07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 19, 2014

மீண்டும் சந்திக்கலாம்!


வலைச்சரத்தின் எனது இறுதி நாளான இன்று உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நாம் கொஞ்சம் வித்யாசமாகச் சில ஜோதிட வலைப்பூக்களையும் ஆன்மீகத் தளங்களையும் பார்க்கப் போகிறோம்.

`என்ன ஜோதிடமா` என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? அஸ்ட்ரானமி மாதிரி அஸ்ட்ராலஜியும் ஒரு அறிவியல். அவ்வளவு தான். சுருக்கமாகச் சொன்னால் நமக்கு நேரம் எப்படி இருக்கிறது, நாம் அதற்குத் தகுந்தாற்போல் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சின்ன சின்ன suggestions தான் ஜோதிடர்கள் தருகிறார்கள். அதையே நம்பி முயற்சி செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. எனவே நம்பிக்கையிருப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள் :-)

இம்முறை பதிவுகளை அல்லாமல் வலைப்பூக்களின் முகவரிகளையே சொல்லலாம் என்று இருக்கிறேன். அங்கே போய் உங்களுக்குப் பிடித்ததைப் படித்துக்கொள்வது உங்கள் பொறுப்பு.

1.    Warrior: வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களில் மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமான ஆன்மீக அறிவுடன் எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் இத்தளத்தில் உள்ளன.

2.    கண்ணன் பாட்டு: இத்தலத்தில் பல ஆன்மீகப் பதிவுகளும், சினிமாவில் `கண்ணன்` எனத் தொடங்கிவரும் பாடல்களின் தொகுப்பும் இருக்கிறது! இடப்பக்கம் சைட்பாரில் பாருங்கள்.

3.    முருகனருள்: கண்ணனுக்கு அந்த வலைத்தளம் போல முருகனுக்கு இது.

4.    அம்மன் பாட்டு: இது அம்மனுக்கு. ஏகப்பட்ட பாடல்கள் இருக்கின்றன.

5. பஜனைப் பாடல்கள்: இத்தளத்தில் நிறைய பஜனைப் பாடல்கள் இருக்கின்றன. ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

6. அனுபவ ஜோதிடம்: சித்தூர் முருகேசன் அவர்களின் வலைத்தளம். மிகவும் ப்ராக்டிகலாக ஜோதிட அனுபவங்களைப் பேசுபவர். நானும் நண்பர்களும் பலமுறை இவரிடம் கன்சல்டிங்கும் பெற்றிருக்கிறோம்.

7. பெருங்குளம் ராமகிருஷ்ணன் பக்கங்கள்: ஆன்பீகப் பதிவுகளும் ஜோதிடம் சம்பந்தமான பதிவுகளும் ராசி பலன்களும் இவரது தளத்தில் இருக்கின்றன.

8.    ஜாதகக் கதம்பம்: ஆசிரியர் ராஜேஷ்சுப்பு. இவரது வலைத்தளமும் சுவாரசியமானது. படித்துப் பாருங்களேன்.

9.  கலையரசன் கலியபெருமாள்: இவரது தளத்திலும் ஜோதிடம், ஆன்மீகம் போன்ற எண்ணற்ற உபயோகமான பதிவுகள் இருக்கின்றன. பாருங்கள்.



கடந்த ஒரு வாரமாக, பொங்கல் பண்டிகைகள் இருந்தாலும் கூட தொடர்ந்து வலைச்சரத்துக்கு வந்து படித்து, என் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களும் எழுதி என்னையும் நான் அறிமுகம் செய்துவைத்த வலைப்பூக்களையும் உற்சாகப்படுத்தியதற்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! என்மேல் நம்பிக்கை வைத்து வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை எனக்களித்த சீனா அய்யாவிற்கும் மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் பணி. முடிந்தால் மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே. God Bless U All :-)

12 comments:

  1. மிக சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் பணியை முடித்த நேரத்தில் எனது ஜாதககதம்பத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி. உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. வாரியர்! அனுபவ ஜோதிடம்! தவிர பிற அறியாத தளங்கள்! அறிமுகத்திற்கு நன்றி! சிறப்பான தளங்களை வாரம் முழுவதும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. சிறப்பாக பணி நிறைவு செய்த சுபத்ரா அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

    ReplyDelete
  6. ஒரு வாரமாக தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திய தளங்களை வாசித்தேன்.. சுபா...! நன்று...! இனிய அனுபவம்....! வாழ்த்துகள்....!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது