தண்ணீர் சிக்கனம்
➦➠ by:
ஆதி வெங்கட்
தண்ணீர்
சிக்கனம் நம்
நாட்டுக்கும், வீட்டுக்கும்
அவசியமான ஒன்று. நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்
செல்லும் செல்வத்தில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும். இன்றைய
நிலைமை இப்படித் தான் உள்ளது. மூன்றாம் உலகப் போர்
தோன்றினால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று படித்த நினைவு. அப்படியிருக்கையில் தண்ணீரை
வீணாக்காது, சிக்கனத்தை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று பார்க்கலாம் இன்றைய
பகிர்வில்.
பட உதவி: கூகிள்
பிரபல எழுத்தாளர்
ஞானி அவர்கள் தனது வலைப்பக்கத்தில் எழுதிய தண்ணீர் தண்ணீர் கட்டுரை இங்கே!
ஓசை…
ஓயாத அலைகள் என்ற தளத்தில் தண்ணீர் சிக்கனத்தின்
அவசியத்தையும், அவல
நிலையையும் குறிப்பிடுகிறார்.
மணற்கேணி கட்டுரைகள்
என்ற தளத்தில் அருகி வரும் நிலத்தடி நீரால்
சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் என்ற தலைப்பில் பலர் எழுதிய கட்டுரைகள்
இந்த பக்கத்தில் காணப்படுகின்றன.
பசுமை கட்டடவியல், தொழில்நுட்பத்துடன்
கூடிய இயற்கை
வேளாண்மை என
பலதரப்பட்ட கட்டுரைகள் உள்ளன.
பட உதவி: கூகிள்
சி.முருகதாஸ்
அவர்களின் தளத்தில்
தண்ணீர்
தேவையில் தன்னிறைவு எப்போது? என்ற தலைப்பில்
எழுதியுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்களேன். இவர் ஒரு
பொறியியல் பட்டதாரியாம். பள்ளிப் பருவத்திலிருந்தே மரக்கன்றுகளை
நடுவதில் ஆர்வமாம். பசுமை தாயகத்தில் மாவட்ட செயலாளராகவும் இருப்பதாக சொல்கிறார்.
நொய்யல்
நதிக்கரை என்ற தளத்தில் தண்ணீரை எண்ணி கண்ணீர்
விடும் தமிழ்
தேசமே இனியாவது விழிப்பாயா? என்று
கவிதை வரிகளில் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார் சு. பாஸ்கரன்.
பட உதவி: கூகிள்
ஒரு லிட்டர்
தண்ணீரின் விலை ஆயிரம் ரூபாய் என தனது கட்டுரையில் சொல்லியிருக்கிறார் உஜிலா தேவி எனும் பெயரில்
வலைப்பூ வைத்திருக்கும் யோகி ஸ்ரீ ராமானந்த குரு என்பவர்.
சிறகு
என்ற பெயரில் இணையத்தில் வெளி வரும் தமிழ் வார இதழ் நிலத்தடி
நீரை பெருக்க என்ன வழி? என்று நீர்
நிலைகளின் இன்றைய நிலையையும், நாம் செய்யவேண்டிய வழிமுறைகளையும்
விலாவரியாக குறிப்பிட்டிருக்கிறார் திரு மோகன் ராஜ்.
பட உதவி: கூகிள்
தமிழ்
கூடல் என்ற இணைய தளத்தில் சிறு
துளி பெரு வெள்ளம் என்ற தலைப்பில் சிக்கனத்தை
மேற்கொள்வதற்கான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன
நண்பர்களே, வலைச்சரத்தில் மூன்றாம் நாளான இன்று வாழ்விற்கு இன்றியமையாத ஆதாரமான
தண்ணீர் சிக்கனம் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவுகளையும், அதன் தளங்களையும் பார்த்தோம். நாளை வேறு சில வலைப்பூக்களின் அறிமுகங்களோடு
உங்களைச் சந்திக்கிறேன்.
அதுவரை....
நட்புடன்
ஆதிவெங்கட்
திருவரங்கம்.
|
|
தருமபுரி நகராட்சி போர்வெல் அமைக்கச் செய்த காமெடியைப் படித்து விட்டு வந்தால் வலைச்சரத்தில் தண்ணீர் சிக்கனம் தலைப்பு. பொருத்தம்தான்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..
Deleteஎங்கள் தெருக்காரர்களுக்கு இதை ப்ரிண்ட் செய்து கொடுக்கணும்.. இரு வேளையும் வாசல் தெளிக்கிறேன் என்று தண்ணீரை வீணடிக்கிறார்கள் முழுத் தெருவுக்கும் அள்ளிக் கொட்டி !
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்...
Delete'தண்ணீர் சிக்கனம், தேவை இக்கனம்' என்பதை பதிவர்களின் வாயிலாக அழகாக அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா..
Deleteதண்ணீர் சிக்கணம் எல்லோருக்கும் அவசியம்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்..
Deleteநல்ல ஆக்கபூர்வமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மாமி..
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.. தொடருகிறேன்பதிவுகளை.
தண்ணீர் சிக்கனம் பற்றிய வலைப்பூக்களை தேடி எடுத்து சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்ள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..
Deleteநிறைய தெரியாத தளங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.... சென்று பார்க்கிறேன், நன்றி...
ReplyDeleteஅப்படியா! மகிழ்ச்சி...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஸ்.பை..
மூன்றாம் நாளான இன்று வாழ்விற்கு இன்றியமையாத ஆதாரமான தண்ணீர் சிக்கனம் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவுகளையும், அதன் தளங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்திய தளங்களில் 4.புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களுக்கு புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சி..
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்..
தண்ணீர் சிக்கனம். தேவை இக் கணம் - என்று அத்யாவசியமான விஷயத்தைச் சொல்லும் பதிவுகளை அறிமுகம் செய்திருப்பது அருமை..
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்..
Deleteநீர் ஆதாரத்தை பெருக்க எடுக்க வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டு வரும் இந் நாளில் அவசியமான் பதிவுகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் சேவை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள் ஆதிவெங்கட்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
DeleteThanneer sikkanam ... patriya arimuga padhivugalai avasiyam madhiyam padippen. Nall vubhayogamana thagavalgalai arimugappaduththiyamaikku paaraattukkal.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..
Deleteஅறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஓசை..
Deleteஅருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteதிரு. சி.முருகதாஸ், திரு. யாழ்.பாஸ்கரன், திரு. மோகன் ராஜ், திரு. ஆறுமுகம் - இவர்களின் தளம் புதியவை...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அப்படியா!!! மகிழ்ச்சி...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..
தண்ணீர் சிக்கணப் பதிவுகள் அனைத்ஹும் எனக்குப் புதியவை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஆதி.
ReplyDeleteஎல்லா தளங்களுக்கும் முடியும் போது சென்று படித்து கருத்திடுங்கள்...
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..
முத்தான மூன்றாம் நாள் பதிவுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்...
Deleteஅழகான பதிவுகள். அவசியமாந விஷயம். மிக்க நன்றி அன்புடன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...
Deleteநல்ல ஆக்கபூர்வமான பகிர்வு. .
ReplyDeleteதளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .பாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி..
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்...
Deleteதலைப்பின் கீழ் பதிவர்களை
ReplyDeleteதொகுத்து அறிமுகம் செய்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...
Deleteமிக அருமையான தொகுப்பு திரு.வெங்கட்
ReplyDeleteதளங்களை பார்த்தேன் அருமை..
http://www.malartharu.org/2014/01/scripting.html
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது...
ReplyDeleteதிரு ரிஷபன் சொல்லியிருப்பது போல, எங்கள் ஊரிலும் காலையும், மாலையும் வாசல் தெளிப்பதாக சொல்லிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பைப்பின் மூலம் நீரை வீணடிக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் வேண்டாமா என்று இவர்களிடம் கேட்கத் தோன்றும்.
ReplyDeleteமிக மிகத் தேவையான ஒன்றைப் பற்றிய தொகுப்பு அருமை ஆதி!
வாழ்த்துக்கள்!
பின்னூட்டங்களைக் கூட பொறுமையாக வாசித்து கருத்திடுகிறீர்கள் ரஞ்சனிம்மா... மிக்க நன்றி..
ReplyDelete