திருந்தேன். கடைசில காய் வெடிச்சி பஞ்சாய் போனது போல அந்தப் பகுதியையே மொத்தமா தூக்கிட்டாங்க...

வலைச்சரம் தொடர்ந்து படித்து வருகிறேன். அவ்வப்போது பின்னூட்டமும் போட்டதுண்டு. என் வலைப்பூவை வலைச்சரத்தில் ஏற்கனவே சில பதிவர் நண்பர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவ்வகையில், T.N.முரளிதரன், பாலா, ஹாஜா மொகிதீன், சசிகலா மேடம் ஆகியோருக்கு நன்றிகள். இதேப்போல நானும் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காதா என காத்திருந்தேன்.இங்கே இலவம் வெடிக்காமல் கனிந்துவிட்டது. வாய்ப்பளித்த சீனா அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

முதலில் சீனா அய்யாவைப்பற்றி சொல்லனும். கடந்த வாரத்தில் எங்களுக்கிடையே ஐந்தாறு மெயில் போக்குவரத்து நடந்திருக்கும். முதலில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க முடியுமா என்ற மெயில். சரியென்று பதில் மெயில் அனுப்பிவிட்டு  என்னைப்பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் விட்டுவிட்டேன். பிறகு அதைக் கேட்டு திரும்பவும் சீனா அய்யாவிடமிருந்து ஒரு மெயில். நான் அனுப்பிய பதில் மெயில் அவருக்கு சேரவில்லை போல.. தகவல்கள் கேட்டேனே.. விரைவில் அனுப்பவும் என்று மற்றொரு மெயில். அதற்கு நான் ஒரு பதில் மெயில். கடைசியாக சிறப்பாக செய்யுங்கள் என்று ஒரு வாழ்த்து மெயில். இப்படியாக..., என் ஒருவனுக்கே இவ்வளவு பொறுமையாக மெயில் அனுப்பி ஆசிரியர்  பொறுப்பேற்க வைப்பதை பார்க்கும் பொழுது , ஒவ்வொரு வாரமும் இதற்காக எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்படுகிறார் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவரது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.  

இதன் தொடர்ச்சி இன்றிரவு மற்றொரு பதிவாக வரும்...

நான் இப்படித்தாங்க.. சொல்ல வந்த விஷயத்தை நேரடியா சொல்லாம வளவளனு எழுதிகிட்டே இருப்பேன்.

மீண்டும் இன்று இன்னொரு பதிவில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..

அன்புடன் ..

மணிமாறன்......

(என்னது. என்னத்த கமெண்ட் போடுறதா...? ஒரு வாரம் கலக்குங்க... ஆரம்பமே அசத்தலா இருக்கு... தொடர வாழ்த்துக்கள்... அருமை...,  :-), ஹி..ஹி.., தம..1235678.., இதுல ஏதாவது ஒன்னை காப்பி பண்ணி இப்போதைக்கு ஆதரவு நல்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..)
மேலும் வாசிக்க...

Sunday, January 26, 2014

Manimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கீதமஞ்சரி   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 073
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 079
பெற்ற மறுமொழிகள்                            :316
வருகை தந்தவர்கள்                              : 1453

 கீதமஞ்சரி   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
கீதமஞ்சரியை    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

Manimaran  நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க  அன்புடன் இசைந்துள்ளார். 

இவரது சொந்த ஊர் திருவாரூருக்கு  அருகில் மாங்குடி என்ற கிராமம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சி மண்டலப் பொறியியற் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் இளங்கலை முடித்துவிட்டு,  பத்து ஆண்டுகளுக்கு மேலாக  சிங்கப்பூரில் வசித்து பணிபுரிந்து வருகிறார். 2011 டிசம்பரிலிருந்து மனதில் உறுதி வேண்டும் என்ற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரது  வலைத்தளம் 
http://manathiluruthivendumm.blogspot.com/

மணிமாறனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கீதமஞ்சரி
நல்வாழ்த்துகள் மணீமாறன்   

நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது